search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Northern State Workers"

    • இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
    • இருவரையும் கைது செய்து திருப்பூர் சிறையில் அடைத்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட காந்திநகர் ஏபி., நகரில் வடமாநில தொழிலாளர்கள் சிலர் வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து வட மாநில தொழிலாளர்களுக்கு சப்ளை செய்வதாக அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வட மாநில தொழிலாளர்கள் இரண்டு பேர் தங்கி இருந்த வீட்டில் 7 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சந்தன் பாரிக் (24), மனோஜ் பொகாரா (36) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்திய போது கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ரெயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து வீட்டில் பதுக்கி வைத்து சப்ளை செய்ததாக தெரிவித்தனர். இதையடுத்து இருவரையும் கைது செய்து திருப்பூர் சிறையில் அடைத்தனர். 

    • பணிக்கு உள்ளுர்களில் இருந்து பணியாளர்கள் சரியாக வருவதில்லை
    • போதுமான அளவு சம்பளம், தங்குவதற்கு இடம், உணவு கிடைக்கிறது என கூறினர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களாக நல்ல மழை பெய்தது. இதனால் ஏரி, குளம், குட்டைகள் நிரம்பியது. மேலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால் விவ சாயம் செய்ய போதுமான அளவு நீர் கிடைத்தது. இதனால் சொர்ணவாரி பருவ பயிர் அறுவடை பணிகள் கடந்த மாதம் முடிவுற்றது.

    தொடர்ந்து தற்போது சித்திரை பட்ட பயிர் செய்ய நாற்று விடும் பணி முடிக்கப்பட்டு கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு நெமிலி சுற்றுவட்டார பகுதிகளில் நடவு பணிகளும் முடிவுற்றது. இந்தநிலையில் நேற்று சிறுவளையம், கர்ணாவூர், உளியநல்லூர் ஆகிய பகுதிகளில் நெற்பயிரில் களை எடுக்கும் பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இதுகுறித்து விவசாயி கூறுகையில் கடந்த 20 ஆண்டுகளுக் கும் மேலாக விவசாய தொழில் செய்துவருகிறேன். ஆனால் தற்போது விவசாயம் செய்ய மிகவும் கடினமாக உள்ளது. காரணம் நடவு மற்றும் களை எடுக்கும் பணிக்கு உள்ளுர்களில் இருந்து பணியாளர்கள் சரியாக வருவதில்லை.

    இதனால் வடமாநில தொழிலாளர்களை அழைத்து வந்து நடவு மற்றும் களை எடுக்கும் பணியில் ஈடுபடுத்தவேண்டிய சூழல் ஏற்பட்டது என்றார். வடமாநில தொழிலாளர்கள் கூறுகையில் எங்களுக்கு போதுமான அளவு சம்பளம், தங்குவதற்கு இடம், உணவு கிடைக்கிறது. ஒரு மாதம் இங்கு தங்கி களை எடுக்கும் பணியை முடித்துவிட்டு ஊருக்கு சென்றுவிடுவோம் என்று கூறினர்.

    • தி.மு.க. தொடங்கிய காலத்தில் இருந்து, தற்போது வரை, ஏதோ ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை விதைத்துக்கொண்டே இருந்திருக்கிறார்கள்.
    • ஒரு சாரார் மீது தமிழகத்தில் கட்டமைக்கப்பட்ட வெறுப்புப் பிரசாரத்தைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    சென்னை :

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் வட இந்திய தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகள் பரப்பப்படுவது வருத்தம் அளிக்கிறது. தமிழகத்தின் உள்கட்டமைப்பு மேம்பாடு, உற்பத்தி தொழில், சேவைத்துறை மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகளில், வட இந்திய தொழிலாளர்களின் பெரும்பங்கை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம். வட இந்திய நண்பர்களுக்கு எதிரான பிரிவினைவாதத்தையும், வெறுப்பு பிரசாரத்தையும், தமிழர்களாகிய நாங்கள் ஆதரிக்கவில்லை.

