என் மலர்
நீங்கள் தேடியது "spicejet"
- பெண் ஊழியரை தகாத முறையில் அந்த பயணி தொட்டதாக ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
- ஊழியரிடம் தவறாக நடந்துகொண்ட பயணி, அவருடன் வந்திருந்த மற்றொரு பயணி இருவரும் இறக்கி விடப்பட்டனர்
புதுடெல்லி:
டெல்லியில் இன்று விமானத்தில் ஏறிய பயணி ஒருவர், பெண் ஊழியரிடம் அத்துமீறி நடந்துகொண்டதால் அவர் கீழே இறக்கி விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
டெல்லி விமான நிலையத்தில் இருந்து இன்று ஐதராபாத்துக்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஏறிய அந்த ஆண் பயணி, விமான பெண் ஊழியரிடம் தவறாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பயணிக்கும் ஊழியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பெண் ஊழியர் உடனடியாக பாதுகாப்பு படை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் வந்து, பெண் ஊழியரிடம் தவறாக நடந்துகொண்ட பயணி மற்றும் அவருடன் வந்திருந்த மற்றொரு பயணி இருவரையும் கீழே இறக்கி விசாரணை நடத்தினர்.
பெண் ஊழியரை தகாத முறையில் அந்த பயணி தொட்டதாக ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் விமானத்தில் வரையறுக்கப்பட்ட பகுதியால் இந்த சம்பவம் ஏற்பட்டதாக சக பயணிகள். பின்னர் அந்த
பயணி எழுத்துப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டார். இருப்பிலும் மேலும் பிரச்சனை ஏற்படுவதை தவிர்ப்பதற்காக அவர் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை.
ஆண் பயணி ஒருவர் பெண் ஊழியரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதை அடுத்து, விமான ஊழியர்களும் பயணிகளும் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ (ஏஎன்ஐ) வெளியாகி உள்ளது.


அதன்பின்னர், ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனங்கள் நேற்று 20 விமானங்களின் சேவையை ரத்து செய்தன. இதனால் சுமார் 300 பயணிகள் பாதிக்கப்பட்டனர். இன்று 35 விமானங்களின் சேவையை ஸ்பைஸ்ஜெட் ரத்து செய்ய உள்ளது.
முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு எந்தவித கூடுதல் கட்டணமும் பெறாமல் அவர்களுக்கு தேவையான தங்கும் வசதியை செய்துகொடுக்க வேண்டும் என்றும் ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. #Boeing737MAX8 #EthiopiaPlaneCrash #DGCA
எத்தியோப்பியா ஏர்லைன்சுக்கு சொந்தமான ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்தனர். இதே ரக விமானம் இந்தோனேசியாவில் கடந்த அக்டோபரில் விபத்துக்குள்ளானதில் 189 பேர் பலியாகினர்.
இதனால், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்ததால் சீனா, எத்தியோப்பியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் அந்த ரக விமானங்களை இயக்க தற்காலிக தடை விதித்துள்ளது. இந்தநிலையில், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ விமானங்களில் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை இருப்பதை விமானப் போக்குவரத்து நிர்வாகம் கண்டறிந்தால், உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.
எனவே சீனா, எத்தியோப்பியா, சிங்கப்பூரை தொடர்ந்து அமெரிக்காவிலும் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ விமானங்கள் தடைவிதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. #Boeing737MAX8
எத்தியோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபா நகரில் இருந்து கென்யா தலைநகர் நைரோபி நோக்கிச் சென்ற எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமானம் சமீபத்தில் விழுந்து நொறுங்கிய விபத்தில் 8 இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்ததையடுத்து, விபத்துக்குள்ளான போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்களை தரையிறக்கி நிறுத்தி வைக்க சீன அரசு உத்தரவிட்டுள்ளது.
சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட மேலும் சில நாடுகள் இந்த முடிவுக்கு வந்துள்ளன. இந்நிலையில், தங்களது வான்எல்லையில் போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்களை இயக்க மலேசியா அரசு தடை விதித்துள்ளது.
இதேபோல் பிரிட்டன் அரசும் தங்கள் நாட்டுக்குட்பட்ட வான்எல்லைக்குள் போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்களை இயக்க நேற்று முதல் தடை விதித்தது.
இந்நிலையில் தங்கள் நாட்டுக்குட்பட்ட வான்எல்லையில் போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்களை இயக்க இந்தியாவில் தற்காலிகமாக இயக்க தடைவிதித்துள்ளதாக இந்திய விமான போக்குவரத்து இயக்ககம் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானத்தில் உலகில் உள்ள பல நாடுகளின் விமானச்சேவை நிறுவனங்கள் இந்த விமானங்களை வாங்க ஏராளமான அளவில் ஆர்டர் செய்துள்ளது, குறிப்பிடத்தக்கது. #Boeing737MAX8 #EthiopianFlightCrash #IndiabansBoeing737MAX8

