என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
பொது மருத்துவம்
எடை இழப்புக்கு ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் மூலிகைகள்
- தற்போது உடல் பருமனுக்கு எதிரான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.
- நார்ச்சத்து நிறைந்த இதனைத் தினசரி உணவில் சேர்த்தாலே போதுமானது.
சமூகத்தை அச்சுறுத்தி வரும் ஆரோக்கிய பிரச்சினைகளில் ஒன்று உடல் பருமன். ஆண், பெண், குழந்தைகள், இளம் வயதினர், பெரியவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல், பலர் அவதிப்படுகின்றனர். தற்போது உடல் பருமனுக்கு எதிரான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இந்த பிரச்சினையை எதிர்கொள்ளும் அனைத்து வயதினருக்கும் ஆயுர்வேத மருத்துவம் சில மூலிகைகளைப் பரிந்துரைக்கிறது. அது குறித்து காண்போம்.
வெந்தயம்: வெந்தயத்தில் இருக்கும் 'கேலக்டோமேனன்' நீரில் கரையக்கூடியது. இது பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தருகிறது. உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது. வெந்தய விதைகளை வறுத்துப் பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். காலையில் வெறும் வயிற்றில் தண்ணீருடன் சிறிது வெந்தயப் பொடியைக் கலந்து குடிக்கலாம் அல்லது இரவில் வெந்தய விதைகள் அரை டீஸ்பூன் அளவு ஊறவைத்து மறுநாள் காலையில் எழுந்ததும், காலை உணவுக்கு முன்பு மென்று சாப்பிடலாம்.
குக்குலு: ஆயுர்வேத மருந்துகளில் நீண்டகாலமாக பயன்படுத்தப்படும் மூலிகை குக்குலு. இது உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுவதன் மூலம் எடை இழப்பை ஊக்குவிக்கும். இயற்கையாகவே கொழுப்பைக் குறைக்கும் மூலிகையான இதைத் தேநீராக்கிக் குடித்து வரலாம்.
விஜய்சர்: விஜய்சர் என்பது வேங்கை மரம் ஆகும். இதன் பட்டை உடல் பருமனைக் கட்டுப்படுத்தும் தன்மைகொண்டது. குறிப்பாக வயிற்றுப்பகுதியில் இருக்கும் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இந்த மூலிகைப் பட்டையைத் தேநீராக்கிக் குடிப்பதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்.
திரிபலா: கடுக்காய், நெல்லிக்காய் மற்றும் தான்றிக்காய் சேர்த்த கலவையே 'திரிபலா' எனப்படுகிறது. உடலில் கலந்திருக்கும் நச்சுகளை நீக்கவும், செரிமான அமைப்பை மேம்படுத்தவும் இவை உதவுகின்றன. இதை இரவு உணவுக்குப் பிறகும், காலை உணவுக்கு அரை மணி நேரத்துக்கு முன்பும், வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.
புனர்னவா: மூக்கிரட்டை கீரை என்று அழைக்கப்படும் இது, எடை இழப்புச் செயல்பாட்டில் பயனுள்ளதாக இருக்கும். இதன் டையூரிடிக் பண்புகள், சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை சிறப்பாகச் செயல்பட உதவும். பொட்டாசியம் மற்றும் எலக்ட்ரோலைட்கள் போன்ற அத்தியாவசிய தாதுக்களை இழக்காமல், உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. உடல் எடையை அதிகரிக்கும் நச்சு தண்ணீர் உடலில் சேர்வதைத் தடுக்கிறது. மூக்கிரட்டைக் கீரையைத் தேநீராக்கிக் குடிக்கலாம்.
லவங்கப்பட்டை: உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்ட உதவும் லவங்கப்பட்டை, வயிற்றுப்பகுதியில் இருக்கும் கொழுப்பைக் குறைக்கிறது. இதில் இருக்கும் 'சின்னமால்டிஹைட்' வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகிறது. லவங்கப்பட்டையை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாள் தேநீராக்கிக் குடிக்கலாம்.
கருஞ்சீரகம்: கருஞ்சீரகம் பலவிதமான பயன்பாடுகளுக்கு உகந்தது. குறிப்பாக எடைக்குறைப்பு மற்றும் உடல் பருமனைக் கட்டுப்படுத்தக் கூடியது. நார்ச்சத்து நிறைந்த இதனைத் தினசரி உணவில் சேர்த்தாலே போதுமானது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்