search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "return"

    • பெங்களூரு, ஹைதராபாத்துக்கு இயக்கப்பட்டு வந்த விமானங்கள் கடந்த 2023 ஆண்டு ஜூன் மாதம் திடீரென நிறுத்தப்பட்டது.
    • ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தொடர் நஷ்டத்தை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, ஹைதராபாத்துக்கு இயக்கப்பட்டு வந்த விமானங்கள் கடந்த 2023 ஆண்டு ஜூன் மாதம் திடீரென நிறுத்தப்பட்டது. வருமானம் குறைவாக வந்ததால் விமான சேவை நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    பின்னர் மீண்டும் விமான சேவையை தொடங்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 3 1/2 மாதங்கள் கழித்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மூலம் புதுச்சேரியில் இருந்து பெங்களூரு மற்றும் ஹைதராபாத்துக்கு மீண்டும் அக்டோபர் மாதம் முதல் விமானம் இயக்கப்பட்டு வந்தது.

    அதன்படி, தினமும் மதியம் 10.25 மணிக்கு ஹைதராபாத்தில் இருந்து புறப்படும் விமானம் மதியம் 12.10 மணிக்கு புதுச்சேரி வந்தடைகிறது. மதியம் 12.35 மணிக்கு புதுவையில் இருந்து புறப்பட்டு மதியம் 1.35 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது.

    மதியம் 2.10 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்டு 3.15 மணிக்கு புதுச்சேரி வந்தடைகிறது. அதன் பிறகு, மாலை 3.40 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு மாலை 5.20 மணிக்கு ஹைதராபாத் சென்றடைகிறது.

    இந்நிலையில் விமானத்துக்கு எரிபொருள் நிரப்பும் செலவை ஈடுசெய்யும் வகையில் கூட டிக்கெட் முன்பதிவாக இல்லை.

    விமானத்தில் உள்ள 78 இருக்கைகளில் போதிய அளவு பயணிகள் இல்லாமல் தினமும் புதுவையில் இருந்து பெங்களூருக்கும். ஹைதராபாத்துக்கும் விமானம் இயக்கப்பட்டு வருகிறது.

    இதனால் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தொடர் நஷ்டத்தை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வருகிற 31-ந் தேதி முதல் விமான சேவையை முழுமையாக நிறுத்த அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    இதை உறுதி செய்யும் விதமாக வருகிற 31-ந் தேதி முதல் பெங்களூரு மற்றும் ஹைதராபாத்துக்கான விமான டிக்கெட் முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

    ஓட்டுப்போட ஊர் திரும்பும் வட மாநில தொழிலாளர்களால் ரெயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. ஒரே நேரத்தில் பலர் விடுமுறை எடுப்பதால் கட்டுமான தொழில் உள்பட பல தொழில்கள் முடங்கி வருகின்றன. #LokSabhaElections2019
    சென்னை:

    சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

    கட்டுமான தொழில், ஓட்டல், வர்த்தக நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள் உள்பட அனைத்து தொழில்களிலும் ஈடுபட்டுள்ளார்கள்.

    வடமாநிலங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு வருகிற 11-ந் தேதி நடைபெறுகிறது.

    கூலித்தொழிலில் ஈடுபட்டாலும் வாக்குரிமையை அளிப்பதில் அவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இதனால் பெரும்பாலானவர்கள் லீவு போட்டு விட்டு சொந்த ஊர் திரும்புகிறார்கள்.

    கடந்த 2 நாட்களாகவே வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களில் தொழிலாளர்கள் அதிக அளவில் பயணிக்கிறார்கள். இதனால் அனைத்து ரெயில்களிலும் கூட்டம் அலைமோதுகிறது.

    தக்கல் டிக்கெட் பதிவு செய்வதற்காக பலர் ரெயில் நிலையங்களில் விடிய விடிய காத்து கிடக்கிறார்கள்.

    ஓட்டு போட செல்வதால் விடுமுறையும் கண்டிப்பாக கொடுத்து விடுகிறார்கள். ஒரே நேரத்தில் பலர் விடுமுறை எடுப்பதால் கட்டுமான தொழில் உள்பட பல தொழில்கள் முடங்கி வருகின்றன.

