என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்கதேசம்"

    • ஒவ்வொரு வழக்கிலும் ஏழு ஆண்டுகள் வீதம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
    • ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15 வரையிலான வன்முறையின்போது சுமார் 1400 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. உரிமைகள் அலுவலகம் தெரிவித்திருந்தது.

    வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மூன்று ஊழல் வழக்குகளில் மொத்தம் 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து டாக்கா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    ஷேக் ஹசீனா ஆட்சிக் காலத்தில் புர்பச்சோல் பகுதியில் உள்ள ராஜுக் நியூ டவுன் திட்டத்தில் நிலங்களை ஒதுக்குவதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி மூன்று தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    ஹசீனா தற்போது இந்தியாவில் தலைமறைவாக உள்ளதாலும், விசாரணையின் போது அவர் ஆஜராகவில்லை என்பதாலும் நீதிமன்றம் தாமாக விசாரணையை நடத்தி தீர்ப்பை அறிவித்தது.

    மூன்று வழக்குகளில் ஒவ்வொரு வழக்கிலும் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை வீதம் மொத்தம் 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆகஸ்ட் 5-ந்தேதி ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அவர் இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

    அதனைத் தொடர்நது முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்த அரசு ஷேக் ஹசீனாவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.

    ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15 வரையிலான வன்முறையின்போது சுமார் 1400 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. உரிமைகள் அலுவலகம் தெரிவித்திருந்தது.

    மனிதகுலத்திற்கு எதிராக குற்றம் செய்ததாக ஷேக் ஹசீனாவுக்கு கடந்த 17-ந்தேதி தீர்ப்பாயம் மரண தண்டனை வழங்கியது. ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வங்கதேசம் இந்தியாவை வலியுறுத்தி வரும் நிலையில் இந்த புதிய தீர்ப்பு வந்துள்ளது. 

    • ரைசிங்ஸ்டார் ஆசிய கோப்பையின் இறுதி ஆட்டம் தோகாவில் இன்று நடந்தது.
    • சூப்பர் ஓவரில் வென்ற பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது.

    தோகா:

    வளர்ந்து வரும் வீரர்களுக்கான (ரைசிங் ஸ்டார்) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்தது. இதில் பங்கேற்ற 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின.

    லீக் சுற்று முடிவில் ஏ பிரிவில் முதல் இரு இடங்களைப் பிடித்த வங்கதேசம், இலங்கை அணியும், பி பிரிவில் பாகிஸ்தான், இந்தியா அணியும் அரையிறுதிக்கு முன்னேறின.

    முதல் அரையிறுதியில் வங்கதேசம் சூப்பர் ஓவரில் இந்தியாவை வீழ்த்தியது. 2வது அரையிறுதியில் பாகிஸ்தான் இலங்கையை வீழ்த்தியது.

    இந்நிலையில், ஆசிய கோப்பை இறுதிப்போட்டி இன்று நடந்தது. இதில் பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 125 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    இதையடுத்து 126 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய வங்கதேச அணி 125 ரன்கள் மட்டுமே அடித்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.

    இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது.

    சூப்பர் ஓவரில் வங்கதேச அணி முதலில் பேட் செய்தது. முதல் பந்தில் ஒரு ரன் கிடைத்தது. 2வது பந்தில் விக்கெட் வீழ்ந்தது. 3வது பந்தில் 5 வைடுகள் கிடைத்தன. 4வது பந்தில் விக்கெட் வீழ்ந்தது.

    இதையடுத்து, சூப்பர் ஓவரில் 7 ரன் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 4 பந்தில் 7 ரன் அடித்து சாம்பியன் பட்டம் வென்றது.

    • ஷேக் ஹசீனாவுக்கு கடந்த 17-ந்தேதி தீர்ப்பாயம் மரண தண்டனை வழங்கியது.
    • ஏற்கனவே இந்தியாவிடம் வலியுறுத்திய நிலையில் தற்போது கடிதம் எழுதியுள்ளது.

    டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்த நிலையில், வங்கதேச இடைக்கால அரசு, அவரை நாடு கடத்தும்படி இந்திய அரசுக்கு முறையாக கடிதம் எழுதியுள்ளது.

    இந்த கடிதம் நேற்று எழுதப்பட்டுள்ளது. ஆனால், கடிதத்தில் உள்ள தகவல் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

    மனிதகுலத்திற்கு எதிராக குற்றம் செய்ததாக ஷேக் ஹசீனாவுக்கு கடந்த 17-ந்தேதி தீர்ப்பாயம் மரண தண்டனை வழங்கியது.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆகஸ்ட் 5-ந்தேதி ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அவர் இந்தியாவில் தஞ்சமடைந்தார். அதனைத் தொடர்நது முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்த அரசு ஷேக் ஹசீனாவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.

    ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15 வரையிலான வன்முறையின்போது சுமார் 1400 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. உரிமைகள் அலுவலகம் தெரிவித்திருந்தது.

