என் மலர்
நீங்கள் தேடியது "Fahadh Faasil"
- நடிகர் மம்மூட்டி மீண்டும் படப்பிடிப்பிற்காகத் திரும்பி உள்ளார்.
- இப்படத்தில் ஃபகத் ஃபாசில், நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
நடிகர் மம்மூட்டி உடல்நிலைக் காரணமாக 7 மாதங்கள் ஓய்வில் இருந்தார். இதனால் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில், நடிகர் மம்மூட்டி மீண்டும் படப்பிடிப்பிற்காகத் திரும்பி உள்ளார்.
இந்த நிலையில், மலையாள திரையுலகின் 2 பெரும் சூப்பர்ஸ்டார்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோர் ஒன்றாக இணைந்து நடிக்கும் PATRIOT படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
இப்படத்தில் ஃபகத் ஃபாசில், ரேவதி, நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மம்மூட்டியும் மோகன்லாலும் ஒன்றாக இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- அடுத்த ஆண்டு ஜனவரியில் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.
- இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் தாமதமாகலாம் என கூறப்படுகிறது.
'96' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி பிரபலமானவர் இயக்குநர் பிரேம்குமார். '96' படத்தை தொடர்ந்து இவரது இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி நடித்து வெளிவந்த 'மெய்யழகன்' படமும் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், இயக்குநர் பிரேம்குமார் அடுத்ததாக ஃபஹத் பாசிலுடன் இணைய உள்ளார். இது ஒரு த்ரில்லர் ஆக்ஷன் படமாக இருக்கும் என கூறியுள்ள பிரேம்குமார், கதை தொடர்பாக ஃபஹத் பாசிலிடம் சுமார் 45 நிமிடங்கள் வரை பேசியதாகவும், இந்த கதை ஃபஹத் பாசிலுக்கு ரொம்ப பிடித்துள்ளதாகவும் கூறியுள்ளார் .
இது நேரடி தமிழ் படமாக வெளியாக உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரியில் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என இயக்குநர் பிரேம்குமார் கூறியுள்ளார்.
இதனிடையே, இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் தாமதமாகலாம் என கூறப்படுகிறது.
- ஃபஹத் பாசில் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து அல்தாஃப் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஓடும் குதிரா சாடும் குதிரா.
- இன்னாரிட்டு உடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை ஒருமுறை கிட்டத்தட்ட பெற்றிருந்தார்.
மலையாள சினிமாவின் பல்திறமைசாலி நடிகர் ஃபஹத் பாசில், உலக புகழ்பெற்ற, ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் அலெஹாண்ட்ரோ கொன்சாலஸ் இன்னாரிட்டு (Birdman, The Revenant) உடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை ஒருமுறை கிட்டத்தட்ட பெற்றிருந்தார். ஆனால் அந்த வாய்ப்பு இறுதியில் சாத்தியமாகாமல் போனது. இதுக்குறித்து அவர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.
"அவருக்கு நான் பிடிக்கவில்லை; ஆடிஷனுக்குப் பிறகு என்னை ரிஜெக்ட் பண்ணிட்டாங்க" என்று நகைச்சுவையாக சொன்னார்.
ஆனால் பின்னர் அவர் உண்மையான காரணத்தை விளக்கினார்.
"அது அவர் என்னை ரிஜெக்ட் செய்தது இல்லை. என் ஆக்சென்ட் மேல் அவர் கவலைப்பட்டார். அதைப் பூர்த்தி செய்ய மூன்று நான்கு மாதங்கள் அங்கே இருக்க சொல்லப்பட்டது. ஆனால் அதற்கு சம்பளம் எதுவும் கிடைக்கவில்லை. அந்த அளவு நேரத்தையும், உழைப்பையும் ஆக்சென்ட் கற்றுக்கொள்வதற்காக செலவிடும் ஆர்வம் எனக்குள் இல்லை. அதனால்தான் அந்த வாய்ப்பை விட்டுவிட்டேன்." – ஃபஹத் பாசில்
ஃபஹத் பாசில் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து அல்தாஃப் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஓடும் குதிரா சாடும் குதிரா. இப்படம் வரும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக தற்பொழுது நடைப்பெற்று வருகிறது.
