என் மலர்

  நீங்கள் தேடியது "3 people arrested"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வாடகைக்கு எடுத்து பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
  • 7 பெண்களை மீட்டு அனுப்பி வைத்தனர்.

  விழுப்புரம்:

  விழுப்புரம் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் பேரில் சந்தேகத்திற்குரிய இடத்தில் சோதனை நடத்தினர்.

  விழுப்புரம் தாலுகா காவல் ஆய்வாளர் ஆனந்தன் தலைமையிலான போலீசார், விழுப்புரம் சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ. நகரில் ரகசியமாக நோட்டமிட்டனர். அப்போது கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த சொரத்தூரை சேர்ந்த வினோ(28) மற்றும் மரகதபுரம் சத்தியா(34) ஆகிய இருவரும் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதேபோல் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் போலீசார் பூந்தோட்டம் பாதை என்ற பகுதியில் விபச்சாரம் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடத்தியதில் ஒரு பெண் வாடகை வீடு எடுத்து பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது பெண்ணுடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட பனையபுரம் பகுதியை சேர்ந்த அபுல்ஹசன் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

  விழுப்புரத்தில் இருவெவ்வேறு இடங்களில் வாடகை வீடு எடுத்து விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 நபர்களை போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும் 7 பெண்களை மீட்டு அனுப்பி வைத்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • போலீசார் ரோந்து சென்றபோது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 நபர்களை அழைத்து விசாரித்ததில் போதைக்காளான் கஞ்சா விற்பனை செய்பவர்கள் என தெரியவந்தது.
  • 1.100 கிராம் கஞ்சா, 100 கிராம் போதை காளான் பறிமுதல் செய்யப்பட்டது.அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கொடைக்கானல் போலீசார் சிறையில் அடைத்தனர்.

  கொடைக்கானல்:

  திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின் படி கொடைக்கானல் டி.எஸ்.பி சீனிவாசன் அறிவுறுத்தலின்படி கொடைக்கானல் பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை செய்பவர்களை கைது செய்ய கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணகுமார், ராமராஜ், தலைமைக் காவலர் காசிநாதன், முதல் நிலைக் காவலர் சரவணன் ஆகியோர் கொண்ட தனிப்படையை அமைத்து தேடி வந்தனர்.

  கே.ஆர்.ஆர் கலையரங்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 நபர்களை அழைத்து விசாரித்ததில் போதைக்காளான் கஞ்சா விற்பனை செய்பவர்கள் என தெரியவந்தது.

  மேலும் அவர்கள் கொடைக்கானல் அப்சர்வேட்டரி வி.ஜி.பி கார்டன் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (32), அப்சர்வேட்டரி செல்லப்புரம் பகுதியை சேர்ந்த ராஜபாண்டி (26), தாமஸ் டவுன் புதிய பெங்களூர் வடக்கு பகுதியைச் சேர்ந்த கிளிப்ட்அகஸ்டின் (27) ஆகியோர் கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

  அவர்களிடமிருந்து 1.100 கிராம் கஞ்சா, 100 கிராம் போதை காளான் பறிமுதல் செய்யப்பட்டது.அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கொடைக்கானல் போலீசார் சிறையில் அடைத்தனர். இவர்கள் தொடர்புடைய வேறு யாரேனும் உள்ளனரா என்பது குறித்து அவர்களிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • பாண்டியன் தனது விவசாயத் தோட்டத்தில் மதுரை வீரன் கோவிலை கட்டியுள்ளார்.

  திருச்சி,

  திருச்சி புத்தாநத்தம் கள்ளக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 35). இவர் தனது விவசாயத் தோட்டத்தில் மதுரை வீரன் கோவிலை கட்டியுள்ளார். இதில் அவரது குடும்பத்தினர் சாமி கும்பிட்டு வந்தனர்.

  இந்த நிலையில் வழக்கம்போல் மாலையில் மதுரை வீரனுக்கு பூஜை செய்துவிட்டு பாண்டியன் வீடு திரும்பினார். பின்னர் மறுநாள் காலையில் சென்று பார்த்தபோது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பாண்டியன் புத்தாநத்தம் போலீசில் புகார் செய்தார்.

