என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amman Worship"

    • ஆடிப்பூரம் நாளை கொண்டாடப்படுகிறது.
    • ஆடிப்பூரத்தன்று அம்மனை முழுவதுமாக கண்ணாடி வளையல்களில் அலங்காரம் செய்து வழிபடுவார்கள்.

    ஆடிப்பூரம் ஆடி மாதத்தில் வரக் கூடிய முக்கிய நிகழ்வாகும். இந்த நாளில் பெண்கள் அம்பாளுக்கு விரதம் இருந்து மஞ்சள், குங்குமம், வளையல் உள்ளிட்ட மங்கல பொருட்களை படைத்து வழிபடுவது வழக்கம்.

    ஆடிப்பூரம் நாளை கொண்டாடப்படுகிறது. பூரம் நட்சத்திரம் ஜூலை 27-ந்தேதி மாலை 6.55 மணிக்கு தொடங்கி, ஜூலை 28-ந்தேதி இரவு 8 மணி வரை இருக்கிறது.

    ஆடிப்பூரத்தன்று அம்மனை முழுவதுமாக கண்ணாடி வளையல்களில் அலங்காரம் செய்து வழிபடுவார்கள். வழிபாடு முடிந்ததும் அந்த கண்ணாடி வளையல்களை பெண்களுக்கு பிரசாதமாக கொடுப்பது வழக்கம். அந்த வளையலை அணிந்தால், அம்பாள் தாய்மை கோலம் கொண்ட நாள் என்பதால் குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    ஆடி பூரத்தன்று அம்மன் கோவிலுக்குச் சென்று அம்மனுக்கு கண்ணாடி வளையல்கள் வாங்கி அளிப்பது மிகவும் புண்ணியம். திருமணமாகாத பெண்கள், நல்ல கணவன் துணையாக அமைய வேண்டும் என்றும், தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டால், அந்த வரத்தை ஆதிசக்தியான அன்னை அருள்வதாக நம்பிக்கை. இந்த அற்புத திருநாளில், பலர் மஞ்சள் தாலி கட்டிக் கொள்வதும் உண்டு.

    ஆடிப்பூரம் அன்று ஆலயத்திற்குச் சென்று அம்மனை வழிபட இயலாதவர்கள், தங்கள் வீடுகளில் பூஜை அறையில் உள்ள அம்மன் படத்திற்கு முன்பு, பட்டு வஸ்திரம், வளையல், பூக்கள் படைத்து வணங்கலாம். .

    ஆடிப்பூரம் அன்று வைணவத் திருக்கோவில்களில் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். ஏனெனில் இந்த நாளில்தான் ஆண்டாள் அவதரித்ததாக சொல்லப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து ஆண்டாளை வணங்கினால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

    • ஒவ்வொரு பெண்ணிடமும் அம்பிகையின் அம்சம் நிறைந்துள்ளது.
    • ஆடி பூரத்தன்று அம்மன் கோவிலுக்குச் சென்று அம்மனுக்கு கண்ணாடி வளையல்கள் வாங்கி அளிப்பது மிகவும் புண்ணியம்.

    ஆடி மாதம் முழுவதுமே அம்மனை வழிபடக்கூடிய மாதமாக உள்ளது. ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திர நாளை, 'ஆடிப்பூரம்' என்ற பெயரில் அம்மன் ஆலயங்கள் தோறும் கொண்டாடுவார்கள். பூமியில் அவதரித்த அம்மன், ஆடி மாதத்தில் தான் பூப்படைந்ததாகவும், சூலுக்கு தயாரானதாகவும் கூறப்படுகிறது. அதை குறிப்பதாக ஆடிப்பூரம் திருவிழா நடைபெறும் 10 நாட்களும், அம்மன் தினமும் ஒரு கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவதாக நம்பிக்கை.

    ஆடிப்பூரம் அன்று தான் சித்தர்களும், யோகிகளும் தங்களுடைய தவத்தைத் தொடங்குகின்றனர் என புராணங்கள் குறிப்பிடுகின்றன. தேவிக்குரிய திருநாள்களில் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் 'ஆடிப் பூரம் திருநாள்' மிகவும் சிறப்பானது. பெண்களுக்கு வளையல் காப்பு நடத்துவதுபோல, நம்மைப் படைத்த அன்னைக்கு ஆடிப்பூர நாளில் வளைகாப்பு நடத்தப்படுவது வாடிக்கை.

