என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gauri Kishan"

    • கௌரி கிஷனை டார்கெட் செய்யும் அளவிற்கு யூடியூபர் கேள்விகளை எழுப்பினர்.
    • கௌரி கிஷனின் துணிச்சல் இணையத்தில் பாராட்டுகளை பெற்றது

    அபின் ஹரிஹரன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆதித்யா மாதவன் மற்றும் 96 பட நடிகை கௌரி கிஷன் நடிப்பில் அதர்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் நாளை திரைக்கு வர உள்ளது.

    இப்படத்தின் முந்தைய செய்தியாளர் சந்திப்பு கடந்த 30 ஆம் தேதி நடைபெற்றது. படத்தின் பாடலில் நடிகையை தூக்கினீர்களே நடிகையின் எடை என்ன? என கதாநாயகனிடம் யூடியூபர்கள் கேள்வி எழுப்பினர்.

    இது தொடர்பாக மற்ற தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய கௌரி கிஷன் இதுபோன்ற ஸ்டுப்பிட்டான கேள்விகள் எழுப்பப்படுகிறது. இதுபோன்ற கேள்விகள் சரியான கேள்விகள் அல்ல என அந்த விமர்சனம் தொடர்பாக பேசியிருந்தார்.

    இந்த நிலையில் அண்மையில் நடைபெற்ற அதர்ஸ் பட செய்தியாளர் சந்திப்பில், நடிகை கௌரி கிருஷ்ணனை டார்கெட் செய்யும் அளவிற்கு யூ டியூபர்கள் இருவர் மாறி மாறி கேள்விகளை எழுப்பினர்.

    இதற்கு பதில் அளித்த நடிகை கௌரி கிருஷ்ணன் உடல் எடை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி என்னை உருவக் கேலியை செய்ததற்கு சமம். கதாநாயகனிடம் என்னைப் பற்றி கேட்டாலும் என்னுடைய எடை தொடர்பாகவே எழுப்பப்பட்ட கேள்வி எனவே அந்த கேள்வி தொடர்பாக நான் விமர்சனம் செய்திருந்தேன் என நிதானமாக பதில் அளித்தார்.

    கௌரி கிஷனின் இந்த துணிச்சல் இணையத்தில் பாராட்டுகளை பெற்றது. பல நடிகர்கள் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். நடிகர் சங்கமும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கௌரி கிஷன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், "ஒருவரின் உடல் அமைப்பு அல்லது தோற்றத்தை குறிவைக்கும் கேள்விகள் எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதே கேள்வியை ஒரு நடிகரிடம் கேட்பார்களா? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. இருப்பினும் சம்பந்தப்பட்ட யூடியூபரை குறிவைத்து விமர்சிக்க வேண்டாம்.

    மேலும் எனக்குக் கிடைத்த அனைத்து ஆதரவிற்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இது நான் எதிர்பார்க்காதது" என்று தெரிவித்திருந்தார்

    இந்நிலையில், நடிகை கவுரி கிஷனின் எடை குறித்து அநாகரிக கேள்வி எழுப்பியது தொடர்பாக வருத்தம் தெரிவித்து யூடியூபர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், நடிகை கவுரி கிஷனின் எடை குறித்து தான் எழுப்பிய கேள்வி தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக யூடியூபர் R.S.கார்த்திக் விளக்கம் அளித்துள்ளார். மேலும், தனது கேள்வியால் வருத்தம் ஏற்பட்டிருந்தால் நடிகை கவுரி கிஷனிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.

    • கௌரி கிஷனின் துணிச்சல் இணையத்தில் பாராட்டுகளை பெற்றது.
    • நடிகர் சங்கமும் கௌரி கிஷனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது.

    அபின் ஹரிஹரன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆதித்யா மாதவன் மற்றும் 96 பட நடிகை கௌரி கிஷன் நடிப்பில் அதர்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் நாளை திரைக்கு வர உள்ளது.

    இப்படத்தின் முந்தைய செய்தியாளர் சந்திப்பு கடந்த 30 ஆம் தேதி நடைபெற்றது. படத்தின் பாடலில் நடிகையை தூக்கினீர்களே நடிகையின் எடை என்ன? என கதாநாயகனிடம் யூடியூபர்கள் கேள்வி எழுப்பினர்.

