search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    உடல் பருமனை குறைக்க இயற்கை மருத்துவத்தில் சிறந்த சிகிச்சை
    X

    உடல் பருமனை குறைக்க இயற்கை மருத்துவத்தில் சிறந்த சிகிச்சை

    • உடல் பருமனால் பல்வேறு நோய்கள் ஏற்படும்.
    • சமச்சீர் உணவின் அவசியத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

    வேலூர் சத்துவாச்சாரியில் அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனை உள்ளது. இங்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவராக டாக்டர் அகிலா எல்லாளன் பணியாற்றுகிறார். உடல் பருமன் மற்றும் அதனால் ஏற்படும் நோய்கள், அதற்கான சிகிச்சை முறைகள் குறித்து அவர் கூறியதாவது;

    உடல் பருமன் என்பது எடை அதிகரிப்பு மற்றும் கொழுப்பு திரட்சி என வரையறுக்கப்படுகிறது. உடலில் அதிகப்படியான கொழுப்பு சேரும்போது ஆரோக்கியத்திற்கு எதிர்மறையான விளைவுகளை கொண்டிருக்கும். சமூகம் மற்றும் பொருளாதார தாக்கத்தினால் ஏற்படும் உடல் மற்றும் மனநல பாதிப்புகளும் உடல் பருமனுக்கு ஒரு முக்கிய காரணமாகும்.

    உடல் பருமன் என்பது உலக அளவில் இருக்கும் ஒரு பெரிய பிரச்சினையாகும். 21-ம் நூற்றாண்டில் நவீன உலகில், உடல் பருமன் என்பது கவலையாக உள்ளது. மோசமான உணவு முறைகள், வாழ்வியல் மாற்றங்கள், போதிய தூக்கமின்மை, ஹார்மோன் குறைபாடுகள், புகைபிடித்தல் மற்றும் மது பழக்கங்கள், ஸ்டீராய்டு மருந்துகள், மரபியல் உடல் செயல்பாடு குறைதல் என இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

    நமது உடல்நிலை குறியீடு எண் பி.எம்.ஐ. மூலம் கணக்கிடப்படுகிறது. இது ஒரு நபரின் எடையை உயரத்தினால் கணக்கிடும் முறையாகும். உலக சுகாதார நிறுவனத்தின் தகவல்படி உடல் பருமன் என்பது பி.எம்.ஐ 30- ஐவிட அதிகமாகவோ அல்லது சமமாகவோ இருப்பது சரியான அளவாகும்.

    உடல் பருமனால் பல்வேறு நோய்கள் ஏற்படும். இருதய நோய்கள், நீரழிவு, ஆஸ்துமா, சில வகை புற்று நோய்கள், உயர் ரத்த அழுத்தம், தோல் நோய்கள், சிறுநீரக நோய்கள், கருவுறாமை, மாதவிடாய் கோளாறுகள், உளவியல் சார்ந்த பிரச்சினைகள் என பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது.

    இதற்கு நோயின் அடிப்படை காரணத்தை அறிந்து நீர், நெருப்பு, ஆகாயம், நிலம், காற்று ஆகிய பஞ்சபூதங்களின் கோட்பாடுகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதன் வகைகள் வருமாறு:-

    யோகா, மனிதனின் உடல் மற்றும் மனநலத்தை ஒருங்கிணைக்கும் முறையாகும். உடல் சுத்திகரிப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளை பின்பற்றுவதற்கான செயல் முறையாகும்.

    நல்ல உடல் நலத்தை நாடும் ஒவ்வொருவரும் சமச்சீர் உணவின் அவசியத்தை அறிந்து கொள்ள வேண்டும். சிறு தானிய உணவுகள், பருவ கால காய்கறிகள் மற்றும் பழங்கள், பாலிஷ் செய்யப்படாத அரிசி ஆகியவை சிறந்தவை. உணவு முறைகள் உடல் நல ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் செரிமானத்தை சீர்படுத்தவும் உதவுகிறது.

    விரத முறைகள் மூலமும் இதனை தவிர்க்கலாம். விரதம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உணவை விருப்பத்துடன் தவிர்க்கும் முறையாகும். விரதத்தின் தொடக்கத்தில் 'எனிமா' மூலம் குடலை முழுமையாக சுத்தம் செய்யப்படும். இம்முறையில் உடலில் உள்ள கழிவுகள் சிறந்த முறையில் வெளியேற்றப்படும்.

    நீராவி குளியல்

    நீராவி குளியல் என்பது சரும துவாரங்கள் வழியாக நச்சு கழிவுகள் வெளியேற்றப்படும். இது தோஷ சமநிலை சரி செய்து, ரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது. உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டவும் உதவுகிறது.

    வாழை இலை குளியல்

    வாழை இலை பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. இது ஒரு ஹீலியோ தெரபி முறையாகும். வாழை இலையில் பொட்டாசியம், வைட்டமின், பாஸ்பரஸ், தாமிரம் போன்ற பல்வேறு சத்துக்கள் உள்ளது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து உடல் நிலை சமப்படுத்த உதவுகிறது.

    மண் குளியல்

    மண் குளியல் என்பது தோளில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றி இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது. இதன் மூலம் உடல் புத்துணர்ச்சி பெறுகிறது. மண்ணில் உள்ள கந்தகம், சல்பர், துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் புரோமின் போன்ற தாதுக்கள் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

    உடல் பருமனால் ஏற்படும் நோய்கள் மற்றும் விளைவுகளுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×