என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தி.மு.க.வின் முகத்திரையைக் கிழிச்சு மக்களிடம் அம்பலப்படுத்துவோம்- குஷ்பு
    X

    தி.மு.க.வின் முகத்திரையைக் கிழிச்சு மக்களிடம் அம்பலப்படுத்துவோம்- குஷ்பு

    • மக்களிடம் போய் சேரும்போது தி.மு.க.வோட ஸ்டிக்கரை ஒட்டி, அவங்க திட்டங்கள் மாதிரி கொண்டு போயிடறாங்க.
    • இன்னைக்கு தமிழ் நாட்டுல சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா இருக்கு.

    தமிழக பா.ஜ.க. துணைத் தலைவர் குஷ்பு அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் விவசாயிகளுக்கான திட்டங்கள், பெண்களுக்கான திட்டங்கள், மாணவர்களுக்கான திட்டங்கள் என பல்வேறு தரப்பு மக்களுக்கான நல்ல திட்டங்கள் பிரதமர் மோடி தலைமையில் கொண்டு வரப்பட்டிருக்கு. இந்தத் திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதே எங்கள் பணி.

    ஆனா அது மக்களிடம் போய் சேரும்போது தி.மு.க.வோட ஸ்டிக்கரை ஒட்டி, அவங்க திட்டங்கள் மாதிரி கொண்டு போயிடறாங்க. பொதுமக்களிடம் போய் சேர வேண்டிய நல்ல திட்டங்களின் சலுகைகளை, தி.மு.க.வினர் நடுவில் எடுத்துக்கறதுனால, சாதாரண மக்களிடம் அதுபோய் சேர்வது இல்லை அதனால நாங்க மக்களை சந்திச்சுப் பேசப் போறோம்.

    இன்னைக்கு தமிழ் நாட்டுல சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா இருக்கு. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்துல அத்தனை பேர் இறந்து போனாங்க. அந்த வழக்கு என்னாச்சு? அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் விவகாரம் என்னாச்சு?

    எங்க பார்த்தாலும் செயின் பறிப்பு, கொலை, கொள்ளை. காவல் துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இது எதற்குமே பதில் இல்லை. இது எல்லாமே மூடி மறைக்கப்படுது. தி.மு.க.வின் அந்த முகத்திரையைக் கிழிச்சு மக்களிடம் அம்பலப்படுத்துவோம். மக்களுக்குப் பயனளிக்காமல், தினமும் பயத்துடன் வாழக்கூடிய சூழலை உருவாக்கி வைத்திருக்கிற தி.மு.க.வைப் பற்றிய உண்மைகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதும் எங்கள் பணிதான்.

    இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.

    Next Story
    ×