என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீக்கியர் கொலை"

    • கேரி சம்பவ இடத்திலேயே இறந்ததாக காவல்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.
    • 29, 30 மற்றும் 54 வயதுடைய மூன்று பெண்களும் உள்ளனர்.

    பிரிட்டனில் சீக்கிய இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த நபர் 30 வயதான குர்முக் சிங் அல்லது கேரி என அடையாளம் காணப்பட்டார். அவர் பிரிட்டன் குடிமகன் ஆவார்.

    ஜூலை 23 (புதன்கிழமை) கிழக்கு லண்டனின் இல்ஃபோர்டில் உள்ள ஃபெல்பிரிட்ஜ் சாலையில் அவர் கும்பல் ஒன்றால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. கேரி சம்பவ இடத்திலேயே இறந்ததாக  காவல்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.

    இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் அமர்தீப் சிங் என்ற 27 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    அமர்தீப்பைத் தவிர, கேரியைக் கத்தியால் குத்தியதற்காக மற்ற சிலரும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    கைது செய்யப்பட்டவர்களில் 29 வயதுடைய ஒரு இளைஞர், 29, 30 மற்றும் 54 வயதுடைய மூன்று பெண்களும் உள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.  

    • மன்மோகன் சிங்கை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தனர்.
    • கொலை தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    பெஷாவர்:

    பாகிஸ்தானில் சீக்கியர்கள் சிறுபான்மையினராக வசித்து வருகின்றனர். பெஷாவரின் ரஷித்கர்ஹி பஜாரில் மன்மோகன் சிங் என்ற சீக்கியர் மளிகை கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் மன்மோகன் சிங்கை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தனர்.

    கடையை மூடி விட்டு மன்மோகன் சிங் வீட்டுக்கு சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் துப்பாக்கியால் சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருக்கு மனைவி, ஒரு குழந்தை, வயதான பெற்றோர், ஒரு சகோதரி, ஒரு மாற்று திறனாளி சகோதரர் உள்ளனர்.

    இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் பெஷாவரில், தர்லோக் சிங் என்ற சீக்கியர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×