என் மலர்
நீங்கள் தேடியது "Kushboo"
- இந்தியாவுக்காக பேசுகிறேன் என்பதை இந்தியா கூட்டணிக்காக பேசுகிறேன் என்று பேசி இருந்தால் நல்லாயிருக்கும்.
- 2030-ம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 டிரில்லியன் டாலராக இருக்கும் என்று கணித்துள்ளார்கள்.
சென்னை:
வருகிற தேர்தலில் பா.ஜனதா ஒட்டுமொத்தமாக வீழ்த்தப்பட வேண்டும். இந்தியா வளர்ச்சி அடையவில்லை. ஊழல் மலிந்து விட்டது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு பதிலளித்து பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊழல் என்று பேசியிருப்பதை பார்த்து இந்தியாவே சிரிக்குமே. ஊழல் பற்றி அவர் பேசலாமா? ஊழல் கட்சி என்று நாடு முழுவதும் பெயர் பெற்ற கட்சி தி.மு.க.
ஊழல் செய்வது எப்படி என்று கற்றுக்கொடுத்தவர்களே அவர்கள்தான். மக்கள் மறந்து விடுவார்களா?
இப்போதும் ஊழல் செய்ததாக ஒரு அமைச்சர் ஜெயிலில் இருக்கிறார். அவர் அ.தி.மு.க.வில் அமைச்சராக இருந்தபோது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜெயில் உறுதி என்றார்.
இப்போது அவர் ஜெயிலுக்கு போனதும் வருமான வரித்துறையை ஏவிவிட்டு பா.ஜனதா பழி வாங்குகிறது என்கிறார். தோண்ட தோண்ட ஊழல் வந்து கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு முறையும் மோடியை வீழ்த்துவோம் என்று இவர்கள் பேசுவதும் முன்பைவிட அதிக தொகுதிகளை பெற்று மோடி வெற்றி பெறுவதையும் நாடு பார்த்து வருகிறது.
அந்த வகையில் இந்த தேர்தலிலும் அமோக வெற்றியை மக்கள் கொடுப்பார்கள். வீழ்த்தப்படுவதும், வீழப்போவதும் யார் என்பது அப்போது தெரியும்.
நாடு முன்னேறவில்லை என்று சொல்வதற்கு முன்பு ஒரு முதலமைச்சர் தனது பொறுப்பை உணர்ந்து யோசித்து பேச வேண்டாமா? உலக அளவில் இந்தியாவின் பெயர் எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது? உலகில் தலைசிறந்த தலைவராக மோடி உயர்ந்து நிற்கிறார்.
காங்கிரசுடன் சேர்ந்து இத்தனை ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்து பெண்களுக்காக செய்தது என்ன? சுயமரியாதை, சொத்துரிமை என்று உடனே பழங்கதையை பேசுவார்கள். பெண்களின் அடிப்படை பிரச்சனையை உணர்ந்து நாடு முழுவதும் 12 கோடி கழிப்பறைகள் கட்டி கொடுத்துள்ளார்.
இத்தனை ஆண்டு காலம் நிறைவேற்ற முடியாத மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஒரே நாளில் நிறைவேற்றி காட்டியிருக்கிறார்.
இந்தியாவுக்காக பேசுகிறேன் என்பதை இந்தியா கூட்டணிக்காக பேசுகிறேன் என்று பேசி இருந்தால் நல்லாயிருக்கும். இதற்கு முன்பு இந்தியாவை தெரியவில்லையா?
2030-ம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 டிரில்லியன் டாலராக இருக்கும் என்று கணித்துள்ளார்கள். முதலமைச்சர் எதையும் பேசுவதற்கு முன்பு 'ஹோம் ஒர்க்' செய்து பேச வேண்டும். யாரும் தயார் செய்து கொடுக்கும் உரையை பேசினால் இப்படித்தான் தப்பு தப்பாக பேசி மக்கள் சிரிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சனாதன தர்மத்தை நம்பி பின்பற்றினால், தி.மு.க.விற்கோ அதன் கூட்டணிக்கோ வாக்களிக்காதீர்கள், அதை ஒழிக்க வேண்டும் என்று தயவு செய்து கூறுங்கள்.
