என் மலர்

  நீங்கள் தேடியது "Amman"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நெய்விளக்கேற்றுவது மிக, மிக நல்லது.
  • நினைத்தது நடக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் இன்று மா விளக்கு போடுங்கள்.

  இன்று ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையாகும். இன்று அம்பாளை ஆராதிக்க வேண்டும். காலையில் ஆலயத்துக்கு சென்று ஐந்துமுக திரி வைத்து விளக்கு ஏற்றுங்கள். நெய்விளக்கேற்றுவது மிக, மிக நல்லது. அம்மனுக்கு வேண்டிக் கொண்டவர்கள் அல்லது நினைத்தது நடக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் இன்று மா விளக்கு போடுங்கள்.

  அம்பாளுக்கு மிகவும் பிடித்தது செந்நிற மலர்கள்தான். எனவே சிவப்பு நிறத்தில் மலர்களை வாங்கி சாத்துங்கள். குடும்பமாக எல்லோரும் அமர்ந்து, பூஜித்து வணங்குங்கள். ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்து சுமங்கலிகளுக்கு புடவை, ஜாக்கெட் முதலான மங்களப் பொருட்களும் சேர்த்துக் கொடுப்பது நல்லது.

  கணவரின் ஆயுள் பெருகும். தடைப்பட்ட மங்கள சுபகாரியங்கள் அனைத்தும் தங்கு தடை இல்லாமல் விரைவில் கை கூடி வரும். வீட்டில் வறுமை நிலை மாறி, சகல செல்வங்களும் பெருகும்.

  லலிதா சகஸ்ர நாம பாராயணம், கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்யுங்கள். பால் பாயாசம், கேசரி, சர்க்கரைப் பொங்கல் என ஏதேனும் ஒன்றை நைவேத்தியம் செய்து, அக்கம் பக்கத்து குழந்தைகளுக்கு வழங்குங்கள். இன்று கடைசி வெள்ளிக்கிழமை இவற்றையெல்லாம் கடை பிடித்தால் ஆன்மிக ஞானம் அதிகரிக்கும். ஆத்மார்த்தமான திருப்தி ஏற்படும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆடி மாத வழிபாடு அம்மனுக்கு உகந்ததாகும்.
  • இந்த வருடம் ஆடி மாதத்தில் நான்கு வெள்ளிக்கிழமை மட்டுமே வருகிறது.

  ஆடி 26 (12.8.2022)

  ஆடி மாதத்தின் நான்காம் வெள்ளிக்கிழமையானது சக்தியின் அம்சமான காமாட்சி அம்மனுக்கு உகந்தது. ஆடி மாதத்தின் நான்காம் வெள்ளிக்கிழமையில் காமாட்சி அம்மனை வணங்கினால் சுற்றியுள்ள தீய சக்தி நீங்கும். திருமணத்தடை அகலும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுக்கிரன் + ராகு-கேது சம்பந்தத்தால் உருவாகும் சுக்கிர தோஷம் அகலும். ஆண், பெண்களின் தவறான சகவாசங்கள் விலகும். பிரிந்த தம்பதிகள், விவாகரத்து பெற்றவர்கள் மீண்டும் நேர்ந்து வாழும் அரிய சந்தர்ப்பங்கள் உருவாகும்.

  பொதுவாக ஆடி மாதத்தில் ஐந்து வெள்ளிக்கிழமை வரும். இந்த வருடம் நான்கு வெள்ளிக்கிழமை மட்டுமே வருகிறது. பெண்கள் ஆடி மாதத்தின் எல்லா வெள்ளிக்கிழமையும் லலிதா சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி படித்து மகாலட்சுமிக்கு விரதமிருந்து பூஜை செய்து, படையல் படைத்து, சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுக்க சுமங்கலி பாக்கியம் அதிகரிக்கும்.

  வெள்ளிக்கிழமை மகாலட்சுமி பூஜை, வழிபாடு செய்வதால் பொன், பொருள், செல்வம், தனம், பணம் சேர்க்கை கிடைக்கும். வயது முதிர்ந்த சுமங்கலி பெண்களுக்கு மங்கள பொருட்கள் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கினால் சுபகாரியம் நடக்கும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ராகு காலத்தில் விரதம் இருந்து செய்யப்படும் துர்க்கை பூஜை சிறப்பு மிக்கது.
  • துர்க்கையை நோக்கியவாறு தீபம் ஏற்றுவது நல்லது.

  சர்ப்ப கிரகங்களான ராகுவும் கேதுவும், துர்க்கை தேவியை வழிபாடு செய்ததின் பயனாகவே கிரகங்களாகும் வரத்தை பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. ஒரு நாளில் உள்ள இருபத்து நாலு மணி நேரத்தில் 1 மணி நேரம் ராகுவும், 1 மணி நேரம் கேதுவும் அம்பிகையை பூஜிக்கின்றனர். அதில் ராகு வழிபடும் நேரம் ராகு காலம் என்றும், கேது வழிபடும் நேரம் எமகண்டம் என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக மற்ற கிரகங்களின் ஆற்றல் அந்த நேரத்தில் குறைந்திருக்கும் என்பதால்தான், ராகு காலத்தில் சுபகாரியங்களைத் தவிர்க்க சொன்னார்கள்.