    இது தொடர்பாக மற்ற தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய கௌரி கிஷன் இதுபோன்ற ஸ்டுப்பிட்டான கேள்விகள் எழுப்பப்படுகிறது. இதுபோன்ற கேள்விகள் சரியான கேள்விகள் அல்ல என அந்த விமர்சனம் தொடர்பாக பேசியிருந்தார்.

    இந்த நிலையில் அண்மையில் நடைபெற்ற அதர்ஸ் பட செய்தியாளர் சந்திப்பில், நடிகை கௌரி கிஷனை டார்கெட் செய்யும் அளவிற்கு யூ டியூபர்கள் இருவர் மாறி மாறி கேள்விகளை எழுப்பினர்.

    இதற்கு பதில் அளித்த நடிகை கௌரி கிஷன் உடல் எடை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி என்னை உருவக் கேலியை செய்ததற்கு சமம். கதாநாயகனிடம் என்னைப் பற்றி கேட்டாலும் என்னுடைய எடை தொடர்பாகவே எழுப்பப்பட்ட கேள்வி எனவே அந்த கேள்வி தொடர்பாக நான் விமர்சனம் செய்திருந்தேன் என நிதானமாக பதில் அளித்தார்.

    கௌரி கிஷனின் இந்த துணிச்சல் இணையத்தில் பாராட்டுகளை பெற்றது. பல நடிகர்கள் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். நடிகர் சங்கமும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கௌரி கிஷன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், "இந்த வார தொடக்கத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின் போது, எனக்கும் ஒரு யூடியூபருக்கும் இடையே ஒரு வாக்குவாதம் ஏற்பட்டு எதிர்பாராத விதமாக பதட்டமாக மாறியது.

    ஒரு நபரின் உடல் அல்லது தோற்றத்தை குறிவைக்கும் கருத்துகள் அல்லது கேட்கப்படும் கேள்விகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த சூழலிலும் சரியானது கிடையாது. அதே சமயம் சம்பந்தப்பட்ட யூடியூபரை குறிவைத்து விமர்சிக்க வேண்டாம்.

    விமர்சனங்கள் எனது தொழிலின் ஒரு பகுதியாக இருப்பதை புரிந்திருக்கிறேன். ஆனால் ஒருவரின் உடல் அமைப்பு அல்லது தோற்றத்தை குறிவைக்கும் கேள்விகள் எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

    இதே கேள்வியை ஒரு நடிகரிடம் கேட்பார்களா? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அந்த தருணத்தில் உறுதியுடன் நின்றது எனது கடமை என நினைக்கிறேன். இது எனக்காக மட்டுமல்ல. இதேபோன்ற அனுபவங்களை சந்தித்த அனைவருக்குமானது.

    படம் பற்றும் என்னுடைய நடிப்பை பற்றியும் கேட்கப்படும் கேள்விகளை தான் நான் விரும்புகிறேன். ஒரு கடினமான சூழ்நிலையில் என் நிலைப்பாட்டில் நான் உறுதியாக நிற்க முடிந்ததற்கு எனக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

    எனக்கு நடந்தது ஒன்றும் புதிதல்ல. அது பல இடங்களில் நடந்து வருகிறது. பாடி ஷேமிங் செய்வதை இது இயல்பாக்குகிறது. நமது அசௌகரியத்தை வெளிப்படுத்தவும், தவறு செய்யும்போது கேள்வி கேட்கவும் நமக்கு உரிமை உண்டு.

    மேலும் எனக்குக் கிடைத்த அனைத்து ஆதரவிற்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இது நான் எதிர்பார்க்காதது. உங்கள் ஆதரவிற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம், அம்மா சங்கம் (மலையாள திரைப்படத் துறை), தென்னிந்திய நடிகர் சங்கம் ஆகியவற்றிற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் மற்றும் உங்கள் அசைக்க முடியாத ஆதரவிற்கு பொதுமக்களுக்கு நன்றி. எனது சக ஊழியர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து எனக்கு ஆதரவு அளித்த தொழில்துறையில் உள்ள அனைவருக்கும் நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

    பத்திரிக்கையாளர் சந்திப்பில், உருவக்கேலி செய்ததாக கௌரி கிஷன் வேதனை.