- முதல்வர் குடும்பத்தை இனி கோவில்களுக்கு அருகில் பார்க்க முடியாது என்று நம்புகிறேன்.
சனாதன சர்ச்சை நீடித்து வரும் நிலையில் தி.மு.க.வின் விமர்சனம் பற்றி நடிகை குஷ்பு கூறியதாவது:-
ஒரு நம்பிக்கையை, தவறாகப் பயன்படுத்தி துன்புறுத்தி இன்பம் காண்பவர்கள் அந்த நம்பிக்கை உள்ளவர்கள், தங்களுக்கு வாக்களித்து, தாங்கள் வெற்றி பெறவில்லை என்று வெளிப்படையாகச் சொல்லும்படி நான் அவர்களுக்கு சவால் விடுகிறேன்.
டெங்கு, கோவிட், தொழுநோய், புற்றுநோய் என்று சொல்லி தைரியத்தை காட்டும்போது, சனாதன தர்மத்தை நம்பி பின்பற்றினால், தி.மு.க.விற்கோ அதன் கூட்டணிக்கோ வாக்களிக்காதீர்கள், அதை ஒழிக்க வேண்டும் என்று தயவு செய்து கூறுங்கள்.
மேலும் முதல்வர் குடும்பத்தை இனி கோவில்களுக்கு அருகில் பார்க்க முடியாது என்று நம்புகிறேன். மு.க.ஸ்டாலின் அவர்களே அதற்கு முற்றுப்புள்ளி வைக்க உங்களால் முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
- உங்களில் யார் பிரதமர் வேட்பாளர்? ராகுலா? நிதிஷ்குமாரா? மம்தாவா? சரத்பவாரா? கெஜ்ரிவாலா? அகிலேஷா? சொல்லுங்கள்.
- மு.க.ஸ்டாலின் இந்தியா கூட்டணியை பார்த்து மோடி பயப்படுகிறார் என்று கூறியிருப்பது இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோக்காகத்தான் இருக்கும்.
சென்னை:
பிரதமர் மோடிக்கு எதிராக களம் இறங்கி இருக்கும் இந்தியா கூட்டணி பற்றி பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியதாவது:-
காமெடி கூட்டமாகத் தான் பார்க்கிறேன். தேர்தலில் போட்டி போட வேண்டும், வெற்றி பெற வேணடும் என்ற ஆசை எல்லா கட்சிகளுக்கும் இருக்கும். தப்பில்லை.
ஆனால் பிரதமர் மோடியை தோற்கடிப்பதற்காக 26 பேர் ஒன்று சேர்ந்துள்ளார்கள். மோடி தனி ஒருவராகத்தானே நிற்கிறார். அவரை தோற்கடிக்க இத்தனை பேர் உங்களுக்கு தேவைப்படுகிறது. முடிந்தால் அவரை எதிர்த்து வெற்றி பெறுங்கள்.
எங்களுக்கு தெரியும் பிரதமர் மோடிதான் என்று. உங்களில் யார் பிரதமர் வேட்பாளர்? ராகுலா? நிதிஷ்குமாரா? மம்தாவா? சரத்பவாரா? கெஜ்ரிவாலா? அகிலேஷா? சொல்லுங்கள்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியா கூட்டணியை பார்த்து மோடி பயப்படுகிறார் என்று கூறியிருப்பது இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோக்காகத்தான் இருக்கும்.
மோடி பயப்படுகிறாரா? இல்லையா? என்பது இருக்கட்டும். எங்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் இவர்தான் என்று சொல்ல மு.க.ஸ்டாலினுக்கு ஏன் பயம்? கடந்த தேர்தலில் ராகுல்தான் பிரதமர் என்று துணிந்து சொன்னாரே. இந்த தேர்தலில் ஏன் சொல்ல பயப்படுகிறார்? தோற்று விடுவார் என்ற பயமா? அல்லது மற்ற கட்சிகள் ஏற்காது என்ற பயமா? மக்கள் ஏற்க மாட்டார்கள் என்ற தயக்கமா?
