என் மலர்
நீங்கள் தேடியது "Body Weight"
- புளியில் நார்ச்சத்து அதிகமாகவும், கொழுப்புச்சத்து குறைவாகவும் இருக்கும்.
- புளியில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
நமது பாரம்பரிய சமையலில் 'புளி' முக்கிய பங்கு வகிக்கிறது. அறுசுவைகளில் முக்கியமானது புளிப்பு சுவை. அன்றாட உணவில் புளியை சேர்த்துக்கொண்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும் என்பதால் ரசம் இல்லாத விருந்தை நமது கலாசாரத்தில் பார்ப்பது அரிது. புளி உடல் எடையை குறைத்து, சீராக பராமரிக்க உதவும் என்பது நம்மில் பலர் அறிந்திராத அறிவியல் பூர்வ உண்மை.
புளியில் நார்ச்சத்து அதிகமாகவும், கொழுப்புச்சத்து குறைவாகவும் இருக்கும். இது உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. தினமும் புளியை உணவில் சேர்த்துக்கொள்வதால், வயிற்று உபாதைகள் சீராகி வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
இதில் உள்ள பிளேவனாய்டு மற்றும் பாலிபினால், உடல் செயல்பாடுகளைத் தூண்டி அதிக எடையை குறைக்க உதவுகிறது. நார்ச்சத்து பசியை குறைத்து, ஆரோக்கியமற்ற உணவுகள் மீதான ஈர்ப்பைக் குறைக்கிறது. தேவையற்ற கழிவுகளை அவ்வப்போது உடலில் இருந்து வெளியேற்றி, ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
பிளேவனாய்டு கெட்டக் கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க உதவுகிறது. புளியை உணவில் சேர்த்துக்கொள்வது, உடல் எடையைக் குறைப்பதோடு மட்டும் இல்லாமல், இன்சுலின் அளவைக் குறைத்து ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும், செரிமான செயல்முறையை அதிகரிக்கவும், வயிற்றுப் புண்களை ஆற்றவும், கொழுப்பைக் கரைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி ஆற்றலை அதிகரிக்கவும், உடலில் உள்ள நச்சுகளை நீக்கவும், எலும்புகளை வலுப்படுத்தவும், தூக்கத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
புளியில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதன் ஆண்டிசெப்டிக் பண்புகள் தொற்று நோயை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. புளி வகைகளில் கலப்பு இனத்தை சேர்க்காமல், நாட்டு வகை அல்லது மலபார் புளியை (குடம்புளி) சேர்த்துக்கொள்வதன் மூலம் சிறப்பாக எடையை குறைத்து பலன்களை பெறலாம்.
- ஆண்களை பொறுத்தவரை உடல் எடையை குறைப்பது எளிதான காரியமாக இருக்காது.
- கடுமையான உடற்பயிற்சிகளால் மட்டுமே உடல் எடையை குறைக்க முடியும் என்பது தவறான கருத்து.
உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள், தாங்கள் செய்யும் சில தவறுகளை திருத்துவதற்கு முயற்சி செய்தாலே போதும். உடல் எடையை ஓரளவு கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:
ஆண்களை பொறுத்தவரை உடல் எடையை குறைப்பது எளிதான காரியமாக இருக்காது. அதிலும் எந்நேரமும் வேலை பற்றிய சிந்தனையில் இயந்திர கதியில் சுழன்று கொண்டிருப்பவர்கள் உடல் ஆரோக்கியத்தில் போதிய கவனம் செலுத்தமாட்டார்கள். அது இயல்பாகவே உடல் பருமன் பிரச்சினைக்கு வழிவகுத்துவிடும்.
