என் மலர்
நீங்கள் தேடியது "கீதா கைலாசம்"
- புகழ்பெற்ற *இந்திய திரைப்பட விழா மெல்போர்ன் (IFFM) விருதுகள் 2025 நேற்று வெளியிடப்பட்டன.
- சிறந்த இயக்குனர்: நீரஜ் கெய்வான் – *Homebound*
புகழ்பெற்ற **இந்திய திரைப்பட விழா மெல்போர்ன் (IFFM) விருதுகள் 2025 நேற்று வெளியிடப்பட்டன. திரைப்படங்கள், இணையத் தொடர்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளின் சிறந்த கலைஞர்கள், படைப்பாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். அதில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலை பின்வருமாறு பார்ப்போம்.
சிறந்த நடிகர் விருதுகள்
சிறந்த நடிகர் (ஆண்): அபிஷேக் பச்சன் – I Want To Talk
சிறந்த நடிகை (பெண்): கீதா கயிலாசம் – *அங்கம்மாள்
சிறந்த நடிகை (பெண்) – தொடர்:** நிமிஷா சஜயன் – *டப்பா கார்டல்* (Prime Video)
சிறந்த நடிகர் (ஆண்) – தொடர்:ஜெய்தீப் அஹ்லாவத் – *பாதாள்லோக் சீசன் 2
முக்கிய விருதுகள்
சிறந்த படம்:Homebound (Executive Producer: மார்டின் ஸ்கார்சேசி)
சிறந்த இயக்குனர்: நீரஜ் கெய்வான் – *Homebound*
சிறந்த தொடர்:Black Warrant (Netflix)
சிறந்த சுயாதீன திரைப்படம்:** *அங்கம்மாள்* (இயக்கம்: விபின் ராதாகிருஷ்ணன்)
ஏற்கனவே *New York Indian Film Festival* இல் சிறந்த படமாக தேர்வான *அங்கம்மாள்*, இங்கு மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.
**சிறப்பு கௌரவங்கள்**
சினிமா Excellence விருது: அமிர் கான்
சினிமா முன்னணி விருது: அரவிந்த் சாமி
சினிமாவில் சமத்துவம்:** *பக்ஷோ பொண்டி (Shadowbox)* – பெங்காலி திரைப்படம் (இயக்கம்: தனுஷ்ரீ தாஸ், சௌம்யானந்த சாஹி)
Disruptor Award:** விர்தாஸ் (நகைச்சுவை நடிகர் & ஸ்டாண்ட்-அப் காமெடியன்)
Special Mention:Boong – குகுன் கிப்ஜென் (தயாரிப்பு: பார்ஹான் அக்தர்)
Diversity in Cinema: அதிதி ராவ் ஹைதரி
இந்தாண்டு IFFM 2025, இந்திய சினிமாவின் உலகளாவிய தாக்கத்தை கொண்டாடும் விழாவாக அமைந்தது. *Homebound* மற்றும் *அங்கம்மாள்* போன்ற படங்கள் சர்வதேச ரீதியில் கவனம் பெற்றுள்ளன. அதேபோல் *டப்பா கார்டல்* மற்றும் *பாதாள்லோக் சீசன் 2* போன்ற தொடர்கள் இணைய தளங்களில் வெற்றியைப் பெற்றுள்ளன. இவ்வாண்டின் விருதுகள், இந்திய சினிமாவின் பன்முகத்தன்மையையும் வளர்ச்சியையும் வெளிப்படுத்துகின்றன.
- டாடா படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் தற்பொழுது ஸ்டார் படத்தில் நடித்துள்ளார்.
- படம் வரும் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
டாடா படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் தற்பொழுது ஸ்டார் படத்தில் நடித்துள்ளார். படம் வரும் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இளன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இளன் இதற்கு முன் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் முக்கிய ரோலில் லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் எனப் பலர் நடித்துள்ளார். சில நாட்களுக்கு முன் ஸ்டார் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தது.
நடுத்தர குடும்பத்தில் இருந்து வரும் ஒருவன் நடிகராக ஆகவேண்டும் என ஆசைப்படுகிறான். அவன் நடிகனாகும் பயணத்தை பற்றிய படமாக இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படக்குழுவினர் பல நேர்காணல்களில் கலந்துக் கொண்டு வருகின்றனர்.
இயக்குனர் இளன் கலந்துகொண்ட நேர் காணலில் இப்படத்தில் வரும் ஒரு குறிப்பிட்ட காட்சி நடிகர் விஜயின் வாழ்க்கையை நடந்த சம்பவத்தில் இருந்து இன்ஸ்பைர் ஆகி எடுக்கப்பட்டது என கூறியுள்ளார்.
விஜய்யின் ஆரம்ப திரை வாழ்க்கையில் அவர் நடித்த படங்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்தது. அவரது நடிப்பு திறமையையும், முக அமைப்பையும் கேலி செய்து பேசினர் அதை மையமாக வைத்துதான் இப்படத்தில் சில காட்சிகளை அமைத்துள்ளேன் என்று அவர் கூறினார். இது விஜய்க்கு மட்டும் அல்ல, திரைத்துறையில் நுழைய வேண்டும் என ஆசையுடன் இருக்கும் அனைவருக்கும் இது ஏதோ ஒரு வகையில் நடந்து இருக்கும் என கூறினார்.
படத்தின் ப்ரோமோஷனுக்காக கவின் திருச்சியில் உள்ள அவரின் பள்ளிக்கூடத்திற்கு சென்று அவரது ஆசிரியர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார். பின் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
சமீபத்தில் நெல்சன் திலிப்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான சிவபாலன் இயக்கும் 'ப்லடி பெக்கர்' என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான டைட்டில் ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