- வடிவேலு- ஃபஹத் பாசில் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாரீசன்.
- திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு- ஃபஹத் பாசில் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாரீசன். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள இப்படத்தில் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவணா சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஒரு மறதி நோயாளிக்கும் திருடனுக்கும் உள்ள பயணத்தை மையமாக வைத்து இப்படம் இயக்கப்பட்டுள்ளது. படத்தின் 3 நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன் படி திரைப்படம் 3 நாட்களில் 3.5 கோடி ரூபாய் இந்தியா அளவில் வசூலித்துள்ளது.
இப்படத்துடன் விஜய் சேதுபதி நடித்த தலைவன் தலைவி திரைப்படம் வெளியானது. அப்படம் முதல் நாளிலே 4.5கோடி ரூபாய் வசூலை பெற்றது. அதனை ஒப்பிடும் போது மாரீசன் திரைப்படத்திற்கு மக்கள் குறைவாகவே செல்கின்றனர்.
- ஒரு திருடனும் , நியாபக மறதி நோய் உள்ள நபரும் பயணிக்கும் கதையாக அமைந்துள்ளது.
- சுவாரசியம் குறையாமல் இயக்கியுள்ளார் சுதீஷ் ஷங்கர்.
கதைக்கரு
ஒரு திருடனும் , நியாபக மறதி நோய் உள்ள நபரும் பயணிக்கும் கதையாக அமைந்துள்ளது.
கதைக்களம்
கைதியான ஃபஹத் ஃபாசில் சிறையில் இருந்து விடுதலையாகி சிறு சிறு திருட்டு சம்பவங்களில் ஈடுப்பட்டு வருகிறார். அப்பொழுது திருடுவதற்காக ஒரு வீட்டிற்கு செல்லும்போது அந்த வீட்டில் வடிவேலுவை சங்கிளியால் கட்டி போட்டிருக்கின்றனர். வடிவேலுக்கு நியாபக மறதி நோய் இருப்பது ஃபஹத் ஃபாசிலுக்கு தெரிவவருகிறது. தன்னை இங்கு இருந்து விடுவித்தால் உனக்கு பணம் தருகிறேன் என ஃபஹத் ஃபாசிலிடம் கூறுகிறார். அங்கு இருந்து விடுவித்து ஃபஹத் ஃபாசில் வடிவேலுவை அழைத்து செல்கிறார்.
இச்சூழ்நிலையில் வடிவேலு வங்கியில் 25 லட்ச ருபாய் பணம் இருக்கிறது தெரிய வருகிறது. இதனை திருட ஃபஹத் திட்டமிடுகிறார். இதனால் அவருடன் ஒரு பயணத்தை மேற்கொள்கிறார். அப்பயணத்தில் பல எதிர்பாராத சம்பவங்கள் நடக்கிறது. இதற்கு அடுத்து என்ன ஆனது? அந்த எதிர்பாராத விஷயங்கள் என்ன? ஃபஹத் ஃபாசில் பணத்தை திருடினாரா? வடிவேலுவின் நிலை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
திருடனாக நடித்து இருக்கும் ஃபஹத் ஃபாசில் அவருக்கே உரிய பாணியில் நகைச்சுவை கலந்த குறும்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். வடிவேலு அவரது அனுபவ நடிப்பை மிக கச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளார். எமோஷனல் காட்சிகளில் அதிகம் ஸ்கோர் செய்துள்ளார்.
கோவை சரளா,விவேக் பிரசன்னா, சிதாரா, தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவண சுப்பையா, கிருஷ்ணா,ஹரிதா, டெலிபோன் ராஜா ஆகியோர் கொடுத்த வேலையை திறம்பட செய்துள்ளனர்.
