என் மலர்
நீங்கள் தேடியது "police advice"
- நாமக்கல் மண்டலத்தில் 1000-க்கும் அதிகமான கோழிப்பண்ணைகள் உள்ளன.
- வடமாநில தொழிலாளர்கள் அச்சம் இன்றி பணிபுரிய போலீஸ் சார்பில் அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
நாமக்கல்:
தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மண்டலத்தில் 1000-க்கும் அதிகமான கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள், அங்கேயே தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் வடமாநில தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினை களால், அனைத்து பகுதிகளிலும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கோழிப்பண்ணைகளில் பணிபுரியும், வடமாநில தொழிலாளர்கள் அச்சம் இன்றி பணிபுரிய போலீஸ் சார்பில் அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் பணிபுரியும் பணியாளர்க ளுக்கு ஏதேனும் அச்சம் இருப்பின், பண்ணையா ளர்கள் விருப்பப்பட்டால், நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மூலம் நேரடியாக பண்ணை களுக்கே வந்து வடமாநில தொழிலாளர்களை சந்தித்து பேசி, அவர்களுக்கு தேவை யான ஆலோசனைகளை வழங்கி உதவிகளை செய்து கொடுத்து, அவர்க ளிடம் உள்ள அச்சத்தை போக்க உள்ளனர்.
எனவே வட மாநில பணியாளர்களை, பணியமர்த்தியுள்ள பண்ணையாளர்கள், தங்கள் பணியாளர்களுக்கு, போலீஸ் துறை மூலம் அறிவுரை மற்றும் ஆலோ சனைகள் வழங்க விரும்பி னால், நாமக்கல் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியனை தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- பள்ளி சீறுடையுடன் பள்ளிக்கு செல்லாமல் வடக்கு வீதியில் சில மாணவர்கள் சுற்றி திரிந்தனர்.
- தலைமை ஆசிரியரிடம் கூறிவிட்டு, மாணவர்களை அவரவர் வகுப்பறையில் விட்டுச் சென்றனர்.
கடலூர்:
சிதம்பரத்தில் பள்ளிக்கு வராமல் வீதியில் சுற்றித்திரிந்த மாணவர்களை போலீஸார் அழைத்துச் சென்று பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தனர். சிதம்பரம் நகர பகுதியில் பள்ளி சீறுடையுடன் பள்ளிக்கு செல்லாமல் வடக்கு வீதியில் சில மாணவர்கள் சுற்றி திரிந்தனர். அப்போது நகர பகுதியில் ரோந்து பணியில் இருந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி இதனை கண்டார். அவர்களை தனது அலுவலகத்திற்கு அழைத்து வந்த ஏ.டி.எஸ்.பி., மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். தொடர்ந்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீ சாரிடம் மாணவர்களை ஒப்படைத்து, பள்ளிக்கு அழைத்து சென்று விட கூறினார். மாணவர்களை அழைத்து சென்ற போக்குவரத்து போலீசார், தலைமை ஆசிரியரிடம் கூறிவிட்டு, மாணவர்களை அவரவர் வகுப்பறையில் விட்டுச் சென்றனர்.
- பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
- அதிக வட்டி தருவதாகவும் கூறும் நபர்களிடம் பொது மக்கள் தங்களது சேமிப்பு பணத்தை முதலீடு செய்ய வேண்டாம்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பி ரிவு போலீஸ் டி.எஸ்.பி. முருகானந்தம் அறிவுறுத்தலின் பெயரில் கோபி அருகே உள்ள சவுண்டப்பூரில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமை தாங்கினார்.
இதில் கவர்ச்சிகர திட்டங்கள் மூலம் பணம் இரட்டிப்பு, அதாவது ஆயிரம் ரூபாய் செலுத்தினால் குறிப்பிட்ட மாதத்திற்கு பிறகு ரூ.5000 தருவதாகவும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கினைவிட அதிக வட்டி தருவதாகவும் கூறும் நபர்களிடம் பொது மக்கள் தங்களது சேமிப்பு பணத்தை முதலீடு செய்ய வேண்டாம்.
