என் மலர்

  நீங்கள் தேடியது "abhishekam"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முக்கிய வீதிகளின் வழியாக செல்வமகா காளியம்மன் அழைத்து வரப்பட்டது.
  • கிராமமக்கள் தங்கள் வீடுகளுக்கு அழைத்து மாவிளக்கு இட்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

  பாபநாசம்:

  பாபநாசம் கஞ்சிமேடு செல்வமகா காளியம்மன் கோவில் காளி திருநடன திருவிழா நடைபெற்றது. காலையில் செல்வமகா காளியம்மன் படுகளம் பார்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் முக்கிய வீதிகளின் வழியாக செல்வமகா காளியம்மன் அழைத்து வரப்பட்டது.

  கிராம மக்கள் தங்கள் வீடுகளுக்கு அழைத்து மாவிளக்கு இட்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள்கலந்து கொண்டு வழிபட்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இரட்டை காளியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
  • பச்சைக்காளி, பவளக்காளி வேடம் அணிந்து வீதியுலாவும், தொடர்ந்து கோவிலில் முன்பு அமைக்கப்பட்டுள்ள தீக்குண்டத்தில் தீமிதி திருவிழாவும் நடைபெற்றது.

  சீர்காழி:

  மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் இரட்டை காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி 3-வது வெள்ளி அன்று தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம், அதன்படி இந்த ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது.

  விழாவை முன்னிட்டு சீர்காழி சட்டைநாதர் கோவிலில் இருந்து பால்குடம், அலகு காவடி, பறவை காவடி உடன் கரகம் புறப்பட்டு தேர் தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக கோவிலை வந்து அடைந்தது. பின்னர் இரட்டை காளியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

  இரவு பச்சைக்காளி, பவளக்காளி வேடம் அணிந்து வீதியுலாவும், தொடர்ந்து கோவிலில் முன்பு அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் தீமிதி திருவிழாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பாரக்கல் புதூரில் ராசிபுரம் நாடு விழியன்குல கொங்கு நாட்டு கவுண்டர்கள் குடிபாட்டு மக்களுக்கு பாத்தியப்பட்ட குலதெய்வம் அத்தனூர் அம்மன் கோவில் புதிதாக கட்டப்பட்டு கடந்த மாதம் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.
  • மண்டல அபிஷேகம் நிறைவு விழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

  ராசிபுரம்:

  ராசிபுரம் அருகே உள்ள குருக்கபுரம் கிராமம், பாரக்கல் புதூரில் ராசிபுரம் நாடு விழியன்குல கொங்கு நாட்டு கவுண்டர்கள் குடிபாட்டு மக்களுக்கு பாத்தியப்பட்ட குலதெய்வம் அத்தனூர் அம்மன் கோவில் புதிதாக கட்டப்பட்டு கடந்த மாதம் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.

  கும்பாபிஷேக விழாவில் சேலம், நாமக்கல், தருமபுரி, சின்னசேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர்,பெரம்பலூர், திருச்சி, கரூர், ஈரோடு பல மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

  கும்பாபிஷேகத்தை–யொட்டி தினந்தோறும் மண்டபக்கட்டளை நிகழ்ச்சி நடந்தது. 48-ம் நாள் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.

  இதையொட்டி லட்சார்ச்ச–னையும், சண்டி ஹோமமும் நடந்தது. விழாவில் கும்பாபி–ஷேகத்திற்கு வரிவசூல் செய்து கொடுத்த பங்காளிகள் கவுரவிக்கப்பட்டனர். மண்டல அபிஷேகம் நிறைவு விழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்து அன்னையர் முன்னணி சார்பில் மஞ்சள்நீர் அபிஷேக நிகழ்ச்சி நடந்தது.
  • திருமண தடங்கல் நீங்குவதற்காக இந்த அபிஷேகம் செய்யப்பட்டது.

