என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய 3 பேர் கைது
  X

  கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய 3 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • பாண்டியன் தனது விவசாயத் தோட்டத்தில் மதுரை வீரன் கோவிலை கட்டியுள்ளார்.

  திருச்சி,

  திருச்சி புத்தாநத்தம் கள்ளக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 35). இவர் தனது விவசாயத் தோட்டத்தில் மதுரை வீரன் கோவிலை கட்டியுள்ளார். இதில் அவரது குடும்பத்தினர் சாமி கும்பிட்டு வந்தனர்.

  இந்த நிலையில் வழக்கம்போல் மாலையில் மதுரை வீரனுக்கு பூஜை செய்துவிட்டு பாண்டியன் வீடு திரும்பினார். பின்னர் மறுநாள் காலையில் சென்று பார்த்தபோது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பாண்டியன் புத்தாநத்தம் போலீசில் புகார் செய்தார்.

  போலீசார் வழக்கு பதிவு செய்து மருங்காபுரி கஞ்சநாயக்கன்பட்டி செட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (20) மோகன்ராஜ்( 21) வேலன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (15) ஆகிய மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.565 பறிமுதல் செய்தனர்.

  Next Story
  ×