'96' Part 2 - இயக்குநர் கொடுத்த அப்டேட்

என்னை மிகவும் உற்சாகப்படுத்திய படம் இது.படத்தின் கதையை விஜய் சேதுபதி மனைவியிடம் சொன்னேன், அவருக்கு பிடித்திருந்தது.
'96' Part 2 - இயக்குநர் கொடுத்த அப்டேட்
Published on

கடந்த 2018-ம் ஆண்டு விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் பிரேம்குமார் இயக்கத்தில் உருவான '96' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்று வசூலில் வாரி குவித்தது.

'96' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், இரண்டாம் பாகத்தின் கதையை எழுதி முடித்து விட்டதாக இயக்குநர் பிரேம்குமார் கூறியுள்ளார்.

என்னை மிகவும் உற்சாகப்படுத்திய படம் இது. இந்த படத்தின் கதையை விஜய் சேதுபதி மனைவியிடம் சொன்னேன், அவருக்கு பிடித்திருந்தது. இதை அடுத்து தான் எனக்கு இந்த படத்தை உருவாக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. விஜய் சேதுபதி மற்றும் திரிஷா ஆகியவர்களின் தேதிகளின் அடிப்படையில் படம் உருவாகும் என்று பிரேம்குமார் தெரிவித்துள்ளார். 

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com