    வந்தாரை வாழ வைக்கும் தமிழகம், அனைத்து மக்களையும் வரவேற்று அரவணைத்து அவர்களை சமூகத்தின் ஒரு அங்கமாக ஏற்றுக்கொண்டிருக்கிறது. வட இந்திய சகோதர-சகோதரிகளின் பங்களிப்பை தமிழ்நாட்டின் பொதுமக்கள் ஏற்றுக்கொண்டு வரவேற்கின்றனர். ஆகவே, தமிழகத்தில் வட இந்தியர்கள் தாக்கப்படுவதாக பொய் செய்திகள் பரப்பப்படுவதை தமிழக பா.ஜ.க. கடுமையாக எதிர்க்கிறது. இது போன்ற பொய்ச் செய்திகளைப் பரப்புவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

    தி.மு.க. ஆரம்பித்த இந்தி எதிர்ப்பு எனும் நடவடிக்கைகளில் தொடங்கிய இந்த வெறுப்பு பிரசாரம், தற்போது ஏழை-எளிய மக்கள் பாதிக்கப்படும் அளவிற்கு வந்திருக்கிறது. இந்தி எதிர்ப்பு என்ற பெயரில், வட மாநில மக்களை ஏளனமாகப் பேசுவதும், அவர்கள் செய்யும் தொழில்களை அவமானப்படுத்துவதுமான தி.மு.க. கலாசாரத்தின் விளைவுதான் இன்றைய நிலைக்கு காரணம்.

    தி.மு.க. தொடங்கிய காலத்தில் இருந்து, தற்போது வரை, ஏதோ ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை விதைத்துக்கொண்டே இருந்திருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்த கடந்த 2 ஆண்டுகளில் தி.மு.க. எம்.பி.க்கள், அமைச்சர்கள் பேசிய ஏளனப் பேச்சுக்கள் எத்தனை? வட இந்திய சகோதரர்கள் மேல் இத்தனை வன்மப் பிரசாரம் நடந்தும், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இவர்களை கண்டித்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. ஒரு சாரார் மீது தமிழகத்தில் கட்டமைக்கப்பட்ட வெறுப்புப் பிரசாரத்தைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தி.மு.க. இத்தனை ஆண்டுகளாக, வட மாநில மக்களுக்கு எதிராக தொடர்ந்து செய்து வரும் இது போன்ற வெறுப்பு பிரசாரத்தின் காரணமாக, தற்போது பரவி வரும் போலியான காணொலிகள் கூட உண்மையாக இருக்குமோ... என்று எண்ணும் அளவுக்கு வட மாநிலங்களில் வசிக்கும் சகோதரர்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த அச்சத்தை களைவது தி.மு.க.வின் பொறுப்பு. தமிழக பா.ஜ.க. சார்பில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பா.ஜ.க.வினர், வடமாநில சகோதரர்களை சந்தித்து இந்த பொய் பிரசாரங்களை எடுத்துக்கூறி, அவர்கள் பாதுகாப்புக்கு தமிழக பா.ஜ.க. என்றுமே உறுதுணையாக இருக்கும் என்று உறுதியளித்து வருகிறார்கள்.

    இனிமேலாவது, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தன் கட்சிக்காரர்கள் மற்றும் கூட்டணி கட்சிக்காரர்கள், வடமாநில சகோதரர்கள் மேல் தொடரும் வெறுப்பு பிரசாரத்தை அனுமதிக்காமல் கடுமையான நடவடிக்கை எடுத்து, தமிழகத்தின் மாண்பைக் காப்பார் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தகுந்த பாதுகாப்புடனேயே உள்ளனர்.
    • வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை ஆய்வு செய்வதற்காக ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து தமிழ்வேந்தன் என்ற போலீஸ் ஐ.ஜி. வந்துள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தில் பணிபுரியும் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களை சேர்ந்த வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோக்கள் யூடியூப் உள்ளிட்ட வலைதளங்களில் பரவியது.