1. உணவுத்திட்டம்: உடல் எடையை குறைப்பதற்கு பல உணவு முறைகள் புழக்கத்தில் உள்ளன. அவை உடல் எடையை குறைப்பதற்கு வழிவகுத்தாலும் மற்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உடல் பெறுவதற்கு வழிவகை செய்யாது. மேலும் குறுகிய காலத்திற்குள் உடல் எடையை குறைய வைத்து விடும். ஆனால் அது தற்காலிகமானதுதான். ஆரோக்கியமான உடலுக்கு தேவையான, நிலையான எடை இழப்புக்கு வழி வகுக்காது. எனவே ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு வித்திடும் உணவுகள் மீது கவனம் செலுத்த வேண்டும். அதற்கு ஏற்ற உணவு திட்டத்தை உருவாக்க வேண்டும்.
2. பசியை கட்டுப்படுத்துங்கள் : நீண்ட நேரம் சாப்பிடாமல் பட்டினியாக இருந்தால் பசி அதிகம் எடுக்கும். அதனால் அளவுக்கு அதிகமாக சாப்பிட தோன்றும். அந்த சமயத்தில் குறைவாக சாப்பிடுவதும் முடியாது. அதற்கு இடம் கொடுக்காமல் நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை சாப்பிட வேண்டும். ஒரு வேளை உணவு உட்கொண்டால், மறு வேளை ஆரோக்கியமான நொறுக்குத்தீனி வகைகளை உட்கொள்ளலாம். இது பசியை கட்டுப்படுத்த உதவும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்கவும் உதவும். காலை உணவை 8 மணிக்குள்ளும், மதிய உணவை 1 மணிக்குள்ளும் சாப்பிடலாம். மாலை 3 மணிக்கு சிற்றுண்டியும், இரவு 7 மணிக்குள் இரவு உணவையும் உட்கொள்ளலாம்.
3. சரிவிகித உணவை உண்ணுங்கள் : உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், உண்ணும் உணவில் ஊட்டச்சத்துக்கள் சமச்சீரான அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். எந்த உணவை உட்கொண்டாலும் அதில் 40 சதவீதம் புரதம், 35 சதவீதம் கார்போஹைட்ரேட், 25 சதவீதம் ஆரோக்கியமான கொழுப்புகள் இருக்க வேண்டும். இது உடல் எடை குறைப்புக்கு உதவும். பசியை கட்டுப்படுத்தும். வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்யும்.
4. தண்ணீர் அதிகம் பருகுங்கள் : எல்லா உயிர்களுக்கும் நீர் தான் உயிர் ஆதாரமாக விளங்குகிறது. எனவே தண்ணீர் பருகுவது உடல் ஆரோக்கியத்தில் நேர்மறையான நன்மைகளை ஏற்படுத்தும். தண்ணீர் பருகும் அளவை அதிகரிப்பதன் மூலம் உடல் செயல்பாடுகளின் வேகத்தையும் அதிகப்படுத்த முடியும். மந்த உணர்வை போக்கவும் முடியும். சீரான இடைவெளியில் தொடர்ந்து தண்ணீர் பருகி வந்தால் நீரிழப்பு ஏற்படாது. உடலில் நீரின் அளவு குறைந்தால் தலைவலி, சோர்வு, சோம்பல், குழப்பம் மற்றும் மனநிலை மாற்றத்திற்கு வழிவகுக்கும். அதனை தடுக்க தண்ணீர் அதிகம் பருக வேண்டும்.
5. உடற்பயிற்சிக்கு 30 நிமிடங்கள் ஒதுக்குங்கள் : உட்கொள்ளும் உணவின் மூலம் பெறப்படும் அதிக கலோரிகளை எரிக்க உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியமானது. கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே உடல் எடையை குறைக்க முடியும் என்பது தவறான கருத்து. உண்மை என்னவென்றால், தினசரி 30 நிமிடங்கள் எளிமையான உடற்பயிற்சியோ, உடல் உழைப்பு சார்ந்த வேலைகளையோ மேற்கொள்வது கூட எடை இழப்பு பயணத்தில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும். உடல் செயல்பாடு அல்லது உடற்பயிற்சி என்பது ஒரு குறிப்பிட்ட பயிற்சியாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை. தோட்டக்கலை மற்றும் வீட்டு வேலைகளில் ஈடுபடுவது, நாயுடன் நடப்பது, சைக்கிள் ஓட்டுவது, நண்பர்களுடன் நடைப்பயிற்சி, ஜாக்கிங் செய்வது என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இவையும் கூட உடல் எடை குறைப்பு செயல்பாட்டில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும்.
