என் மலர்
நீங்கள் தேடியது "Gouri Kishan"
கௌரி கிஷன் அனகா நடிப்பில் ஓரின சேர்க்கையாளர்களை ஆதரிக்கும் மகிழினி இசை ஆல்பம் யூடியூப்பில் வெளியாகியுள்ளது.
96, மாஸ்டர், கர்ணன், படங்களில் நடித்த கௌரி கிஷனும், நட்பே துணை, டிக்கிலோனா படங்களில் நடித்த அனகாவும் மகிழினி என்ற இசை ஆல்பத்திற்காக இணைந்துள்ளனர். வி ஜி பாலசுப்ரமணியன் எழுதி இயக்கி, ட்ரெண்டிங் என்டர்டெயின்மென்ட் மற்றும் கௌஸ்துபா மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில், ஓரின சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக உருவாகியுள்ள இந்த மகிழினி ஆல்பம் சரிகமா ஒரிஜினல்ஸால் வெளியிடப்பட்டுள்ளது.

மகிழினி ஆல்பம்
மகிழினியில் கௌரியும் அனகாவும் ஓரின சேர்க்கையாளர்களாக நடித்திருக்கிறார்கள். இருவருக்கும் இடையேயான உறவு குறித்து அவர்களது குடும்பத்தினரை புரிந்துகொள்ள வைப்பதற்காக எடுக்கும் முயற்சிகளில் அவர்கள் எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதே ஆறு நாட்களில் படமாக்கப்பட்ட மகிழினி ஆல்பத்தின் கருவாகும்.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தில் இணை இயக்குநராக பணியாற்றி வரும் மகிழினி ஆல்பத்தின் இயக்குநர் பாலசுப்ரமணியன் கூறுகையில், "எல்ஜிபிடி என்று அழைக்கப்படும் ஓரின சேர்க்கையாளர்களை பற்றி சமுதாயத்திற்கு புரிய வைக்க வேண்டும் என்பதுதான் மகிழினியின் பின்னணியில் உள்ள எண்ணம்.

சென்னையை சேர்ந்த மலர் (கௌரி) மற்றும் தில்லியில் இருந்து வரும் இந்துஜா (அனகா) பரதநாட்டியம் மீது கொண்ட பற்றால் சந்திக்கிறார்கள். ஒத்திகை ஒன்றின் போது அவர்களுக்குள் காதல் தீ பற்றுகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பதை மகிழினி காண்பித்து இருக்கிறார் இயக்குனர்.
கோவிந்த் வசந்தாவின் இசை, மதன் கார்க்கியின் பாடல் வரிகள் மற்றும் கீர்த்தனா வைத்தியநாதனின் இசையமைப்பு ஆகியவை இந்த ஆல்பத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தில் குட்டி திரிஷாவாக நடித்த கவுரி, தற்போது மலையாள படத்தில் நடித்து வருகிறார். #96Movie #GouriKishan
விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 96 திரைப்படம் பெரியளவில் வெற்றி பெற்றதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமான ஒரு காரணம், இளவயது கதாபாத்திரங்களுக்கான நடிகர், நடிகை தேர்வும் அவர்களது கச்சிதமான நடிப்பும் தான்.
ஆதித்யா பாஸ்கரும் கவுரி கிஷனும் விஜய்சேதுபதியாக, திரிஷாவாக மாறி நடித்திருந்தனர். இருவரும் தமிழ் திரையுலகில் அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில் கவுரி கிஷனை மலையாள திரையுலகம் அழைத்துள்ளது.

துசார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் பிரின்ஸ் ஜாய் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் கவுரிக்கு ஜோடியாக சன்னி வேயின் நடிக்கிறார். ‘அனுகிரஹித்தன் அந்தோனி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பில் கவுரி கிஷன் இணைந்துள்ளார். இதனை கவுரி கிஷன் உறுதி படுத்தியுள்ளார். இந்தப் படத்தை கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
96 படத்தில் திரிஷாவின் இளமை தோற்றத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்த கவுரி கிஷன் அடுத்ததாக மலையாள திரையுலகில் நாயகியாக அறிமுகமாக உள்ளார். #96TheMovie #GouriKishan
96 திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரமாக திரிஷா ஏற்படுத்திய தாக்கத்துக்கு நிகரான தாக்கத்தை ஏற்படுத்தியவர் ‘குட்டி திரிஷா’வாக நடித்த கவுரி கிஷான். அந்தப் படத்தில் நடித்த அத்தனை கேரக்டர்களுமே அவர்களது சிறிய வயதில் அனைவரையும் ஈர்த்தனர்.
அந்த வகையில் குட்டி திரிஷாவாக நடித்த கவுரி கிஷானுக்கு அடுத்த திரைப்பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர் அடுத்ததாக மலையாளத்தில் நாயகியாக அறிமுகமாகவிருக்கிறார்.

பிரின்ஸ் ஜாய் இயக்கும் ‘அனுகிரகீதன் ஆண்டனி’ என்ற திரைப்படத்தில் சன்னி வெய்னுக்கு ஜோடியாக கவுரி நடிக்கிறார். இது பற்றி அவர் கூறும்போது ‘96 படத்துக்கு கிடைத்த வரவேற்பால் கதைகளை கவனமாக தேர்வு செய்கிறேன். இந்த படமும் 96 படம் போல நமது வாழ்க்கைக்கு நெருக்கமான படமாக இருக்கும்’ என்று கூறியுள்ளார். #96TheMovie #GouriKishan #AnugraheethanAntony