

அதர்வா நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் 'டிஎன்ஏ'. இப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தை ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா போன்ற திரைப்படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார்.
'டிஎன்ஏ' திரைப்படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் திரைக்கதை தொடக்கம் முதல் இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாக செல்வது படத்தின் பலமாக அமைந்துள்ளது.
அதர்வா கடைசியாக நடித்து வெளியான 'நிறங்கள் மூன்று' திரைப்படம் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனால் 'டிஎன்ஏ' திரைப்படத்தின் மூலம் ஒரு கம்பேக் கொடுத்துள்ளார்.
இதனிடையே, 'டிஎன்ஏ' படத்தை பார்த்த பலரும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், 'டிஎன்ஏ' படத்தை பார்த்த இயக்குனரும் நடிகருமான சசிகுமார் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், "டி.என்.ஏ திரைப்படத்தின் மூலம் மீண்டும் ஒரு புதிய கதைக்களத்தை இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் காட்டியுள்ளார். அதர்வா, நிமிஷாவின் நடிப்பு அசத்தலாக உள்ளது. படக்குழுவுக்கு வாழ்த்துகள்!" என்று பதிவிட்டுள்ளார்.