முதலில் மனது தயாரானதும், எடைக்குறைப்புக்கு உடல் தயாராகுவதற்கு சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும். உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியால் தான் உடல் எடையை ஆரோக்கியமாக குறைக்க முடியும். உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் போது செய்யும் பொதுவான தவறுகள் பற்றியும் சரி செய்யும் விதம் பற்றியும் இங்கே பார்க்கலாம்.
சிலர் உண்ணும் உணவை குறைப்பதற்காக வழக்கமாக சாப்பிடும் அளவில் நான்கில் ஒரு பங்கு சாப்பிடுவார்கள். இதனால் பசி அதிகரித்து அவதிப்படுவார்கள். ஒரு கட்டத்தில் கட்டுப்பாடு இல்லாமல் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவார்கள். அதனால் பிடித்த உணவை அதிகம் உண்ணாமலும் அதிகம் தவிர்க்காமலும் அளவாக சாப்பிடுங்கள். சிலர் உடல் எடையை குறைப்பதற்காக பழச்சாறு அருந்துவார்கள். ஆனால் பழச்சாறுகள் உடல் எடையை குறைப்பதற்கு உதவுவதை காட்டிலும் அதிக அளவு பசியை தூண்டிவிடும்.
உடல் எடையை வேகமாக குறைப்பதற்காக தொடர்ந்து அதிவேக உடற்பயிற்சியில் ஈடுபடுவ்தும் தவறு. இது உடல் எடை குறைப்புக்கு பதிலாக சோர்வை உண்டாக்கும். மாடிப்படிகளில் ஏறி இறங்குதல், குனிந்து நிமிர்தல், தோப்புக்கரணம் போடுதல் என தினசரி அரைமணி நேரம் எளிமையான பயிற்சிகள் செய்தாலே போதும்.
துரித கொழுப்பு உணவுகளை உடனடியாக தவிர்க்கலாம். உடல் எடையை குறைப்பதற்காக சிலர் உணவை குறைத்துவிட்டு நொறுக்கி தீனிகள் சாப்பிட்டு வயிற்றை நிரப்புவார்கள். இதுவும் எடை குறையாமல் இருப்பதற்கு காரணமாகும்.
உணவுக்கட்டுப்பாட்டை ஓரிரு நாட்கள் பின்பற்றிய பிறகு இடையில் இரண்டு நாட்கள் பின்பற்றாமல் இருந்து மீண்டும் தொடர்வது எந்த பலனையும் கொடுக்காது.
எடையை குறைப்பதற்கு கருத்தில் கொள்ள வேண்டிய பிற விஷயங்கள்
7 முதல் 8 மணி நேர உறக்கம் அவசியம். இரவு உணவு அளவாக இருக்க வேண்டும். நடைப்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது. ஒரே இடத்தில் உட்கார்ந்தே இருக்காமல் அவ்வப்போது எழுந்து நடக்கலாம்.
உடல் எடையை சீராக்கும். உணவுப் பழக்கத்தில் மாற்றங்களை மேற்கொள்ளவும் உதவியாக இருக்கும்.
இதில் பலரும் விரும்புவது கிரீன் டீ. குறைந்த நாட்களில் மிதமான எடைக் குறைப்புக்கு உதவும். தினமும் இரண்டு வேளை பருகலாம். இதில் உள்ள மூலக்கூறுகள் உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். கொழுப்பைக் கரைக்கும். குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடல் எடையைக் குறைக்க உதவும்.
