search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்பகோணம் சக்கரபாணிசாமி கோவிலில் ஊஞ்சல் உற்சவ விழா
    X

    சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சாமிக்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

    கும்பகோணம் சக்கரபாணிசாமி கோவிலில் ஊஞ்சல் உற்சவ விழா

    • பிரகார வீதியுலா நடைபெற்று ஊஞ்சல் மண்டபத்திற்கு வந்தடைந்தது.
    • மேள தாளங்கள் முழங்க ஊஞ்சலுக்கு எழுந்தருளி சக்கரபாணிசாமி காட்சியளித்தார்.

    சுவாமிமலை:

    கும்பகோணம் சக்கரபாணிசாமி கோவிலில் ஆண்டு தோறும் பெருமாள் ஊஞ்சல் உற்சவம் பத்து நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான உற்சவம் கடந்த 16-ந் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    உற்சவத்தின் 3-ம் நாள் விழாவில் உற்சவர் சக்கரபாணி, சிறப்பு பட்டு வஸ்திரங்கள், விசேஷ ஆபரணங்கள், பல வண்ண நறுமண மலர் மாலைகள் சூடி சர்வலங்காரத்தில் அருள்பாலித்தார்.

    பின், பிரகார வீதியுலா நடைபெற்று ஊஞ்சல் மண்டபத்திற்கு வந்தடைந்தது. பின்னர், மேள தாளங்கள் முழங்க ஊஞ்சலுக்கு எழுந்தருளி சக்கரபாணிசாமி காட்சியளித்தார்.

    அவருக்கு நட்சத்திர ஆர்த்தி செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×