search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "our home town"

    ஓட்டுப்போட ஊர் திரும்பும் வட மாநில தொழிலாளர்களால் ரெயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. ஒரே நேரத்தில் பலர் விடுமுறை எடுப்பதால் கட்டுமான தொழில் உள்பட பல தொழில்கள் முடங்கி வருகின்றன. #LokSabhaElections2019
    சென்னை:

    சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

    கட்டுமான தொழில், ஓட்டல், வர்த்தக நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள் உள்பட அனைத்து தொழில்களிலும் ஈடுபட்டுள்ளார்கள்.

    வடமாநிலங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு வருகிற 11-ந் தேதி நடைபெறுகிறது.

    கூலித்தொழிலில் ஈடுபட்டாலும் வாக்குரிமையை அளிப்பதில் அவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இதனால் பெரும்பாலானவர்கள் லீவு போட்டு விட்டு சொந்த ஊர் திரும்புகிறார்கள்.

    கடந்த 2 நாட்களாகவே வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களில் தொழிலாளர்கள் அதிக அளவில் பயணிக்கிறார்கள். இதனால் அனைத்து ரெயில்களிலும் கூட்டம் அலைமோதுகிறது.

    தக்கல் டிக்கெட் பதிவு செய்வதற்காக பலர் ரெயில் நிலையங்களில் விடிய விடிய காத்து கிடக்கிறார்கள்.

    ஓட்டு போட செல்வதால் விடுமுறையும் கண்டிப்பாக கொடுத்து விடுகிறார்கள். ஒரே நேரத்தில் பலர் விடுமுறை எடுப்பதால் கட்டுமான தொழில் உள்பட பல தொழில்கள் முடங்கி வருகின்றன.

    இதுபற்றி தனியார் நிறுவன உரிமையாளர்கள் கூறும்போது, “தேர்தல் 7 கட்டமாக நடப்பதால் அடுத்த மாதம் வரை தொழில்கள் மந்தமாவதை தவிர்க்க முடியாது” என்றனர். #LokSabhaElections2019
    ×