DNA படத்தின் மூலம் அதிரடி கம்பேக் கொடுத்த அதர்வா!

அதர்வா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் டிஎன்ஏ.இப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
DNA படத்தின் மூலம் அதிரடி கம்பேக் கொடுத்த அதர்வா!
Published on

அதர்வா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் டிஎன்ஏ. இப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தை ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா போன்ற திரைப்படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் திரைக்கதை தொடக்கம் முதல் இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாக செல்வது படத்தின் பலமாக அமைந்துள்ளது.

இவர் கடைசியாக நடித்து வெளியான நிறங்கள் மூன்று திரைப்படம் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனால் டிஎன்ஏ திரைப்படத்தின் மூலம் ஒரு கம்பேக் கொடுத்துள்ளார்.

மேலும் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகனாக இதயம் முரளி திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதனால் இதற்கடுத்து வரும் திரைப்படங்கள் நல்ல வெற்றிப்படமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com