மூக்குத்தி அம்மன் 2 - நயன்தாரா இல்லனா திரிஷா

2015 ஆம் ஆண்டு நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதியின் நண்பனாக நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார்.2020 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி அப்படத்தில் நடித்திருந்தார்.
மூக்குத்தி அம்மன் 2 - நயன்தாரா இல்லனா திரிஷா
Published on

ஆர்.ஜே பாலாஜி 2013 ஆம் ஆண்டில் இருந்தே தமிழ் படங்களில் சிறுசிறு கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். 2015 ஆம் ஆண்டு நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதியின் நண்பனாக நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார்.

அதைத்தொடர்ந்து புகழ், ஜில் ஜங் ஜக், தேவி, போன்ற படங்களில் நடித்தார். 2019 ஆம் ஆண்டு வெளியான LKG திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

2020 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி அப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து இந்தியில் வெளியான 'பதாய் ஹொ' திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்து கதாநாயகனாக நடித்து இருந்தார்.

சில மாதங்களுக்கு முன் கோகுல் இயக்கத்தில் 'சிங்கப்பூர் சலூன்' திரைப்படத்தில் நடித்தார். இப்படம் மக்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்பொழுது மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஆர்.ஜே பாலாஜி. இயக்கவுள்ளார்  ஆனால் இப்படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக திரிஷா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுக்குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இப்படம் மூக்குத்தி அம்மன் படத்திற்கு தொடர்ச்சியாக இருக்காது எனவும். இப்படம் வேறு கதைக்களத்தில் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திலும் ஆர் ஜே பாலாஜி முன்னணி கதாப்பாத்திரத்திலும் நடிக்கவுள்ளார். இப்படத்தின் டைட்டில் மூக்குத்தி அம்மன் 2 இல்லாமல், வேறு தலைப்பில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிர்றது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com