    இந்த நாளில் அனைத்து அம்மன் கோவில்களிலும், அம்பிகைக்கு வளையல்களால் அலங்காரம் செய்து வழிபடுவார்கள். பின்னர் அம்மனை அலங்கரிக்கப் பயன்படுத்திய வளையல்கள், தரிசிக்க வந்த பெண்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். அவ்வாரு பிரசாதமாக சில வளையல்களைப் பெற்று அணிந்து கொண்டால், மனம்போல மாங்கல்யம் அமையவும், மங்கலங்கள் நிலைக்கவும் செய்யும். அதோடு, அம்பிகை தாய்மைக் கோலம் கொண்ட நாள் என்பதால் குழந்தை பாக்கியமும் நிச்சயம் கிட்டும் என்பது ஐதீகமாக உள்ளது.

    ஒவ்வொரு பெண்ணிடமும் அம்பிகையின் அம்சம் நிறைந்துள்ளது. எனவே ஆடிப்பூரம் தினத்தன்று அம்பிகையின் அருள் முழுமையாக நிறைந்திருக்கும் என்பதால், எந்த பேதமும் இன்றி இயன்ற அளவு மற்ற பெண்களுக்கு வளையல்கள், குங்குமம், மஞ்சள், ரவிக்கைத் துணி, புடவை போன்ற மங்கலப் பொருட்களை வாங்கித் தர வேண்டும். அப்படி செய்தால் இல்லற வாழ்வு சிறப்பாக அமையும். தாலி பாக்கியம் சிறக்க, தாயாகும் பேறுபெற, வளமும் நலமும் பெருக, வேறு எந்த வேண்டுதல்களும் தேவையில்லை. ஆடிப்பூர நாளில் அம்மனுக்கு வளையல் வாங்கிக் கொடுத்தாலே போதுமானது. அனைத்து வளங்களையும் அம்பிகை நிச்சயம் தந்தருள்வாள்.

    ஆடி பூரத்தன்று அம்மன் கோவிலுக்குச் சென்று அம்மனுக்கு கண்ணாடி வளையல்கள் வாங்கி அளிப்பது மிகவும் புண்ணியம். திருமணமாகாத பெண்கள், நல்ல கணவன் துணையாக அமைய வேண்டும் என்றும், தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டால், அந்த வரத்தை ஆதிசக்தியான அன்னை அருள்வதாக நம்பிக்கை. இந்த அற்புத திருநாளில், பலர் மஞ்சள் தாலி கட்டிக் கொள்வதும் உண்டு.

    ஆடி மாதத்தில், பூரம் நட்சத்திரம் உச்சமாக இருக்கும். ஆடிப்பூரம் அன்று சக்தி பீடங்கள் என்று அழைக்கப்படும் அம்மன் ஆலங்களுக்குச் சென்று வழிபட்டால், கேட்ட வரம் கிடைக்கும். ஆரோக்கியமும், செல்வ செழிப்பும் உண்டாகும்.

    ஆடிப்பூரம் அன்று ஆலயத்திற்குச் சென்று அம்மனை வழிபட இயலாதவர்கள், தங்கள் வீடுகளில் பூஜை அறையில் உள்ள அம்மன் படத்திற்கு முன்பு, பட்டு வஸ்திரம், வளையல், பூக்கள் படைத்து வணங்கலாம். இளம்பெண்கள், திருமணமான பெண்களுக்கு வளையல் கொடுத்தால் நம்முடைய வீட்டிலும் வளைகாப்பு நடைபெறும் என்பது நம்பிக்கையாகும். அன்னைக்கு பிரியமான பிரசாதமாக பானகம், நீர் மோர், சர்க்கரைப் பொங்கல், கூழ் ஆகியவற்றை படைத்து வேண்டிக்கொண்டால் சகலவிதமான நன்மைகளையும் பெறலாம்.