    அபின் ஹரிஹரன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆதித்யா மாதவன் மற்றும் 96 பட நடிகை கௌரி கிஷன் நடிப்பில் அதர்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் நாளை திரைக்கு வர உள்ளது.

    இப்படத்தின் முந்தைய செய்தியாளர் சந்திப்பு கடந்த 30 ஆம் தேதி நடைபெற்றது. படத்தின் பாடலில் நடிகையை தூக்கினீர்களே நடிகையின் எடை என்ன? என கதாநாயகனிடம் யூடியூபர்கள் கேள்வி எழுப்பினர்.

    இது தொடர்பாக மற்ற தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய கௌரி கிஷன் இதுபோன்ற ஸ்டுப்பிட்டான கேள்விகள் எழுப்பப்படுகிறது. இதுபோன்ற கேள்விகள் சரியான கேள்விகள் அல்ல என அந்த விமர்சனம் தொடர்பாக பேசியிருந்தார்.

    இந்த நிலையில் இன்றைய அதர்ஸ் பட செய்தியாளர் சந்திப்பில், நடிகை கௌரி கிருஷ்ணனை டார்கெட் செய்யும் அளவிற்கு யூ டியூபர்கள் இருவர் மாறி மாறி கேள்விகளை எழுப்பினர்.

    இதற்கு பதில் அளித்த நடிகை கௌரி கிருஷ்ணன் உடல் எடை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி என்னை உருவக் கேலியை செய்ததற்கு சமம். கதாநாயகனிடம் என்னைப் பற்றி கேட்டாலும் என்னுடைய எடை தொடர்பாகவே எழுப்பப்பட்ட கேள்வி எனவே அந்த கேள்வி தொடர்பாக நான் விமர்சனம் செய்திருந்தேன் என பதில் அளித்தார்.

    இருப்பினும், நடிகை கௌரி கிருஷ்ணனை பேசவிடாமல் மாறி மாறி சத்தம் எழுப்பியதால் நடிகை கௌரி கிருஷ்ணன் கண்கலங்கினார். செய்தியாளர் சந்திப்பில் ஒரு பெண் கூட இல்லாத நிலையில் இந்த தரமற்ற செயலுக்கு யாரும் கேள்வி எழுப்பமாட்டுகிறீர்கள் என செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பினார்.

    பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் யூடியூபர்கள் செய்யும் செயலால் நடிகை கௌரி கிஷன் செய்தியாளர் சந்திப்பு முடிந்து மௌனமாக புறப்பட்டு சென்றார்.

    • Origin Studios சார்பில் கண்ணதாசன் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார்.
    • ராஜ்குமார் ரங்கசாமி இப்படத்தை இயக்குகிறார்.

    Origin Studios சார்பில் கண்ணதாசன் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. Production NO 1 என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    ராஜ்குமார் ரங்கசாமி இப்படத்தை இயக்குகிறார். எல்.ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜோன்ஸ் ரூபர்ட் இசை அமைக்கிறார். இவர் பொறியாளன், சட்டம் என் கையில் படத்திற்கு இசையமைத்தவர்.

    குட் நைட், லவ்வர் , டூரிஸ்ட் ஃபேமிலி, போன்ற படங்களுக்கு எடிட்டிங் செய்த பரத் இப்படத்துக்கு எடிட்டிங் செய்கிறார். படம் பற்றி இயக்குனர் ராஜ்குமார் ரங்கசாமி கூறியதாவது:

    இந்த உலகில் காதலும் அன்பும் அதன் இயல்பு தன்மையை மாற்றாமல் இருப்பதை நாம் ஒப்புக் கொள்ளும் அதே வேளையில் அவற்றின் வடிவம் காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருப்பதை நாம் மறுக்க இயலாது.

    90s கிட்ஸ், 2K கிட்ஸ் .. வரிசையில் இன்றைய இளைஞர்களை ஜெனரேஷன் ஆல்ஃபா என்று சொல்கிறார்கள்..