ராகுல் அமேதியில் மீண்டும் போட்டியிடுவார். ஸ்மிருதி இராணியை தோற்கடிப்பார் என்று சொல்லட்டுமே.
புது கூட்டணி. அதன் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை தெரிந்து கொள்ள எனக்கும் ஆசைதான்.
நாட்டில் 10-ல் 8 பேர் மோடிதான் மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். நாட்டை சீர்திருத்த உலக அளவில் உயர்த்தி வருவதை இந்தியா கூட்டணி விரும்பாமல் இருக்கலாம். ஆனால் இந்தியர்கள் விரும்புகிறார்கள்.
தனது சீர்திருத்தத்தின் அடுத்த கட்டமாக ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை விவாதத்துக்கு கொண்டு வந்துள்ளார். இதுவும் நம் நாட்டில் நடைமுறையில் இருந்ததுதான். அப்போது இந்த கட்சிகளும் ஆதரிக்கத் தானே செய்தது.
இப்போது பயப்படுவதற்கு காரணம் இஷ்டத்துக்கு பணம் கொடுக்க முடியாது. பொய்யான வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்ற முடியாது என்பதால்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அமெரிக்கா போன்ற நாடுகளில் பிரதமர் மோடிக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
- ஆடை சுதந்திரம் இருக்கலாம், மனிதராக பிறந்துள்ளதால் ஒரு எல்லையுடன் இருக்க வேண்டும்.
கோவை:
கோவை பீளமேடு பகுதியில் மக்கள் சேவை மையம் சார்பில், கல்லூரி மாணவிகளுக்கு இடையேயான கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பா.ஜ.க. தேசிய மகளிர் ஆணைய தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு கூறியதாவது:-
கலைஞர் என்னுடைய ஆசான் என்பதில் பெருமை கொள்கிறேன். அவரைப் பற்றி பேசுவது என்றால் நாள் முழுக்க பேசலாம், நான் அங்கிருந்து வந்தவள், அவரைப் பற்றி நன்றாக தெரியும்.
அமெரிக்கா போன்ற நாடுகளில் பிரதமர் மோடிக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
ஆடை சுதந்திரம் இருக்கலாம், மனிதராக பிறந்துள்ளதால் ஒரு எல்லையுடன் இருக்க வேண்டும். எனக்கான எல்லை என்பது புடவை அணிவதுதான் என்றார்.
- இந்தியாவில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் மக்கள் வெற்றி பெற செய்வார்கள்.
- தேர்தல் நேரத்தில் எங்கு போட்டியிட வேண்டும் என்பதை அவரும், கட்சியும் முடிவு செய்யும்.
சென்னை:
பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு கூறியதாவது:-
கர்நாடகா மாநிலம் உடுப்பியில் கல்லூரி மாணவிகள் கழிவறையில் கேமிரா பொருத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக 3 மாணவிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான இந்த கொடுமை பற்றி தேசிய மகளிர் ஆணையம் விசாரித்து வருகிறது. நானும் நேரில் சென்று விசாரித்து வந்தேன். தொடர்ந்து விசாரணை நடப்பதால் இப்போது எதுவும் சொல்ல முடியாது.
பிரதமர் மோடி மக்கள் பிரதமராக உயர்ந்து நிற்கிறார். அவர் இந்தியாவில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் மக்கள் வெற்றி பெற செய்வார்கள்.
ஆனால் தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. இப்போதே அவர் ராமநாதபுரத்தில் போட்டியிடுவாரா? மாட்டாரா? என்று பேச வேண்டியது இல்லை. தேர்தல் நேரத்தில் எங்கு போட்டியிட வேண்டும் என்பதை அவரும், கட்சியும் முடிவு செய்யும்.
ஒருவேளை ராமநாதபுரத்திலேயே போட்டியிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரை எதிர்த்து போட்டியிடும் துணிச்சல் தி.மு.க.வுக்கு உண்டா?
