search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Street"

    • பர மத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் மகா மாரி யம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது.
    • 18 வகை யான வாசனைத் திரவியங்க ளால் அபிஷேகம் நடை பெற்றது.

    பரமத்தி வேலூர்;

    நாமக்கல் மாவட்டம் பர மத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் மகா மாரி யம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதை முன்னிட்டு நேற்று மஹா மாரியம்மனுக்கு பால், தயிர் ,பன்னீர், இளநீர் ,சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் ,பஞ்சா மிர்தம் உள்ளிட்ட 18 வகை யான வாசனைத் திரவியங்க ளால் அபிஷேகம் நடை பெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.பின்னர் மகா மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர் களுக்கு காட்சி அளித்தார்.

    இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்ன தானம் வழங்கப்பட்டது.மாலை 6 மணிக்கு மேல் உற்சவர் மகா மாரி யம்மனுக்கு அலங்காரம் நடைபெற்று. அதனைத் தொடர்ந்து மகா மாரி யம்மன் சப்பாரத்தில் திரு விதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

    • மகாமக குளக்கரையில் 12 சிவாலய மூர்த்திகள் எழுந்தருள மாசிமக தீர்த்தவாரி விழா நடைபெற உள்ளது.
    • தினசரி காலையில் பல்லக்கிலும், மாலையில் சந்திரபிரபை, சேஷம், கருடன் உள்பட பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறும்.

    பட்டீஸ்வரம்:

    கும்பகோணத்தில் அமைந்துள்ள மகாமகத் திருகுளத்தில் அடுத்த மாதம் 6-ந் தேதி பகல் 12 மணிக்கு மேல் தீர்த்தவாரி விழா நடைபெறவுள்ளது. இவ்விழாவில் தீர்த்தவாரி கண்டருளும் கோவில்களான மங்களாம்பிகை சமேதஆதி கும்பேஸ்வரர்,

    சோமசுந்தரி சமேதவி யாழசோமேஸ்வரர், அமிர்தவல்லி சமேத அபிமுகேஸ்வரர், விசாலாட்சி சமேதகாசிவிஸ்வநாதர்,

    ஞானாம்பிகா சமேதகாளஸ்திஸ்வரர், சௌந்தரநாயகி சமேத கவுதமேஸ்வரர் ஆகிய சிவாலயங்களில் இப்பெருவிழா வின் தொடக்க பூஜையான அனுக்ஞை, விக்னேஸ்வரர்,

    வாஸ்து சாந்தி என சிறப்பு பரிகார பூஜைகள் இன்று இரவு செய்யப்பட்டு நாளை

    (சனிக்கிழமை) காலை கொடி யேற்றத்துடன் மாசிமக தீர்த்தவாரி பெருவிழா தொடங்க உள்ளது.

    அதனை தொடர்ந்து இவ்வாலயங்களில் தினசரி காலையில் பல்லாக்கிலும், மாலையில் சுவாமி, அம்பாள் சூரியபிரபை ,

    சந்திரபிரபை, சேஷம், கமலம், பூதம், சிம்மம், யானை, அன்னப்பட்சி, நந்தி , காமதேனு, குதிரை ,கிளி , ரிசபம் ஆகிய வாகனங்களில் சிறப்பு அலங்காரத்துடன் திருவீதியுலா திருகாட்சியும் , ஐந்தாம் திருநாளன்று ஓலைச்சப்பரம், ஏழாம் நாளன்று திருக்கல்யாணம், ஒன்பதாம் திருநாளன்று திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது .

    இதேப்போல் குடந்தை கீழ்கோட்டம் ஸ்ரீபிரஹன்நாயகி சமேத நாகேஸ்வரர் , சோமகமலாம்பாள் சமேத பாணபுரீஸ்வரர் , ஆதிகம்பட்ட விஸ்வநாதர், காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர், மற்றும் கொட்டையூர் ஸ்ரீபந்தாடுநாயகி சமேத கோடிஸ்வரர், சாக்கோட்டை அமிர்தவல்லி சமேத அமிர்தகலசநாதர் ஆகிய கோயில்களில் இருந்து வரும் 6-ந் தேதி பகல் 12 மணிக்கு மேல் மகாமகத் திருக்குளக் கரையில் 12-சிவாலய மூர்த்திகள் எழுந்தருள மாசிமகத் தீர்த்தவாரி விழாவும்நடைபெற உள்ளது.