லெமன்கிராஸ், இஞ்சி, லவங்கப்பட்டை கலந்த டீயை பகல் வேளையில் குடிக்கலாம். இது உணவை எளிதில் செரிக்க உதவும். லெமன்கிராஸில் உள்ள வேதிப்பொருட்கள் மனச்சோர்வை நீக்கி, உற்சாகத்தை ஏற்படுத்தும். மேலும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
ஆவாரம் இலைகள், பெருஞ்சீரகம், இஞ்சி, லவங்கப்பட்டை, மிளகுக் கீரை மற்றும் பச்சை தேயிலை சாறு கலந்து மூலிகை தேநீர் குடிக்கலாம். பெருஞ்சீரகத்தில் உள்ள கால்சியம், மாங்கனீசு, மக்னீசியம், ஆன்டிஆக்ஸிடெண்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் ஆகியவை பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினையைச் சீராக்கும். இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடலில் கொழுப்பு படிவதைத் தடுக்கும்.
செம்பருத்தி, லவங்கப்பட்டை, துளசி, இஞ்சி, கொத்தமல்லி விதைகள், மஞ்சள், சோம்பு, வெந்தயம், அன்னாசி பூ மற்றும் ஏலக்காய் போன்ற மசாலா பொருட்களைக் கலந்து தேநீர் தயாரித்துப் பருகலாம். சுவையும் மணமும் உள்ள இந்த தேநீர் ஆரோக்கியமான உடல் எடைக் குறைப்புக்கு உதவும்.
செம்பருத்தியில் உள்ள வைட்டமின் சி ஊட்டச்சத்து, உடலின் திசு சிதைவை கட்டுப்படுத்தி புதிய திசுக்களின் வளர்ச்சிக்கு உதவும். இதில் உள்ள கொலாஜன் மற்றும் இரும்புச்சத்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ரத்த அழுத்தத்தை சீராக்குவதற்கு உதவும். மேலும், உடலில் உள்ள நச்சுக்களை சிறுநீர் வழியே வெளியேற்றி, வெப்பத்தைக் குறைக்கும்.
இது உடலில் உள்ள இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்தி, இயற்கையான முறையில் உடல் எடையைக் குறைக்க உதவும். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
முளைகட்டிய தானியங்கள், பாசிப்பயறு, நிலக்கடலை, பழங்கள் அல்லது பழச்சாறு, ராகி கஞ்சி, சத்துமாவு கஞ்சி, இட்லி, தோசை, சிறுதானிய பொங்கல் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை காலை உணவாக சாப்பிடலாம்.
காலை உணவைத் தவிர்ப்பதால் வரும் பிரச்சினைகள்
உடல் சோர்வு அடையும். நாள் முழுவதும் இயங்குவதற்கான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது. இரவு முழுவதும் உணவு சாப்பிடாமல், நீண்ட நேரம் வயிறு காலியாக இருப்பதால், அமிலம் அதிகமாக சுரந்து கொண்டே இருக்கும்.
இந்த நேரத்தில் காலை உணவைத் தவிர்க்கும்போது வயிற்று புண் போன்ற பிரச்சினைகள் வரும். உடல் எடை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. காலையில் சாப்பிடாமல், நீண்ட இடைவெளிக்கு பிறகு உண்ணும்போது நம்மை அறியாமல் அதிகமாக சாப்பிடக்கூடும்.
காலை உணவின் முக்கியத்துவம்
உடல் எடையைக் குறைப்பதில் காலை உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை குறையும் என பலர் கருதுகின்றனர். அவர்கள் முதலில் தவிர்ப்பது காலை உணவை தான். இது பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமைந்து விடும்.
குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் காலை உணவை தவிர்ப்பதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடும். ஓரிரு நாட்கள் காலை உணவை தவிர்க்கும்போது பெரிய வித்தியாசம் தெரியாது. நாளடைவில் இது உடல்நிலையில் எதிர்மறை மாற்றத்தை ஏற்படுத்தும்.