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நடத்தும் யாத்திரை மக்கள் மத்தியில் எழுச்சியை உருவாக்கி உள்ளது. நிச்சயம் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
அந்த பயத்தில்தான் பாவ யாத்திரை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து வருகிறார். ஆனால் தமிழகத்தை வஞ்சித்து பாவம் செய்து வருவது தி.மு.க. செய்த பாவங்களுக்கு பிராயசித்தம் தேடத்தான் கோவில் கோவிலாக சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே பாவம் செய்யவில்லை என்றால் தி.மு.க.வில் யாரும் சாமி கும்பிடக்கூடாது. கோவில்களுக்கும் செல்லக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மல்பே நகர போலீசார் தாமாக முன் வந்து குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 மாணவிகள் மீதும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
- விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி, சம்பந்தப்பட்ட மாணவிகள், கல்லூரி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:
கர்நாடக மாநிலம் உடுப்பி அம்பலபாடியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் 3 பேர் கழிவறையில் ரகசிய கேமிராவை பொருத்தி சக தோழிகளை ஆபாச படம் பிடித்து தங்கள் ஆண் நண்பர்களின் வாட்ஸ்அப் குழுக்களுக்கு அனுப்பி இருக்கிறார்கள். இந்த வீடியோ வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து கல்லூரி மாணவிகள் 3 பேர் கல்லூரியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
இந்த வீடியோ விவகாரத்துக்கு இந்து அமைப்புகள், பா.ஜனதா மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்கள்.
இந்த நிலையில் மல்பே நகர போலீசார் தாமாக முன் வந்து குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 மாணவிகள் மீதும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
அத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி, சம்பந்தப்பட்ட மாணவிகள், கல்லூரி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விவகாரம் பற்றி கர்நாடக உள்துறை மந்திரி பரமேஸ்வரா கூறும்போது, பா.ஜனதா இந்த விஷயத்தை வைத்து குட்டி அரசியலில் ஈடுபடுகின்றன. நண்பர்களுக்கு இடையே நடந்திருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. இதை ஊதி பெரிதாக்கி அரசியல் சாயம் பூச வேண்டுமா? இவையெல்லாம் கடந்த காலங்களில் கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் நடக்கவில்லையா? என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக நேரில் விசாரிப்பதற்காக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு உடுப்பி சென்று உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
குழந்தைகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது மிகவும் வருத்தம் அளிக்கிறது. பெண்களின் கண்ணியத்துடன் யாரும் விளையாட முடியாது என்று குறிப்பிட்டு உள்ளார்.
- இத்தனை பேர் மத்தியில் பெண்களை அவமானப்படுத்தியதும், அதை பலர் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதும் வேதனை அளிக்கிறது.
- நாட்டில் எங்கு என்ன பிரச்சினை நடந்தாலும் பெண்களை குறி வைத்து தாக்குகிறார்கள்.
சென்னை:
தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியதாவது:-
மணிப்பூரில் வன்முறை போர்வையில் பெண்களை நிர்வாணப்படுத்தி வன்கொடுமை செய்த காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இத்தனை பேர் மத்தியில் பெண்களை அவமானப்படுத்தியதும், அதை பலர் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதும் வேதனை அளிக்கிறது. ஒருவருக்கு கூட அந்த பெண்ணை காப்பாற்ற தோன்றவில்லை.
இந்த மாதிரி கொடுமைகளை அரசியல் ரீதியாக அணுகுவதைவிட மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும். ஒரு நல்ல குடிமகனாக இந்த மாதிரி அவலங்கள் நடக்காமல் தடுக்க வழிகாண வேண்டும்.
இந்த கொடுமையை செய்தவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். நாட்டில் எங்கு என்ன பிரச்சினை நடந்தாலும் பெண்களை குறி வைத்து தாக்குகிறார்கள்.
