விஜய்யின் நிஜ வாழ்க்கையிலிருந்து ஈர்க்கப்பட்ட காட்சிகள் உள்ளன - ஸ்டார்

டாடா படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் தற்பொழுது ஸ்டார் படத்தில் நடித்துள்ளார்.படம் வரும் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
விஜய்யின் நிஜ வாழ்க்கையிலிருந்து ஈர்க்கப்பட்ட காட்சிகள் உள்ளன - ஸ்டார்
Published on

டாடா படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் தற்பொழுது ஸ்டார் படத்தில் நடித்துள்ளார். படம் வரும் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இளன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இளன் இதற்கு முன் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் முக்கிய ரோலில் லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் எனப் பலர் நடித்துள்ளார். சில நாட்களுக்கு முன் ஸ்டார் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தது.

நடுத்தர குடும்பத்தில் இருந்து வரும் ஒருவன் நடிகராக ஆகவேண்டும் என ஆசைப்படுகிறான். அவன் நடிகனாகும் பயணத்தை பற்றிய படமாக இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படக்குழுவினர் பல நேர்காணல்களில் கலந்துக் கொண்டு வருகின்றனர்.

இயக்குனர் இளன் கலந்துகொண்ட நேர் காணலில் இப்படத்தில் வரும் ஒரு குறிப்பிட்ட காட்சி நடிகர் விஜயின் வாழ்க்கையை நடந்த சம்பவத்தில் இருந்து இன்ஸ்பைர் ஆகி எடுக்கப்பட்டது என கூறியுள்ளார்.

விஜய்யின் ஆரம்ப திரை வாழ்க்கையில் அவர் நடித்த படங்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்தது. அவரது நடிப்பு திறமையையும், முக அமைப்பையும் கேலி செய்து பேசினர் அதை மையமாக வைத்துதான் இப்படத்தில் சில காட்சிகளை அமைத்துள்ளேன் என்று அவர் கூறினார். இது விஜய்க்கு மட்டும் அல்ல, திரைத்துறையில் நுழைய வேண்டும் என ஆசையுடன் இருக்கும் அனைவருக்கும் இது ஏதோ ஒரு வகையில் நடந்து இருக்கும் என கூறினார்.

படத்தின் ப்ரோமோஷனுக்காக கவின் திருச்சியில் உள்ள அவரின்  பள்ளிக்கூடத்திற்கு சென்று அவரது ஆசிரியர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார். பின் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

சமீபத்தில் நெல்சன் திலிப்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான சிவபாலன் இயக்கும் 'ப்லடி பெக்கர்' என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான டைட்டில் ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com