என் மலர்
நீங்கள் தேடியது "Mookuthi Amman 2"
- இப்படத்தில் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடித்து வருகிறார்.
- 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் பூஜை கடந்த மார்ச் மாதம் பிரமாண்டமாக நடைபெற்றது.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் 'மூக்குத்தி அம்மன்' படம் கடந்த 2020-ம் ஆண்டு வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 'மூக்குத்தி அம்மன்' முதல் பாகத்தில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்திலும், ஆர்.ஜே. பாலாஜி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
இப்படத்தில் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடித்து வருகிறார். சுந்தர் சி இயக்கும் இப்பாகத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் உடன் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.
முதல் பாகம் போல் அல்லாமல் இரண்டாம் பாகத்தினை பிரமாண்டமாக தயாரிக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா, ரெஜினா கசான்ட்ரா மற்றும் பலர் நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் பூஜை கடந்த மார்ச் மாதம் பிரமாண்டமாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டரில் அம்மனாக நடித்து இருக்கும் நயன்தாரா சோகத்தில் அமர்ந்து இருப்பது போன்று உள்ளது. ரசிகர்கள் போஸ்டரை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
இதனிடையே, சுந்தர் சி மற்றும் நயன்தாரா இருவரும் முதல் முறையாக இப்படத்தின் மூலம் இணைந்துள்ளதால் இப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டு உள்ளனர்.
- சுந்தர்.சி எப்படிப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும்.
- நயன்தாரா கடந்த காலத்தில் நடித்த ஒரு கதாபாத்திரத்தில் மீண்டும் நடித்து வருகிறார்.
நயன்தாரா 'மூக்குத்தி அம்மன் 2-'ம் பாகத்தில் நடித்து வருகிறார். சுந்தர்.சி இயக்குகிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பில் உதவி இயக்குனர் ஒருவர் நயன்தாராவிடம் அவர் நடிக்க வேண்டிய காட்சிகளை விளக்கி சொன்னதாகவும் அப்போது நயன்தாரா இடைமறித்து உதவி இயக்குனரிடம் சில கேள்விகளை கேட்டதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தகவல் பரவியது.
இந்த மோதலை தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும், நயன்தாராவுக்கு பதில் தமன்னாவை நடிக்க வைக்க யோசனை நடப்பதாகவும் பேசப்பட்டது. இதற்கு படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான குஷ்பு விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் குஷ்பு வெளியிட்ட அறிக்கையில், "சுந்தர்.சியின் நலம் விரும்பிகளுக்கு தெரிவிப்பது, மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து தேவையற்ற வதந்திகள் பரவி வருகின்றன. அது உண்மையல்ல.
படப்பிடிப்பு திட்டமிட்டபடி சுமூகமாக நடந்து வருகிறது. சுந்தர்.சி எப்படிப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். நயன்தாரா திறமையான நடிகை. அதை அவரே நிரூபித்து இருக்கிறார்.
நயன்தாரா கடந்த காலத்தில் நடித்த ஒரு கதாபாத்திரத்தில் மீண்டும் நடித்து வருகிறார். தற்போது பரவும் வதந்திகள் திருஷ்டி எடுத்த மாதிரி. நடப்பதெல்லாம் நல்லதுக்கே. உங்களின் ஆசிர்வாதம், அன்பை நம்புகிறோம். அடுத்த வெற்றிப்படத்துக்கு காத்திருங்கள்'' என்று கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2015 ஆம் ஆண்டு நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதியின் நண்பனாக நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார்.
- 2020 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி அப்படத்தில் நடித்திருந்தார்.
ஆர்.ஜே பாலாஜி 2013 ஆம் ஆண்டில் இருந்தே தமிழ் படங்களில் சிறுசிறு கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். 2015 ஆம் ஆண்டு நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதியின் நண்பனாக நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார்.
அதைத்தொடர்ந்து புகழ், ஜில் ஜங் ஜக், தேவி, போன்ற படங்களில் நடித்தார். 2019 ஆம் ஆண்டு வெளியான LKG திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்.
2020 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி அப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து இந்தியில் வெளியான 'பதாய் ஹொ' திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்து கதாநாயகனாக நடித்து இருந்தார்.
சில மாதங்களுக்கு முன் கோகுல் இயக்கத்தில் 'சிங்கப்பூர் சலூன்' திரைப்படத்தில் நடித்தார். இப்படம் மக்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்பொழுது மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஆர்.ஜே பாலாஜி. இயக்கவுள்ளார் ஆனால் இப்படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக திரிஷா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுக்குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படம் மூக்குத்தி அம்மன் படத்திற்கு தொடர்ச்சியாக இருக்காது எனவும். இப்படம் வேறு கதைக்களத்தில் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திலும் ஆர் ஜே பாலாஜி முன்னணி கதாப்பாத்திரத்திலும் நடிக்கவுள்ளார். இப்படத்தின் டைட்டில் மூக்குத்தி அம்மன் 2 இல்லாமல், வேறு தலைப்பில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிர்றது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2020 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் படம் வெளிவந்துள்ளது.