இயக்கம்
நியாபக மறதி நோயாளியும் அதனை பயன்படுத்த நினைக்கும் திருடனுக்கும் உள்ள பயணத்தை மையமாக வைத்து கதை மற்றும் திரைக்கதையை வி.கிருஷ்ண மூர்த்தி எழுதியுள்ளார். அதன் சுவாரசியம் குறையாமல் இயக்கியுள்ளார் சுதீஷ் ஷங்கர். படத்தின் முதல் பாதி கொஞ்சம் மெதுவாக சென்றாலும் அதனை இரண்டாம் பாதியில் ஈடுக்கட்டியுள்ளார். படத்தின் நேரளவை குறைத்து இருந்தால் திரைப்படத்தை இன்னும் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
ஒளிப்பதிவு
கலைசெல்வன் சிவாஜியின் ஒளிப்பதிவு அவர்களுடன் இணைந்து பயணம் செய்ய உதவியுள்ளது.
இசை
யுவன் ஷங்கர் ராஜாவின் இசை கதையோட்டத்திற்கு உதவி இருக்கிறது.
தயாரிப்பு
Super Good films தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
ரேட்டிங் - 3.5 / 5
- வடிவேலு- ஃபஹத் பாசில் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படமான மாரீசன் இன்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு- ஃபஹத் பாசில் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படமான மாரீசன் இன்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள இப்படத்தில் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவணா சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
கிராமிய பின்னணியிலான ட்ராவலிங் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி தயாரித்திருக்கிறார். இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது. அதில் வடிவேலு மற்றும் ஃபஹத் ஃபாசில் இருவரும் மது அருந்திவிட்டு அவர்களின் வாழ்க்கை கதையை பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
- பிரபல நடிகர்களான வடிவேலு- ஃபஹத் பாசில் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாரீசன்.
- ட்ராவலிங் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் நாளை வெளியாகிறது.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு- ஃபஹத் பாசில் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாரீசன்.
இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள இப்படத்தில் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவணா சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கிராமிய பின்னணியிலான ட்ராவலிங் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் நாளை வெளியாகிறது.
சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் ஃபஹத் ஃபாசில் சில சுவாரசிய விஷயங்களை பகிர்ந்துள்ளார் அதில் அவர் " நான் முதன்முதலில் தியேட்டரில் தமிழில் பார்த்த திரைப்படம் பாட்ஷா. என் நண்பர்களுடன் ஸ்கூலை கட் அடித்துவிட்டு சென்று பார்த்த திரைப்படம் அது. என் பேரு மாணிக்கம் எனக்கு இன்னொரு பேரு இருக்கு, உண்மைய சொன்னேன் போன்ற வசனங்களை மெய் மறந்து ரசித்தேன்" என கூறியுள்ளார்.
- இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
- பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி தயாரித்திருக்கிறார்.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு- ஃபஹத் பாசில் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாரீசன்.
இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள இப்படத்தில் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவணா சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஸ்ரீ ஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, மகேந்திரன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார்.
கிராமிய பின்னணியிலான ட்ராவலிங் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி தயாரித்திருக்கிறார்.
இம்மாதம் 25ஆம் தேதி உலகம் முழுவதும் படம் ரிலீஸ் ஆக உள்ளது. படத்தின் முதல் பாடலான ஃபாஃபா பாடல் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு இன்று வெளியிடுள்ளது.
- வடிவேலு- ஃபஹத் பாசில் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாரீசன்.
- இம்மாதம் 25ஆம் தேதி உலகம் முழுவதும் படம் ரிலீஸ் ஆக உள்ளது.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு- ஃபஹத் பாசில் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாரீசன்.
இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள இப்படத்தில் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவணா சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஸ்ரீ ஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, மகேந்திரன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார்.
கிராமிய பின்னணியிலான ட்ராவலிங் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி தயாரித்திருக்கிறார்.