  உடன்குடி:

  உடன்குடி ஒன்றிய பகுதிகளான குருநாதபுரம், கரிசன்விளை, குமாரலெட்சுமிபுரம், அம்மன்புரம், செம்மறிகுளம், திருப்பணி, சத்யாநகர், வடலிவிளைஆகிய 8 கிராமங்களில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் மஞ்சள்நீர் அபிஷேக நிகழ்ச்சி நடந்தது. ஒவ்வொருவரும் தங்களது வீட்டில் ஒரு குடத்தை எடுத்து, விலாமிச்சவேர், வெட்டிவேர், அதில்பச்ச கற்பூரம், மஞ்சள் பொடி ஆகியவை குடத்து தண்ணீரில் போட்டு வழிபாடு செய்து பின்பு அந்த குடத்து தண்ணீரை மாரியம்மன் விக்ரகத்திற்கும் அம்மன்புரம் விநாயகர் கோவிலிலும் கொண்டு மஞ்சள் நீர்அபிஷேகம் நடைபெற்றது.

  வீடுகளில் திருமண தடங்கல் நீங்குவதற்காகவும், வீடுகள் சுபிட்சமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், நோய் நொடிகள் நீங்கவும், உலக நன்மைக்காகவும் இந்த அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் இந்து அன்னையர் முன்னணி மாவட்ட தலைவி சந்தனக்கனி, ஒன்றிய செயலாளர் ஜெயசித்ரா, பொறுப்பாளர்கள் சக்திகனி, செல்வலட்சுமி, தங்கேஸ்வரி, சீதாலட்சுமி, மணியம்மாள், தேவி, முத்து, சுயம்புகனி, மது, ஜெயராணி, பொங்கல்மலர், பவித்ரா, சந்தியா, சபிதா, பொன் செல்வி, கலைராணி, பிரம்மசக்தி, ரதிதேவி,

  பிரிதா, வனசுந்தரி, அன்னபுஷ்பம், லதா, ரதீஸ்வரி, மகேஸ்வரி, மீனாட்சி, வேலாச்சி, பத்மா, மணிகண்டேஸ்வரி, சந்திரா, வாசுகி மற்றும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர். இந்து முன்னணி பொறுப்பாளர் லிங்கம், அருண், அம்மன்புரம் கோவில் நிர்வாக தலைவர் குருநாதன், முருகன், அழகேசன், ஆதிலிங்கம், இந்து முன்னணி உடன்குடி ஒன்றிய பொதுச்செயலாளரும் இந்து அன்னையர் முன்னணி மாவட்ட பொறுப்பாளரும் கேசவன் வழி நடத்தினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தஞ்சை பெரிய கோவில் தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
  • பெரிய கோவிலில் அனைத்து மூலவ மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

  தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்திபெற்ற கோவிலாகும். இது தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது. மேலும் இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர்.

  தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், கருவூரார், முருகர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், நடராஜர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. தஞ்சை பெரிய கோவிலில் ஆடிப்பூரம், ஆருத்ரா தரிசனம், மகர சங்கராந்தி பெருவிழா போன்றவை சிறப்பாக கொண்டாடப்படும்.

  இந்த நிலையில் நேற்று ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, பெரிய கோவிலில் அனைத்து மூலவ மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில், பால், மஞ்சள், இளநீர், கரும்புசாறு, நெய், தேன் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

  மேலும், உலகம் அமைதி பெற வேண்டியும், நீர், நிலவளம் பெருக வேண்டியும், நல்ல மழை பெய்ய வேண்டியும் சிறப்பு அபிஷேக தீபாராதனை காண்பிக்கப்பட்டன. அத்துடன், நுாற்றுக்கணக்கான வளையல்களை கொண்டு பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர், அரண்மனை தேவஸ்தான அதிகாரிகள் செய்து இருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இக்கோவிலில் ஆடிமாத உற்சவமான தீமிதி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
  • இரட்டை காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டு வெள்ளி கவசங்கள் சாத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

  சீர்காழி:

  சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகே இரட்டைகாளியம்மன் கோவில் உள்ளது. பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் ஆடிமாத உத்சவமான தீமிதி உற்சவம் காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே இக்கோவில் உற்சவம் அம்மனுக்கு வெள்ளி கவசங்கள் உபயமாக மறைந்த பின்னணி பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் உறவினர்களான சிவகுமார், செல்வமுத்துகுமரன், நடராஜன், அபிஷேக், பாலமுருகன், ஆகியோர் கோவில் தலைவர் சுவாமிநாதனிடம் வழங்கினர்.

