என் மலர்
நீங்கள் தேடியது "London"
- கப்பல்களுக்காக திறந்து மூடும் வகையில் இது கட்டப்பட்டது
- மூடி கொள்ளாமல் இருப்பதை கண்டு பார்வையாளர்கள் கூடி விட்டனர்
இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் உள்ளது புகழ் பெற்ற டவர் பிரிட்ஜ் (Tower Bridge).
பாஸ்க்யூல் முறையில் அமைக்கப்பட்ட இந்த தொங்கு பாலம் 1894ல் கட்டி முடிக்கப்பட்டது. லண்டனில் உள்ள புகழ் பெற்ற லண்டன் டவர் சுற்றுலா தலத்திற்கு அருகே தேம்ஸ் நதியின் குறுக்கே டவர்
ஹாம்லெட்ஸ் மற்றும் சவுத்வார்க் ஆகிய இரு பகுதிகளை இணைக்கும் வகையில் கட்டப்பட்டது. நதியில் சிறு கப்பல்கள் வரும் போது இது திறந்து மூடும் வகையில் கட்டப்பட்டுள்ளதால், இங்கிலாந்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் காண விரும்பும் இடங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.
நேற்று மாலை 01:15 மணியளவில் அதன் கீழ் ஒரு படகு சென்றது. அது சென்றவுடன் வழக்கம் போல் திறந்த அந்த பாலம் மூடி கொள்ளவில்லை. இதனை கண்ட அங்கிருந்த பார்வையாளர்கள் ஆச்சரியமடைந்து நடப்பதை பார்த்து கொண்டிருந்தனர்.
சுமார் அரை மணி நேரம் கழித்துத்தான் அது மீண்டும் மூடி கொண்டது. அந்த பாலத்தின் ஹைட்ராலிக் அமைப்பில் ஏற்பட்ட கோளாறினால் அதனால் சிறிது நேரம் மூடி கொள்ள இயலாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் பிரபலமான பாம்பன் பாலமும் இதை போலவே வடிவமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- இரு நாட்டு உறவுகளும் சீராகாத நிலையில் இந்த வீடியோ பரவியுள்ளது
- 2023 மார்ச் மாதம் இங்கிலாந்தில் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடைபெற்றது
2020-ஆம் ஆண்டு, இந்தியாவால் பயங்கரவாதி என பிரகடனப்படுத்தப்பட்ட ஹர்திப் சிங் நிஜ்ஜார் எனும் காலிஸ்தான் பயங்கரவாதி கடந்த 18 அன்று கனடாவில் சுட்டு கொல்லப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவிற்கு பெரும்பங்கு உண்டு என கனடாவின் அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டியிருந்தார். இதனை ஆதாரமற்றது என இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இரு நாடுகளும் தங்கள் நாட்டு தூதர்களை திரும்ப அழைத்து கொள்ளும் அளவிற்கு இரு நாட்டு உறவு நலிவடைந்தது.
இரு நாட்டு உறவுகளும் இன்னமும் சீராகாத நிலையில் கனடாவில் நடைபெற்ற சம்பவம் என குறிப்பிடப்பட்டு சமீபத்தில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அதில் ஒரு காலிஸ்தான் ஆதரவாளர் சாலையில் சென்று கொண்டிருக்கும் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவரை வழிமறித்து மிரட்டுகிறார்.
இந்த வீடியோவுடன் ஒரு குறுஞ்செய்தியையும் ஒரு பயனர் வெளியிட்டுள்ளார். அதில் "அப்பாவி குஜராத்தி தொழிலதிபரை காலிஸ்தானி 'எலிகள்' வெளிப்படையாக மிரட்டுகிறது. ஆனால் இதே 'எலிகள்' இந்திய அரசாங்கத்தின் எதிர்ப்பை கண்டதும் எங்காவது பொந்துக்குள் ஒளிந்து கொள்கின்றன" என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், ஆய்வில் இது உண்மையல்ல என தெரிய வந்துள்ளது.
இந்திய மாநிலமான பஞ்சாபில் காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங் எனும் பயங்கரவாதிக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
2023 மார்ச் மாதம், இதனை எதிர்த்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு வெளியே புறநகரில் சவுத் ஆல் எனும் பகுதியில், காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டங்கள் நடத்தினார். அப்போது சாலையில் நடந்து சென்ற ஒரு குஜராத் மாநிலத்தை சேர்ந்தவரை காலிஸ்தான் ஆதரவாளர்களில் ஒருவர் மிரட்டினார். இது அப்போதே வீடியோவாக வலைதளங்களில் பரவியது. அதே காலகட்டத்தில்தான் இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
மார்ச் மாதம் இங்கிலாந்தில் அப்போது நடைபெற்ற சம்பவம் குறித்த வீடியோ கனடாவில் நடைபெற்றதாக தவறுதலாக பகிரப்பட்டுள்ளது.
இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.
- ராமநாதபுரத்தில் லண்டன் பிரிட்ஜ் பொருட்காட்சியை நகரசபை தலைவர் திறந்து வைக்கிறார்
- அனைவரும் விரும்பி கண்டுகளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் நகரில் முன்னாள் குடியரசுத் தலைவர் பாரதரத்னா டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் கல்வி பயின்ற ஸ்வார்ட்ஸ் மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் 7 வருட நீண்ட கால இடைவெளிக்கு பிறகு மீண்டும் பிரம்மாண்டமான லண்டன் பிரிட்ஜ் பொருட் காட்சி இன்று தொடங்கு கிறது.