  அதே சமயம் ராகு காலத்தில் அம்மனை ஆராதிப்பது, குறிப்பாக சண்டிகையாகவும், துர்க்கையாகவும் தேவியை விரதம் இருந்து வணங்குவது சிறப்பான பலனைத் தரக் கூடியது என்கிறது தேவி பாகவதம்.

  ராகு காலம் என்பது ஒவ்வொரு நாளிலும் குறிப்பிட்ட 1 மணி நேரமாகும். ராகு காலத்தில் விரதம் இருந்து செய்யப்படும் துர்க்கை பூஜை சிறப்பு மிக்கது. அதிலும் சிறப்பானது செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் செய்யப்படும் பூஜை. ஏனெனில் அந்த தினத்தில் ராகுவோடு இணைந்து செவ்வாயும் அம்பிகையை மங்கள சண்டிகையாக வணங்குவதே காரணம்.

  மங்களன் என்ற பெயர், அங்காரகனாகிய செவ்வாய்க்கு உரியது. பொதுவாக ஒருவரது வாழ்வில் மங்கல காரியங்கள் நடப்பதற்கு செவ்வாய் மற்றும் சர்ப்ப தோ‌ஷங்களே காரணமாகச் சொல்லப்படுகின்றன. செவ்வாய், ராகு ஆகிய கிரகங்களால் தோ‌ஷம் இருந்தாலோ அல்லது வாழ்வில் தடைகளும், துன்பங்களும் தொடர்ந்தாலோ ராகு கால வழிபாட்டினை மேற்கொண்டு, துர்க்கையையும் மங்கள சண்டிகையையும் வழிபடுவது நற்பலன் தரும். துர்க்கையை நோக்கியவாறு தீபம் ஏற்றுவது நல்லது. கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி தீபம் ஏற்றவேண்டும்.

  செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து ராகு காலத்தில் துர்க்கையை வணங்கினால், திருமணத் தடை, முன்னேற்றத்தடை, கடன் பிரச்சினைகள், சகோதரர்களிடையே ஒற்றுமையின்மை, வீடு, மனை தொடர்பான பிரச்சனைகள், விபத்து பாதிப்புகள் ஆகியவை நீங்கச் செய்யும்.

  வெள்ளிக்கிழமை விரதம் இருந்து ராகு காலத்தில் செய்யும் பூஜையால் குடும்ப பலம் சீராகும். தனிப்பட்ட வேண்டுதல்கள் பலன் தரும். மகப்பேறு கிட்டும். மனைவி ஆயுள் பலம் கூடும். வாரிசுகள் வாழ்வில் தடைகள் நீங்கும். பொன், பொருள் சேரும். வீண் செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும்.

  ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்து ராகு காலத்தில் செய்யும் வழிபாட்டினால், தீராத நோய்களின் தாக்கம் குறையும். எதிரிகள் பயம் நீங்கும். பெற்றோருடன் ஒற்றுமை அதிகரிக்கும். வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆடி மாத சப்தமி தினத்தை ஸ்ரீசீதளா சப்தமி என்று அழைப்பார்கள்.
  • அம்மனின் பல உருவங்களில் சீதளாதேவி என்னும் வடிவமும் ஒன்று.

  சீதளா என்றால் குளுமை என்று பொருள். வெப்பத்தின் தாக்கத்தினால் ஏற்படும் வெக்கை நோய்களான காலரா சின்னம்மை பெரியம்மை போன்றவற்றை தன்னுடைய குளீர்ச்சியினால் போக்கிவிடும் தெய்வமாக சீதளாதேவியை கொண்டாடுகிறார்கள்.

  இவளுக்கு வாகனமாக கழுதையும் கையில் ஆயுதமாக துடப்பமும் தரப்பட்டிருக்கின்றன. உடலை பாதிக்கும் நோய்க்கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்தி பூரண ஆரோக்கியம் அளிப்பவள் என்பதற்கான குறியீடு துடைப்பம்.

  கழுதை என்பது அனாயசமாக பெரும் பொதியை சுமக்க வல்லது. மற்றவர்களின் சுமையை தனதாகக் கருதி அதற்காக யார் மனமுவந்து உதவுகிறார்களோ அவர்களை விரும்பி ஏற்கிறாள் அன்னை என்பதை அந்த வாகனமே உணர்த்துகிறது.

  ஆந்திரா தமிழ் நாடு கர்னாடகா கேரளா போன்ற தென்னிந்திய மானிலங்களில் கொண்டாடப்படும் மாரியம்மன் வழிபாடே வட மானிலங்களில் சீதளாஷ்டமி என்ர பெயரில் கொண்டாடப்படுகிறது.

  ஆடி மாத சப்தமி தினத்தை ஸ்ரீசீதளா சப்தமி என்று அழைப்பார்கள். இன்று (வியாழக்கிழமை) சீதளா சப்தமி தினமாகும். இந்த தினம் நோய்களை தீர்க்க செய்யும் அற்புதமான தினமாகும்.