  பின்னர் வெள்ளி கவசங்களுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து இரட்டை காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டு வெள்ளி கவசங்கள் சாத்தப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆடி வெள்ளியையொட்டி குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது.
  • சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

  குமாரபாளையம்:

  ஆடி வெள்ளியையொட்டி குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது. சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதே போல் அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், சவுண்டம்மன் கோவில்கள், அங்காளம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வேத மந்திரங்களை ஓதி யாக குண்டத்தில் மிளகாய் மற்றும் 108 மூலிகை பொருட்கள், காய்கள், பழங்கள் கொண்டு ஹோமம் நடைபெற்றது.
  • அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

  நாகப்பட்டினம்:

  நாகை மாவட்டம் கீழ்வேளுரை அடுத்த தேவூர் தேவதுர்க்கை அம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு மிளகாய் கொண்டு பிரத்தியங்கராதேவி மகா சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் உலக அமைதி வேண்டியும் விவசாயம் செழிக்க வேண்டியும் தோஷங்கள் நீங்கவும் வேதவிற்பனர்கள் வேத மந்திரங்களை ஓதி யாக குண்டத்தில் மிளகாய் மற்றும் 108 மூலிகை பொருட்கள் காய்கள், பழங்கள், கொண்டு ஹோமம் நடைபெற்றது.நிறைவாக யாகம் பூர்ணாஹூதியுடன் முடிவடைந்தது.

  பின்னர் ஹோமத்தில் பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்களை ஏந்திய சிவாச்சாரியார் கோவிலை வலம் வந்து அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனையும் நடைபெற்றது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குறிச்சி காசி விஸ்வநாதர் கோவிலில் ஏராளமானோர் தர்ப்பணம் செய்தனர்.
  • இங்குள்ள சிவலிங்கத்திற்கு பக்தர்களே அபிஷேகம் செய்து வழிபடலாம்.

  மானாமதுரை

  சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள குறிச்சி காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

  இன்று காலை 6 மணி முதல் கோவிலுக்குள் திரண்ட பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். இதில் பங்கேற்றவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தர்ப்பண பொருட்கள் எள், பூ, வாழைப்பழம் வழங்கப்பட்டது. தொடர்ந்து கோவிலில் உள்ள அன்னபூரணி அன்னதான கூடத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இங்குள்ள சிவலிங்கத்திற்கு பக்தர்களே அபிஷேகம் செய்து வழிபடலாம். அதன்படி ஏராளமான பக்தர்கள் இன்று வழிபட்டனர். மதுரை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் இன்று சாமி தரிசனம் செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ராமநாதபுரம் ஊருணி கரையில் அமைந்துள்ளது சுயம்பு வராஹி அம்மன் கோவில்.
  • ஏராளமான பெண் பக்தர்கள் தீப விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.

  ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோச மங்கை கிராமத்தில் ஊருணி கரையில் அமைந்துள்ளது சுயம்பு வராஹி அம்மன் கோவில். மிகவும் சக்தி வாய்ந்த இந்த சுயம்பு வராஹி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தை மற்றும் ஆடி வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதிலும் வராஹி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நேர்திக்கடன் செலுத்துவதற்காக அம்மியில் மஞ்சள் அரைத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்ய கொடுத்து விட்டு தரிசனம் செய்வது வழக்கம்.

