என் மலர்tooltip icon

    உலகம்

    வங்கதேசத்தை ஒன்றிணைந்து கட்டியெழுப்புவோம்: தாரிக் ரஹ்மான் வேண்டுகோள்
    X

    வங்கதேசத்தை ஒன்றிணைந்து கட்டியெழுப்புவோம்: தாரிக் ரஹ்மான் வேண்டுகோள்

    • தொண்டர்கள் வெற்றியை அமைதியாகக் கொண்டாட வேண்டும்.
    • தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய நேரம் இது என தெரிவித்தார்.

    டாக்கா:

    வங்கதேசத்தில் சமீபத்தில் நடந்த பொதுத்தேர்தலில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பி.என்.பி. கட்சி 209 இடங்களை கைப்பற்றியது. இதன்மூலம் அவர் வங்கதேச பிரதமராக விரைவில் பதவியேற்க உள்ளார்.

    இந்நிலையில், பி.என்.பி. சார்பில் டாக்காவில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. கட்சியின் முன்னணி தலைவர்களுடன் இணைந்து தாரிக் ரஹ்மான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்த தேர்தல் வெற்றி வங்கதேசத்துக்கு உரியது. இந்த தேர்தல் மூலம் சுதந்திரம் மற்றும் உரிமை ஆகியவற்றின் உண்மையான சாராம்சம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

    நாம் அனைவரும் இப்போது சுதந்திரமாக இருக்கிறோம். தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய நேரம் இது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு இதைச் செய்வோம். பொறுப்பாக இருந்து நமது கடமைகளைச் செய்வோம்.

    நாட்டின் ஒற்றுமைதான் நமது பலம், பிரிவினை பலவீனம். எனவே, நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

    தொண்டர்கள் வெற்றியை அமைதியாகக் கொண்டாட வேண்டும். தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

    நியாயமான தேர்தல்களை நடத்தியதற்காக இடைக்கால அரசாங்கத்துக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

    Next Story
    ×