    • ஆடி மாத வழிபாடுகளில், மாவிலையும் வேப்பிலையும் தவறாமல் இடம்பிடித்தன.
    • வெப்பமும் காற்றும் இணைந்திருக்கும் மாதம் ஆடி.

    வெப்பமும் காற்றும் இணைந்திருக்கும் மாதம் ஆடி. வெப்பம் குறைந்து காற்றில் கொஞ்சம் குளுமை பரவியிருக்கும் மாதம் இது. இந்தச் சமயத்தில் உடல் உஷ்ணமான நோய்கள் தாக்கக் கூடும் என்பதால்தான், அம்மன் வழிபாடு ஆடி மாதத்தில் செய்யப்படுகிறது.

    அதேபோல், அம்மனுக்கு பூஜைகளும் வழிபாடுகளும் வீட்டில் செய்யப்படுகின்றன. இந்த நாளில் வீட்டை சுத்தமாக வைத்திருக்கப் பழக்கப்படுத்தினார்கள். தலைக்கு குளிப்பதும் பெண்கள் மஞ்சள் தேய்த்துக் குளிப்பதும் வழக்கமாயிற்று.


    ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடித்தபசு, வரலக்ஷ்மி பூஜை என்றெல்லாம் பூஜைகளும் புனஸ்காரங்களும் அமர்க்களப்பட, அதற்கேற்ற உணவு வகைகளைச் சமைத்துச் சாப்பிட வலியுறுத்தினார்கள் முன்னோர்கள்.

    சில பண்டிகைகளை, விரதம் மேற்கொண்டு செய்யச் சொன்னார்கள். சில பூஜைகளின் போது, இன்னன்ன பழங்களைப் படையலிட வலியுறுத்தினார்கள். இன்னன்ன வகை இனிப்புகளைச் செய்யச் சொல்லி வழிபட அறிவுறுத்தினார்கள்.

    ஆடி மாத வழிபாடுகளில், மாவிலையும் வேப்பிலையும் தவறாமல் இடம்பிடித்தன. மாவிளக்கேற்றி வழிபடுவதும் எலுமிச்சை சாதம், எலுமிச்சை தீபம் முதலானவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்ததும் நோயில் இருந்தும் நோய்க்கிருமியில் இருந்தும் காப்பதற்குத்தான் வழிமுறைப்படுத்தப்பட்டன.

    ஆடி மாத அம்மன் பிரசாதங்களில் முக்கியமானது கூழ். உடலையும் வயிற்றையும் குளிர்ச்சிப்படுத்தும் உன்னதமான பிரசாதம் கூழ். பொதுவாகவே, ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் வார்ப்பதாக வேண்டிக்கொள்வார்கள் பக்தர்கள்.


    அரிசி நொய் - ஒரு கைப்பிடி,

    கேழ்வரகு மாவு - 2 கைப்பிடி அளவு,

    சிறிய வெங்காயம் - 10,

    தயிர் - ஒரு கப்,

    தேவைக்கு ஏற்ப உப்பு.

    ஒரு கைப்பிடி அளவு நொய்யரிசியை ஒரு டம்ளர் அளவு நீர்விட்டு வேகவிடுங்கள். கேழ்வரகு மாவை 2 டம்ளர் நீர்விட்டு கரைத்துக்கொள்ளுங்கள். பிறகு அதில் சேர்த்து வேகவிடுங்கள். பிறகு தேவைக்குத் தக்கபடி உப்பு சேர்க்கவும். வெந்ததும் இறக்கி, ஆறியதும் தயிரைக் கடைந்து அதில் கலந்துகொள்ளுங்கள்.

    அவ்வளவுதான். அம்மனுக்கு குளிரக் குளிரக் கூழ் ரெடி. வீட்டில் நைவேத்தியம் செய்து, செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மனை வணங்கிவிட்டுக் குடிக்கலாம். இந்தக் கூழுக்கு, சின்ன வெங்காயம் தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம்.