இம்மாதம் 25ஆம் தேதி உலகம் முழுவதும் படம் ரிலீஸ் ஆக உள்ளது. படத்தின் முதல் பாடலான ஃபாஃபா பாடல் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்றது. படத்தின் டிரெய்லரை படக்குழு நாளை மாலை 5.04 மணிக்கு வெளியிட இருக்கிறது.
- வடிவேலு- ஃபஹத் பாசில் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாரீசன்.
- இம்மாதம் 25ஆம் தேதி உலகம் முழுவதும் படம் ரிலீஸ் ஆக உள்ளது.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு- ஃபஹத் பாசில் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாரீசன்.
இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள இப்படத்தில் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவணா சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஸ்ரீ ஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, மகேந்திரன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார்.
கிராமிய பின்னணியிலான ட்ராவலிங் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி தயாரித்திருக்கிறார்.
இம்மாதம் 25ஆம் தேதி உலகம் முழுவதும் படம் ரிலீஸ் ஆக உள்ளது. படத்தின் முதல் பாடலான ஃபாஃபா பாடல் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் படத்தின் கதைசுருக்கத்தை இயக்குநர் சமீபத்தில் நடந்த நேர்காணலில் கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது " வடிவேலுவிற்கு அல்சைமர் என்ற நியாபகம் மறதி நோய் இருக்கிறது. வடிவேலு வங்கியில் பெரும் பணத்தை எடுப்பதை திருடனான ஃபஹத் ஃபாசில் பார்க்கிறார். இதை எப்படியாவது வடிவேலுவிடம் இருந்து திருடிவிட வேண்டும் என நினைக்கிறார் ஃபஹத். அதனால் வடிவேலுவை திருவண்ணாமலை வரை வண்டியில் இறக்கிவிடுகிறேன் என கூறி அழைத்து செல்கிறார் அந்த பயணத்தை இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துக் கொண்டு நண்பர்களாகின்றனர். இதற்கு அடுத்து என்ன ஆனது? ஃபஹத் கடைசியில் வடிவேலுவிடம் இருந்து பணத்தை திருடினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதையாகும்.
- வடிவேலு - பகத் பாசில் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாரீசன்.
- சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஆர். பி. சவுத்ரி தயாரித்திருக்கிறார்.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாரீசன்.
இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள 'மாரீசன் ' திரைப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன் , ரேணுகா, சரவணா சுப்பையா , கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஸ்ரீ ஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, மகேந்திரன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார்.
கிராமிய பின்னணியிலான ட்ராவலிங் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஆர். பி. சவுத்ரி தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு E4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் கிரியேட்டிவ் புரொடியுசராக பணியாற்றியுள்ளது.
இப்படத்தின் டீசர் வெளியாகி நான்கு மில்லியன் பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு, படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தது. இந்நிலையில் இந்த திரைப்படம் ஜூலை மாதம் 25ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
'மாமன்னன்' படத்திற்குப் பிறகு வடிவேலு - பகத் பாசில் கூட்டணி இணைந்திருப்பதாலும், இந்த படத்திற்கான டீசரில் இருவரும் அற்புதமாக நடித்திருப்பதாலும் .. படத்திற்கு ரசிகர்களிடத்தில் மட்டுமல்லாமல் திரையுலக வணிகர்களிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
- இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
- இப்படம் ஜூலை மாதம் வெளியாகும் என படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்து இருந்தனர்.
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'மாமன்னன்' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் வடிவேலு- பகத் பாசில் இணைந்து நடித்துள்ள படம் 'மாரீசன்'. மலையாள இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்கும் இந்த படத்தில் விவேக் பிரசன்னா, ரேணுகா, சித்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். வி.கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம், எழுதி, கிரியேட்டிவ் இயக்குனராக பணியாற்றி உள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 98-வது படமான இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். முழுக்க முழுக்க காமெடி காட்சிகளை கொண்டிருக்கும் இப்படத்திற்கு கலைசெல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இப்படம் ஜூலை மாதம் வெளியாகும் என படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், 'மாரீசன்' படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனையொட்டி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து உள்ளனர். ஆடுவதுப்போல் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.