- தற்பொழுது மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஆர்.ஜே பாலாஜி. இயக்கவுள்ளார்.
ஆர்.ஜே பாலாஜி 2013 ஆம் ஆண்டில் இருந்தே தமிழ் படங்களில் சிறுசிறு கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். 2015 ஆம் ஆண்டு நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதியின் நண்பனாக நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார்.
அதைத்தொடர்ந்து புகழ், ஜில் ஜங் ஜக், தேவி, போன்ற படங்களில் நடித்தார். 2019 ஆம் ஆண்டு வெளியான LKG திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்.
2020 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி அப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் இயக்குநராகத் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து இந்தியில் வெளியான 'பதாய் ஹொ' திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்து கதாநாயகனாக நடித்து இருந்தார்.

சில மாதங்களுக்கு முன் கோகுல் இயக்கத்தில் 'சிங்கப்பூர் சலூன்' திரைப்படத்தில் நடித்தார். இப்படம் மக்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றது.
தற்பொழுது மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஆர்.ஜே பாலாஜி. இயக்கவுள்ளார். ஆனால் இப்படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக திரிஷா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படம் மூக்குத்தி அம்மன் படத்திற்கு தொடர்ச்சியாக இருக்காது எனவும். இப்படம் வேறு கதைக்களத்தில் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திலும் ஆர் ஜே பாலாஜி முன்னணி கதாப்பாத்திரத்திலும் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கு மாசாணி அம்மன் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுக்குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படத்திலும் அம்மன் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார்.
- இப்படத்தின் இயக்குநர் யார் என்று படக்குழு இன்னமும் அறிவிக்கவில்லை.
2020 ஆம் ஆண்டு ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் இயக்குநராகத் தமிழ் சினிமாவில் ஆர்.ஜே பாலாஜி அறிமுகமானார்.
அண்மையில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஆர்.ஜே பாலாஜி. இயக்கவுள்ளார் என்றும் இப்படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக திரிஷா நடிக்கவுள்ளதாகவும் மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கு மாசாணி அம்மன் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. .
இந்நிலையில், 'மூக்குத்தி அம்மன்' திரைப்படத்தின் 2ம் பாகம் உருவாகவுள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. இப்படத்திலும் அம்மன் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார் என்று படக்குழு வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது.
ஆனால் இப்படத்தின் இயக்குநர் யார் என்று படக்குழு இன்னமும் அறிவிக்கவில்லை. இப்படத்தை ஆர்.ஜே பாலாஜிக்கு பதிலாக வேறொரு இயக்குநர் இயக்குவார் என்று சொல்லப்படுகிறது.
அதே சமயம் திரிஷாவை வைத்து மாசாணியம்மன் என்ற படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்குவார் என்றும் சொல்லப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2020 ஆம் ஆண்டு ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் படம்
- படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக கடந்த மாதம் அறிவித்தனர்.
2020 ஆம் ஆண்டு ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் இயக்குநராகத் தமிழ் சினிமாவில் ஆர்.ஜே பாலாஜி அறிமுகமானார்.
படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக கடந்த மாதம் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர். இப்படத்தில் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிக்கவுள்ளார்.
தற்பொழுது இத்திரைப்படத்தை பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.
ஆர்.ஜே பாலாஜி இப்படத்தை இயக்குவார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் தற்பொழுது இச்செய்தி வெளியாகியுள்ளது. சுந்தர் சி தற்பொழுது வடிவேலுவை வைத்து திரைப்படம் இயக்கி கொண்டு இருக்கிறார், அதைமுடித்துவிட்டு இப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2020 ஆம் ஆண்டு ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் படம்
- படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக கடந்த மாதம் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர்.
2020 ஆம் ஆண்டு ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் இயக்குநராகத் தமிழ் சினிமாவில் ஆர்.ஜே பாலாஜி அறிமுகமானார்.
படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக கடந்த மாதம் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர். இப்படத்தில் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிக்கவுள்ளார்.
தற்பொழுது இத்திரைப்படத்தை பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.
இந்நிலையில் படத்தின் அறிவிப்பு நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படத்தில் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிக்கவுள்ளார்.
- படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.
2020 ஆம் ஆண்டு ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் இயக்குநராகத் தமிழ் சினிமாவில் ஆர்.ஜே பாலாஜி அறிமுகமானார்.
படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக கடந்த மாதம் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர். இப்படத்தில் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிக்கவுள்ளார்.
தற்பொழுது இத்திரைப்படத்தை பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.
படக்குழு தற்பொழுது அதிகாரப்பூர்வமாக மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். சுந்தர் சி இயக்கத்தில் அண்மையில் அரண்மனை 4 படத்தை இயக்கி மாபெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து வடிவேலு நடிப்பில் கேங்கர்ஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார்
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் படம் வெளியானது
- இப்படத்தில் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிக்கவுள்ளார்.
2020 ஆம் ஆண்டு ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் இயக்குநராகத் தமிழ் சினிமாவில் ஆர்.ஜே பாலாஜி அறிமுகமானார்.
படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக சில மாதங்களுக்கு முன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர். இப்படத்தில் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிக்கவுள்ளார்.
இத்திரைப்படத்தை பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கவுள்ளார். படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளனர். படத்தின் தொடக்க பூஜை விழாவை பெரியளவில் நடத்த திட்டமிட்டுள்ளனர். வரும் மார்ச் 6 ஆம் தேதி பூஜை விழா சென்னையில் நடைப்பெற இருக்கிறது. திரைப்படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகவுள்ளது.
சுந்தர் சி இயக்கத்தில் அண்மையில் வெளியான மத கஜ ராஜா திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து வடிவேலு நடிப்பில் கேங்கர்ஸ் திரைப்படம் வெளிவர இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பூஜையில் தயாரிப்பாளர்கள், இயக்குநர் சுந்தர்.சி., நடிகர்கள், நடிகைகள் என பலரும் கலந்து கொண்டனர்.
- பூஜை விழா தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இயக்குநர் சுந்தர்.சி. தற்போது தயாரிக்க உள்ள படம் 'மூக்குத்தி அம்மன் 2'. இப்படத்தை வேல்ஸ் நிறுவனம், ரௌடி பிக்சர்ஸ், அவ்னி சினி மேக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளன. இப்படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். முதல் பாகம் போல் அல்லாமல் இரண்டாம் பாகத்தினை பிரமாண்டமாக தயாரிக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து படத்திற்கான பூஜை தொடங்குவதை முன்னிட்டு வேல்ஸ் நிறுவனர் ஐசரி கணேஷ், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்த நிலையில், 'மூக்குத்தி அம்மன்2' திரைப்படத்திற்கான பூஜை இன்று விமர்சையாக நடைபெற்றது. பூஜை விழாவிற்காக பிரம்மாண்டமான கோவில் போன்ற செட்டை அமைத்து யாகம் வளர்த்து பூஜை நடைபெற்றது. பூஜையில் தயாரிப்பாளர்கள், இயக்குநர் சுந்தர்.சி., நடிகர்கள், நடிகைகள் என பலரும் கலந்து கொண்டனர்.
விழாவில் ஹிப்ஆப் தமிழா இசையில் ஃப்ர்ஸ்ட் லுக் வீடியோ வெளியானது. அதில் படத்தின் தலைப்பு மற்றும் படப்பிடிப்பு தொடங்கியது அறிவிக்கப்பட்டுள்ளது.
பூஜை விழா தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குநர் சுந்தர்.சி. தற்போது இயக்கி தயாரிக்க உள்ள படம் 'மூக்குத்தி அம்மன் 2'.
- 'மூக்குத்தி அம்மன்2' திரைப்படத்திற்கான பூஜை விமர்சையாக நடைபெற்றது.
இயக்குநர் சுந்தர்.சி. தற்போது இயக்கி தயாரிக்க உள்ள படம் 'மூக்குத்தி அம்மன் 2'. இப்படத்தை வேல்ஸ் நிறுவனம், ரௌடி பிக்சர்ஸ், அவ்னி சினி மேக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளன. இப்படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். முதல் பாகம் போல் அல்லாமல் இரண்டாம் பாகத்தினை பிரமாண்டமாக தயாரிக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. படத்தின் பொருட் செலவு 100 கோடி ரூபாய் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து படத்திற்கான பூஜை தொடங்குவதை முன்னிட்டு வேல்ஸ் நிறுவனர் ஐசரி கணேஷ், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்த நிலையில், 'மூக்குத்தி அம்மன்2' திரைப்படத்திற்கான பூஜை விமர்சையாக நடைபெற்றது. பூஜையில் தயாரிப்பாளர்கள், இயக்குநர் சுந்தர்.சி., நடிகர்கள், நடிகைகள் என பலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் படத்தின் முதல் ஷாட் எடுத்ததை படக்குழு வீடியோவாக எடுத்து படப்பிடிப்பு தொடங்கியதை அறிவித்துள்ளனர். இத்திரைப்படத்தின் மேல் ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.