    இந்த வீடியோக்களின் அடிப்படையில் இந்தி பத்திரிகைகள் சிலவற்றிலும் செய்திகள் வெளியானது. அதில் தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதாகவும், இதனால் வடமாநிலத்தவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்றும் குறிப்பிடப்பட்டு உண்மைக்கு மாறான தகவல்கள் பரப்பப்பட்டன.

    இதையடுத்து பீகார் மாநிலத்தில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. தமிழகத்தில் பணிபுரியும் பீகார் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், அது தொடர்பான நடவடிக்கைகளை பீகார் அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுபெற்றன.

    இதைத்தொடர்ந்து பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், தமிழகத்தில் பணிபுரியும் தங்கள் மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் பணிபுரிந்து வரும் வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பில் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

    போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேரடியாக களம் இறங்கி மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் கலந்து பேசினார். அப்போது வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவது போன்று வெளியாகி இருக்கும் வீடியோக்கள் ஆய்வு செய்யப்பட்டன. மொத்தம் 4 வீடியோக்கள் இதுபோன்று போலியாக தயாரித்து வெளியிடப்பட்டிருப்பது உறுதியானது. திருப்பூர், கிருஷ்ணகிரி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களை மையமாக வைத்து போலி வீடியோக்கள் தயாரித்து வெளியிடப்பட்டிருப்பது போலீஸ் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    இதையடுத்து இந்த வீடியோக்களை வெளியிட்ட நபர்கள் யார்-யார்? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வடமாநிலத்தை சேர்ந்த யூடியூப் சேனல் ஒன்றில் இந்த வீடியோக்கள் திரும்ப திரும்ப வெளியாகி பீதியை ஏற்படுத்தியது அம்பலமானது.

    இது தொடர்பாக தமிழக போலீசார் 4 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். திருப்பூரில் 2 வழக்குகள் போடப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி, தூத்துக்குடியில் தலா ஒரு வழக்கு பதிவாகி இருக்கிறது.

    யூடியூப் சேனல், இந்தி ஆன்லைன் பத்திரிகை, வக்கீல் ஒருவர் மற்றும் இன்னொரு நபர் என 4 பேர் தற்போது போலி வீடியோ விவகாரத்தில் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இவர்களை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டுள்ளதாக வெளியான வீடியோக்களை பரப்பியவர்களை கைது செய்து சிறையில் அடைக்க உள்ளோம். இந்த வீடியோக்கள் வட மாநிலங்களில் இருந்துதான் பரப்பி விடப்பட்டுள்ளது. எனவே இதில் தொடர்புடைய நபர்களை பிடிக்க தனிப்படை போலீசார் துரிதமாக செயல்பட்டு வருகிறார்கள். வீடியோவை பரப்பியவர்கள் வட மாநிலத்தில் இருந்தே செயல்பட்டது தெரிய வந்ததால் அங்கு சென்று சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்யவும் தமிழக காவல் துறை தயாராகி வருகிறது.

    தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தகுந்த பாதுகாப்புடனேயே உள்ளனர். எனவே தேவையில்லாத வகையில் வீடியோக்களை யார் பரப்பினாலும் அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை ஆய்வு செய்வதற்காக ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து தமிழ்வேந்தன் என்ற போலீஸ் ஐ.ஜி. வந்துள்ளார். பீகாரில் இருந்து கண்ணன் என்கிற போலீஸ் அதிகாரி இன்று மாலை வர உள்ளார்.

    தமிழகத்தை சேர்ந்த இந்த 2 அதிகாரிகளும் திருப்பூர் சென்று அங்குள்ள நிலவரத்தை நேரில் ஆய்வு செய்ய உள்ளனர். டி.ஜி.பி. சைலேந்திரபாபு உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளை சந்தித்தும் ஆலோசனை நடத்த உள்ளனர். பின்னர் இவர்கள் தங்கள் மாநிலங்களுக்கு சென்று தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வு பற்றி அறிக்கை அளிக்க உள்ளனர்.