சில உணவு முறைகள் காலை உணவை தவிர்க்க வேண்டும் என பரிந்துரை செய்கின்றன. இது ஆரோக்கியமானதா? என மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு செயல்பட வேண்டும். காலை உணவை அரசன் போல சாப்பிட வேண்டும் என்று பழமொழி உள்ளது. அரசன் போன்று அனைத்து ஊட்டச்சத்துகள் மிக்க உணவை சாப்பிட வேண்டும் என்பதே இதன் பொருளாகும். இது உடல் எடையை சீராக வைத்துக்கொள்வதற்கு உதவும்.
‘வீகன்' என்பது அசைவ உணவுகளைத் தவிர்த்து, தாவர உணவுகளை சாப்பிடுவதாகும். இந்த உணவு முறை ஒவ்வொருவர் விருப்பத்திற்கு ஏற்றது போல அமையும்.
வீகன் உணவு முறையில் காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்ற தாவர உணவுகளை மட்டும் சாப்பிட வேண்டும். இவற்றில் அனைத்து ஊட்டச்சத்துக்களும் இருக்கிறது.
இந்த உணவு முறையை பின்பற்றுபவர்கள், விலங்குகளின் தோலில் இருந்து தயாரிக்கும் பொருட்களைக் கூட தவிர்த்து விடுவார்கள். பால், நெய், மாமிச உணவுகள், முட்டை, தேன் ஆகியவற்றைத் தவிர்ப்பார்கள்.
ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைப்பதற்கு வீகன் முறை சிறந்தது. உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் வயதுக்கு ஏற்ப எவ்வளவு எடையைக் குறைக்க வேண்டும்? என்ன காரணத்தினால் எடை அதிகமாகி இருக்கிறது? ஏதேனும் உடல் நலக்குறைபாடு இருக்கிறதா? போன்ற அனைத்து விஷயங்களையும் பரிசோதித்த பின்னர் மருத்துவரின் ஆலோசனையோடு வீகன் உணவு முறையைப் பின்பற்றலாம்.
ஒரு நாளில் இரண்டு முறை தானியங்கள், மூன்று முறை காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் அல்லது பாலுக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் பொருட்களை சாப்பிட வேண்டும். தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள், சரியான நேரத்திற்கு சாப்பிடுவது முக்கியமானது.
சாப்பிடும் உணவில் ஒரு நாளுக்கு தேவையான கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்க வேண்டும். இவை உடல் சீராக இயங்குவதற்கு அத்தியாவசியமானதாகும்.
வீகன் உணவு முறையுடன், தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி, சீரான தூக்கம் மற்றும் ஆரோக்கியமான வாழ்வியல் முறையை பின்பற்றுவது அவசியம். அப்போது தான் உடல் எடை எளிதாக குறையும். மேலும், அதிக இனிப்புகள், கொழுப்பு நிறைந்த உணவுகள், சோடா போன்றவற்றை தவிர்க்க
வேண்டும்
மனிதர்கள் பயன்படுத்தும் இடங்களை மூன்றாக பிரிக்கலாம். அவை: வீடு, பொதுஇடங்கள், அலுவலகங்கள். இதில் வீட்டை பெரும்பாலும் அனைவருமே தூய்மையாகத்தான் வைத்திருக் கிறார்கள். அலுவலகங்களும் பெரும்பாலும் தூய்மையடைந்துவிடுகின்றன. தூய்மையின்மை அதிகம் தென்படுவது பொதுஇடங்களில்தான்.
வீட்டைவிட்டு வெளியே செல்லும் மக்கள் அனைவரும் பொதுகழிப்பிடங்களை பயன்படுத்துகிறார்கள். அதனை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டியது பயன்படுத்தும் ஒவ்வொருவரின் கடமையாகும். இதில் மிகுந்த விழிப்புணர்வு அவசியம். விமான நிலையம், ரெயில் நிலையம், திரையரங்கு, பெரிய மால்கள், பூங்காக்கள், சாலையோரம் என்று எல்லா இடங்களிலும் பொது கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. தங்கள் பங்குக்கு மக்கள் அதை தூய்மையாக வைத்திருக்க உதவ வேண்டும்.
