search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "96 Movie"

    • இப்படத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
    • கார்த்தி 27 படத்தின் பூஜை வீடியோவை பட நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தை இயக்கிய இயக்குனர் பிரேம் குமார் அடுத்ததாக நடிகர் கார்த்தியை வைத்து படம் இயக்குகிறார்.

    'கார்த்தியின் 27'வது படமான இந்த படத்தை 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.

    இப்படத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    கார்த்தி 27 படத்தின் பூஜை வீடியோவை பட நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.

    மேலும், பூஜை வீடியோவை வெளியிட்டு படப்பிடிப்பு நிறைவு பெற்றிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காதலர்கள் இந்த சிறப்பு தினத்தை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள்.
    • சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் சில தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது.

    பிப்ரவரி 14ம் தேதி (இன்று) 'காதலர் தினம்'. உலகம் முழுவதும் உள்ள காதல் ஜோடிகள், தம்பதிகள் இந்த சிறப்பு தினத்தை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள்.

    காதலர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் திரைப்பட தயாரிப்பாளர்களும் காதலர் தினத்தில் தங்களது காதல் படங்களை திரையரங்குகளில் வெளியிட்டு காதலர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில், த்ரிஷா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் '96'. இந்த படம் அனைத்து தரப்பினரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றது.

    இந்த நிலையில் விஜய்சேதுபதி -த்ரிஷா நடித்த '96' திரைப்படம் காதலர் தினத்துக்குக்காக இன்று மீண்டும் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் சில தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது.

    பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கின் புதிய அப்டேட் வெளியாகி இருக்கிறது.
    பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான படம் ’96’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று 100 நாட்களை கடந்தது. ராம் என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும், ஜானு என்ற கதாபாத்திரத்தில் திரிஷாவும் நடித்திருந்தார்கள். 

    இப்படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களை கவர்ந்தது. பள்ளி பருவ காதல், நட்பு என அழகாக திரைக்கதை அமைத்திருந்தார்கள். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் இசை படத்திற்கு பெரும் பலமாக அமைந்தது.



    தற்போது இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்தில் ஷர்வானந்த் மற்றும் சமந்தா நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கென்யாவில் நடந்து வருகிறது. லைப் ஆப் ராம் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. விரைவில் இப்படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.
    விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தில் குட்டி திரிஷாவாக நடித்த கவுரி, தற்போது மலையாள படத்தில் நடித்து வருகிறார். #96Movie #GouriKishan
    விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 96 திரைப்படம் பெரியளவில் வெற்றி பெற்றதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமான ஒரு காரணம், இளவயது கதாபாத்திரங்களுக்கான நடிகர், நடிகை தேர்வும் அவர்களது கச்சிதமான நடிப்பும் தான். 

    ஆதித்யா பாஸ்கரும் கவுரி கி‌ஷனும் விஜய்சேதுபதியாக, திரிஷாவாக மாறி நடித்திருந்தனர். இருவரும் தமிழ் திரையுலகில் அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில் கவுரி கி‌ஷனை மலையாள திரையுலகம் அழைத்துள்ளது. 



    துசார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் பிரின்ஸ் ஜாய் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் கவுரிக்கு ஜோடியாக சன்னி வேயின் நடிக்கிறார். ‘அனுகிரஹித்தன் அந்தோனி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பில் கவுரி கி‌ஷன் இணைந்துள்ளார். இதனை கவுரி கி‌ஷன் உறுதி படுத்தியுள்ளார். இந்தப் படத்தை கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
    சமந்தாவுடன் போட்டி போட்டுக் கொண்டிருந்த திரிஷா, தற்போது அதை அவருக்காக விட்டு கொடுத்து இருக்கிறார். #Trisha #Samantha #96Movie
    2018-ம் ஆண்டில் இளைஞர்கள் கொண்டாடிய காதல் படம் ‘96’. பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா, ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

    படத்தைப் பார்த்த பெரும்பாலானவர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி மகிழ்ந்தனர். படம் பார்த்தவர்கள் பலரின் பள்ளிக்கால காதல் நினைவுகளைக் கிளறிவிட்டது. இந்த படத்தின் ரீமேக் உரிமைக்கு கடும் போட்டி நிலவியது. தெலுங்கில் கடும் போட்டிக்கு இடையே தயாரிப்பாளர் தில் ராஜு ரீமேக் உரிமையைக் கைப்பற்றினார். தெலுங்கிலும் பிரேம் குமாரே இயக்க உள்ளார். 

