என் மலர்
நீங்கள் தேடியது "மார்கோ ரூபியோ"
- இந்தியர்கள் கவலைப்படுவது இயல்பானதுதான் என்று நாங்கள் அறிவோம்.
- அவர்கள் நாங்கள் கூட உறவிலில்லாத சில நாடுகளுடன் நல்ல உறவு வைத்துள்ளனர்.
பாகிஸ்தானுடன் அமெரிக்கா காட்டும் நெருக்கம் இந்தியாவுடனான உறவுகளை பாதிக்காது என அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே வரலாற்று ரீதியாக இருந்த பதட்டங்கள் காரணமாக, இந்தியர்கள் கவலைப்படுவது இயல்பானதுதான் என்று நாங்கள் அறிவோம்.
ஆனால், நாங்கள் பல நாடுகளுடன் உறவு வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். பாகிஸ்தானுடன் எங்கள் மூலோபாய உறவை விரிவுபடுத்த ஒரு வாய்ப்பு இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.
இந்தியர்கள் இராஜதந்திர விஷயங்களில் மிகவும் முதிர்ச்சியுடன் செயல்படுகிறார்கள். அவர்கள் நாங்கள் கூட உறவிலில்லாத சில நாடுகளுடன் நல்ல உறவு வைத்துள்ளனர். எனவே, நாங்கள் பாகிஸ்தானுடன் என்ன செய்தாலும், நட்பு நாடான இந்தியாவுடனான உறவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது" என்று தெரிவித்தார்.
மேலும் இந்தியா தங்கள் கச்சா எண்ணெய் தேவைகளுக்கு ரஷியாவை மட்டுமே அதிகம் சார்த்திருக்காமல் மற்ற நாடுகளின் சப்ளையர்களிடமிருந்தும் வாங்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
இந்தியா மீது அமெரிக்காவின் வரிவிதிப்பு குறித்த பேச்சுவார்த்தைகள் பற்றி பேசிய அவர், எங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளை சரிசெய்ய நாங்கள் பணியாற்றி வருகிறோம். ஆனால், எப்போதுமே இந்தியா எங்கள் கூட்டாளி என்பதில் எந்த மாற்றமும் இல்லை" என்று கூறினார்.
முன்னதாக ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா முற்றிலும் நிறுத்திவிட்டதாக டிரம்ப் நேற்று மீண்டும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- இஸ்ரேல் இதுவரை போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை கடைபிடித்துள்ளது.
- ஹமாஸ் ஆயுதங்களை கீழே போட வேண்டும்.
இஸ்ரேல்- காசா இடையிலான டொனால்டு டிரம்பின் முயற்சியால் அமைதிக்கான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் முதற்கட்டாக உயிருடன் உள்ள 20 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது.
தாக்குதலின்போது உயிரிழந்தவர்களின் உடலையும் ஹமாஸ் அமைப்பினர் எடுத்துச் சென்றனர். அந்த உடல்களை இன்னும் முழுமையாக ஒப்படைக்கவில்லை என இஸ்ரேல் கூறுகிறது. அதேவேளையில், அதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ஹமாஸ் விதிமுறையை மீறியதாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் குற்றச்சாட்டை ஹமாஸ் மறுத்துள்ளது.
இதனால் அமைதி ஒப்பந்தத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால, அமைதி ஒப்பந்தத்தை வலிமையாக அமெரிக்காவின் முன்னிணி அதிகாரிகள், அமைச்சர்கள் மத்திய கிழக்கு பகுதிக்கு பயணம் செய்தவாறு உள்ளனர்.
இன்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியா, இஸ்ரேல் வந்தடைந்துள்ளார். அவர் "காசாவில் நிரந்தரமான அமைதியை உருவாக்குவதற்காக, டொனால்டு டிரம்ப் தயார் செய்த ஒரு திட்டத்தை தவிர்த்து வேறு எந்த திட்டமும் இல்லை. இது சிறந்த திட்டம். ஒரே திட்டம்தான்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இஸ்ரேல் இதுவரை போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை கடைபிடித்துள்ளது. ஹமாஸ் ஆயுதங்களை கீழே போட வேண்டும். ஹமாஸ் அமைப்பு மிரட்டல் விடுக்கும் வகையில் நடந்து கொண்டால், அவர்கள் மீதான தாக்குதலை மீண்டும் தொடங்க, அமெரிக்காவின் அனுமதி இஸ்ரேலுக்கு தேவையில்லை" என்றார்.
- அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ விளக்கம் அளித்துள்ளார்.
- ஐரோப்பிய நாடுகள் மீது தடைகள் விதிக்கப்படுமா என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்தார்.