  அம்மனின் பல உருவங்களில் சீதளாதேவி என்னும் வடிவமும் ஒன்று. அதாவது ஒரு சமயம் தேவர்களுக்கு அசுரர்கள் தொல்லை கொடுக்க முடிவு செய்தனர். அசுர குருவான சுக்ராச்சாரியாரின் உதவியால் தீய சக்தியை ஏவினர். இதனால் கடுமையான வெப்பம் காரணமாக உடலில் கொப்பளங்களுடனும், கடும் ஜூரத்துடனும், உடல் வலியுடனும் தேவர்கள் சிரமப்பட்டார்கள்.

  தேவர்களின் துயர் துடைக்க சிவனின் ஜடையில் இருந்த சந்திரனிடம் இருந்தும், கங்கையிடம் இருந்தும் பேரொளி ஒன்று அம்மனாக தோன்றியது. அந்த அம்மனே சீதளா தேவி என்று அழைக்கப்படுகிறாள். இன்று சீதளா தேவியை பூஜை செய்து மாம்பழமும், வெள்ளரிக்காயும், தயிர் சாதமும் நிவேதனம் செய்து அவற்றை தானம் செய்ய வேண்டும். பூஜை செய்ய முடியாதவர்கள் தானம் மட்டுமாவது செய்யலாம்.

  இதனால் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் இருக்கும் நோய்கள் உடனே விலகும். குறிப்பாக அதிக வெப்பத்தால் ஏற்படும் கட்டிகள், அம்மை நோய் முதலான நோய்கள் விலகும் என்று கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் இன்று ஆடிப்பூரம் நிகழ்ச்சிகள் தொடக்கம்
  • வடிவுடையம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்படுகிறது.

  சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் ஆடிப்பூர வளைகாப்பு நிகழ்ச்சி நடை பெறுவது வழக்கம்.

  இந்த ஆண்டு ஆடிப்பூர வளைகாப்பு நிகழ்ச்சி நாளை (31-ந்தேதி) மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. இதையொட்டி வடிவுடையம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்படுகிறது. கோவில் உள்பிரகாரத்தை சுற்றி வலம் வந்து வசந்த மண்டபத்தில் வடிவுடையம்மன் எழுந்தருள்வாள்.

  அம்மனுக்கு முளை கட்டிய பயிர்கள், மற்றும் திண்பண்டங்களை வயிற்றில் கட்டி விட்டு வளைகாப்பு நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.

  மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் ஆடிப்பூரம் நிகழ்ச்சிகள் இன்று காலை தொடங்கியது. காலை 8.30 மணிக்கு 1008 கலச ஸ்தாபிதத்துடன் விழா தொடங்கியது. இன்று மாலை 6 மணிக்கு யாகசாலை வளர்த்து முதல் கால பூஜை ஆரம்பமாகிறது. நாளை காலை 8.30 மணிக்கு 2-ம் கால பூஜையும், மாலை 6 மணிக்கு 3-ம் கால பூஜையும் நடக்கிறது.

  ஆடிப்பூரமான வருகிற 1-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு கோபூஜை நடக்கிறது. அதைத் தொடர்ந்து 4-ம் கால பூஜை, விசேஷ ஹோமம், மகா சங்கல்பம் நடைபெற உள்ளது. பின்னர் மகாபூர்ணா ஹுதியுடன் யாக சாலை பூஜை நிறைவு பெறும். அதன் பிறகு கலச புறப்பாடு நடைபெறும்.

  பின்னர் காமாட்சி அம்மனுக்கு 1008 கலச அபிஷேகம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு புஷ்ப அலங்கார பல்லக்கில் காமாட்சி அம்மன் மாட வீதி உலா நடைபெறும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அம்பிகையை உளமாற துதித்தால் அம்பிகையின் அருள் நிச்சயம் கிடைக்கும்.
  • ஆடி மாதத்தில் தான் பூமாதேவி அவதரித்தாள்.

  ஆடி மாதத்தின் முதல் நாள் தக்ஷிணாயன புண்ணியகாலம் துவங்கும் காலம் மட்டுமல்ல. அன்று ஆடிப் பண்டிகையும் கூட. பண்டிகை கொண்டாட்டத்துடனேயே துவங்குகிறது இம்மாதம். ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றே அழைப்பர். ஏன்? ஆடி என்பதே ஒரு தேவமங்கையின் பெயர். அவளுக்கு ஏற்பட்ட சாபத்தால் வேப்பமரமாகி, அதே சாபத்தின் மூலம் அம்பிகைக்கு உரிய விருக்ஷமானாள். அதனால் "வேப்பமரம்' மிகவும் புனிதமானது என்கிறது புராணம்.

  ஆடி மாதத்தில் தான் பூமாதேவி அவதரித்தாள். அந்த அம்பிகைக்கு விழா எடுப்பதன் மூலம், அம்பிகையின் அருளுடன் வளமான வாழவே, அம்மன் கோயில்களில் பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன.

  "ஆடிப் பட்டம் தேடி விதை' என்பது பழமொழி. ஆனி - ஆடி மாதங்களில் தான் மழை பெய்து ஆறுகளில் தண்ணீர் ஓடத் துவங்கும். அதனால் அப்பொழுது விவசாய வேலைகள் துவங்குவதால் விவசாயிகளின் இல்லத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் குடிகொள்ளும்.