    இதுபற்றி தனியார் நிறுவன உரிமையாளர்கள் கூறும்போது, “தேர்தல் 7 கட்டமாக நடப்பதால் அடுத்த மாதம் வரை தொழில்கள் மந்தமாவதை தவிர்க்க முடியாது” என்றனர். #LokSabhaElections2019
    நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் மயிரிழையில் உயிர் தப்பிய வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் தாயகம் திரும்பினர். #MosqueShooting #NewZealandShooting #BangladeshPlayers
    டாக்கா:

    நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதியில் கடந்த 15-ந்தேதி பிற்பகலில், பயங்கரவாதி நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டில் 49 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

    நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் சம்பவம் நடந்த சமயத்தில் அதே மசூதிக்கு தொழுகை நடத்த செல்ல இருந்தனர். மசூதி அருகே சென்ற அவர்கள் துப்பாக்கி சூடு சம்பவத்தை அறிந்து அங்கிருந்து ஓடி உயிர் தப்பினர். இதைத் தொடர்ந்து நியூசிலாந்து-வங்காளதேசம் இடையே நடக்க இருந்த 3-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது.

    இந்த நிலையில் வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் தாயகம் திரும்பினர். டாக்கா விமான நிலையத்தில் பேட்டி அளித்த வங்காளதேச பொறுப்பு கேப்டன் மக்முதுல்லா கூறும் போது, ‘இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோம் என்று மட்டுமே சொல்ல முடியும். உங்களது பிரார்த்தனையால் தான் உயிரோடு தாயகம் திரும்பியிருக்கிறோம்’ என்றார்.

    திக்..திக்... அனுபவம் குறித்து வங்காளதேச தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் கூறுகையில், ‘நாங்கள் மசூதிக்கு பிற்பகல் 1.30 மணிக்கு செல்ல திட்டமிட்டு இருந்தோம். ஆனால் கேப்டன் மக்முதுல்லா பேட்டி கொடுக்க சற்று நேரம் ஆனது. அவர் பேட்டியை முடித்துக்கொண்டு ஓய்வறைக்கு சென்றபோது, அங்கு முஷ்பிகுரும், தைஜூல் இஸ்லாமும் வீடியோ கேமில் கால்பந்து ஆடிக்கொண்டிருந்தனர். உடனடியாக ஆட்டத்தை முடிக்க அவர்கள் விரும்பவில்லை. அதிலும் சில நிமிடங்கள் ஆனது. இவ்வாறு தாமதம் ஆன 3-4 நிமிடங்கள் தான் எங்களது உயிரை காப்பாற்றி இருக்கிறது.

    பஸ்சில் புறப்பட்ட நாங்கள் மசூதியில் இருந்து கிட்டத்தட்ட 60 அடி தூரத்தில் நின்றபோது தான் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. சிலர் ரத்தக்காயங்களுடன் ஓடி வருவதை கண்டோம். இதனால் எங்களுக்குள் பயம் தொற்றிக்கொண்டது. பஸ்சில் 8-10 நிமிடங்கள் பதுங்கிய நாங்கள் அதன் பிறகு அங்கிருந்து ஓடி மைதானத்திற்கு சென்று தப்பினோம். எங்களது அறைக்கு சென்றதும் பயங்கரவாதி நடத்திய தாக்குதலை வீடியோவில் கண்டு மிரண்டு போனோம். அன்று இரவில் எங்களால் சரியாக தூங்க முடியவில்லை. கண்ணை மூடினால் அந்த கொடூரம் தான் வந்து நின்றது.

    இந்த சம்பவத்தை எங்களது வாழ்நாளில் மறக்க முடியாது. கிறைஸ்ட்சர்ச் விமான நிலையத்தில் நின்றபோது, அங்கு கொஞ்சம் முன்கூட்டியே சென்றிருந்தால் இந்த நேரம் பிணமாகத் தான் தாயகம் திரும்பியிருப்போம் என்று எங்களுக்குள் பேசிக்கொண்டோம். எல்லாமே ஒரு 30 வினாடிகள் தான்’ என்றார்.  #MosqueShooting #NewZealandShooting #BangladeshPlayers

    சபரிமலையில் சாமி தரிசனத்திற்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்கள் போலீசாரின் அறிவுரையை ஏற்று திரும்பிச் சென்றனர். #Sabarimala
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது இல்லை. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து தற்போது அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்ற நிலை உருவாகி உள்ளது.

