என் மலர்

  நீங்கள் தேடியது "Cannabis Supply"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காரைக்காலில் சிறுவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • 3 மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.1500 பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

  புதுச்சேரி:

  காரைக்கால் அருகே விழிதியூர் சங்கரன்தோப்பு பஸ் நிறுத்தம் அருகே, சிறுவர்களுக்கு சிலர் கஞ்சா விற்பதாக, நிரவி காவல்நிலைய போலீசாருக்கு ரகசியத்தகவல் சென்றது. அதன்பேரில், போலீசார் அங்கு விரைந்து சென்ற போது, அதே பகுதியை ச்சேர்ந்த மகேஷ்(வயது24), கமலேஷ்(23) மற்றும் காரைக்கால் பெரிய பேட்டைச் சேர்ந்த கார்த்திகேயன்(22) ஆகிய 3 பேரை போலீசார் மடக்கி பிடித்து சோதனைச் செய்தனர். அப்போது அவர்களிடம் சிறு, சிறு பொட்டலங்களாக ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான 50 கிராம் கஞ்சா, 3 மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.1500 பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்து, 3 பேரை யும் கைது செய்தனர்.

  ×