  இம்மாதத்தில்தான் தன்னிரு திருக்கரங்களில் விவசாயத்திற்கு ஏற்ற கலப்பையையும், உலக்கையையும் கொண்டு விளங்கும் அன்னை வாராகிக்கு உரிய ஆஷாட நவராத்திரி விழாவும் கொண்டாடப்படுகிறது.

  பண்டைய காலத்தில் பஞ்சபூதங்களை வணங்கி வந்தபோது, மழைக்குரிய தெய்வமாகப் போற்றப்பட்ட தெய்வமே மாரியம்மன். பருவ கால மாறுதலால் ஏற்படும் வெப்ப சலன மாறுபாடுகள் காரணமாக ஏற்படக்கூடிய அம்மை நோயை தீர்ப்பவளாக மாரியம்மனை வணங்குவர்.

  அதனால் அவளுக்குகந்த கூழ் காய்ச்சி, அம்பிகையின் பக்தர்களுக்கு வழங்குவர். இது மிக்க மருத்துவ குணம் மிக்கது. இதை "ஆடிக்கஞ்சி' என்றும் அழைப்பர். அதிமதுரம், சீரகம், திப்பிலி, சின்ன வெங்காயம், திரிகடுகம், குன்னிவேர், உழிஞ்சி வேர், சீற்றாமுட்டி, கடலாடி வேர் - இவற்றை இடித்து, ஒரு வெள்ளைத் துணியில் கட்டி, காய்ச்சிய கஞ்சியில் இதனை சிறிது நேரம் போட்டு ஊறவைத்து, எடுத்துவிட, அதன் சாரம் கஞ்சியில் இறங்கும்.

  பின்னர் மருத்துவ குணமிக்க இக்கஞ்சியை எல்லோருக்கும் கொடுப்பர். உகண்ணனையே காதலித்து ஸ்ரீரங்கத்தில் அவர் திருக்கரங்களைப் பற்றி திருமாலுடன் இரண்டறக் கலந்தவள்.

  அன்றைய தினத்தில் ஆண்டாள் அவதரித்த திருவில்லிப்புதூரிலும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிலும் மற்றும் பல திருமால் ஆலயங்களிலும் ஆடிப் பூர விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

  இதேபோல் சிவன் கோயில்களில் அன்று அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் சிறப்பாக நடைபெறும். அன்று அன்னையை விரதமிருந்து வழிபட்டால் அஷ்டமா சித்திகளும் கைகூடும் என்பர்.

  ஆடி மாதம் பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்குக்காக வேளாண்மையின் உயிராக விளங்கும் காவிரி அன்னைக்கு வழிபாடு செய்வர். கொங்கு நாட்டுப் பெண்கள் அன்றைய தினத்தில் கன்னிமார் படையல் பூஜையை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.,

  இதற்கென்றே விற்கப்படும் பொருள்களை வைத்து, ஏழு கூழாங்கற்களை சப்த கன்னிகைகளாக அலங்கரித்து ஆவாகனம் செய்து, பொங்கல் நைவேத்தியத்துடன் பூஜை செய்வார்கள்.

  ஆடி மாத சுக்லபட்ச பஞ்சமியன்று நாகபஞ்சமி விரதம் அனுசரிக்கப்படுகிறது. "அனந்தன்' என்கிற நாகம் இந்த பூமியைத் தாங்குவதாக புராணங்கள் கூறுகின்றன. அன்றைய தினம் கோயில்களில் இருக்கும் அரசமரத்தடி நாகர்களுக்குப் பாலூற்றிப் பூஜித்தால் நாக தோஷம் நீங்கி, நல்ல மக்கட்பேறு உண்டாகும் என்பது ஐதீகம்.

  ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் "மங்களகௌரி விரதம்' அனுஷ்டிக்கப்படுகிறது. திருமணமான பெண்கள் செய்யக்கூடிய இந்த விரதம் அனைத்துவிதமான மங்கலங்களையும் அளிக்கக்கூடியது.

  மேலும் ஆடி செவ்வாயன்று "ஒவையார் விரதம்' அனுஷ்டிக்கப்படுகிறது. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், திருமணத் தடை நீங்கவும், திருமணம் ஆனபெண்கள் கணவனின் ஆயுள் நீடிக்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவும் இந்த விரதத்தினைக் கடைப்பிடிக்கின்றனர்.

