என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    DNA படத்திற்கு வந்த சோதனை : வெளியான 24 மணிநேரத்தில் ஓடிடி ரிலீஸ்
    X

    DNA படத்திற்கு வந்த சோதனை : வெளியான 24 மணிநேரத்தில் ஓடிடி ரிலீஸ்

    • நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியான திரைப்படம் 'டிஎன்ஏ'.
    • இப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியான திரைப்படம் 'டிஎன்ஏ'. இப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    கடந்த மாதம் வெளியான இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக உருமாறியது. படத்தின் திரைக்கதை தொடக்கம் முதல் இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாக செல்வது படத்தின் பலமாக அமைந்தது.

    படத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தை தெலுங்கு மொழியில் டப் செய்து நாளை மை பேபி என்ற தலைப்பில் வெளியாக இருக்கிறது. ஆனால் இப்படத்தின் ஓடிடி அறிவிப்பை ஓடிடி அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் வரும் 19 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.

    இச்சூழ்நிலையில் தெலுங்கு மக்கள் யாரும் படத்தை திரையரங்கிள் பார்க்க முன்வரமாட்டார்கள், ஏனெனில் திரைப்படம் வெளியான 24 மணி நேரத்தில் அதே திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது. இதனால் படத்தின் தெலுங்கு வசூல் பயங்கரமாக பாதிக்கப்படும். இது படக்குழுவிற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

    Next Story
    ×