  போலீசார் வழக்கு பதிவு செய்து மருங்காபுரி கஞ்சநாயக்கன்பட்டி செட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (20) மோகன்ராஜ்( 21) வேலன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (15) ஆகிய மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.565 பறிமுதல் செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சந்தோஷ்குமாருக்கும் (வயது 24), அசோக்கிற்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
  • இதனை அசோக்கின் உறவினரான பெயிண்டர் கார்த்திக் (35) தட்டிக்கேட்டார்.

  கரூர் :

  கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் அசோக். இவர் வெங்கமேடு பகுதியில் உள்ள ஒரு திரையரங்கம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமாருக்கும் (வயது 24), அசோக்கிற்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அசோக் அங்கிருந்து தனது வீட்டிற்கு சென்று விட்டார்.

  இதனையடுத்து சந்தோஷ்குமார், நம்பிராஜ் (25), சதீஷ்குமார் (25) ஆகிய 3 பேரும் அசோக் வீட்டிற்கு சென்று வாக்குவாதம் தொடர்பாக பிரச்சினை செய்து அவரை தகாதவார்த்தையால் திட்டியுள்ளனர். இதனை அசோக்கின் உறவினரான பெயிண்டர் கார்த்திக் (35) தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

  இதில் ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார், நம்பிராஜ், சதீஷ்குமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து கார்த்திக்கை தாக்கி தகாதவார்த்தையால் திட்டினர். இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து கார்த்திக் கொடுத்த புகாரின்பேரில், வெங்கமேடு போலீசார் சந்தோஷ்குமார், நம்பிராஜ், சதீஷ்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • லோயர்கேம்ப் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் குமுளி பஸ்நிறுத்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
  • லாட்டரி கடத்தி வந்த 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.1லட்சத்து 800 மதிப்பிலான 2244 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

  கூடலூர்:

  தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்ட போதும் அண்டை மாநிலங்களில் இருந்து கடத்தி வந்து விற்கப்படுகிறது. குறிப்பாக தேனி மாவட்டம் கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ளதால் அங்கிருந்து அதிகளவில் லாட்டரி சீட்டுகள் தமிழக பகுதிக்கு கொண்டுவரப்பட்டு கூலித்தொழிலாளர்களை குறிவைத்து விற்பனை செய்யப்படுகிறது.

  லோயர்கேம்ப் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் குமுளி பஸ்நிறுத்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

  விசாரணையில் அவர்கள் கூடலூரை சேர்ந்த சவுடையன்(56), திண்டுக்கல் ராம்நகரை சேர்ந்த சூசைஆரோக்கியம்(66), மதுரை பேரையூரை சேர்ந்த நாராயணன்(74) என்பதும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு லாட்டரி கடத்தி வந்ததும் தெரியவந்தது. போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.1லட்சத்து 800 மதிப்பிலான 2244 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடலூர் துறைமுகம் போலீசார் சாராயம் வழக்கு சம்மந்தமாக சோதனை மேற்கொண்டனர்.
  • போலீசார் சாராயத்தை கைப்பற்றினர். பின்னர் கடலூர் துறைமுகம் போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

  கடலூர்:

  கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர் உத்தரவின்பேரில், தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் தவச்செல்வம் மற்றும் கடலூர் துறைமுகம் போலீசார் சாராயம் வழக்கு சம்மந்தமாக சோதனை மேற்கொண்டனர். அப்போது துறைமுகம்ஆ ற்றங்கரை வீதியை சேர்ந்த பிரியன் (வயது 30) என்பவர் சுமார் 120 லிட்டர் சாராயம் பாக்கெட்டுகள் வைத்திருந்தார்.

