என் மலர்
நீங்கள் தேடியது "வங்கதேச பிரதமர்"
- தொண்டர்கள் வெற்றியை அமைதியாகக் கொண்டாட வேண்டும்.
- தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய நேரம் இது என தெரிவித்தார்.
டாக்கா:
வங்கதேசத்தில் சமீபத்தில் நடந்த பொதுத்தேர்தலில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பி.என்.பி. கட்சி 209 இடங்களை கைப்பற்றியது. இதன்மூலம் அவர் வங்கதேச பிரதமராக விரைவில் பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், பி.என்.பி. சார்பில் டாக்காவில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. கட்சியின் முன்னணி தலைவர்களுடன் இணைந்து தாரிக் ரஹ்மான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்த தேர்தல் வெற்றி வங்கதேசத்துக்கு உரியது. இந்த தேர்தல் மூலம் சுதந்திரம் மற்றும் உரிமை ஆகியவற்றின் உண்மையான சாராம்சம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
நாம் அனைவரும் இப்போது சுதந்திரமாக இருக்கிறோம். தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய நேரம் இது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு இதைச் செய்வோம். பொறுப்பாக இருந்து நமது கடமைகளைச் செய்வோம்.
நாட்டின் ஒற்றுமைதான் நமது பலம், பிரிவினை பலவீனம். எனவே, நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
தொண்டர்கள் வெற்றியை அமைதியாகக் கொண்டாட வேண்டும். தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
நியாயமான தேர்தல்களை நடத்தியதற்காக இடைக்கால அரசாங்கத்துக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
- உச்சி மாநாடு டெல்லியில் பிரகதி மைதானத்தில் வரும் செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடக்கிறது.
- அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீனப் பிரதமர் ஜி ஜின்பிங், உச்சி மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி 20 அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகிக்கிறது. அந்த அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் பிரகதி மைதானத்தில் வரும் செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடக்கிறது.
ஜி20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீனப் பிரதமர் ஜி ஜின்பிங், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஜி20 மாநாட்டில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கலந்து கொள்வார் என்று வங்கதேச துணை உயர் ஆணையர் அந்தலிப் எலியாஸ் தெரிவித்தார்.
இதுகுறித்து எலியாஸ் மேலும் கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரதமர் ஷேக் ஹசீனா இடையே இருதரப்பு சந்திப்பும் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.