  தென்மாவட்ட பெண்களிடம் இந்த விரதம் கடைப்பிடிக்கும் பழக்கம் இன்றும் உள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு பெண்கள் யாராவது ஒருவர் வீட்டில் கூடி, கொழுக்கட்டை செய்து, அதை ஒவைக்கு படைத்து வழிபடுவார்கள். ஆண்கள் இந்த பூஜையை பார்க்கவோ, கொழுக்கட்டையை சாப்பிடவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

  இம்மாதத்தில் கொண்டாடப்படும் முக்கியமான நோன்பு, சுமங்கலிகள் கடைப்பிடிக்கும் வரலட்சுமி நோன்பாகும். ஆடிமாதம் பௌர்ணமிக்கு முன்புவரும் வெள்ளிக்கிழமையில் இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

  குறிப்பாகப் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக வாழும் வரம் அருளும் விரதம் இது என்பது ஆன்றோர்களின் வாக்கு. அன்னை காமாட்சி தேவி, சிவபெருமானை நோக்கித் தவமிருந்து, ஈசனை அடையும் பேறு பெற்ற மாதம் இம்மாதம்தான். மேலும் ஹரியும், ஹரனும் ஒன்று என்பதை எல்லோர்க்கும் உணர்த்த, சங்கரநாராயணர் கோயில் என்றழைக்கப்படும் புன்னை வனத்தில் ஒற்றை விரலில் நின்று கடும் தவமியற்றியதும் இந்த ஆடி மாதத்தில் தான். இதுவே "ஆடித் தவசு' என்று பெரும் விழாவாக அவ்வூரில் கொண்டாடப்படுகிறது.

  இந்த ஆண்டிலும் தீநுண்மியின் தாக்கம் தொடர்வது காரணமாக விழாக்கள் பெரிய அளவில் நடக்காவிட்டாலும், நாம் வீட்டில் இருந்தபடியே அம்பிகையை உளமாற துதித்தால் அம்பிகையின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இன்று அங்காள அம்மனை வழிபட உகந்த நாள்.
  • திருமண வாழ்க்கையில் கணவன், மனைவி ஒற்றுமை மேலோங்கும்.

  ஆடி மாதத்தின் இரண்டாம் வெள்ளிக்கிழமையான இன்று, அங்காள அம்மனுக்கு உகந்தது. காளி தேவியின் அம்சமான அங்காள அம்மனை விரதம் இருந்து பூஜை செய்து வணங்கி வந்தால், புத்திக்கூர்மை அதிகரிப்பதோடு, வலிமையும், வீரமும் அதிகரிக்கும்.

  சுய ஜாதகத்தில் சுக்கிரன், சனி சேர்க்கையால் உள்ள இடர்பாடுகள் தீரும். தவறான காதல் பிரச்சினையில் சிக்கி மீள முடியாமல் தவிப்பவர்களுக்கு மீண்டு வரக் கூடிய சந்தர்ப்பம் அமையும்.

  திருமணத்திற்கு பிறகு தவறான நட்பில் இருப்பவர்கள் திருந்தி வாழக் கூடிய மாற்றங்கள் உண்டாகும்.

  திருமண வாழ்க்கையில் கணவன், மனைவி ஒற்றுமை மேலோங்கும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆடி மாதம் முத்து மாரியம்மனை மனம் உருக வழிபட்டால் திருஷ்டிகள் விலகி விடும்.
  • அம்மனை வழிபடும் போது மறக்காமல் லலிதாசகஸ்ர நாமம் சொல்ல வேண்டும்.

  ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் காமாட்சியை வணங்கினால் திருமண தடைகள் விலகி சுபம் உண்டாகும். ஆடி மாதம் முழுவதும் மீனாட்சியை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி ஏற்படும்.

  * ஆடி மாதம் முத்து மாரியம்மனை மனம் உருக வழிபட்டால் திருஷ்டிகள் விலகி விடும். ஆடி மாதம் சுக்ல துவாதசியில் மகா விஷ்ணுவை நினைத்து விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.

  * ஆடி மாதம் சுக்ல பட்ச ஏகாதசி தினத்தன்று அன்னதானம் செய்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும். ஆடி மாதம் சுக்லபட்ச திரயோதசியில் பார்வதி தேவியைநினைத்து விரதம் இருந்தால் நினைத்தது நடக்கும்.

  * ஆடி மாதம் ஏகாதசி, துவாதசி நாட்களில் அரச மரத்தை சுற்றி வந்து வழிபட்டால் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில்மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும்.

  * ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவு சிறப்பை தரும். ஆடி மாதம் குத்துவிளக்கைலட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபடுதல் வேண்டும்.

  * ஆடி மாதம் அம்மனுக்கு பால் பாயாசம், சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்குதல் வேண்டும். அம்மனை வழிபடும் போது மறக்காமல் லலிதாசகஸ்ர நாமம் சொல்ல வேண்டும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள்.
  • தன்னை நாடியவர்களைக் காப்பதில் மாரியம்மனுக்கு ஈடு இணை கிடையாது.

  பஞ்ச பூத இயற்கை சக்திகளின் பணிகளும், அவைகளால் சகல உயிாினமும் அடையக் கூடிய பலா பலன்களும் அளப்பரியது. கண்களால் காணமுடியாதபஞ்சபூத சக்தி மனிதர்களின் உடல், உணர்வோடு ஒன்றி மனிதர்களின் அனைத்து தேவைகளையும் நிறைவு செய்வதால் தான் பூமியில் மனிதர்களால் வாழ முடிகிறது.

  பிரபஞ்ச சக்திக்கு கட்டுப்பட்டு மாபெரும் நல்ல பலன்களை வாாி வழங்கும் பஞ்சபூதங்கள் சில நேரங்களில் தனித்தனியே சீற்றம் அடைகிறது. அப்படிப்பட்ட நேரங்களில் அதை உடனடியாக கட்டுப் படுத்த முடிவதில்லைஅல்லது அவைகளின் சீற்றத்தைதடுத்து நிறுத்தவும் முடிவதில்லை.