    ஏற்கனவே, இரண்டு முறை ஷேக் ஹசீனாவை நாடுகடத்த வங்கதேசம் கேட்டுக்கொண்ட நிலையில், தற்போது முறையாக கடிதம் எழுதியுள்ளது.

    • வங்கதேசத்தில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கம் 5.7 ரிக்டர் அளவுகோலில் பதிவானது.

    டாக்கா:

    இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.38 மணிக்கு அந்நாட்டின் தலைநகர் டாக்காவை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் மக்கள் வீடுகள், அலுவலகங்களை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

    இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. டாக்காவில் 4 பேரும், நர்சிங்டி பகுதியில் 5 பேரும், நாராயண்கஞ்ச் பகுதியில் ஒருவரும் பலியாகினர். மேலும் 100-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • முதல் அரையிறுதி ஆட்டம் தோகாவில் இன்று நடந்தது.
    • சூப்பர் ஓவரில் வென்ற வங்கதேசம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    தோகா:

    வளர்ந்து வரும் வீரர்களுக்கான (ரைசிங் ஸ்டார்) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின.

    லீக் சுற்றுகள் முடிவில் ஏ பிரிவில் முதல் இரு இடங்களைப் பிடித்த வங்காளதேசம், இலங்கை அணியும், பி பிரிவில் பாகிஸ்தான், இந்தியா அணியும் அரையிறுதிக்கு முன்னேறின.

    இந்நிலையில், முதல் அரையிறுதி ஆட்டம் இன்று நடந்தது. இதில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 194 ரன்கள் குவித்தது. அந்த அணியின் சோகன் 65 ரன்கள் அடித்தார்.

    இந்தியா சார்பில் குர்ஜப்னீத் சிங் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதையடுத்து 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன வைபவ் சூர்யவன்ஷி - பிரியன்ஷ் ஆர்யா அதிரடியாக ஆடியது.

    முதல் விக்கெட்டுக்கு 53 ரன் சேர்த்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. சூர்யவன்ஷி 38 ரன்களில் ஆட்டமிழந்தார். பிரியன்ஷ் ஆர்யா 44 ரன்னிலும், ஜிதேஷ் சர்மா 33 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இந்தியா 15 ரன்கள் மட்டுமே அடித்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.

    இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 194 ரன்கள் எடுத்தது. இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது.

    சூப்பர் ஓவரில் இந்திய அணி முதலில் பேட் செய்தது. முதல் பந்தில் ஜிதேஷ் சர்மா போல்டானார். அடுத்து வந்த அசுதோஷ் சர்மா 2-வது பந்தில் கேட்ச் ஆனார். இதன்மூலம் இந்திய அணி சூப்பர் ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து ஆல் அவுட் ஆனது.

    சூப்பர் ஓவரில் ஒரு ரன் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணியும் முதல் பந்தில் விக்கெட்டை இழந்தது. 2-வது பந்து வைடாக சென்றது. இதனால் வங்கதேச அணி திரில் வெற்றி பெற்றதுடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.

    • சிஎஸ்சி மாநாடு கடைசியாக 2023-ல் நடைபெற்றது.
    • சிஎஸ்சி மாநாட்டில் வங்கதேச என்எஸ்ஏ கலீலுர் ரஹ்மான் கலந்துகொண்டார்.

    தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் 7வது மாநாடு தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் அண்டை நாடுகளான மாலத்தீவு, மொரிஷியஸ், இலங்கை மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட உறுப்பு நாடுகள் கலந்துகொண்டன.

    இந்த மாநாட்டில் பேசிய இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், "இந்தியப் பெருங்கடல் நம்மால் பகிர்ந்துக்கொள்ளக்கூடிய மிகப்பெரிய பாரம்பரியமாகும். கடல்சார் புவியியலால் இணைக்கப்பட்ட நாம்தான் அதன் ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு, நிலைத்தன்மையை உறுதிசெய்ய வேண்டும். அது நம் கடமையாகும்" எனப் பேசினார். 

    இந்தியாவின் ஒன்பது எல்லை நாடுகளைத் தாண்டி இப்பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் சீஷெல்ஸ் மற்றும் மலேசியா போன்ற நாடுகளும் பங்கேற்றன. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், உறுப்பு நாடுகளிடையே கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கும் சிஸ்சி அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் 6வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடு கடந்த 2023 டிசம்பரில் மொரிசியஸில் நடைபெற்றது. இந்நிலையில் இம்முறை இந்தியாவில் நடைபெற்றுள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடுபோல துணை பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இம்மாநாடு கடந்தாண்டு காணொலி வாயிலாக நடைபெற்றது. 

    இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) மரண தண்டனை விதித்துள்ள நிலையில், வங்கசேத பாதுகாப்பு ஆலோசகர் கலீலுர் ரஹ்மான் இந்தியா வந்து இந்த கூட்டத்தில் பங்கேற்றது கவனம் ஈர்த்துள்ளது. முன்னதாக நேற்று அஜித் தோவலும், ரஹ்மான் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது. 

    ×