யோகி பாபு-வின் பிறந்தநாளை முன்னிட்டு `போட்' படத்தின் ப்ரோமோ சாங்

திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.இப்பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
யோகி பாபு-வின் பிறந்தநாளை முன்னிட்டு `போட்' படத்தின் ப்ரோமோ சாங்
Published on

இயக்குனர் சிம்புதேவன் அடுத்ததாக யோகி பாபுவை வைத்து `போட்' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இக்கதை சூழல் இந்திய சுதந்திரம் வாங்குவதற்கு 80 வருடங்களுக்கு முன் நடக்கும் கதையாக அமைந்து இருக்கிறது. ஜப்பான் நாடு, மெட்ராஸ் ப்ரெசிடன்சியாக மீது குண்டு வீசிய போது அங்கு இருந்து 10 நபர்கள் பே ஆஃப் பெங்கால் கடற்கரையில் உயிர் தப்பிக்க பதுங்குகிறார்கள்.

இப்படத்தில் போட் மேனாக யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் எம்.எஸ் பாஸ்கர், கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், மதுமிதா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தை மாலி மற்றும் மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்புதேவன் எண்டர்டெயின்மண்ட் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

படத்தின் இரண்டு பாடல்கள் கடந்த வாரத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து நாளை யோகி பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு வாடா வா என்ற படத்தின் ப்ரோமோ பாடலை வெளியிடவுள்ளனர். இப்பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com