என் மலர்
நீங்கள் தேடியது "நகை பறித்த 3 பேர் கைது"
- பைக்கில் வந்தவர்கள் தகராறில் ஈடுபட்டு பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கசெயினையும் பறித்துவிட்டு கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.
- புகாரின் பேரில் போலீசார் 3 பேரை கைது செய்து மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதிைய சேர்ந்தவர் ஆசிக்அகமது(46). இவர் உடல்நலம் சரியில்லாத தனது மனைவியை காரில் அழைத்துக்கொண்டு பெர்ன்ஹில்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது காருக்குமுன்னால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வாலிபர்கள் வழி விடாமல் சென்றனர்.
இதுகுறித்து ஆசிக்அகமது அவர்களிடம் தான் ஆஸ்பத்திரிக்கு செல்லவேண்டும் என்பதால் தனக்கு வழிவிடுமாறு கூறியுள்ளார். ஆனால் பைக்கில் வந்தவர்கள் அதனை கேட்காமல் அவருடன் தகராறு செய்தனர். அப்போது தகராறை தடுக்க வந்த ஆசிக் மனைவியின் கழுத்தில் இருந்த தங்கசெயினையும் பறித்துவிட்டு கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கொடைக்கானல் போலீசில் ஆசிக்அகமது புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி தகராறில் ஈடுபட்ட ஆனந்தகிரி 4-வது தெருவை சேர்ந்த காளி(30), பிரபு, நவீன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களுடன் தகராறில் ஈடுபட்ட மேலும் 5 பேரையும் தேடி வருகின்றனர்.