  பச்சையாங்குப்பம் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்ததெய்வானை ( 55) என்பவர் சுமார் 70 லிட்டர் சாராயம், தியாகவல்லி அம்பேத்கார் நகரை சேர்ந்த தர்மமூர்த்தி (வயது 31)என்பவர் சுமார் 145 லிட்டர் சாராயம் வைத்திருந்தனர். இவர்களிடம் போலீசார் சாராயத்தை கைப்பற்றினர். பின்னர் கடலூர் துறைமுகம் போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் சுபாஷ் என்பவரை 2020-ம் ஆண்டு எதிர்த்தரப்பினர் கொலை செய்தனர்.
  • சுபாஷ் தரப்பை சேர்ந்த அமிர்தலிங்கத்தையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

  கடலூர்:

  கடலூர் அருகே நெல்லிக்குப்பம் கீழ் அருங்குணம்பகுதியை சேர்ந்தவர் கவியரசு(வயது 23).இவரது தந்தை தங்கவேலுவை கடந்த 2019-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த நபர்கள் முன்விரோதம் காரணமாக கொலை செய்தனர். இதனை தொடர்ந்து பழிக்கு பழி வாங்கும் சம்பவமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் சுபாஷ் என்பவரை 2020-ம் ஆண்டு எதிர்த்தரப்பினர் கொலை செய்தனர். இதன் காரணமாக2 தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கவியரசு, அவரது உறவினர் ராஜதுரை ஆகியோர் குச்சிபாளையம் பகுதியில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் முன்விரோதம் காரணமாக 2 பேரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததனர். மேலும் சுபாஷ் தரப்பை சேர்ந்த அமிர்தலிங்கத்தையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

  இந்த மோதலில் ராஜதுரை மற்றும் அமிர்தலிங்கம் ஆகியவருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் கவியரசு கொடுத்த புகாரின் பேரில் கீழ் அருங்குணம் சேர்ந்தவர்கள் சேதுபதி, கண்ணதாசன், ஆகாஷ், ஸ்ரீதர், பாஸ்கர் ஆகியோர் மீதும் அமிர்தலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் கவியரசன், ராஜதுரை என 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் சேதுபதி, கண்ணதாசன், கவியரசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகின்றது. மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • 7 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்

  அரியலூர்

  பெரம்பலூர் மாவட்டம், விளாமுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாரதி(வயது 36). இவர் அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அரியலூரில் இருந்து திருச்சி செல்லும் அரசு பஸ்சில் அவர் பணியில் இருந்தார். அரியலூரில் இருந்து அந்த பஸ் புறப்பட்டபோது 7 பேர் ஏறி, அந்த பஸ்சில் ஏறி கீழப்பழுவூருக்கு டிக்கெட் பெற்றனர். பின்னர் கீழப்பழுவூர் பஸ் நிலையம் வந்தவுடன் அவர்களை பஸ்சில் இருந்து இறங்குமாறு கண்டக்டர் பாரதி கூறியுள்ளார். அதில் 3 பேர் மட்டும் கீழே இறங்கியநிலையில், மற்ற 4 பேரும் இறங்க மறுத்து பாரதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவரது சட்டையை பிடித்து கீழே தள்ளி சரமாரியாக தாக்கினர். இது குறித்து அவர் கீழப்பழுவூர் போலீசில் அளித்த புகாரின்பேரில் 7 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் நெய்வேலியை சேர்ந்த மணியின் மகன் அசோக்(30), சக்கரவர்த்தியின் மகன் பழனி(41), ராஜேந்திரனின் மகன் சதீஷ்(32) ஆகியோரை போலீசார் கைது செய்து, அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கரூர் மற்றும் வெங்கமேட்டில் அரசால் தடை செய்யப் பட்ட புகையிலை பொருட்கள், குட்கா போன்றவை விற்க படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
  • ரோந்து பணியின் போது போலீசார் குட்கா விற்ற 3 பேரை கைது செய்தனர்.