    விஜய் சேதுபதி மற்றும் திரிஷா கதாபாத்திரங்களில் நடிக்க பலரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இறுதியாக சர்வானந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். திரிஷா கதாபாத்திரத்தில் நடிக்க திரிஷாவுக்கும் சமந்தாவுக்கும் போட்டி நிலவியது. திரிஷா போட்டியை விட்டு கொடுக்க சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார்.



    இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. ‘96’ வெளியான போது, திரிஷாவின் நடிப்புக்கு பெரிய பாராட்டு தெரிவித்தார் சமந்தா. அதனைத் தொடர்ந்து ‘96’ படத்தை ரீமேக் செய்ய முடியாது என்றும் தெரிவித்தார். தற்போது மனம் மாறி அவரே நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். #Trisha #Samantha #96Movie
    விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘96’ படத்தில் ஜானு கதாபாத்திரத்திற்காக திரிஷா, சமந்தா இடையே போட்டி நடந்து வருகிறது. #Trisha #Samantha
    விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் 96. முழு காதல் படமாக உருவாகி இருந்த இந்த படத்தை தமிழ் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

    படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகளில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடக்கின்றன. தெலுங்கு ரீமேக் உரிமையை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு வாங்கி இருக்கிறார். முதலில் நானி நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இப்போது சர்வானந்த் நடிக்கிறார். இவர் எங்கேயும் எப்போதும் தமிழ் படத்தில் நடித்தவர். 



    தமிழில் திரிஷா நடித்த வேடத்தில் மீண்டும் திரிஷாவையே நடிக்க வைக்க இயக்குனர் பிரேம் குமார் விரும்புவதாக தெரிகிறது. ஆனால் தயாரிப்பாளர் தில்ராஜுவோ திரிஷாவை விட சமந்தாவுக்கு மார்க்கெட் அதிகம் எனவே சமந்தாவை நடிக்க வைக்கலாம் என்று கூறுகிறாராம். இந்த படத்தை கைப்பற்றுவது யார் என்பதில் திரிஷாவுக்கும் சமந்தாவுக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
    விஜய் சேதுபதியின் 96 படத்திற்கு பிரச்சனை எழுந்துள்ள நிலையில், கதைகள் திருடுவதை தடுக்க வேண்டும் என்று இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார். #BharathiRaja
    கடந்த 2012 - ம் ஆண்டு எனது உதவி இயக்குனர் சுரேஷ் சத்ரியன் 92 என்ற தலைப்பில் கூறிய கதையை கேட்டு வியந்து, பாராட்டி உடனே அதை கொடைக்கானல் அடிவாரத்தில் உள்ள எனது தோட்டத்தில் ஒரு மாதத்துக்கும் மேலாக விவாதித்து, ‘பால்பாண்டி என்கிற பாரதி’ அல்லது நீ, நான், மழை, இளையராஜா என்கிற தலைப்புகளில் அக்கதையை இயக்குவதாக முடிவு செய்திருந்தேன். ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் ‘ஓம்’ படம் தொடங்கப்பட, அதனுடைய வெளிநாட்டு படப்பிடிப்புகள் மற்றும் அதை சார்ந்த வேலைகளால் இந்த படத்தின் வேலைகள் சற்று தள்ளிப்போனது.

    பிரேம்குமாரால் இயக்கப்பட்டு விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கும் 96 படத்தை பார்த்து தொடக்கம் முதலே எனது உதவியாளர் கூறிய கதையின் முழுப்பிரதியாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இது வேதனைக்கும், மன உளைச்சலுக்குமானது மட்டும் அல்ல, தடுத்து நிறுத்தப்பட வேண்டியது மற்றும் தீர்வு காணப்பட வேண்டியது. என்னிடம் பணியாற்றிய மருது பாண்டியன் 96 படத்தின் கதை விவாதத்தில் இருந்ததன் மூலம் அது 92 படத்தின் கதை என்பது உறுதியாகி உள்ளது. 

