என் மலர்
நீங்கள் தேடியது "swearing in ceremony"
- தாரிக் ரஹ்மான் தலைமையிலான பி.என்.பி. கட்சி மொத்தம் உள்ள 300 இடங்களில் 209 இடங்களை கைப்பற்றியது.
- பிரதமர் மோடிக்கு அழைப்பு அழைப்பு விடுக்கப்பட்டிள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2024ம் ஆண்டில் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த பிறகு வங்கதேசத்தில் முதல் முறையாக கடந்த வியாழக்கிழமை பொதுத்தேர்தல் நடந்தது. இதில், தாரிக் ரஹ்மான் தலைமையிலான பி.என்.பி. கட்சி மொத்தம் உள்ள 300 இடங்களில் 209 இடங்களை கைப்பற்றியது.
இதன்மூலம் அவர் வங்கதேச பிரதமராக வரும் செவ்வாய்க்கிழமை பதவியேற்கிறார். அன்று மதியம் நாடாளுமன்றத்தின் தெற்கு மண்டபத்தில் இந்த விழா நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு அழைப்பு விடுக்கப்பட்டிள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவுடன் சீனா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், மலேசியா, புருனே, இலங்கை, நேபாளம், மாலத்தீவு மற்றும் பூட்டான் ஆகிய 13 நாடுகளுக்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அழைப்பு விடுத்துள்ளதாக வங்கதேச வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக இந்தியப் பிரதமர் மோடியையும் மரியாதை நிமித்தமாக இவ்விழாவிற்கு அழைப்போம் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஏ.என்.எம். எஹ்சானுல் ஹக் மிலன் தெரிவித்தார்.
இந்நிலையில், வங்கதேசத்தின் புதிய பிரதமராக தேர்வான தாரிக் ரஹ்மானின் பதவியேற்பு விழாவில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பங்கேற்பார் என வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
அன்றைய நாள் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இந்தியா வரவுள்ளதால், பிரதமர் மோடியால் விழாவில் பங்கேற்க முடியவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
- மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பிதழ் அனுப்பினார்.
- மம்தாவிற்கு பதிலாக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் பங்கேற்கவுள்ளதாக தகவல்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வெற்றிபெற்று காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது.
தேர்தலில் வெற்றி பெற்றபோதும் புதிய முதல் மந்திரி யார் என்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் டி.கே.சிவக்குமார், சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவியது.
கடந்த 5 நாளாக பரபரப்பு நீடித்த நிலையில் கர்நாடகாவின் புதிய முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் பொறுப்பேற்க இருப்பதாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது.
இதையடுத்து, பெங்களூருவில் இன்று 20-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழகம் உள்பட பல்வேறு மாநில முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அந்தவகையில் மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பிதழ் அனுப்பினார்.
இந்நிலையில், இந்த விழாவில் மம்தா பானர்ஜி பங்கேற்க மாட்டார் எனவும், அவருக்கு பதிலாக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ககோலி கோஷ் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
- 18 பேர் திட்டக்குழு உறுப்பினராக பதவியேற்கின்றனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட திட்டக்குழு பிரதிநிதிகள் பதவியேற்பு விழா வருகிற 28-ந் தேதி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. திட்டக்குழு தலைவராக மாவட்ட ஊராட்சி கவுன்சில் தலைவர் சத்தியாபாமா, துணை தலைவராக கலெக்டர் கிறிஸ்துராஜ், தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கவுன்சிலர் 18 பேர் திட்டக்குழு உறுப்பினராக பதவியேற்கின்றனர்.
மேலும் திருப்பூர் மாவட்டத்திலுள்ள எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி, ஒன்றிய தலைவர்கள், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கின்றனர்.
- பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவைப்படும் நிலையில் ஹேமந்த் சோரன் 54 இடங்களுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறார்.
- ஆட்சியமைக்க உரிமை கோரி, கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் ஒப்படைத்தேன்.
81 சட்டமன்றங்களைக் கொண்ட ஜார்கண்ட் மாநிலத்துக்குக் கடந்த நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகள் நேற்றைய தினம் நவம்பர் 23 எண்ணப்பட்டது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34; காங்கிரஸ் 16; ராஷ்டிரிய ஜனதா தளம் 4 இடங்களில் வெற்றி பெற்றது. எதிர்த்து போட்டியிட்ட பாஜக 21 இடங்களில் வென்றது. பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவைப்படும் நிலையில் ஹேமந்த் சோரன் 54 இடங்களுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறார்.

கடந்த 24 ஆண்டுகளில் ஜார்கண்டில் ஆளும் கட்சி தொடர்ச்சியாக மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது இதுவே முதல் முறை ஆகும். இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஹேமந்த் சோரனை முதல்வராக முன்மொழிந்தனர். இந்நிலையில் இன்று [ ஞாயிற்றுக்கிழமை] ஜார்கண்ட் ஆளுநர் சந்தோஷ் குமார் காங்வர் - ஐ சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார்.
ஆளுநரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சோரன், ஆட்சியமைக்க உரிமை கோரி, கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் ஒப்படைத்தேன். நான் ஆட்சியமைக்க ஆளுநரும் அழைப்பு விடுத்தார். பதவியேற்பு விழா நவம்பர் 28 [வியாழக்கிழமை] நடைபெறும் என்று தெரிவித்தார்.
ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.