    இவர்கள் 21 ஆம் நூற்றாண்டில் முழுமையாகப் பிறந்த முதல் தலைமுறை மற்றும் COVID-19 தொற்றுநோய் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அதிகரித்து வரும் ஆதிக்கத்தால் வடிவமைக்கப்பட்ட குழந்தைப் பருவத்தை அனுபவித்தவர்கள். எல்லா தருணங்களிலும் CELEBRETING MINDSET - ல் இருக்ககூடியது இந்த ஜென் தறைமுறை. இவர்கள் மிகவும் அட்வான்சாக யோசித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

    சகிப்புத்தன்மை, வெறுப்புணர்வு மேலோங்கி இருக்கும் இந்த சூழலில் உறவுகள் என்பது வேர்களில் இருந்து கற்றுக் கொள்ளப்படாமல் அதை விட்டு விலகிய நிலையில் இன்றைய இளம் தலைமுறையினர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

    இன்னொருவர் கருத்தை ஒத்து கொள்வதை தாண்டி அதை கேட்க கூட யாரும் தயாராக இருப்பதில்லை. ஆனால் அடிப்படையான ஒன்றை புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. எந்த தறைமுறையாயிருப்பினும் அதன் ரூட் அதாவது வேர் என்பது முக்கியம். வேர்களை விட்டு விலகாத ஒரு வாழ்க்கை வேண்டும். அதுவே

    அடுத்த தறைமுறையினரின் மீட்சியாக இருக்கும். சிந்தனைகளிலும், தொழில்நுட்பத்திலும் மிகவும் அட்வான்சாக வாழ்ந்து வரும் இன்றைய இளம் தலைமுறையினர் காலம் காலமாக இருந்து வரும் மனிதர்களின் இயல்பான சில நல்ல விஷயங்களை கற்று கொள்ளாமல், கற்று கொடுக்க படாமல் இருப்பதை மனதில் கொண்டு அதை கருவாக வைத்து இப்படம் உருவாகி இருக்கிறது.

    அலட்டி கொள்ளாத, உறவுகள் இன்றி வாழும் ஒருவன்.., குடும்பம், பெற்றோர் என்று சார்ந்திருக்கும் ஒரு இளம் பெண் இவர்கள் இருவருக்கும் இடையே மலரும் உறவு எப்படி செல்கிறது என்பதே இப்படத்தின் கதை.

    96 படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன் ஜோடியாக நடிக்கிறார்கள். இயக்குனர் கே பாக்யராஜ் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார். இவர்களுடன் கிங்ஸ்லி, டி எஸ் ஆர், ஒளிப்பதிவாளர் ராஜூமேனன் மகள் சரஸ்வதி மேனன், இயக்குனர் சாய் ரமணி ஆகியோர் நடிக்கிறார்கள்.

    இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி, பொள்ளாச்சி, நாமக்கல் மற்றும் கோவா போன்ற இடங்களில் நடந்திருக்கிறது. இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த ஆண்டு படம் திரைக்கு வர உள்ளது.

    பட தயாரிப்பாளர் கண்ணதாசன் கூறியதாவது:

    இயக்குனராக வேண்டும் என்ற எண்ணத்தில் நான் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தேன். இந்நிலையில் எனது நண்பர் ராஜ்குமார் ரங்கசாமி இந்த கதையை என்னிடம் கூறினார். இந்த காலகட்டத்திற்கு ஏற்ப சரியான கதையாகவும், சொல்ல வேண்டிய கதையாகவும் இருந்ததால் அதனை தயாரிக்க முடிவு செய்தேன்.

    இப்படத்தை அடுத்து தொடர்ந்து படங்கள் தயாரிக்க எங்களது நிறுவனம் திட்டமிட்டுள்ளது

    இவ்வாறு தயாரிப்பாளர் கண்ணதாசன் கூறினார்..

    • கடைசியாக 2021 ஆம் ஆண்டு வெளிவந்த கசடதபற திரைப்படத்தை இயக்கினார்.
    • இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

    வடிவேலு நடிப்பில் 2006 ஆம் ஆண்டு இம்சை அரசன் 23 ஆம் புலிக்கேசி திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார். அதைத் தொடர்ந்து பல வெற்றி படங்களை இயக்கினார்.