    கும்பகோணத்தில் உள்ள வைணவ ஆலயங்களில் மாசிமகப் பெருவிழா, திருத்தேரோட்டம், தெப்போத்ஸவம் சுதர்சனவல்லி, விஜயவல்லி சமேதஸ்ரீ சக்கரபாணி , அம்புஜவல்லி சமேதஸ்ரீஆதி வராஹ பெருமாள், ருக்மணி,

    சத்யபாமா, செங்கமலத் தாயார் சமேத இராஜகோபாலசுவாமி (பெரிய கடைத்தெரு) தோப்புத்தெரு இராஜகோபாலசுவாமி (இந்த கோவிலில் மட்டும் கொடியேற்றம் கிடையாது) ஆகிய கோயில்களில் வரும் 26-ந்தேதி காலை கொடியேற்றமும் அதனை தொடர்ந்து மாசிமகப் பெருவிழாவையெட்டி தினசரி காலையில் பல்லக்கிலும், மாலையில் சந்திரபிரபை, சேஷம், கருடன், அனுமந், யானை, புன்னைமரம்,குதிரை ஆகிய வாகனங்களில் பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருள திருவீதியுலா திருகாட்சியும் நடைபெறும்.

    மாசி மகத்தன்று சக்கரபாணி திருகோவிலில் காலையில் திருத்தேரோட்டமும், ராஜகோபாலசுவாமி, ஆதிவராஹப்பெருமாள் ஆலயங்களில் ரதாரோஹணமும் அதனை தொடர்ந்து தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது.

    மாசி மகத்ததன்று மாலை சார்ங்கபாணி திருக்கோயில் குளமான பொற்றாமரை திருக்குளத்தில் உற்சவ நாச்சியார்களுடன் ஆராவமுதப் பெருமாள் எழுந்தருள தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது.

    இவ்விழாக்களின் சிறப்பு ஏற்பாடுகளை கும்பகோணம் இந்து சமய அறநிலைய துறை சுவாமிமலை துணை ஆணையர் உமாதேவி , மற்றும் கும்பகோணம் உதவி ஆணையர் ராணி (கூ.பொ) கண்காணிப்பாளர்கள் சுதா ,

    பழனிவேல் ஆய்வாளர்கள் தனலட்சுமி , கோகிலதேவி மற்றும் செயல் அலுவலர்கள் கிருஷ்ணகுமார், சிவசங்கரி, கணேஷ்குமார், மற்றும் அந்தந்த கோயில்களின் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • பிரகார வீதியுலா நடைபெற்று ஊஞ்சல் மண்டபத்திற்கு வந்தடைந்தது.
    • மேள தாளங்கள் முழங்க ஊஞ்சலுக்கு எழுந்தருளி சக்கரபாணிசாமி காட்சியளித்தார்.

    சுவாமிமலை:

    கும்பகோணம் சக்கரபாணிசாமி கோவிலில் ஆண்டு தோறும் பெருமாள் ஊஞ்சல் உற்சவம் பத்து நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான உற்சவம் கடந்த 16-ந் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    உற்சவத்தின் 3-ம் நாள் விழாவில் உற்சவர் சக்கரபாணி, சிறப்பு பட்டு வஸ்திரங்கள், விசேஷ ஆபரணங்கள், பல வண்ண நறுமண மலர் மாலைகள் சூடி சர்வலங்காரத்தில் அருள்பாலித்தார்.

    பின், பிரகார வீதியுலா நடைபெற்று ஊஞ்சல் மண்டபத்திற்கு வந்தடைந்தது. பின்னர், மேள தாளங்கள் முழங்க ஊஞ்சலுக்கு எழுந்தருளி சக்கரபாணிசாமி காட்சியளித்தார்.

    அவருக்கு நட்சத்திர ஆர்த்தி செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • லட்சக்கணக்கான வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள்.
    • திருப்பூர் மாநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரில் மழையின் காரணமாக கொசு உற்பத்தி அதிகரித்து ள்ளதால், அதனை தடுக்கு வீதிகள் தோறும் மாநகரில் கொசு மருந்து அடிக்கும் பணி நடந்து வருகிறது.

