என் மலர்
உலகம்

லண்டனில் சீக்கிய இளைஞர் கத்தியால் குத்திக் கொலை.. 3 பெண்கள் உட்பட 5 பேர் கைது
- கேரி சம்பவ இடத்திலேயே இறந்ததாக காவல்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.
- 29, 30 மற்றும் 54 வயதுடைய மூன்று பெண்களும் உள்ளனர்.
பிரிட்டனில் சீக்கிய இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த நபர் 30 வயதான குர்முக் சிங் அல்லது கேரி என அடையாளம் காணப்பட்டார். அவர் பிரிட்டன் குடிமகன் ஆவார்.
ஜூலை 23 (புதன்கிழமை) கிழக்கு லண்டனின் இல்ஃபோர்டில் உள்ள ஃபெல்பிரிட்ஜ் சாலையில் அவர் கும்பல் ஒன்றால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. கேரி சம்பவ இடத்திலேயே இறந்ததாக காவல்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் அமர்தீப் சிங் என்ற 27 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமர்தீப்பைத் தவிர, கேரியைக் கத்தியால் குத்தியதற்காக மற்ற சிலரும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 29 வயதுடைய ஒரு இளைஞர், 29, 30 மற்றும் 54 வயதுடைய மூன்று பெண்களும் உள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.