பெரும்பாலான தொற்று வியாதிகள் பொது கழிப் பறைகளில் இருந்து உருவாகின்றன. பலரும் பயன்படுத்தும் கழிப்பிடங்களில் தொற்று நோய் கிருமிகள் அதிகமாகவே காணப்படும். இது தவிர்க்க முடியாதது. பயன்படுத்திய பின் தண்ணீரை ‘ப்ளஷ்’ செய்துவிட்டு வரவேண்டியது அவசியம். பின்பு கைகளால் கழிப்பறை கதவை திறக்கும் போது கைகளிலும் விரல்களிலும் கிருமிகள் பரவும். கைகளை சோப்பு போட்டு கழுவி துடைத்து சிறிது நேரம் காயவைத்து தூய்மையாக்கிக்கொள்ளவேண்டும்.
கழிப்பிடம் தானே என்று கண்ட இடத்தில் துப்புவது கூடாது. கைப்பைகளை வெளியில் வைத்துவிட்டு உள்ளே செல்லவேண்டும். அதற்கு வாய்ப்பில்லாமல் பொது கழிப்பிடத்தின் உள்ளே பையை வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அந்த பையை அப்படியே எடுத்துக்கொண்டு போய் சமையல் அறையிலோ, டைனிங் டேபிளிலோ வைத்துவிடக்கூடாது. தகுந்த முறையில் தூய்மை செய்த பின் தான் அதனை பயன்படுத்தவேண்டும்.
வெகுதூரம் வெளியில் பயணிக்கும்போது கையோடு சானிடரி டிஷ்யூ, ஹேண்ட் வாஷ் போன்றவைகளை கொண்டு செல்லவேண்டும். அவைகளை பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் கண்ட இடங்களில் கையைவைக்க அனுமதித்துவிடக் கூடாது.
பராமரிப்பு பணியாளர்கள் சுத்தப்படுத்தினாலும், நம் பங்கிற்கு நாமும் சுத்தத்தை பேண முன்வர வேண்டும்.
தூய்மையான பாரதத்தில் பொதுகழிப்பிட சுத்தம் முக்கிய பங்கு வகிக்கிறது.
குப்பை தொட்டியில் போடவேண்டிய பொருட்களை டாய்லெட்டில் போட்டுவிடக் கூடாது.
அங்கிருக்கும் தண்ணீர் குழாய் சரியாக மூடப்பட்டிருக்கிறதா என்பதை சரி பார்க்க வேண்டும்.
டாய்லெட்டை பயன்படுத்தும் முன்பும், பயன்படுத்திய பின்பும் தண்ணீரால் சுத்தம் செய்யுங்கள்.
பொதுகழிப்பிடங்களில் உங்கள் ஒவ்வொரு செயல்பாடும் சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் அமையட்டும்.
இந்தியாவுக்குள் கிவி பழங்களை இறக்குமதி செய்ய வேண்டியது இருப்பதால் அதன் விலை சற்று அதிகமாக இருக்கிறது. ஆனாலும், அந்த பழத்தில் உள்ள நிறைந்த மருத்துவக் குணங்களுக்காக அவற்றை நாம் விரும்பி வாங்கி சாப்பிடலாம். கிவி பழத்தில் கொழுப்புச் சத்து மிகவும் குறைவு. உடலின் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இதை விரும்பி சாப்பிடலாம். வைட்டமின் ‘சி’ அதிகம் கொண்ட இந்தப் பழம், மனிதனுக்கு நோய் தடுப்பாற்றலை அதிகம் தரக்கூடியது. உடலில் பொட்டாசியத்தின் அளவு குறைந்தால், இதயத் துடிப்பில் சீரற்ற நிலை ஏற்படக்கூடும். கிவி கனியில் அதிக அளவு பொட்டாசியச் சத்து இருப்பதால், இந்த சத்தானது இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.