    ஆடி மாதம் முழுவதுமே, அம்மனுக்கு இந்தக் கூழைச் செய்து படைத்து பின்னர் விநியோகிப்பது ரொம்பவே விசேஷம். மிகுந்த பலன்களையும் வரங்களையும் தரக்கூடியது. உங்களால் முடிந்தது ஒரு பத்துப்பேருக்கேனும் கூழ் வார்த்துக் கொடுங்கள். உங்கள் வாழ்க்கையையே குளிரப்பண்ணுவாள் மகாசக்தி அம்மன்!

    ஆடி மாதம் என்றாலே அம்மன் மாதம் என்று சொல்வார்கள். ஆடி மாதத்தில் ஒவ்வொரு தினமும் முக்கியத்துவம் பெறுகிறது. ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு விழாவும் பெண்களை சுற்றியே அமைந்து இருக்கும்.
    ஆடிப்பூர மகிமை

    * உலகை ஆளும் அன்னை பராசக்தி, தனது திருவிளையாடல்களை அரங்கேற்ற பூலோகத்தில் மனித உருவில் அவதரித்தது ஆடிப்பூரம் அன்றுதான்.

    * ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள், ஆடிப்பூரத் தினத்தில் தான் அவதரித்தார்.

    * அம்மனின் திருநட்சத்திரம் ஆடிப்பூரம். அன்றைய தினம் திருவையாறில் ‘ஆடித் தபசு’ மிகவும் விசேஷமாக நடைபெறும்.

    * ஆடிப்பூரம் நாளில் திருவண்ணாமலையில் அபித குசலாம்பாளுக்கு தீமிதி விழா வெகு விமரிசையாக நடைபெறும்.

    ஆடி பவுர்ணமி

    * ஆடி அமாவாசை போன்று, ஆடி பவுர்ணமி தினமும் விசேஷமானது. இந்த சிறப்பு மிக்க தினத்தில்தான் ஹயக்ரீவர் அவதரித்தார். எனவே அன்றைய தினம் ஹயக்ரீவரை வழிபாடு செய்தால் கல்வி மற்றும் கலைகளில் சிறந்து விளங்கலாம்.

    * சங்கரன்கோவில் திருத்தலத்தில் வீற்றிருக்கும் கோமதியம்மன், பழங்காலத்தில் அந்தப் பகுதியில் அடர்ந்திருந்த புன்னை வனத்தில் தவமிருந்தாள். அந்த தவத்தின் பலனாக, ஆடிப் பவுர்ணமி உத்திராட நட்சத்திரம் அன்று சங்கர நாராயணர், அன்னைக்கு காட்சி அளித்து அருள்புரிந்தார்.

    ஆடி வழிபாடு

    * ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் அம்மன் பாடல்களைப் பாடி, அம்பாளை வழிபட்டு வந்தால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.

    * ஆடி வெள்ளியில் புற்று உள்ள அம்மன் கோவில்களுக்குச் சென்று, நாக தேவதைக்கு பால் தெளித்து, விசேஷ பூஜை செய்து வந்தால் நாக தோஷங்கள் தீரும் என்று கூறப்படுகிறது.

    * ஆடி மாதத்தில் வரும் வளர்பிறை துவாதசியில் தொடங்கி, கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி வரை, துளசியை வழிபாடு செய்து வந்தால் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் கிடைக்கும்.

    ஆடிப்பெருக்கில் முளைப்பாரி

    ஆடி மாதம் 18–ந் தேதி ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காவிரிக் கரையோரங்களில் பெண்கள் முளைப்பாரி எடுப்பது வழக்கம். தங்களது வீடுகளில் விரதம் இருந்து முளைப்பாரி வளர்க்கும் பெண்கள், ஆடிப் பெருக்கு அன்று அவற்றை கைகளில் ஏந்திக் கொண்டு காவிரி ஆற்றுக்கு செல்வார்கள். ‘இந்த ஆண்டு எல்லா வளமும் பெருக வேண்டும்’ என்று நினைத்து பூஜை செய்வார்கள். தொடர்ந்து தாங்கள் கொண்டு வந்த முளைப்பாரியை காவிரியில் விட்டு விட்டு, கோவிலுக்குச் சென்று வழிபடுவார்கள்.
    ×