    • பாணாவரம் அருகே அறையில் சிறை வைப்பு?
    • 2 மாதமாக ஊதியம் வழங்கவில்லை என குற்றச்சாட்டு

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அருகே உள்ள மேல்வீராணம் பகுதியில் தனியார் இரும்பு கம்பி தயாரிக்கும் தொழிற்சாலையில் சுமார் 35-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்நிலையில் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்ளுக்கு 2 மாதமாக மாத ஊதியம் வழங்கப்படவில்லை. இது குறித்து தொழிற்சாலை நிர்வாகத்திடம் மாத ஊதியம் கேட்டால் வெளி ஆட்களை கொண்டு மிரட்டுவதாக கூறப்படுகிறது.

    வடமாநில தொழிலாளர்களில் 5 பேர் நேற்று மாலை காய்கறி வாங்க வெளியே சென்றிருந்த போது மீதம் இருந்த 27 தொழிலாளர்களை தொழிற்சாலையின் உள்ளே அடைத்து வைத்து பூட்டி வைத்துள்ளதாகவும் அவர்களை வெளியே அனுப்ப மறுப்பதாவும், மேலும் வெளியே சென்ற தொழிலாளர்களை தொழிற்சாலையின் உள்ளே செல்ல அனுமதிக்காமல் மிரட்டி வெளியேற்றியதாகவும் தெரிவித்தனர்.

    இதுகுறித்து பாணாவரம் ேபாலீசில் வடமாநில தொழிலாளர்கள் புகார் அளித்தனர்.

    தொழிற்சாலை நிர்வாகம் தரவேண்டிய ஊதியத்தையும், தொழிற்சாலையின் உள்ள அடைத்து வைத்திருக்கும் 25-க்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்களை பத்திரமாக மீட்டு தர வேண்டும் என அதில் கூறியுள்ளனர்.

    ஓட்டுப்போட ஊர் திரும்பும் வட மாநில தொழிலாளர்களால் ரெயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. ஒரே நேரத்தில் பலர் விடுமுறை எடுப்பதால் கட்டுமான தொழில் உள்பட பல தொழில்கள் முடங்கி வருகின்றன. #LokSabhaElections2019
    சென்னை:

    சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

    கட்டுமான தொழில், ஓட்டல், வர்த்தக நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள் உள்பட அனைத்து தொழில்களிலும் ஈடுபட்டுள்ளார்கள்.

    வடமாநிலங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு வருகிற 11-ந் தேதி நடைபெறுகிறது.

    கூலித்தொழிலில் ஈடுபட்டாலும் வாக்குரிமையை அளிப்பதில் அவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இதனால் பெரும்பாலானவர்கள் லீவு போட்டு விட்டு சொந்த ஊர் திரும்புகிறார்கள்.

    கடந்த 2 நாட்களாகவே வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களில் தொழிலாளர்கள் அதிக அளவில் பயணிக்கிறார்கள். இதனால் அனைத்து ரெயில்களிலும் கூட்டம் அலைமோதுகிறது.

    தக்கல் டிக்கெட் பதிவு செய்வதற்காக பலர் ரெயில் நிலையங்களில் விடிய விடிய காத்து கிடக்கிறார்கள்.

    ஓட்டு போட செல்வதால் விடுமுறையும் கண்டிப்பாக கொடுத்து விடுகிறார்கள். ஒரே நேரத்தில் பலர் விடுமுறை எடுப்பதால் கட்டுமான தொழில் உள்பட பல தொழில்கள் முடங்கி வருகின்றன.

    இதுபற்றி தனியார் நிறுவன உரிமையாளர்கள் கூறும்போது, “தேர்தல் 7 கட்டமாக நடப்பதால் அடுத்த மாதம் வரை தொழில்கள் மந்தமாவதை தவிர்க்க முடியாது” என்றனர். #LokSabhaElections2019
    ×