டிஎன்ஏ படக்குழுவினரை பாராட்டிய இயக்குனர் சுதா கொங்கரா

டிஎன்ஏ திரைப்படத்தின் மூலம் அதர்வா கம்பேக் கொடுத்துள்ளார்.டிஎன்ஏ படத்தின் முன்பதிவுகள் மற்றும் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
டிஎன்ஏ படக்குழுவினரை பாராட்டிய இயக்குனர் சுதா கொங்கரா
Published on

அதர்வா நடிப்பில் வெளியான திரைப்படம் டிஎன்ஏ. இப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தை ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா போன்ற திரைப்படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார்.

டிஎன்ஏ திரைப்படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் திரைக்கதை தொடக்கம் முதல் இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாக செல்வது படத்தின் பலமாக அமைந்துள்ளது.

அதர்வா கடைசியாக நடித்து வெளியான நிறங்கள் மூன்று திரைப்படம் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனால் டிஎன்ஏ திரைப்படத்தின் மூலம் ஒரு கம்பேக் கொடுத்துள்ளார்.

மேலும், படத்தின் முன்பதிவுகள் மற்றும் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், டிஎன்ஏ படத்தை பார்த்த இயக்குனர் சுதா கொங்கரா தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில்," DNA கதையை நெல்சன் வெங்கடேசன் எப்போதும் போல அழகாக இயக்கியுள்ளார். அதர்வா, நிமிஷா, சேட்டன், பாலாஜி சக்திவேல் ஆகியோரின் நடிப்பு அருமையாக இருந்தது. DNA ஒரு அழகான படம்" என பதிவிட்டு படக்குழுவிற்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com