நகர சபை தலைவர் ஆர்.கே.கார்மேகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இன்று மாலை 6 மணிக்கு பொருட்காட்சியை திறந்து வைக்க உள்ளார்.
ஏராளமான பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய இப்பொருட்காட்சியானது இன்று தொடங்கி அடுத்த மாதம் ஜூன் 4-ந் தேதி வரை நடைபெறுகிறது.
4 D ஷோ,பேய் வீடு,பன் சிட்டி, ஸ்டால்கள் என அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் ஒரே இடத்தில் அமைந்து பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி கண்டு களிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள
இப்பொருட்காட்சிக்கான ஏற்பாடுகளை பொருட் காட்சி அமைப்பாளர்கள் செய்து வருகின்றனர்.
இந்தியாவின் பெரும் கோடீசுவரரும், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் குழும தலைவருமான முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் குடியேற உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
லண்டனின் பக்கிங்ஹாம்சையரில் உள்ள 300 ஏக்கர் கிளப் ஒன்றை தங்கள் வசிப்பிடமாக மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இது மும்பை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.
குஜராத் மாநிலம், சூரத் நகரை சேர்ந்த டாக்டர் சரிகா மேத்தா என்பவர் இதற்கு முன்னர் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ரஷியா ஆகிய நாடுகளுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று சாகசப் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.
தன்னுடன் குடும்பத்தலைவியான ஜினால் ஷா மற்றும் கல்லூரி மாணவியான ருட்டாலி படேல் ஆகியோரை இணைத்துக் கொண்டு ‘பைக்கிங் ராணிகள்’ என்ற குழுவை டாக்டர் சரிகா மேத்தா ஏற்படுத்தியுள்ளார்.

உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் வாரணாசி நகரில் இவர்களின் பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
நேபாளம், பூடான், சீனா, கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், லாட்வியா, ரஷியா, லித்துவேனியா, போலந்து, செக் குடியரசு, ஜெர்மனி, ஆஸ்திரியா, ஸ்விட்சர்லாந்து, பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், மொராக்கோ வழியாக பிரிட்டன் நாட்டின் தலைநகர் லண்டன் சென்றடைய இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும் (வயது 48), அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்ஷியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி விட்டனர். இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இதையடுத்து நிரவ் மோடியை லண்டன் போலீசார் இன்று கைது செய்தனர். அவரை இன்று வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் நிரவ் மோடியின் மீதான பண மோசடி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவரை நாடு கடத்த பிரிட்டன் அரசு உத்தரவிடும். #NiravModiExtradition #LondonCourt
உலகில் பல்வேறு நாடுகளிலும் தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் அனைத்தும் 3டி மயமாகி காணப்படுகிறது. இந்நிலையில், மனித வடிவமைப்பில் இருந்து சற்றும் மாறாத வகையில் பெண் ரோபோட் ஒன்று உருவாக்கப்படுகிறது.
இந்த பெண் ரோபோட்டிற்கு ஐடா என பெயரிடப்பட்டுள்ளது. இதனை பிரிட்டனைச் சேர்ந்த ஐடென் மெல்லர் உருவாக்கி வருகின்றார். இதன் நுணுக்கமான முக பாகங்கள், புருவங்களின் முடி போன்றவற்றை தன் கைகளால் கலைநயத்துடன் செய்து வருகிறார்.
இதையடுத்து இந்த ரோபோட், அல்ட்ரா ரியலிஸ்டிக் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படுகிறது. பெண்களைப் போன்று இயற்கையான முடிகள், புருவங்கள் போன்றவற்றை பொருத்தும் பணியில் சிறப்பு கலை நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக ஐடென் மெல்லர் கூறுகையில், ‘ஐடா ரோபோட்டினால் மக்களிடையே உரையாட முடியும். இன்றைய தொழில்நுட்பத்தினைப் பற்றிய கேள்விகளுக்கும் பதில் அளிக்கும். ஐடாவின் அசைவுகள், நகர்வுகள் யாவும் மனிதர்களை போல இயல்பாக இருக்கும். கண் விழிகள் பொருத்தப்பட்டு, ஐடா இருக்கும் அறை முழுதும் பார்க்கும் அளவிலும், மனிதர்களுடன் கண் அசைவின் மூலம் தகவல்களை பரிமாற முடியும்.
மேலும் கணினியில் செயற்கை நுண்ணறிவு கொண்டு ஐடா இயக்கப்படுவதன் மூலம், மனிதர்களின் முகங்களை அடையாளம் கண்டு கொள்ளவும், மனிதர்களை போல் மிமிக்கிரி செய்யவும் முடியும். இந்த ரோபோட்டினை மனிதர்களுக்கு இணையான வகையில் உருவாக்குவதே எங்கள் நோக்கம்’ என்றார்.

கார்ன்வாலின் பால்மவுத் நகரில் உள்ள பொறியியல் கலை நிறுவனத்தின் மூலம் பல பொறியாளர்களின் தொடர் முயற்சியினால், இந்த ரோபோட் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த ஆண்டு மே மாதம் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடக்கவுள்ள கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இதன் புகைப்படங்கள் நவம்பர் மாதம் லண்டனுக்கு கொண்டு செல்லப்பட்டு காட்சிப்படுத்தப்பட உள்ளன. #Robotartist #DrawPeople