ரஷியாவிடம் எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு உதவுவதால் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
ரஷியாவிடம் எண்ணெய் வாங்கும் முக்கிய நாடுகளில் சீனாவும், இந்தியாவும் அடங்கும். ஆனால் சீனாவை விடுத்தது இந்தியாவை மட்டும் அமெரிக்கா குறிவைப்பது ஏன் என்ற கேள்வி பலரிடையேயும் எழுந்தது.
இந்நிலையில் இந்த கேள்விக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது, இந்தியாவை போல சீனா மீது கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டால், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் கடுமையாக உயரும் என்று அவர் கூறினார்.
அவர் கூறியதாவது, "ரஷியாவிலிருந்து சீனா வாங்கி விற்கும் எண்ணெயில் பெரும் சதவீதத்தை ஐரோப்பிய நாடுகள் வாங்குகின்றன. இது தவிர, இயற்கை எரிவாயுவையும் வாங்குகின்றன. இந்த சூழலில், தடைகள் விதிக்கப்பட்டால், வாங்குபவர்கள் மாற்று வழிகளைத் தேட வேண்டியிருக்கும். இது சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையை அதிகரிக்கும்" என்று கூறினார்.
சீனா மற்றும் இந்தியா மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான அமெரிக்க செனட் மசோதாவை உருவாக்கும் போது ஐரோப்பிய நாடுகள் அதிருப்தி தெரிவித்ததாக அவர் மேலும் கூறினார்.
ரஷியா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை வாங்கும் ஐரோப்பிய நாடுகள் மீது தடைகள் விதிக்கப்படுமா என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்தார்.
தற்போது இது குறித்து தனக்கு தகவல் இல்லை என்றாலும் இந்த விஷயத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுக்கும் எண்ணம் இல்லை என்று அவர் கூறினார்.
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் ஐரோப்பிய நாடுகள் ஆக்கபூர்வமான பங்கை வகிக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
- இரு நாட்டு தலைவர்களையும் வர்த்தக ஒப்பந்தங்களை நிறுத்துவேன் என அழுத்தம் கொடுத்து போரை நிறுத்தினார்.
- டிரம்ப் நிறுத்தும் போர்களில் உக்ரைன் - ரஷியா போர் மிகப்பெரியதாக இருக்கும் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் 22 இல் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கில் பைசரன் புல்வெளி சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் 26 பேரை சுட்டுக்கொன்றனர்.
பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் அளித்ததாக கூறி மே 7 ஆம் தேதி இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் மூலம் தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து இரு நாடுகளுக்கிடையேயும் ஏற்பட்ட மோதல் 3 நாட்களுக்கு பின் மே 9 அன்று மாலை போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.
இரு நாட்டு தலைவர்களையும் வர்த்தக ஒப்பந்தங்களை நிறுத்துவேன் என அழுத்தம் கொடுத்து போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இதுவரை 20க்கும் மேற்பட்ட முறை கூறிவிட்டார். ஆனால் பாகிஸ்தான் கோரிக்கையின் பேரில்தான் மோதலை நிறுத்தியதாக இந்தியா தெரிவித்தது.
இந்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் போர் வெடித்தபோது அமெரிக்கா நேரடியாக தலையிட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார்.
சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த ரூபியோ, டிரம்ப் 'அமைதியின் அதிபர் '. "அதனால், இந்தியாவும் பாகிஸ்தானும் போருக்குச் சென்றபோது, நாங்கள் நேரடியாக தலையிட்டோம். அதிபரால் அங்கு அமைதியை நிலைநாட்ட முடிந்தது" என்று கூறினார்.
மேலும் கம்போடியா-தாய்லாந்து, அஜர்பைஜான்-ஆர்மீனியா மற்றும் காங்கோ-ருவாண்டாவில் ஏற்பட்ட மோதல்களுக்கு அமைதியைக் கொண்டுவந்தது அமெரிக்காதான் என்றும் ரூபியோ கூறினார்.
மேலும் டிரம்ப் நிறுத்தும் போர்களில் உக்ரைன் - ரஷியா போர் மிகப்பெரியதாக இருக்கும் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.
முன்னதாக மாதத்திற்கு ஒரு போரை நிறுத்தி வரும் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என வெள்ளை மாளிகை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
- எங்கள் முன்னுரிமை பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகளைப் பாதுகாப்பதாகும்.
- ஈரான் அமெரிக்க நலன்களையோ அல்லது பணியாளர்களையோ குறிவைக்கக்கூடாது
ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் இன்று அதிகாலையில் பெரிய அளவில் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய அமெரிக்க வெளியறவு செயளாலர் மார்கோ ரூபியோ, "இன்றிரவு, இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக ஒருதலைப்பட்ச நடவடிக்கையை எடுத்தது.
ஈரானுக்கு எதிரான தாக்குதல்களில் நாங்கள் ஈடுபடவில்லை, மேலும் எங்கள் முன்னுரிமை பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகளைப் பாதுகாப்பதாகும்.