    கடைசியாக 2021 ஆம் ஆண்டு வெளிவந்த கசடதபற திரைப்படத்தை இயக்கினார். அதைத் தொடர்ந்து யோகி பாபு நடிப்பில் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் போட் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    இக்கதை சூழல் 80 வருடங்களுக்கு முன் இந்திய சுதந்திரம் வாங்குவதற்கு முன் நடக்கும் கதையாக அமைந்து இருக்கிறது. ஜப்பான் நாடு, மெட்ராஸ் ப்ரெசிடன்சியாக மீது குண்டு வீசிய போது அங்கு இருந்து 10 நபர்கள் பே ஆஃப் பெங்கால் கடற்கரையில் உயிர் தப்பிக்க பதுங்குகிறார்கள்.

    இப்படத்தில் போட் மேனாக யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் எம்.எஸ் பாஸ்கர், கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், மதுமிதா ஆகியோர் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தை மாலி மற்றும் மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்புதேவன் எண்டர்டெயின்மண்ட் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    படத்தின் முதல் பாடலான `சோக்கா நானும் நிக்கிறேன்' என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை வெளியிட்டுள்ளனர். இப்பாடலின் வரிகளை கோல்ட் தேவராஜ் எழுதியுள்ளார். பத்ம பூஷன் விருது பெற்ற சுதா ரகுநாத் இப்பாடலை பாடியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்தில் போட் மேனாக யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
    • திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    வடிவேலு நடிப்பில் 2006 ஆம் ஆண்டு இம்சை அரசன் 23 ஆம் புலிக்கேசி திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார். அதைத் தொடர்ந்து பல வெற்றி படங்களை இயக்கினார்.

    கடைசியாக 2021 ஆம் ஆண்டு வெளிவந்த கசடதபற திரைப்படத்தை இயக்கினார். அதைத் தொடர்ந்து யோகி பாபு நடிப்பில் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் போட் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    இக்கதை சூழல் 80 வருடங்களுக்கு முன் இந்திய சுதந்திரம் வாங்குவதற்கு முன் நடக்கும் கதையாக அமைந்து இருக்கிறது. ஜப்பான் நாடு, மெட்ராஸ் ப்ரெசிடன்சியாக மீது குண்டு வீசிய போது அங்கு இருந்து 10 நபர்கள் பே ஆஃப் பெங்கால் கடற்கரையில் உயிர் தப்பிக்க பதுங்குகிறார்கள்.

    இப்படத்தில் போட் மேனாக யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் எம்.எஸ் பாஸ்கர், கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், மதுமிதா ஆகியோர் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தை மாலி மற்றும் மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்புதேவன் எண்டர்டெயின்மண்ட் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    படத்தின் முதல் பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாடலான `தக்கிட தகிமி' என்ற பாடல் தேவாவின் குரலில் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • இப்பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

    இயக்குனர் சிம்புதேவன் அடுத்ததாக யோகி பாபுவை வைத்து `போட்' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    இக்கதை சூழல் இந்திய சுதந்திரம் வாங்குவதற்கு 80 வருடங்களுக்கு முன் நடக்கும் கதையாக அமைந்து இருக்கிறது. ஜப்பான் நாடு, மெட்ராஸ் ப்ரெசிடன்சியாக மீது குண்டு வீசிய போது அங்கு இருந்து 10 நபர்கள் பே ஆஃப் பெங்கால் கடற்கரையில் உயிர் தப்பிக்க பதுங்குகிறார்கள்.

    இப்படத்தில் போட் மேனாக யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் எம்.எஸ் பாஸ்கர், கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், மதுமிதா ஆகியோர் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தை மாலி மற்றும் மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்புதேவன் எண்டர்டெயின்மண்ட் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    படத்தின் இரண்டு பாடல்கள் கடந்த வாரத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து நாளை யோகி பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு வாடா வா என்ற படத்தின் ப்ரோமோ பாடலை வெளியிடவுள்ளனர். இப்பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×