என் மலர்
நீங்கள் தேடியது "Britain"
- ராணி எலிசபெத் இறுதி சடங்கில் பங்கேற்க உலகத் தலைவர்கள் லண்டன் வருகை.
- மன்னர் சார்லஸ் உடன், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சந்திப்பு.
லண்டன்:
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கை முன்னிட்டு அவரது நினைவாக பிரிட்டன் முழுவதும் மக்கள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தி உள்ளனர். இங்கிலாந்து அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க வீடுகள், உள்நாட்டு நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு பகுதிகளில் பங்கேற்றிருந்த மக்கள் ஒரு நிமிடம் ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.
இதையொட்டி ராணி உடல் வைக்கப்பட்டிருக்கும் வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் மக்கள் அஞ்சலி செலுத்துவது 60 வினாடிகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச் சடங்கில் அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் ஆகியேரை தொடர்ந்து, நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன், கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ, அயர்லாந்து அதிபர் மைக்கேல் டேனியல் ஹிக்கின்ஸ் உள்ளிட்டோர் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர்.

முன்னதாக நேற்று ராணி எலிசபெத் உடலுக்கு இந்தியா சார்பில் அஞ்சலி செலுத்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, லான்காஸ்டர் ஹவுஸில் வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்திலும் கையெழுத்திட்டார். பின்னர் பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் சார்லஸை, திரவுபதி முர்மு சந்தித்து பேசினார்.
- கொரோனா கவசப் பொருள்கள் எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து நாடாளுமன்ற குழு அச்சம் தெரிவித்துள்ளது.
- அவரசரத்தில் வாங்கப்பட்ட முகக்கவசம், கொரோனா தடுப்பு அங்கி உள்ளிட்ட 15,000 தொகுதிகள் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
லண்டன்:
உலகம் முழுவதும் கொரோனா பரவலை தொடர்ந்து, அந்த வைரஸில் இருந்து பாதுகாக்க கொரோனா முகக்கவசங்கள், கொரோனா தடுப்பு அங்கிக்கள் உள்ளிட்டவை வாங்கப்பட்டன.
இந்நிலையில் பிரிட்டன் அரசு கொள்முதல் செய்துள்ள ரூ.38,600 கோடி மதிப்பிலான கொரோனா கவசப் பொருட்கள் தரமற்றவை என தெரிய வந்துள்ளது. இதையடுத்து இந்த பொருட்களை எரித்து, அதன்மூலம் மின்சாரம் தயாரிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
அவசரத்தில் வாங்கப்பட்ட முகக்கவசம், கொரோனா தடுப்பு அங்கி உள்ளிட்ட 15,000 தொகுதிகள் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் அரசின் செலவீனங்களை கண்காணிக்கும் நாடாளுமன்றக் குழு, பிரிட்டன் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ரூ.38,600 கோடி தொகையை செலவிட்டு பொருட்களை வாங்கி, அவற்றை வீணாக்குவது குறித்த விசாரணையை நாடாளுமன்ற குழு தொடங்கியுள்ளது. மேலும் கொரோனா கவசப் பொருள்கள் எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்தும் அச்சம் தெரிவித்துள்ளது.


அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஜூலியன் அசாஞ்சே பிரிட்டனில் உள்ள ஈகுவேடார் தூதரகத்தில் இருந்து விரைவில் வெளியேற்றப்பட உள்ளார்.
அமெரிக்க ராணுவ ரகசியங்களை ‘விக்கிலீக்’ இணைய தளத்தில் அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே (47) வெளியிட்டார். இதனால் விதிக்கப்படும் மரணதண்டனை மற்றும் துன்புறுத்தலுக்கு பயந்து அவர் அமெரிக்காவில் இருந்து வெளியேறினார்.
ஆஸ்திரேலியரான இவர் அமெரிக்க குடியுரிமை பெற்று இருந்தார். அமெரிக்காவில் இருந்து வெளியேறிய அவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நைட்ஸ்பிரிட்ஷ் பகுதியில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கடந்த 2012-ம் ஆண்டில் அடைக்கலம் புகுந்தார். அவருக்கு ஈகுவேடார் அரசாங்கம் அரசியல் தஞ்சம் அளித்தது. எனவே அங்கு அச்சமின்றி நிம்மதியாக தங்கி இருந்தார்.
அவர் தஞ்சம் அடைந்து 6 ஆண்டுகளுக்கு பிறகு ஈகுவேடார் தூதரகத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறார். அதற்கான உத்தரவை அந்நாட்டின் அதிபர் லெனின் மொரெனோ பிறப்பித்துள்ளார்.
சமீபத்தில் ஸ்பெயின் சென்றிருந்த அவர் மாட்ரிட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ஒருவருக்கு (அசாஞ்சேவுக்கு) நீண்டகாலமாக அடைக்கலம் அளிக்க முடியாது. அசாஞ்சேவின் நடவடிக்கையில் எனக்கு உடன்பாடு இல்லை. நாட்டு மக்களும் அதை விரும்பவில்லை. எனவே அரசு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார்.
எனவே அவர் இன்னும் ஒருவாரத்துக்குள் எந்நேரமும் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. #JulianAssange #EcuadoreanEmbassy

பிரிட்டன் இளவரசர் வில்லியம்ஸ் முதன்முறையாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பகுதிகளுக்கு அரச குடும்ப உறுப்பினராக பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று இஸ்ரேல் பிரதம மந்திரி நேதன்யாகுவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிரிட்டன் பிரதமரின் வருகையையொட்டி இஸ்ரேலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இஸ்ரேல் நாட்டின் தலைவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட ஜெருசலேம் இல்லத்தில் இவர்களின் சந்திப்பு இன்று நடைபெற்றது.
இந்த சந்திப்பு குறித்து இதுவரை தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. #PrinceWilliam #Netanyahu #Israel
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இங்கிலாந்து வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகத்தில் காலனி நாடுகள் பற்றிய முக்கிய ஆவணங்கள் சேகரித்து வைக்கப்படுவது வழக்கம். இதில் இங்கிலாந்து உளவு நிறுவனம், ராணுவத்தின் முக்கிய ஆவணங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் அண்மையில் இந்தியா, இலங்கை தொடர்பான 195 முக்கிய ஆவணங்களை காமன்வெல்த் அலுவலகம் முற்றிலுமாக அழித்துவிட்டது.
இதில் 2 ஆவணங்கள் 1978 மற்றும் 1980-ம் ஆண்டுகளுக்கு இடையே விடுதலைப்புலிகளின் நெருக்கடி காரணமாக இலங்கை ராணுவத்துக்கு இங்கிலாந்து உளவு துறை மற்றும் ராணுவ பிரிவு அறிவுறுத்தல் வழங்கிய ஆவணங்கள் ஆகும். மேலும் 2 ஆவணங்கள் 1979-ம் ஆண்டு முதல் 1980 முடிய இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே இருந்த நட்புறவு தொடர்பானது.
இந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டதற்கு, வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இதுபற்றி வரலாற்று ஆராய்ச்சியாளர் பில் மில்லர் கூறுகையில் “முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆவணங்களை அழித்திருப்பதன் மூலம் வரலாற்றில் இனி இந்த ஆண்டுகளில் உள்ள தகவல்கள் குறித்து யாராலும் ஆய்வும் செய்ய முடியாதது” என்று கவலை தெரிவித்தார்.
ஆனால் ஆவணங்களை அழித்த காமன்வெல்த் அலுவலகமோ, “இங்கிலாந்தின் ஆவண கொள்கைப்படிதான் இவை அழிக்கப்பட்டு உள்ளன” என்று விளக்கம் அளித்துள்ளது. #IndiaSrilanka #Documents #Destroyed