    தயாரிப்பாளர்கள் சங்கம் விசாரித்து தீர்வு கண்டு தகுந்த நடவடிக்கை எடுப்பதுடன், இவை இனிமேலும் நடைபெறாமல் தடுக்க கேட்டுக் கொள்கிறேன்.’’

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    96 படத்தின் வெற்றியை தொடர்ந்து கதை கேட்பதில் தீவிரமாக கவனம் செலுத்தி சிறந்த கதையை அவசரப்படாமல் நிதானமாக செயல்பட்டு வருகிறார் திரிஷா. #Trisha
    திரிஷா 13 ஆண்டுகளாக கதாநாயகியாக நடித்து வருகிறார். 50 படங்களை தாண்டிவிட்ட திரிஷா கடந்த சில ஆண்டுகளாக சறுக்கலை சந்தித்தார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த ‘96’ படம் அவருக்கு பெரிய வெற்றியை தந்துள்ளது. அதனுடன் தனது நீண்ட நாள் கனவான ரஜினியுடனும் 'பேட்ட' படத்தில் நடித்து வருகிறார்.

    தற்போது கிடைத்திருக்கும் முன்னணி நடிகை அந்தஸ்தை காப்பாற்ற கதை கேட்கும்போது இனி தீவிர கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். அவர் தன்னை தேடி வரும் அனைத்து வாய்ப்புகளையும் ஏற்பது இல்லை.



    மாறாக தான் இதுவரை நடித்திராத கதாபாத்திரங்களாக பார்த்து தேர்வு செய்கிறார். அவசரப்படாமல் நிதானமாக படங்களை தேர்வு செய்து நடித்து ரசிகர்களிடம் வாங்கிய நல்ல பெயரை காப்பாற்றிக் கொள்ள விரும்புகிறார்.
    பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷ் என்பவர் கூறும் புகாருக்கு 96 படத்தின் இயக்குனர் பிரேம் குமார் விளக்கம் அளித்துள்ளார். #96Movie #PremKumar
    96 படத்தின் கதை என்னுடையது என்று இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷ் என்பவர் சில ஊடகங்களின் மூலம் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் இன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

    இதில் இயக்குநர்கள் தியாகராஜன் குமாரராஜா, பாலாஜி தரணீதரன், மருது பாண்டியன், உதவி இயக்குநர் மணிவில்லன் மற்றும் இயக்குநர் பிரேம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் இயக்குநர் பிரேம்குமார் பேசுகையில், ‘இந்த கதை என்னுடையது தான். இந்த கதையை நான் 2016 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் ‘96’ என்ற பெயரில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறேன். இந்த கதையை முழுமையாக எழுதி முடித்த பின்னர் முதலில் இயக்குநர் பாலாஜி தரணீதரன் அவர்களிடமும், நடிகர் விஜய் சேதுபதியிடமும் சொன்னேன். 

    அதற்கு பிறகு தயாரிப்பாளர் நந்தகோபாலிடமும் சொன்னேன். அவர் கதை பிடித்திருக்கிறது என்று சொல்லிய பிறகு தான், அந்த கதைக்கான விவாதத்தைத் தொடங்கினேன். அதில் இயக்குநர்கள் மருது பாண்டியன், பாலாஜி தரணீதரன் ஆகியோர்களும் கலந்து கொண்டார்கள். அதன் போது பேசப்பட்ட விசயங்களையும் நான் தனியாக பதிவு செய்திருக்கிறேன்.

    இந்த படத்தின் டைட்டில் 96 என்று வைத்து டிசைன் செய்து விளம்பரப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து படம் வெளியாகும் வரை நிறைய முறை விளம்பரப்படுத்தப்பட்டது. அப்போதெல்லாம் இதைப் பற்றிய புகார் ஏதும் வரவில்லை. படம் வெளியான பிறகு ஒரு வாரம் கழித்து, விச்சு என்பவர் சமூக வலைதளம் ஒன்றில், ‘இந்த கதை என்னுடையது’ என்று பதிவிட்டிருந்தார். அதனையடுத்து சுரேஷ் என்பவர் இந்த கதை என்னுடையது என்றும், இயக்குநர் மருது பாண்டியன் என்பவரிடம் இந்த கதையை சொல்லியிருக்கிறேன் என்றும், அவர் தான் இந்த கதையை இயக்குநர் பிரேம்குமாரிடம் சொல்லி படமாகியிருக்கிறது என்றும் குற்றம் சுமத்தியிருக்கிறார்.