பிரச்சினைகளுக்கும் பெண்களை அவமானப்படுத்துவதற்கும் என்ன சம்பந்தம்? நாட்டில் எந்த மூலையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்தாலும் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். கருத்து வேறுபாடுகளை களைந்துவிட்டு பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் எல்லோரும் ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் தான் கல்வி புரட்சி நடந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமையுடன் கூறி இருக்கிறார்.
- தமிழகத்தின் எல்லையை தாண்டி தமிழும் பேச மாட்டார்கள். தமிழின் பெருமை பற்றியும் சொல்ல மாட்டார்கள்.
சென்னை:
பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினரும் தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு கூறியதாவது:-
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் தான் கல்வி புரட்சி நடந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமையுடன் கூறி இருக்கிறார். அப்படி கல்வி புரட்சி ஏற்பட்டு இருந்தால் முதலில் தி.மு.க.வினர் அனைவரும் நன்றாக படித்து இருப்பார்களே? ஊழல் செய்து இருக்க மாட்டார்களே! ஜெயிலுக்கு போக மாட்டார்களே.ஆனால் தி.மு.க. ஆட்சி காலங்கள் ஊழல் நிறைந்த காலங்களாகத்தானே இருக்கிறது.
நிதி அமைச்சரே 30 ஆயிரம் கோடி ஊழல் நடந்ததை குறிப்பிட்டுள்ளார். உண்மையாகவே கல்வி புரட்சி செய்து இருந்தால், மக்கள் நல அரசியலை செய்து இருந்தால் தி.மு.க.வும் தேசிய அளவில் வளர்ந்து இருக்கும். ஏன், மு.க.ஸ்டாலின் பிரதமராக கூட வந்திருப்பாரே. தமிழ்நாடு எங்கோ போயிருக்குமே.
திராவிட மாடல் என்பது ஊழல் மாடலாகத்தானே எல்லோருக்கும் தெரிகிறது. ஒரு கட்சி, ஆட்சியை மக்கள்தான் பாராட்ட வேண்டும். ஆனால் எங்கள் ஆட்சி சூப்பர் என்று தனக்கு தானே பாராட்டி கொள்வதை நிச்சயம் மக்கள் ரசிக்க மாட்டார்கள். கிண்டல்தான் செய்வார்கள்.
2 வருட தி.மு.க. ஆட்சியில் மக்கள் நொந்து போய் இருக்கிறார்கள். ஒரு மணி நேரம் மழை பெய்தால் மக்கள் என்ன பாடுபடுகிறார்கள் என்பது அவர்களுக்குத்தானே தெரியும்.
தமிழ் தமிழ் என்று இத்தனை காலமும் மக்களை ஏமாற்றினார்கள். இப்போது அதையும் மக்கள் புரிந்து கொண்டார்கள். தமிழகத்தின் எல்லையை தாண்டி தமிழும் பேச மாட்டார்கள். தமிழின் பெருமை பற்றியும் சொல்ல மாட்டார்கள்.
ஆனால் பிரதமர் மோடி நாட்டில் பல மொழிகள் இருந்தும் தமிழின் தொன்மையை அறிந்து உலகம் முழுவதும் அதன் பெருமையை சுட்டிக் காட்டுகிறது. ஐ.நா.சபை வரை உலகில் எங்கு பேசினாலும் திருக்குறள், தமிழின் பெருமை, கலாச்சாரம் பற்றி பேச தவறவில்லை. இப்போது பிரான்சில் திருவள்ளுவருக்கு சிலை நிறுவி தமிழின் பெருைமயை அங்கு நிலைநாட்டி இருக்கிறார்.
தமிழுக்கு தி.மு.க.வால் செய்ய முடியாததை, செய்யாததை பிரதமர் மோடி செய்து வருகிறார். அதை பாராட்டக்கூட மனம் வரவில்லை. நல்லது செய்வதை அவர்கள் ஒப்புக் கொள்வதே கிடையாது. அப்படியிருக்கும்போது எப்படி பாராட்டுவார்கள்?