மாரடைப்பைத் தடுப்பதிலும் கிவி முக்கிய பங்காற்றுகிறது. ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும் சூழலில், அதற்கு முன்னதாக பல வகையான நிகழ்வுகள் இதய தமணிகளில் நிகழ்கின்றன. அப்போது ரத்தக் குழாய்களில் உள்ள ரத்தத்தில் சிவப்பணுக்கள், தட்டகங்கள் இவை யாவும் ஒன்றாக சேர்ந்து, கட்டியாக அடைப்பாக மாறி, இதய தமணிகளில் ரத்தம் செல்ல இயலாமல் முழுமையாக அடைத்து மாரடைப்பிற்கு வழிவகுக்கிறது. இவ்வாறு இதய தமணிகளில் ரத்தக் கட்டி உருவாகாமல் தடுக்கும் சக்தி ‘கிவி’ பழத்துக்கு உண்டு.
வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு தேவையான போலேட் என்ற சத்தும், ஒமேகா3 என்ற கொழுப்பு அமிலமும் மற்ற பழங்களைவிட கிவி பழத்தில் மிகவும் அதிக அளவில் உள்ளது. நீரிழிவு நோயாளி பயப்படாமல் இந்தப் பழத்தை சாப்பிடலாம். கிவி பழம், இனிப்பானது தான் என்றாலும், அதன் சர்க்கரை குறியீடின் அளவானது மிகவும் குறைவு. அதனால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மற்ற பழங்களைப் போன்று விரைவாக அதிகமாக்காமல், கொஞ்சமாகவும் நிலையாகவும் நிலை நிறுத்துவதால், நீரிழிவு நோயாளிகள் இதை உண்ணலாம்.
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற பழம் கிவி. மற்ற பழங்களுடன் ஒப்பிடும்போது இதில் மிகவும் குறைவான அளவிலேயே கலோரிகள் உள்ளன. மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்தாகவும் கிவி பயன்படுகிறது. இந்தப் பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கலை மிகவும் எளிதாக அகற்ற முடியும். கிவி பழத்தில் உள்ள வைட்டமின் ஈ, சருமத்தை இளமைப் பொலிவுடன் வைத்திருக்க துணை புரிவதோடு, பெண்கள் மிகவும் எளிதாகக் கருவுறும் தன்மையையும் உருவாக்குகிறது. ஆஸ்துமா நோயாளிக்கு மிகவும் சிறந்த உணவு கிவி பழம். அவர்கள் தொடர்ந்து இந்தப் பழத்தை சாப்பிட்டு வந்தால் அவர்களின் நுரையீரல் செயல்திறனை அதிகரிக்கலாம். இத்தனை நன்மைகள் இருப்பதால் கிவி பழத்தை நிறைய சாப்பிடலாம்.
அதிக எடை உள்ளவர்கள், கொழுப்பு சத்து நிறைந்த உணவை தவிர்ப்பதால், நீரிழிவு, மாரடைப்பு, ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படாது. மேலும், மாடலிங் பெண்களை போல் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, தீவிரமான உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடித்தால், ஆரோக்கிய குறைபாடு ஏற்படுவது நிச்சயம். உயரத்துக்கு பொருத்தம் இல்லாத அளவுக்கு, உடல் எடை அதிகரித்தால் மட்டுமே, உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும்.
உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பதற்கு முன், டாக்டரை சந்தித்து, உடல் குண்டாக இருப்பதற்கு என்ன காரணம் என்பதை அறிய வேண்டும். நிபுணத்துவம் பெற்ற ஒருவரது ஆலோசனையின் பேரில், உணவுக் கட்டுப்பாட்டை துவக்க வேண்டும்.
ஒருவரது உடல் குண்டாக இருக்கிறது என்றால், அதற்கு பல காரணங்கள் உள்ளன. அதிகமாக சாப்பிடுதல், உடற்பயிற்சி செய்யாமை போன்ற காரணங்களால் உடல் எடை அதிகரிக்கும். இதனை, உணவுக் கட்டுபாடு மூலம் நிவர்த்தி செய்யலாம். ஆனால், பரம்பரை ரீதியாக உடல் குண்டாக இருப்பவர்கள், மெலிவது எளிதான காரியம் அல்ல. தைராய்டு சுரப்பி, அட்ரினல் சுரப்பிகளில், நோய் இருந்தாலும், உடல் எடை அதிகரிக்கும். உடல் எடையை குறைத்து, கவர்ச்சியான உடல்வாகு பெற வேண்டும் என்று, உணவின் பெரும் பகுதியை வெட்டி, குறைத்து விடக் கூடாது.