  கரூர் :

  கரூர் மற்றும் வெங்கமேட்டில் அரசால் தடை செய்யப் பட்ட புகையிலை பொருட்கள், குட்கா போன்றவை விற்க படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

  அதன் பேரில் கரூர் டவுன் போலீஸ் எஸ்.ஐ., அப் துல்லா, வெங்கமேடு போலீஸ் எஸ்.ஐ., முரளி கிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் செங்குந்தபுரம், பஞ்ச மாதேவி, சுங்ககேட் பகுதிகளில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

  அப்போது, தமிழக அரசால் தடை செயப் பட்டுள்ள புகையிலை, குட்கா பொருட்களை விற்றதாக இந்திராணி, (வயது48), ராஜா (32), காந்திமதி(61), ஆகிய மூன்று பேரை, கரூர் டவுன் மற்றும் வெங்கமேடு போலீசார் கைது செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேடசந்தூர் மற்றும் கூம்பூர் பகுதியில் மது விற்றவர்களை போலீசார் கைது செய்து அவர்களி டமிருந்த மது பாட்டி ல்களை யும், பறிமுதல் செய்தனர்.

  வேடசந்தூர்:

  மிளாடி நபியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில் வேடசந்தூர் மற்றும் கூம்பூர் பகுதியில் மதுபானங்கள் விற்கப்படு வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

  விட்டல்நா யக்கன்பட்டி யில் மதுபானம் விற்ற சேடப்ப ட்டியைச் சேர்ந்த வெண்டி முத்து (வயது 35), பெருமாள் கோவில்ப ட்டியைச் சேர்ந்த அழகர்சாமி (50), கூம்பூர் குடகனாற்று பாலம் அருகே மது விற்ற கிரி யப்ப நாயக்க னூரைச் சேர்ந்த அமுத வேல் (35) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களி டமிருந்த மது பாட்டி ல்களை யும், பறிமுதல் செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேனி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
  • வருசநாடு பகுதியில் கஞ்சா விற்ற 3 பேரை கைது செய்து பறிமுதல் செய்தனர்.

  வருசநாடு:

  தேனி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கஞ்சா விற்பனை யில் ஈடுபட்டு வருபவர்களின் உடமைகள் பறிமுதல் செய்யப்படுவதுடன் அவர்க ளின் சொத்துக்களும் பறி முதல் செய்யப்பட்டு வரு கிறது. மேலும் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு போலீ சார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

  இதனால் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ள வர்கள் தங்கள் யுக்திகளை மாற்றி வருகின்றனர். அதன்படி ஒரே இடத்தில் மொத்தமாக கஞ்சா விற்பனையை நடத்தாமல் வெவ்வேறு இடங்களில் தனித்தனியாக பிரிந்து சென்று விற்று வருகின்றனர்.

  குறிப்பாக கஞ்சா வாங்கு பவர்களின் செல்போன்கள் மூலம் தகவல் வந்தால் சம்பவ இடத்துக்கே சென்று பைக்கில் கொடுத்து வருகின்றனர். இதனால் மொத்தமாக கஞ்சா பறிமுதல் தடுக்கப்படும் என்று அவர்கள் நினைத்து இது போன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

  போலீசாரும் அவர்களை கண்டறியும் வகையில் வெவ்வேறு இடங்களில் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.

  வருசநாடு பகுதியில் இதே போல பைக்கில் சென்று கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் 3 பேரை பிடித்து விசாரித்த னர். சிங்கராஜபுரத்தைச் சேர்ந்த அழகுராஜா (வயது 20), லெனின் குமார் (21), பிரேம்குமார் (18) ஆகிய 3 பேரும் 200 கிராம் கஞ்சாவை பைக்கில் வைத்து தங்களுக்கு ஆர்டர் வரும் இடத்துக்கு நேரடியாக சென்று விற்று வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 3 பேர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
  • நடப்பு ஆண்டில் 92 பேர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  திண்டுக்கல்:

  திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா போலீஸ் சரகத்துக்குட்பட்ட புதுஆயக்குடி வெள்ளிபாளையத்தை சேர்ந்த கனகராஜ் (வயது32), நத்தம் அருகில் உள்ள லிங்கவாடியை சேர்ந்த நல்லியப்பன் (58), அதே பகுதியை சேர்ந்த சிவம் (26) ஆகிய 3 பேரும் கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

  இவர்கள் 3 பேரின் குற்ற நடவடிக்கையை ஒடுக்கும் பொருட்டு அவர்களை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

  கலெக்டர் விசாகன் உத்தரவைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரும் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை குற்றவழக்குகளில் தொடர்புடைய 92 பேர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.