சக மாணவர்கள் 2 பேரை கத்தியால் சரமாரியாக குத்திய 13 வயது சிறுவன் கைது - லண்டன் பள்ளியில் பயங்கரம்

தாக்குதல் நடந்த சில மணிநேரங்களிலேயே போலீசார் அந்தச் சிறுவனைக் கைது செய்தனர்.லண்டன் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு இந்த விசாரணையைத் கையில் எடுத்துள்ளது.
சக மாணவர்கள் 2 பேரை கத்தியால் சரமாரியாக குத்திய 13 வயது சிறுவன் கைது - லண்டன் பள்ளியில் பயங்கரம்
Published on

இங்கிலாந்தின் தலைநகரான லண்டனின் ப்ரெண்ட் பகுதியில் கிங்ஸ்பரி உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.

நேற்று மதியம் 12:40 மணியளவில் பள்ளியில் பயிலும் 13 வயது சிறுவன் ஒருவன், அதே பள்ளியில் பயிலும் 12 மற்றும் 13 வயதுடைய 2 மாணவர்களைக் கத்தியால் குத்திவிட்டுத் தப்பியோடினான்.

தாக்குதல் நடந்த சில மணிநேரங்களிலேயே போலீசார் அந்தச் சிறுவனைக் கைது செய்தனர். அவனிடமிருந்து தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கத்திக்குத்துக்கு உள்ளான இரண்டு மாணவர்களும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு இந்த விசாரணையைத் கையில் எடுத்துள்ளது.    

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com