அதுபோல, திடீரென்று உடலை அதிகமாக வருத்தும் உடற்பயிற்சியை துவங்கி விடக்கூடாது. மிதமான உடற்பயிற்சியை தொடர்ந்து செய்வதாலும், கலோரி குறைந்த உணவை சாப்பிடுவதாலும், உடல் எடையை குறைய வைக்கலாம். மூன்று வேளை ஆகாரத்தை என்ன காரணம் கொண்டும் குறைத்து விடக் கூடாது. சத்து நிறைந்த உணவு, காலை நேரத்துக்கு மிகவும் தேவை.
உணவுக் கட்டுப்பாடு என்றாலே, முழுமையாக உணவை தவிர்ப்பது என்று அர்த்தமல்ல. அதனால், கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்கலாம். அதே நேரம் பால், மீன், முட்டை போன்றவைகளை உணவில் சேர்க்காதவர்கள், விட்டமின், தாது சத்துகள் நிறைந்த காய்கறி, பழ வகைகள் அதிகம் சாப்பிட வேண்டும்.
உணவுக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், சாப்பிடும் உணவு, சமச்சீர் சத்துக்கள் நிறைந்ததாக இருப்பது அவசியம். கார்போஹைட்ரேட்ஸ், புரோட்டீன், விட்டமின், மினரல் சத்துகள், போதுமான அளவு இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். சாலட், பழ வகைகளை அதிகமாக சாப்பிட வேண்டும். பழங்களை ஜூஸ் ஆக்காமல், அப்படியே சாப்பிட்டால், நார்ச்சத்து முழுமையாக உடலுக்கு கிடைக்கும்.
மாடலிங் அழகிகள் போல, உடல் மெலிய விரும்புவோர், சாப்பிடுவ தற்கு முன், சாலட் சாப்பிடும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். தண்ணீர் தன்மை அதிகமுள்ள சாலட்டை, முதலிலேயே சாப்பிட்டால், வயிறு சீக்கிரமாக நிறையும். இதனால், அதிகமான அளவு சாதம் சாப்பிட முடியாது. பாஸ்ட் புட் உணவுகள், குளிர்பானங்கள், இனிப்புகளை முழுமையாக தவிர்க்க வேண்டும். உணவுக்கட்டுப்பாட்டில் இருக்கும் போது, சரியான நேரத்திற்கு, சரியான உணவுகளை சரியான முறையில் சாப்பிட வேண்டும்.
கலோரியும் குறைவான அளவில்தான் உள்ளது. பசும் பாலை விட இதில் கால்சியமும் அதிகம் கலந்திருக்கிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் காலை உணவுடன் ஓட்ஸ் பால் பருகி வரலாம். மற்ற பாலை விட இதில் நார்ச்சத்தும் அதிகம் நிறைந்திருக்கிறது. பசியை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.
ஓட்ஸ் பால் தயாரிப்பதும் எளிமையானது. ஒரு கப் ஓட்ஸை அகன்ற பாத்திரத்தில் கொட்டி அதனுடன் தண்ணீர் ஊற்றி 30 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பின்பு தண்ணீரை வடிகட்டி விட்டு மிக்ஸியில் அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் மூன்று கப் தண்ணீர், கல் உப்பு சேர்த்து கலக்க வேண்டும். ஓட்ஸ், தண்ணீரை அதிகம் உறிஞ்சும் தன்மை கொண்டது. அதனால் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். இறுதியில் துணியில் வடிகட்டி பருகலாம். இந்த ஓட்ஸ் பாலை 5 நாட்கள் வரை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். ஓட்ஸ் பாலுடன் தேன் கலந்தும் பருகலாம்.