மனதார எதையும் செய்வதில்லை. மக்களை ஏமாற்றி குறுகிய வட்டத்துக்குள் வைத்திருந்த அவர்களின் சித்து வேலைகள் தோலுரிந்து வருகிறது. உண்மையாகவே நாட்டுக்கு யார் உழைக்கிறார்கள் என்ற உண்மையை மக்கள் உணர்ந்து விட்டார்கள். இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- செந்தில் பாலாஜியை காப்பாற்றுவதில் தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் இவ்வளவு தீவிரமாக இருப்பது ஏன்?
- ஊழல் வழக்கில் சிக்கியவரை காப்பாற்ற ஆளும் கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும் இப்படி வரிந்து கட்டுவது இந்தியாவில் எங்கும் நடக்காத மாடல்.
சென்னை:
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார்.
இந்த நிலையில் அவரை கவர்னர் ஆர்.என்.ரவி 'டிஸ்மிஸ்' செய்து உத்தரவிட்டார். பின்னர் அந்த உத்தரவை நிறுத்தி வைத்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுதொடர்பாக பா.ஜனதா செயற்குழு உறுப்பினரும் தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்புவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
கவர்னர் எடுத்த நடவடிக்கை சரியா? தவறா? என்று விவாதிப்பதைவிட ஊழல் வழக்கில் சிக்கி இருக்கும் செந்தில்பாலாஜி மீது சட்டப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கை கட்டாயம் எடுத்தே ஆக வேண்டும்.
ஆனால் எனக்கு ஒரே ஒரு விஷயம் புரியவில்லை. இதேபோல் பா.ஜனதாவை சேர்ந்த ஒருவர் வழக்கில் சிக்கி இருந்தால் அவரை நீக்கியே தீர வேண்டும் என்று ஊழல் கூட்டணி கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்து இருக்குமே.
ஆனால் ஊழல் வழக்கில் சிக்கி ஒரு அமைச்சரே கைது செய்யப்பட்டு காவலில் இருந்தும் அவரை நீக்க வேண்டும் என்று எந்த கட்சியும் குரல் கொடுக்கவில்லையே ஏன்? பா.ஜனதாவுக்கு எதிரான கூட்டணியில் இருந்தால் ஊழல் செய்வது தப்பில்லை என்று அர்த்தமா?
செந்தில் பாலாஜியை காப்பாற்றுவதில் தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் இவ்வளவு தீவிரமாக இருப்பது ஏன்? அவர் முக்கியமானவர்களின் பெயர் விபரங்களை வெளியே சொல்லிவிடக் கூடாது என்று பயமா?
ஊழல் வழக்கில் சிக்கியவரை காப்பாற்ற ஆளும் கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும் இப்படி வரிந்து கட்டுவது இந்தியாவில் எங்கும் நடக்காத மாடல்.
இவ்வாறு குஷ்பு கூறினார்.
- நான் யாருடைய ஆதரவையும் எதிர் பார்ப்பதும் இல்லை. தனிப்பட்ட முறையில் என்னால் போராடி ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை உண்டு.
- இனி மேல் யாரும் பெண்களை பற்றி எப்படியும் பேசலாம் என்று நினைக்கவே கூடாது.
சென்னை :
தமிழக கவர்னர் ஆர்.என் ரவி, டி.ஜெயக்குமார், குஷ்பு பற்றி அவதூறாக பேசியதாக தி.மு.க. நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைதாகியுள்ளார். அவர் மீது கடுமையான சட்டப்பிரிவுகள் பாய்ந்தன.
இந்த விவகாரத்தில் தனி ஒருவராக நின்று நடிகை குஷ்பு சாதித்து காட்டி இருக்கிறார். தனக்கு எதிரான விமர்சனங்களையும் எதிர்கொள்ளும் ஆற்றல் குஷ்புவிடம் இருப்பதை பல்வேறு நிகழ்வுகளில் பார்த்து வருகிறோம்.
பெண்களை பற்றி தவறான கருத்துக்களை யாராவது தெரிவித்தால் பல கட்சிகள், அமைப்புகள் வரிந்துகட்டி குரல் கொடுக்கும். வீதிக்கு வந்து போராடவும் செய்வார்கள்.