    ஒரே கதையை எப்படி இரண்டு பேரிடமிருந்து திருட முடியும்? சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது மற்றும் அசுரவதம் ஆகிய இரண்டு படங்களை இயக்கிய இயக்குநர் மருது பாண்டியன் மீது, பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷ் என்பவர் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதையும் உறுதியாக கூறுகிறேன்.

    இந்த கதையை முதல் முறையாக என்னுடைய குறிப்பேட்டிலும், இரண்டாவது முறையாக என்னுடைய கைப்பட எழுதி பைண்டிங் செய்யப்பட்ட பைலும் உள்ளன. இதன் பின்னர் தான் இந்த கதையைப் பற்றி அவரிடம் கூறினேன். இந்த கதையைக் கேட்டவுடன் அவர் ஏற்கனவே சுரேஷ் என்பவர் இதே பாணியில் 92 என்ற டைட்டிலில கதையை கேட்டதாகச் சொல்லவேயில்லை. கதை விவாத்தின் போது அவர் உடனிருந்தார். அப்போதும் சொல்லவில்லை. அவர் கதையை திருடியிருந்தால், அந்த கதையை அவரே இயக்கியிருக்கலாமே. ஏன் மற்றொரு இயக்குநரிடம் கொடுத்து இயக்கசொல்லவேண்டும்?

    இந்த படத்தில் கதையின் நாயகியின் பெயர் ஜானகி என்பதும், கதை களம் தஞ்சாவூர் என்பதும், பள்ளிப்பருவத்து காதலைத்தான் இதிலும் சொல்லியிருக்கிறார்கள் என்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய குற்றச்சாட்டு அல்ல. கதையை திருடியவர் கதையின் நாயகி பெயரை மாற்றியிருக்கலாம், கதை களத்தின் இடத்தை மாற்றியிருக்கலாம் .. இப்படி எத்தனையோ வாய்ப்புகள் இருக்கும் போது, இந்த படத்தில் அப்படியே பயன்படுத்துவார்களா,,?



    இது போன்ற பிரச்சினைகளை பேசி தீர்க்க தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் என்றொரு சங்கம் இருக்கிறது. அதற்கு இயக்குநர் கே பாக்யராஜ் தலைவராக இருக்கிறார். அங்கு வைத்து பேசியிருக்கலாம் அல்லது நீதிமன்றம் இருக்கிறது. அங்கு முறையாக போதிய ஆதாரங்களுடன் வழக்கு பதிவு செய்திருககலாம். இதையெல்லாம் விடுத்து மாற்று பாதையை தேர்ந்தெடுத்து, படைப்பாளிகளை மன உளைச்சலுக்கு ஆளாக்கலாமா? என்று கேள்வி எழுப்பினர் இது தொடர்பாக சுரேஷ் என்பவர் 2012 ஆம் ஆண்டில் மின்னஞ்சல் அனுப்பியதாக தெரிவித்திருக்கிறார். தொழில்நுட்ப குழுவினரின் உதவியுடன் அத்தகைய ஆதாரங்கள் அவர்கள் வெளியிடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

    கதை திருட்டு தொடர்பாக ஒருவர் மற்றொருவர் மீது குற்றம் சுமத்தும் போது தங்களுடைய கதை இது தான் என்ற ஆதாரத்தை வெளியிடவேண்டும். ஆனால் அப்படியொரு ஆதாரத்தை சுரேஷ் என்பவர் இது வரை முன்வைக்கவில்லை. இவர்கள் யாரும் ‘96’ கதை தொடர்பான நம்பகத் தன்மைக் கொண்ட எந்த ஆதாரங்களையும் பகிர்ந்துகொள்ளவில்லை. இதிலிருநது அவர்களின் நோக்கம் என்னவென்று தெளிவாக தெரியவருகிறது.’என்று இயக்குநர் பிரேம்குமார் விளக்கம் அளித்திருக்கிறார்.
    96 படத்தின் வெற்றி மகிழ்ச்சியில் இருக்கும் திரிஷா, சக நடிகைகளிடம் பொறாமை இல்லை என்று கூறியிருக்கிறார். #Trisha #96Movie
    96 படம் கொடுத்த வெற்றி திரிஷாவை உற்சாகமாக மாற்றி இருக்கிறது. மீண்டும் அஜித், விஜய், சூர்யா என்று முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம்.