  ஆனால் மனிதர்கள் இதை பற்றியெல்லாம் சிந்திக்காமல்இயற்கைக்கு மாறாக, இடையூறாக, செயல் படுவதால் தான் அவ்வப்போது பேரழிவும் கொடூர நோய்களும் தாக்குகிறதுஎன்பது மறுக்க முடியாத உண்மை.

  உலகில் மிகப்பொிய வல்லரசாக இருந்தாலும் இயற்கைக்கு மிஞ்சியது எதுவும் இல்லை.அப்படி இருக்கும் போது சாதாரண மனிதர்கள் எம்மாத்திரம்.எதையும் கண்டு கொள்ளாமல் அலட்சியம் செய்வதால் மேலும் மேலும் விபரீதங்களும் பேரழிவுகளும் அகால மரணங்களும் பொருள் சேதங்களும் சம்பவிக்கின்றன.

  மேலும் எந்த ஒரு விஞ்ஞான வளா்ச்சியை பயன்படுத்தி வருகிறோமோ அவை அனைத்தும் சில நேரங்களில் நோ் எதிா்மறை விளைவுகளை உருவாக்கி மனிதனை அடக்கி ஒடுக்கி விடும். இப்பொழுது நாம் சென்று கொண்டு இருப்பது வளா்ச்சி பாதை என நினைத்தாலும் இயற்கை சீற்றங்களால் பல பின்னடைவுகளை சந்திக்க நோிடும்.

  இதனால் தனிமனிதபாதிப்புடன்உலகின் ஒட்டு மொத்த பாதிப்பால் பல முன்னேற்றங்களும்தடைபடுகிறது.அதனால் நம் முன்னோர்கள் பஞ்ச பூதங்களின் சீற்றத்தை கட்டுப்படுத்த ஊரின் எல்லை மற்றும் காவல் தெய்வத்தை வழிபட்டு பல்வேறுஇயற்கை சீற்றத்தை தணித்தார்கள்.

  காவல் தெய்வம் என்பது ஒரு ஊரை காத்து வருகின்ற ஒரு சிறியதெய்வம்.காவல் தெய்வங்கள் குடி கொண்டுள்ளஆலயங்கள் எல்லாம் சிறியதாகவே இருக்கும்.ஆனால் திருவிழாக்காலங்களில் அந்தப் பகுதியே களை கட்டும்.அந்த தெய்வங்களுக்கு விதவிதமான படையல்கள், ஆடைகள், அபிஷேக ஆராதனைகள் என்று எல்லாமே சிறப்பாக இருக்கும்.

  தமிழ்நாட்டில் தற்போது வழிபாட்டில் இருந்து வருகின்ற காவல் தெய்வங்களில்மாரியம்மன், திரவுபதி அம்மன், சுடலை முத்து, கருப்பசாமி, காத்தவராயன், முனியாண்டி, சொரிமுத்து,மாடன், வீரன் இப்படிப் பல காவல் தெய்வங்கள் உண்டு.

  பெரும்பான்மையான ஊர்களில் மாரியம்மன்தான் காவல் தெய்வம். காரணம், ஒரு தாயாக இருந்து தன்னை நாடியவர்களைக் காப்பதில் மாரியம்மனுக்கு ஈடு இணை கிடையாது. தன் குழந்தைகளைப் பாதுகாப்பதில் தாய்க்குச் சமமாக வேறு எவரைச் சொல்ல முடியும்.மாரியம்மன் கோவில் இல்லாத ஊர் இருக்கவே முடியாது.ஆடி மாதங்களில் கூழும், வேப்பிலையுமாகக் கொண்டாடப்படும்மாரியம்மன் தான் மக்களை காக்க மண்ணில் உதித்த மாபெரும் தெய்வம்.

  ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள். அந்தளவுக்கு வீடுகளிலும், கோவில்களிலும் விழாக்களும், விரத வழிபாடுகளும் களைகட்டி விடும். ஆடி மாதத்தில் பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், சிறப்பு பூஜைகள் செய்தல், தீ மிதித்தல், கூழ் ஊற்றுதல், அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபடுதல் என்று இந்த மாதம் முழுவதும் வழிபாடு மாதமாகிறது.

  தமிழ் மாதங்களை உத்ராயணம், தட்சணாயணம் என இரு பிரிவுகளாக பிரிக்கலாம்.தை முதல் ஆனி வரையான 6 மாதங்களை உத்ராயணம் எனவும் ஆடி முதல் மார்கழி வரையான 6 மாதங்களை தட்சணாயண காலமாகவும், பிரிக்கப்பட்டுள்ளது.

  தட்சணாயணம் துவங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும். வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்கள், வழிபாடுகள் ஆகியவற்றுக்கு ஆடி மாதம் சிறந்ததாக கருதப்படுகிறது.