ஆனால் குஷ்பு விவகாரத்தில் எந்த ஒரு அமைப்பும், கட்சியும் கண்டனம் தெரிவிக்கவில்லை. அதைப்பற்றி எல்லாம் பொருட்படுத்தாமல் தனி நபராக நின்று போராடுகிறார். இந்த விஷயத்திலும் தனக்காக என்ற எண்ணத்தில் அவர் போராடவில்லை. அனைத்து பெண்களுக்காகவும் தான் குரல் கொடுக்கிறார்.
பெத்த அப்பாவுக்கும், கட்டின புருஷனுக்கும் இந்த உரிமையை கொடுக்காதபோது ரோட்டில் போகும் எவனோ ஒருத்தனுக்கு இந்த உரிமையை கொடுத்துவிட முடியுமா? இந்த மாதிரி ஆண்களை முட்டிக்கு முட்டி தட்டினால்தான் புத்தி வரும் என்றபோது அவரது பேச்சில் அனல் தெறித்தது.
குஷ்புவை சீண்டி பார்க்காதீங்க திருப்பி அடிச்சாதாங்கமாடீங்க. என்னை பற்றி எல்லோருக்கும் தெரியும். இன்றைக்கு பேசுவா. நாளைக்கு மறந்திடுவா என்று சாதாரணமாக நினைக்காதீங்க. குஷ்பு மன்னிச்சுடுவா... ஆனால் எதையும் மறக்கமாட்டா... அந்த புத்தி எனக்கு கிடையாது.
மாநிலத்தின் முதல்-அமைச்சர் என்ற முறையில் மு.க.ஸ்டாலின் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. ஆனால் அவர் என்னை சீண்டிபார்த்தால் அவருக்கே தெரியும் என் பதிலடி எப்படி இருக்கும் என்று. இதை அவருக்கும் எச்சரிக்கையாகவே சொல்கிறேன் என்று குஷ்பு ஆவேசத்தின் உச்சிக்கே சென்றது எல்லோரையும் அதிர வைத்தது.
இந்த நிலையில் தான் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தி.மு.க.வில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.
இதுபற்றி குஷ்புவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
தரம்கெட்ட அந்த நபரின் பெயரை கூட நான் சொல்ல விரும்பவில்லை. அந்த பெயரை உச்சரிப்பதே அவமானம். அவரை கட்சியில் இருந்து நீக்கியதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி. கவர்னரை தரக்குறைவாக விமர்சித்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் நான் மகளிர் ஆணையத்தில் புகார் கொடுக்கவில்லை. நானாக புகார் கொடுத்தால் மகளிர் ஆணைய உறுப்பினராக இருப்பதால்தான் நடவடிக்கை எடுப்பதாக சில கட்சிகள் விமர்சிக்கும். தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு தொடுத்துள்ளது. எங்கு அடித்தால் வலிக்குமோ அங்கு அடிப்போம்.
நான் எனக்காக மட்டும் குரல் கொடுக்கவில்லை. எந்த பெண்களையும் தரக்குறைவாக பேசக்கூடாது. நடத்தக்கூடாது என்று தான் பேசுகிறேன். பெண்களின் காவலர்கள் போல் தங்களை காட்டிக் கொள்ளும் எந்த கட்சியும் ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லையே என்கிறார்கள். நான் பா.ஜனதாவில் இருப்பதால் அப்படி இருக்கலாம்.
நான் யாருடைய ஆதரவையும் எதிர் பார்ப்பதும் இல்லை. தனிப்பட்ட முறையில் என்னால் போராடி ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை உண்டு. மற்றவர்களுக்கும் இது தெரியும். எனது கருத்துக்காக என் மீது போடப்பட்ட வழக்குகளை தனி ஒருத்தியாகத்தான் சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று 5 ஆண்டுகள் சட்ட போராட்டம் நடத்தி வெற்றி பெற்றேன்.
இனி மேல் யாரும் பெண்களை பற்றி எப்படியும் பேசலாம் என்று நினைக்கவே கூடாது. அதற்கேற்ற வகையில் எனது நடவடிக்கை இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.