    திருப்பூர் மாநகரில் பனியன் நிறுவனங்கள் உள்ள தால், லட்சக்கணக்கான வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். இதன் காரணமாக பொதுமக்கள் நெருக்கம் நிறைந்த பகுதியாகவும் திருப்பூர் மாநகர் பகுதி இருந்து வருகிறது. இந்நிலையில் பருவமழை தொடங்கிய நிலையில் திருப்பூர் மாநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மாநகர் பகுதிகளில் கொசுக்கள் உற்பத்தியும் அதிகரி த்துள்ளது. கொசுக்கள் உற்பத்தியை தடுக்க மாநகராட்சி பருவகால முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளது. இந்த 60 வார்டுகளிலும் சுழற்சி முறையில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களும் வீடு, வீடாக சென்றும், குடியிருப்பு பகுதிகள் மற்றும் பள்ளிகளுக்கு சென்றும் குடிநீர் தொட்டிகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து வருகிறார்கள். கொசுப்புழு உற்பத்தியை தடுக்கும் வகையில் கொசு மருந்து அடித்தும், அபேட் மருந்துகளை தெளித்தும் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது :- திருப்பூர் மாநகராட்சியில் மழைக்காலத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை பணிகள் திட்டமிட்டு மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது. 60 வார்டுகளிலும் வீதிகள் தோறும் கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. ஒரு பகுதி கூட விடுபடாமல் அனைத்து பகுதிகளுக்கு மருந்துகள் அடிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தொழிலாளர்கள் நெருக்கம் அதிகமாக நிறைந்த பகுதிகள் கூடுதல் கவனத்துடன் கையா ளப்பட்டு வருகின்றன.

    பொதுமக்களும் தங்களது வீடுகள் அருகில் சிரட்டை, டயர்கள் போன்றவற்றில் மழைநீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள குடிநீர் தொட்டிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் வீட்டு உரிமையாளர்கள் வைத்திருந்தால், அவர்களு க்கு அபராதமும் விதி க்கப்படும். எனவே சுகாதார பணிகளுக்கு பொது மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மன்னார்குடி கால்நடை மருத்துவமனை வளாகத்தில் ரோட்டரி அன்னபூர்ணா திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு தீவனங்கள் வழங்கப்பட்டது.
    • நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது.

    மன்னார்குடி:

    மன்னார்குடியில் மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

    அதன்படி மன்னார்குடி கால்நடை மருத்துவமனை வளாகத்தில் ரோட்டரி அன்னபூர்ணா திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு தீவனங்கள் (அன்னதானம்) வழங்கப்பட்டது. நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது.

    மன்னார்குடி அரசினர் மருத்துவமனையில் மருத்துவர் தினத்தை முன்னிட்டு டாக்டர்கள் என்.விஜயகுமார், கோவிந்தராஜன், அசோகன் ஆகியோர் பொன்னாடை அணிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.

    மன்னார்குடி சஞ்சீவிராயர் தெருவில் உள்ள சஞ்சீவிராயன் வளாகத்தில் 28 ஏழை ெபண்களுக்கு தலா 4 கிலோ அரிசி வழங்கி அன்னதானம் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

    மேற்படி விழாக்களில் மிட்டவுன் ரோட்டரி தலைவர் டி.ரெங்கையன், மண்டல இணை இயக்குனர் கால்நடை டாக்டர் ஐ.தனபாலன், மருத்துவமனை டாக்டர் ராகவி, உதவி ஆளுநர் டி.ஜெயக்குமார், ரோட்டரி கால்நடை மருத்துவ முகாம்கள் தலைவர் டாக்டர் வி.பாலகிருஷ்ணன் கால்நடை அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    விழாவில் முன்னாள் தலைவர்கள் கே.திருநாவுக்கரசு, எம்.நடராஜன், ஜி.சிவக்கொழுந்து, ஆர்.மாரியப்பன், உடனடி தலைவர் சி.குருசாமி, என்.சாந்தகுமார், ஆர்.கே.பாலகுணசேகரன், பொருளர் டி.அன்பழகன், ஹரிரவி, பன்னீர்செல்வம், செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செயலர் வி.கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    ரோட்டரி 2981 மாவட்டத்தில் உள்ள 137 சங்கங்களில் கால்நடைகளுக்கு அன்னதானம் வழங்கிய முதல் சங்கம் மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கம் என்பது குறிப்பிடதக்கது.

    ×