  இந்த நிலையில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையான நேற்று உத்தரகோசமங்கை கிராமத்தில் உள்ள சுயம்புவராஹி அம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய குவிந்தனர். இவ்வாறு வந்த ஏராளமான பெண் பக்தர்கள் கோவில் முன்பு வரிசையாக வைக்கப்பட்டு இருந்த அம்மியில் மஞ்சள் அரைத்து அதை அம்மனுக்கு அபிஷேகம் செய்ய கொடுத்தனர்.

  பெண் பக்தர்களோடு ஆண் பக்தர்களும் சேர்ந்து அம்மியில் மஞ்சள் அரைத்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் கோவிலில் ஏராளமான பெண் பக்தர்கள் தீப விளக்கேற்றி தரிசனம் செய்தனர். ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி வராஹிஅம்மனுக்கு நேற்று காலை பால், பன்னீர், திரவியம், மஞ்சளால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை பூஜை நடைபெற்றது.

  வராஹிஅம்மன் கோவிலில் நேற்று நடந்த அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜையில் ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து வந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதேபோல் ராமேசுவரம் தனுஷ்கோடி செல்லும் சாலையில் உள்ள நம்புநாயகி அம்மன் கோவிலிலும் நம்புநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 300 கிலோ மஞ்சளை பெண்கள் அம்மியில் வைத்து அரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • 3-வது வெள்ளிக்கிழமை கணபதி ஹோமம் மற்றும் 1008 சங்காபிஷேகம் நடக்கிறது.

  ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதங்களில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளில் காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பல்வேறு உபயதாரர்கள் சார்பில் இந்த விழா சிறப்பாக நடைபெற உள்ளது.

  அதன்படி கடந்த 19-ந்தேதி ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு நகரத்தார்கள் சார்பில் பால்குடம் நிகழ்ச்சி நடைபெற்றது. முதல் வெள்ளிக்கிழமை அன்று அம்மியில் மஞ்சள் அரைத்து அம்பாளுக்கு மஞ்சள் அபிஷேகமும், 2-வது செவ்வாய்கிழமையான வருகிற 26-ந்தேதி பிரமாணர்கள் சார்பில் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியும், 2-வது வெள்ளிக்கிழமை அன்று திருவிளக்கு பூஜை வழிபாடு நிகழ்ச்சியும், ஆடி பூரம் தினத்தன்று வளையல் அலங்காரம் நிகழ்ச்சி நடக்கிறது.

  3-வது வெள்ளிக்கிழமை அன்று கணபதி ஹோமம் மற்றும் 1008 சங்காபிஷேகமும், 4-வது வெள்ளிக்கிழமை அன்று காலை கோமாதா பூஜை மற்றும் மாலை திருவிளக்கு பூஜை நிகழ்ச்சி நடக்கிறது.

  இன்று ஆடி மாதம் முதல் வெள்ளியை முன்னிட்டு நேற்று மாலை கோவில் வளாகத்தில் சுமார் 300 கிலோ மஞ்சள் கொண்டு பெண்கள் அம்மியில் வைத்து மஞ்சள் அரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கோவில் வளாகத்தில் 51 அம்மிகள் வரிசையாக வைக்கப்பட்டு அங்கு பெண்கள் ஒன்றன்பின் ஒன்றாக அம்மியில் பச்சை மஞ்சள் அரைத்தனர்.

  இந்த மஞ்சளை கொண்டு இன்று (வெள்ளிக்கிழமை) அம்பாளுக்கு அபிஷேகம் நடக்கிறது. நிகழ்ச்சியின்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர செயலாளர் சரவணன், நகர்மன்ற கவுன்சிலர்கள் பசும்பொன் மனோகரன், சோ.கண்ணன், கலாகாசிநாதன், தெய்வானை இறமாறன், ஹேமலதாசெந்தில், கோவில் கணக்கர் பாண்டி உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
  • 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம்

  கரூர்:

  நஞ்சை புகழூரில் உள்ள மேகபாலீஸ்வரர் கோவிலில் ஆடிமாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.இதேபோல் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் ஆடி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

  ×