முன்னதாக, போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானத்தில் உலகில் உள்ள பல நாடுகளின் விமானச்சேவை நிறுவனங்கள் இந்த விமானங்களை வாங்க ஏராளமான அளவில் ஆர்டர் செய்துள்ளன.
இதற்கிடையில், இந்தியாவில் இயக்கப்படும் போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டுமா? என்பது குறித்து விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்துடன் ஆலோசனை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்திடம் 737 மேக்ஸ்-8 ரக விமானங்கள் இல்லை. எனினும், இத்தகைய விமானங்களை வைத்திருக்கும் தனியார் நிறுவனங்கள் உரிய பரிசோதனைகளை எல்லாம் முறைப்படி கடைபிடித்த பின்னரே விமானங்களை இயக்க வேண்டும் என விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், 737 மேக்ஸ்-8 ரக விமானங்களை வைத்திருக்கும் தனியார் நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் தங்களிடம் இந்த ரகத்தை சேர்ந்த 5 விமானங்கள் இருப்பதாகவும், அவை அனைத்தும் இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இன்று தெரிவித்துள்ளது.
குறைபாடுகள் ஏதுமிருப்பின் அவற்றை நிவர்த்தி செய்வது தொடர்பாக போயிங் நிறுவனத்திடமும், விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்துடனும் தொடர்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்கள் மிகவும் மேம்படுத்தப்பட்ட அதிநவீன தொழில்நுட்பம் கொண்டவை. உலகளாவிய அளவில் பல ஆயிரம் மணிநேரம் இந்த விமானங்கள் இதற்கு முன்னர் பறந்துள்ளன. உலகில் உள்ள மிகப்பெரிய விமான சேவை நிறுவனங்கள் எல்லாம் இந்த ரகத்தை சேர்ந்த விமானங்களை தொடர்ந்து இயக்கி வருகின்றன.
எப்போதும்போல் பயணிகளின் பாதுகாப்பை முன்னிறுத்தி, விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட அறிவுறுத்தலின்படி பல்வேறு வகையான கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’ என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. #Boeing737MAX8 #EthiopianFlightCrash #Spicejet #Jetairways
விமான எரிபொருளின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், செலவை குறைக்கும் வகையில் பயோ எரிபொருள் மூலம் விமானத்தை இயக்க ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி பாம்பர்டியர் க்யூ400 என்ற வகை விமானத்தை பயோஜெட் எரிபொருள் மூலம் இயக்கி இன்று பரிசோதனை செய்தது.

இந்தியாவின் முதல் பயோ எரிபொருள் விமான சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாகவும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
‘75 சதவீதம் ஏர் டர்பைன் எரிபொருள், 25 சதவீதம் பயோஜெட் எரிபொருள் கலந்து இந்த விமானம் இயக்கப்பட்டது. ஏர் டர்பைன் எரிபொருளுடன் ஒப்பிடுகையில் பயோஜெட் எரிபொருளை பயன்படுத்தும்போது கார்பன் உமிழ்வு குறைவாக இருக்கும்’ என்றும் ஸ்பைஸ்ஜெட் தெரிவித்துள்ளது. #SpiceJet #IndiasFirstBiojetFuelFlight