மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கும் பேய் பட இயக்குனர்

இப்படத்தில் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிக்கவுள்ளார். படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.
மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கும் பேய் பட இயக்குனர்
Published on

2020 ஆம் ஆண்டு ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் இயக்குநராகத் தமிழ் சினிமாவில் ஆர்.ஜே பாலாஜி அறிமுகமானார்.

படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக கடந்த மாதம் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர். இப்படத்தில் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிக்கவுள்ளார்.

தற்பொழுது இத்திரைப்படத்தை பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.

படக்குழு தற்பொழுது அதிகாரப்பூர்வமாக மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். சுந்தர் சி இயக்கத்தில் அண்மையில் அரண்மனை 4 படத்தை இயக்கி மாபெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து வடிவேலு நடிப்பில் கேங்கர்ஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார்

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com