விநாயகர் கோவிலில் சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நன்செய் இடையாரில் உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ளது.விநாய கருக்கு ஆடி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் ,திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது .
நன்செய் இடையாறு மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள விநாயகர், ஆனங்கூர் விநாயகர், கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.
நன்செய் இடையாறு மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள விநாயகர், ஆனங்கூர் விநாயகர், கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.
Published on

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நன்செய் இடையாரில் உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள விநாய கருக்கு ஆடி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் ,திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது .அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதே போல் பரமத்திவேலூர் பஞ்சமுக விநாயகர், கோப்ப ணம் பாளையம் பரமேஸ்வ ரர் ஆலயத்தில் உள்ள விநாயகர் ,பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள விநாயகர் ,பாண்டமங்கலம் விநாயகர், ஆனங்கூர் விநா யகர், அய்யம்பாளையம் விநா யகர், பிலிக்கல்பா ளையம், கொந்தளம் வேலூர் வட கரையா்தூர், ஜேடர்பாளை யம்,சோழசிரா மணி, கபிலர்மலை, பரமத்தி மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com