என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "96 படம்"

    • அடுத்த ஆண்டு ஜனவரியில் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.
    • இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் தாமதமாகலாம் என கூறப்படுகிறது.

    '96' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி பிரபலமானவர் இயக்குநர் பிரேம்குமார். '96' படத்தை தொடர்ந்து இவரது இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி நடித்து வெளிவந்த 'மெய்யழகன்' படமும் மிகுந்த வரவேற்பை பெற்றது.

    இந்த நிலையில், இயக்குநர் பிரேம்குமார் அடுத்ததாக ஃபஹத் பாசிலுடன் இணைய உள்ளார். இது ஒரு த்ரில்லர் ஆக்ஷன் படமாக இருக்கும் என கூறியுள்ள பிரேம்குமார், கதை தொடர்பாக ஃபஹத் பாசிலிடம் சுமார் 45 நிமிடங்கள் வரை பேசியதாகவும், இந்த கதை ஃபஹத் பாசிலுக்கு ரொம்ப பிடித்துள்ளதாகவும் கூறியுள்ளார் .

    இது நேரடி தமிழ் படமாக வெளியாக உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரியில் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என இயக்குநர் பிரேம்குமார் கூறியுள்ளார்.

    இதனிடையே, இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் தாமதமாகலாம் என கூறப்படுகிறது. 

    • இப்படத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
    • கார்த்தி 27 படத்தின் பூஜை வீடியோவை பட நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தை இயக்கிய இயக்குனர் பிரேம் குமார் அடுத்ததாக நடிகர் கார்த்தியை வைத்து படம் இயக்குகிறார்.

    'கார்த்தியின் 27'வது படமான இந்த படத்தை 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.

    இப்படத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    கார்த்தி 27 படத்தின் பூஜை வீடியோவை பட நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.

    மேலும், பூஜை வீடியோவை வெளியிட்டு படப்பிடிப்பு நிறைவு பெற்றிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

    • என்னை மிகவும் உற்சாகப்படுத்திய படம் இது.
    • படத்தின் கதையை விஜய் சேதுபதி மனைவியிடம் சொன்னேன், அவருக்கு பிடித்திருந்தது.

    கடந்த 2018-ம் ஆண்டு விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் பிரேம்குமார் இயக்கத்தில் உருவான '96' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்று வசூலில் வாரி குவித்தது.

    '96' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், இரண்டாம் பாகத்தின் கதையை எழுதி முடித்து விட்டதாக இயக்குநர் பிரேம்குமார் கூறியுள்ளார்.



    என்னை மிகவும் உற்சாகப்படுத்திய படம் இது. இந்த படத்தின் கதையை விஜய் சேதுபதி மனைவியிடம் சொன்னேன், அவருக்கு பிடித்திருந்தது. இதை அடுத்து தான் எனக்கு இந்த படத்தை உருவாக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. விஜய் சேதுபதி மற்றும் திரிஷா ஆகியவர்களின் தேதிகளின் அடிப்படையில் படம் உருவாகும் என்று பிரேம்குமார் தெரிவித்துள்ளார். 


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • படத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகளும் முடிவடைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
    • இப்படத்திற் விஜய் வசந்தா இசையமைக்க உள்ளார்.

    கடந்த 2018-ம் ஆண்டு பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி- திரிஷா நடிப்பில் வெளியான படம் '96'. பள்ளிப் பருவ காதலர்கள் 20 ஆண்டுகளுக்கு பின் சந்திக்கும் போது என்ன நடக்கும் என்பதை மிகவும் யதார்த்தமாக காட்டிய படம் '96'. இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

    '96' படத்துக்குப் பின் இயக்குனர் பிரேம் குமார் 'மெய்யழகன்' படத்தை இயக்கினார். இப்படமும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.

    இந்த நிலையில், '96' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் பிரேம் குமார் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அப்படத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகளும் முடிவடைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    விஜய் சேதுபதி- திரிஷா நடிக்க உள்ள 96 இரண்டாம் பாகத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும், விஜய் வசந்தா இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×