    ஆனால் காலம் காலமாக சபரிமலையில் கடைபிடிக்கப்படும் ஐதீகத்தை மீறி இளம்பெண்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்புகளும் கேரளாவில் போராட்டம் நடத்தி வருவதால் இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து உள்ளது.

    சபரிமலை கோவில் நடைதிறக்கும்போது எல்லாம் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்படுகிறது. ஏற்கனவே பிந்து, கனகதுர்க்கா ஆகிய 2 இளம்பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலையில் சாமி தரிசனம் செய்து உள்ளனர்.

    தற்போது மாசி மாத பூஜைக்காக சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று பகல் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 4 இளம்பெண்கள் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்யச் சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    சபரிமலையில் இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு செல்ல எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டம் நடத்துவதால் அங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அவர்களிடம் எடுத்துக் கூறினார்கள். போலீசாரின் அறிவுரையை ஏற்று அந்த 4 இளம்பெண்களும் திரும்பிச் சென்றனர்.

    சபரிமலையில் களப பூஜையையொட்டி நடந்த பவனி.

    சபரிமலை கோவிலில் இளம்பெண்களை சாமி தரிசனம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய அனுமதியை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மறு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. கேரள அரசு சார்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பது என்ன என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

    அரசின் பதில் மனுவில் ‘‘கேரளாவில் உள்ள கோவில்களை திருவிதாங்கூர் கொச்சி தேவசம்போர்டு நிர்வகித்து வருகிறது. இந்த தேவசம்போர்டு சட்டப்படி 35 வயதிற்கு மேற்பட்ட பெண்களை தேவசம்போர்டு உறுப்பினராக நியமிக்கலாம். அதன்படி 1950-ம் ஆண்டு முதல் 35 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தேவசம்போர்டில் உறுப்பினராக பணியாற்றி உள்ளனர். கோவில்களை நிர்வகிக்கும் பொறுப்பில் இளம்பெண்கள் இருக்கும்போது சபரிமலை கோவிலுக்கு ஏன் இளம்பெண்கள் சென்று சாமி தரிசனம் செய்யக்கூடாது?’’ என்று கூறப்பட்டு உள்ளது. #Sabarimala
    விசா முறைகேட்டால் அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த 30 மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர். #IndianStudentsdetention #Indiaissuesdemarcheto #demarchetoUSEmbassy
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயில்வதற்கு ‘எப் 1’ விசா வழங்கப்படுகிறது. இப்படி ‘எப் 1’ விசா பெறும் மாணவர்கள், படிப்பு முடிந்ததும் அமெரிக்காவிலேயே பணிபுரிவதற்காக பணி விசாவுக்காக காத்திருப்பது உண்டு. அந்த வகையில் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள பார்மிங்டன் பல்கலைக்கழகத்தில் பல மாணவர்கள் பதிவு செய்துகொண்டுள்ளனர்.

    ஆனால் இந்த பார்மிங்டன் பல்கலைக்கழகம், விசா மோசடிகளையும், குடியேற்ற விதி மீறல்களையும் கண்டறிவதற்காக உள்நாட்டு பாதுகாப்புத்துறையால் போலியாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரகசிய நடவடிக்கை குறித்து அறியாமல், இந்தியர்கள் 8 பேர், வெளிநாட்டு மாணவர்கள் 600 பேரை அமெரிக்காவிலேயே தங்கவைப்பதற்காக பார்மிங்டன் பல்கலைக்கழகத்தை அணுகினர்.

    இதையடுத்து, அவர்கள் விசா முறைகேட்டில் ஈடுபட்டதாக 8 பேரும் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக விண்ணப்பித்த 130 மாணவர்களையும் கைது செய்தனர். அவர்களில் ஒருவர் மட்டும் பாலஸ்தீனத்தை சேர்ந்தவர். மற்ற 129 பேரும் இந்தியர்கள் ஆவார்கள்.

    அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்திய மாணவர்கள் 129 பேரையும் உடனடியாக விடுவிக்கும்படி கோரிக்கை விடுவித்தனர். இதற்கிடையே இந்த விசா முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட 129 இந்திய மாணவர்களும், தெரிந்தே தவறு செய்ததாக அமெரிக்க குடியேற்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆனால், மாணவர்கள் தரப்பில் வாதாடும் வக்கீல்களோ, போலி பல்கலைக்கழகம் என தெரியாமல் மாணவர்கள் சேர்ந்துவிட்டதாகவும், தவறுகளை கண்டறிவது என்ற பெயரில் அதிகாரிகள் மோசமான ஒரு முறையை பின்பற்றியிருப்பதாகவும் கூறி வந்தனர்.

    இந்நிலையில் தற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த  30 மாணவர்கள் எவ்வித நடவடிக்கையும் இன்றி அமெரிக்காவிலிருந்து திரும்பியுள்ளனர். #IndianStudentsdetention #Indiaissuesdemarcheto #demarchetoUSEmbassy

    தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரக்கோரி தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. #SupremeCourt #BallotPaper
    புதுடெல்லி:

    மாநில சட்டசபை, நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க ஓட்டுச்சீட்டு முறைக்கு பதிலாக மின்னணு எந்திரத்தின் மூலம் ஓட்டுப் போடும் முறை கொண்டு வரப்பட்டது. இதனால் தேர்தல் முடிவுகள் விரைவாக வெளியாகின்றன. அரசுக்கு செலவும் குறைந்து உள்ளது.

    ஆனால் மின்னணு எந்திரத்தில் மோசடி செய்ய முடியும் என்றும், இதனால் மீண்டும் வாக்குச்சீட்டு முறையையே கொண்டு வர வேண்டும் என்றும் சில கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன. இதை மறுத்துள்ள தேர்தல் கமிஷன், மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மிகவும் நம்பகமானது என்றும், அதில் எந்த மோசடியும் செய்ய முடியாது என்றும் பலமுறை விளக்கம் அளித்து உள்ளது. அதை நிரூபித்தும் காட்டி இருக்கிறது.



    இந்த நிலையில், மீண்டும் வாக்குச் சீட்டு முறையையே கொண்டு வரவேண்டும் என்று கோரி ‘நியாய பூமி’ என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தவறாக பயன்படுத்த முடியும் என்றும், எனவே தேர்தல் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய அந்த எந்திரங்களை பயன்படுத்தக்கூடாது என்றும், இனிவரும் சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல்களில் மீண்டும் ஓட்டுச்சீட்டு முறையையே அமல்படுத்துமாறு உத்தரவிடவேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள், எல்லா நடைமுறைகள் மற்றும் எந்திரங்களையுமே தவறாக பயன்படுத்த முடியும் என்றும், சந்தேகங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.  #SupremeCourt #BallotPaper
    கால் பாதத்தில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்து ஓய்வில் இருந்த பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மார் பிரேசில் அணிக்காக 54-வது கோல் அடித்து அசத்தினார். #Neymar
    லிவர்பூல்:

    உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தயாராகும் வகையில் பிரேசில் அணி நேற்று நட்புறவு ஆட்டம் ஒன்றில் குரோஷியாவுடன் மோதியது. இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடந்த இந்த ஆட்டத்தில் பிரேசில் 2-0 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தியது.

    கால் பாதத்தில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்து ஓய்வில் இருந்த பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மார் 3 மாதங்களுக்கு பிறகு இந்த போட்டியின் மூலம் சர்வதேச களத்திற்கு திரும்பினார். பிற்பாதியில் மாற்று ஆட்டக்காரராக இறக்கப்பட்ட அவர் 69-வது நிமிடத்தில் கோல் அடித்து உடல்தகுதியை எட்டிவிட்டதை நிரூபித்து காட்டினார். பிரேசில் அணிக்காக அவர் அடித்த 54-வது கோல் இதுவாகும்.

    உலக கோப்பைக்கு முன்பாக பிரேசில் அணி இன்னொரு பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரியாவுடன் 10-ந்தேதி மோதுகிறது.  #Neymar #Brazil 
    ×