    சக நடிகைகள் மீது பொறாமைப்பட்டதே இல்லை என்று கூறி இருக்கும் திரிஷா தன்னை கவர்ந்த நடிகைகளையும் பட்டியலிட்டு இருக்கிறார். “நான் எந்த நடிகையைப் பார்த்தும் பொறாமைப்பட்டதில்லை.

    எல்லாத் துறையிலும் போட்டி இருக்கும்; அதை எல்லாம் நான் பொருட்படுத்திக்கமாட்டேன். ஜோதிகா இப்போதும் ரொம்ப அழகான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அனுஷ்கா, நயன்தாரா என்று ஒவ்வொருத்தரிடமும் இருக்கிற நல்ல வி‌ஷயங்களை நான் ரசிக்கிறேன்.

    ஆரோக்கியமான போட்டிதான், நாம செய்யற வேலையை சுவாரசியமாக மாற்றும். சமந்தா, கீர்த்தி சுரேஷ் இரண்டுபேருமே திறமைசாலிகள். சமந்தாவை ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படப்பிடிப்பில்தான் முதல்முறையாக பார்த்தேன். அப்போவே அவங்க நடிப்பை ரசிச்சிருக்கேன். கீர்த்தியை ஒரே ஒருமுறைதான் சந்திச்சிருக்கேன். ‘நடிகையர் திலகம்’ படத்துல கலக்கியிருந்தாங்க. அற்புதமான நடிகை” என்று புகழ்ந்துள்ளார்.
    விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் திரிஷாவின் கதாபாத்திரத்தில் நடித்த சமந்தா, தற்போது மீண்டும் அது மாதிரியான இடத்தை பிடிக்க இருக்கிறார். #Samantha #Trisha
    சிம்பு, திரிஷா நடிப்பில் கவுதம்மேனன் இயக்கத்தில் வெளியான படம் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’. இந்த படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தெலுங்கில் இதே படத்தை நானி-சமந்தா நடிப்பில் கவுதம் மேனன் இயக்கினார்.

    அங்கும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. காதல் படமான இதில் திரிஷாவுக்கும் சமந்தாவுக்கும் யார் சிறப்பான முறையில் ஜெஸ்சி வேடத்தை கொண்டு வருவது என போட்டியே நடந்தது. மீண்டும் இதேபோன்ற போட்டி உருவாகி உள்ளது.



    சமீபத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றி பெற்றிருக்கும் 96 படத்தை தெலுங்கில் நானி வாங்கி நடிக்க இருக்கிறார். இதில் திரிஷாவின் வேடத்துக்கு சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
    96 திரைப்படத்தில் ஜானு கதாபாத்திரத்தில் நடித்த கௌரி, நானும் ராம் கதாபாத்திரத்தில் நடித்த ஆதித்தாவும் காதலிக்க வில்லை என்று கூறியிருக்கிறார். #96Movie #Gouri
    விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘96’. பிரேம் இயக்கியுள்ள இப்படத்தில் திரிஷா கதாநாயகியாகா நடித்திருக்கிறார். மேலும் இதில் விஜய் சேதுபதி, திரிஷாவின் பள்ளி பருவ காட்சியில் ஆதித்யா பாஸ்கரும், கௌரியும் நடித்திருந்தார்கள்.

    ஆதித்யாவும் கௌரியும் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்தது ரசிகர்களை பெருமளவு கவர்ந்திருக்கிறது. இந்நிலையில், இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது. இதையடுத்து இவர்கள் இருவரும் உண்மையில் காதலிக்கிறார்கள் என்று செய்திகள் பரவியது.



    இதையறிந்த கௌரி, நாங்கள் இருவரும் காதலிக்க வில்லை. 96 திரைப்படத்தில் ராம் மற்றும் ஜானு கதாபாத்திரத்தில் காதலர்களாக நடித்தோம். திரைக்குப் பின்னால் இல்லை. எங்களைப் பற்றி தவறான வதந்திகளை பரப்பாதீர்கள்’ என்று கூறியிருக்கிறார்.
    ×