இந்த நடவடிக்கை அதன் தற்காப்புக்கு அவசியம் என்று அவர்கள் நம்புவதாக இஸ்ரேல் எங்களுக்குத் தெரிவித்தது.
அதிபர் டிரம்பும் நிர்வாகமும் எங்கள் படைகளைப் பாதுகாக்கவும், எங்கள் பிராந்திய பங்காளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர். ஈரான் அமெரிக்க நலன்களையோ அல்லது பணியாளர்களையோ குறிவைக்கக்கூடாது" என்று ரூபியோ கூறினார்.
- இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்களுடன் பல மட்டங்களில் தொடர்பில் இருக்கிறோம்.
- பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க முப்படைகளுக்கும் பிரதமர் மோடி முழு சுதந்திரம் கொடுத்துள்ளார்.
26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழல் நிலவுகிறது. சிந்து நதி நீர் நிறுத்தம், பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது.
சிம்லா ஒப்பந்தம் ரத்து, இந்திய விமானங்களுக்குப் பாகிஸ்தான் வான்பரப்பு மூடல் உள்ளிட்ட நடவைடிகைகளை பாகிஸ்தான் எடுத்துள்ளது. இதோடு நிற்காமல் இரு நாடுகளும் ராணுவ தாக்குதலுக்குத் தயாராகி வருகின்றன என்று தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க வெள்ளை மாளிகை விரும்புவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அவர் பேசியதாவது, "இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர்களுடன் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, இன்று அல்லது நாளை பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.
அங்கு நடக்கும் அனைத்தையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம். நாங்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்களுடன் வெளியுறவுத்துறை மட்டுமல்லாது, பல மட்டங்களில் தொடர்பில் இருக்கிறோம். தீர்வுக்காக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என்று கூறினார்.
நேற்றைய தினம், பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதில் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க முப்படைகளுக்கும் பிரதமர் மோடி முழு சுதந்திரம் கொடுத்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது மேலும் பற்றத்தை அதிகரித்துள்ளது.
- எவ்வித ராணுவ உத்தரவுகளையும் பிறப்பிக்கவில்லை.
- இதனை தீர்க்க வேண்டியது அவசியம் ஆகும்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கிரீன்லாந்தை வாங்க முன்வந்த விவகாரம் நகைச்சுவை இல்லை என்று வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். எனினும், கிரீன்லாந்தை கையகப்படுத்துவது அமெரிக்காவின் தேசிய நலனாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.
ஆர்க்டிக் பகுதியில் தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள சீனா முயற்சிக்கலாம் என்று மார்கோ ரூபியோ எச்சரிக்கை விடுத்தார். தி மெக்கின் கெல்லி நிகழ்ச்சியில் பேசிய ரூபியோ, டிரம்ப் கிரீன்லாந்தை வாங்க விரும்புகிறார், கிரீன்லாந்தை கையகப்படுத்த அதிபர் எவ்வித ராணுவ உத்தரவுகளையும் பிறப்பிக்கவில்லை என்று தெரிவித்தார்.
"இது ஒன்றும் ஜோக் இல்லை. இது நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என்பதற்காக கையகப்படுத்தும் விஷயம் இல்லை. இது நம் தேசிய நலனுக்கானது. இதனை தீர்க்க வேண்டியது அவசியம் ஆகும்," என்று மார்கோ ரூபியோ தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "இது அதிபரின் முக்கிய பணிகளில் ஒன்றாக இருக்கிறது. இதை எப்படி தந்திரமாக கையாள வேண்டும் என்பது பற்றி ஆலோசிக்கும் நிலையில் நாங்கள் இல்லை. இன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு நீங்கள் ஆர்க்டிக் பகுதி எங்கள் கண்காணிப்பில் மிக பாதுகாப்பாக இருக்கும் என்பதை உறுதியாக நம்பலாம்," என்று தெரிவித்தார்.
ஆர்க்டிக் பகுதி அமெரிக்கா பாதுகாக்க வேண்டிய மிக முக்கிய கப்பல் போக்குவரத்து தளமாக உருவெடுக்கும். சீனா இந்த பகுதியில் தனது இருப்பை வளர்த்துக் கொள்ள முயற்சிக்கும் என்று ரூபியோ எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க ராணுவத்திற்கு வடமேற்கு கிரீன்லாந்தில் நிரந்தர ராணுவ தளம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
டென்மார்க்-இடம் இருந்து சுதந்திரம் பெற முயற்சித்து வரும் கிரீன்லாந்து பிரதமர் மியூட் எகெட், தங்களது தீவு விற்பனைக்கு அல்ல என்றும், மக்கள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக கூறி வருகிறார்.