  சுற்றுப்புறத்தை தூய்மையாக்கி,அம்மன் வழிபாட்டைமேம்படுத்திக் கொள்ளவும் ஆடி மாதம் பயன்படுகிறது.அம்மனுக்கு வேப்பிலை சாற்றிவழிபடுவது, கூழ் படைத்து சாப்பிடுவதும்ஆடி மாதத்தின் சிறப்பாகும். ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசிக்குள் புனர்பூசம் 4-ம் பாதத்தில் நுழைவார்.கடகம்சந்திரன் வீடு பெண் ராசி.

  பெண் வீட்டில் ஆண் கிரகமானசூரியன் நிற்பதால்ஆடி மாதம் தட்ப வெப்ப நிலை சீராக இருக்காது என்பதால்நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். ஆடி மாதத்தில் புதிதாக துளிர் விடும் கொழுந்து வேப்பிலைக்கு அதீத மருத்துவ, தெய்வீக குணம் உண்டு உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்சக்தியும் உண்டு. மேலும் எளிதாக ஜீரணிக்கக் கூடியஉணவான கூழ் சாப்பிட்டால் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

  ஆடி மாதம்என்றாலே அம்மன் வழிபாட்டிற்குபெருமை சேர்க்கும் மாதமாகும். ஆடி மாதம் பல்வேறு வழிபாட்டிற்குரிய விசேஷ தினங்களை கொண்ட மாதம் என்பதால் வீடுகளில் சுப நிகழ்வுகளை குறைத்து அம்மன் வழிபாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆடி செவ்வாய் அன்று பெண்கள் விரதம் இருந்து வழிபாடு செய்தால் வீடு சுபிட்சம் அடையும்.
  • இன்று முழுவதும் ‘ஓம் சக்தி’ என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருங்கள்.

  ஆடி செவ்வாய்க்கிழமை அம்பாளை நினைத்து வீட்டில் இருந்தபடியே சுலபமான முறையில் எப்படி பூஜை செய்வது தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

  வழக்கம் போல உங்கள் வீட்டையும் பூஜை அறையும் இன்று சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள். பெண்கள் நாளை காலை பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து மஞ்சள் பூசி தலை ஸ்னானம் செய்து விட்டு, பூஜை அறைக்கு சென்று அங்கு உள்ள தெய்வங்களின் படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். அடுத்தபடியாக ஒரு தீபத்தை பூஜை அறையில் ஏற்றி வைத்துவிட்டு உங்களுடைய விரதத்தை தொடங்குங்கள்.

  உங்களுடைய உடல் சூழ்நிலைக்கு ஏற்ப உங்களுடைய விரதத்தை நீங்கள்தான் அமைத்துக்கொள்ள வேண்டும். பால் பழம் சாப்பிட்டு விரதம் இருந்தாலும் சரி, சாப்பாடு சாப்பிட்டு விரதம் இருந்தாலும் சரி, எதுவுமே சாப்பிடாமல் விரதம் இருந்தாலும் சரி, சுத்தமான மனதோடு விரதம் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். காலையிலேயே விரதம் தொடங்கி விட்டது. நாள் முழுவதும் உங்களுடைய மனதில் 'ஓம் சக்தி' என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருங்கள். அப்படி இல்லை என்றால் உங்களுக்கு பிடித்த அம்மனின் நாமத்தை கூட மனதிற்குள் உச்சரித்துக் கொள்ளலாம்.

  மாலை அம்மனுக்கு நிவேதனமாக சர்க்கரைப் பொங்கல், பால் பாயாசம், கேசரி இப்படி உங்களால் எது செய்ய முடியுமோ அதில் ஒன்று செய்து வைத்துக்கொள்ள வேண்டும். பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, குறிப்பாக உங்களுடைய வீட்டின் காமாட்சியம்மன் தீபம் இருந்தால் அதை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். தீபத்தின் முன்பு நீங்கள் அமர்ந்து கொள்ள வேண்டும். அம்மனுக்கு நிவேதனம் படைத்து விடுங்கள். தீபத்திற்கு அருகில் ஒரு சிறிய வாழை இலை அல்லது வெற்றிலையை வைத்துக் கொள்ளுங்கள். அதில் குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும்.

  உங்களால் முடிந்தால் 108 அம்மன் போற்றிகள் சொல்லி குங்கும அர்ச்சனை செய்து இந்த பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம். முடியாதவர்கள் 'ஓம் சக்தி' என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து இந்த குங்கும அர்ச்சனையை நிறைவு செய்து கொள்ளுங்கள். இறுதியாக அம்மனுக்கு தீப தூப கற்பூர ஆராதனை காட்டி மனதார உங்களுடைய குடும்பம் சுபிட்சமாக இருக்க வேண்டும். உங்களுடைய கணவர் குழந்தைகள் எந்த நோய் நொடியும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

  (அர்ச்சனை செய்த குங்குமத்தை எடுத்து உங்களுடைய கணவரின் கையால், உங்களுடைய நெற்றியிலும் திருமங்கலத்திலும் இட்டுக்கொள்வது சிறப்பு.) திருமணம் ஆகாத பெண்களாக இருந்தால் திருமணம் நடக்க வேண்டும் என்று இந்த பூஜையை செய்யலாம். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் குழந்தை பாக்கியத்தை வேண்டி இந்த பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம். அதன் பின்பு சாப்பிடாமல் இருப்பவர்கள் அம்மனின் பிரசாதத்தை எடுத்து சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

  அதன் பின்பு குறிப்பாக நீங்கள் குங்கும அர்ச்சனை செய்த குங்குமத்தை சுமங்கலி பெண்களுக்கு நெற்றியில் இட்டுக்கொள்ள பிரசாதமாக கொடுக்க வேண்டும். உங்கள் வீட்டிற்கு இந்த பூஜைக்கு சுமங்கலிப் பெண்களை அழைத்து கொடுத்தாலும் சரி தான். உங்கள் அக்கம் பக்கம் வீட்டில் இருக்கும் பெண்களுடைய வீட்டிற்கு நீங்களே கொண்டு போய் இந்த குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொள்ள கொடுத்தாலும் சரி தான். தவறு ஏதும் கிடையாது.

  அர்ச்சனை செய்த இந்த குங்குமத்தினை 11 பெண்களின் நெற்றியிலும் திருமாங்கல்யத்திலும் இட்டுக் கொள்வதற்காக உங்கள் கையாலேயே கொடுக்க வேண்டும் என்பதுதான் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இப்படி செய்யும் பட்சத்தில் நிச்சயமாக உங்களுடைய இல்லற வாழ்க்கை ஆயுசுக்கும் இனிமையாக அமையும். அந்த அம்மனின் அருள் ஆசியை பெற்று அனைவரும் சந்தோஷமாக இருக்கவேண்டுமென்று இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆடி மாதம் முத்து மாரியம்மனை மனம் உருக வழிபட்டால் திருஷ்டிகள் விலகி விடும்.
  • எலுமிச்சம் பழ விளக்குகளை ஒரு போதும் வீட்டில் ஏற்றக் கூடாது.

  ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கு மிகவும் உகந்தது. அம்மன் வழிபாடு, ஆடி மாத சிறப்புகள் பற்றிய விவரம்:-

  ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. இது மார்கழி மாதம் வரை நீடிக்கும். இந்த புண்ணிய கால கட்டங்களில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் விசேஷமானது.

  ஆடி மாதத்தைக் கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் தொடக்கம் அமைகிறது.

  ஆடி மாதம் முழுவதும் கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், அய்யனாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு பூஜைகளும், விழாக்களும் நடைபெறும்.

  ஆடி மாதத்தில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் 12 நாட்கள் அம்மனின் ஆடி தபசு திருநாள் (ஆகஸ்டு 6) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. 'அரியும் சிவனும் ஒன்றே' என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்த இந்த விழா நடத்தப்படுகிறது.

  ஆறு, மக்களின் ஜீவ நாடியாதலால், அதில் ஆடி மாதம் புதுநீர் வருவதைக் கொண்டாடுவது பல நூற்றாண்டுகளாக தமிழர் மரபாக பின்பற்றப்படுகிறது.

  ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம்.

  தமிழ் மாதங்களில் ஆடி மாதத்தில் தான் அதிகபட்சமாக அம்மன் கோவில்களில் திருவிழா நடக்கிறது. எனவே ஆடி மாதம் அம்மன் பக்தர்களுக்கு விசேஷமான காலமாக விளங்குகிறது.

  கேரளாவில் ஆடி மாதத்தை கஷ்டமான மாதமாக அம்மாநில மக்கள் கருதுகிறார்கள்.

  ஆடி அமாவாசை அன்று மறைந்த முன்னோர்களுக்கு பிதுர் கடமைகளை செய்தால், ஆண்டு முழுவதும் பித்ருக்களுக்கு கடன் கொடுத்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

  ஆடி பவுர்ணமி தினத்தன்று தான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது. எனவே ஆடி பவுர்ணமி தினத்தன்று வைணவ தலங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

  தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அம்மனுக்கு பலவித காய்கறிகளை கொண்டு தயாரான கதம்ப சாதத்தை படைத்து வழிபடும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.

  ஆடி மாதம் சுக்ல தசமியில் திக் தேவதா விரதம் இருக்க வேண்டும். அன்று திக் தேவதைகளை அந்தந்த திக்குகளில் வணங்கி பூஜித்தால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

  ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசி முதல் கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசி வரை மாச உபவாசம் இருப்பது குடும்பத்தில் அமைதி ஏற்படுத்தும்.

  ஆடி மாதம் கிராம தேவதை கோவில்கள் உள்பட திறக்கப்படாமல் இருக்கும் எல்லா கோவில்களும் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

  ஆடி செவ்வாய்க்கிழமைகளில் கோவிலில் எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். ஆனால் எலுமிச்சம் பழ விளக்குகளை ஒரு போதும் வீட்டில் ஏற்றக் கூடாது.

  ஆடி மாதம் வளர்பிறை துவாதசி நாளில் தொடங்கி கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசி நாள் வரை பெண்கள் துளசி பூஜை செய்து வந்தால், நினைத்தது நடைபெறும். வீட்டில் சகல செல்வங்களும் குவியும்.

  ஆடி மாதம் முத்து மாரியம்மனை மனம் உருக வழிபட்டால் திருஷ்டிகள் விலகி விடும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print