அந்த மோசடி நபர்கள் முதலில் ஆசை காட்டி சேர்க்கும் 10 அல்லது 20 பேருக்கு அதிக லாபம் கொடுத்து விட்டு, அதற்கு பின்னால் சேர்ப்ப வர்களுக்கு லாபத்தையும் கொடுக்காமல் முதலீடு செய்த பணத்தை தராமல் ஏமாற்றி விடுவார்கள்.
எந்த ஒரு நிறுவனமும் முதலீடு செய்த பணத்திற்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியை விட கூடுதலாக வட்டி தர முடியா து. எனவே பொதுமக்கள் கவர்ச்சிகரத் திட்டங்களை பார்த்தும் ஆசை வார்த்தைகளை கேட்டும் பணத்தை முதலீடு செய்து ஏமர வேண்டாம்.
அதேப்போல் அங்கீகாரம் மற்றும் அனுமதி பெறாத ஏலச்சீட்டுகளிலும் சேர்ந்து பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முதலீடு செய்யும் பணத்துக்கு முறையான ரசீது வழங்கப்படுகிறதா? கடன் ஒப்பந்த நகல் வழங்கப்படுகிறதா? என்பதை ஆராய்ந்து உறுதி தன்மை இருந்தால் மட்டுமே பணத்தை முதலீடு செய்யுங்கள்.
ஏதேனும் சந்தேகம் இருந்தால் ஈரோடு பொருளாதார குற்றப்பி ரிவு போலீஸ் நிலையத்தை நேரில் அணுக லாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- கோபால்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் தினமும் அரசு பஸ் மற்றும் தனியார் பஸ்ஸில் வந்து செல்கின்றனர்.
- காலை மாலை வேளைகளில் பஸ்ஸில் எப்போதும் கூட்டம் அலைமோதுவதால் மாணவர்கள் படிக்கட்டில் நின்று ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல்-நத்தம் சாலையில் ஏராளமான கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் உள்ளன. இங்கு சாணார்பட்டி, கோபால்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் தினமும் அரசு பஸ் மற்றும் தனியார் பஸ்ஸில் வந்து செல்கின்றனர்.
இதனால் காலை மாலை வேளைகளில் பஸ்ஸில் எப்போதும் கூட்டம் அலைமோதுவதால் மாணவர்கள் படிக்கட்டில் நின்று ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். இந்த ஆபத்தான பயணத்தை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன் பேரில் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவுப்படி, நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பரமசாமி, ஜான்சன் ஜெயக்குமார் ஆகியோர் சாணார்பட்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அரசு மற்றும் தனியார் பஸ்களின் படிக்கட்டுகளில் மாணவர்கள் சிலர் நின்றபடி பயணம் செய்தனர்.
இதை பார்த்த போலீசார் பஸ்களை நிறுத்தி படியில் பயணம் செய்த மாணவர்களை கீழே இறக்கி அவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினர்.
மேலும் அந்த மாணவர்களிடம் இதுபோன்று பஸ்சில் ஆபத்தான பயணம் செய்யக்கூடாது என்று போலீசார் எச்சரிக்கை செய்ததோடு நான் இனிமேல் பஸ்சின் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு சாகச பயணம் செய்ய மாட்டேன், எனக்கு படிப்புதான் முக்கியம், என்னுடைய வாழ்க்கைத்தான் முக்கியம் என மாணவர்களை சொல்ல வைத்து உறுதிமொழி ஏற்க வைத்தனர்.
மேலும் இனிவரும் காலங்களில் பஸ் படிக்கட்டில் மாணவர்கள் பயணம் செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினர்.
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது இல்லை. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து தற்போது அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்ற நிலை உருவாகி உள்ளது.
ஆனால் காலம் காலமாக சபரிமலையில் கடைபிடிக்கப்படும் ஐதீகத்தை மீறி இளம்பெண்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்புகளும் கேரளாவில் போராட்டம் நடத்தி வருவதால் இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து உள்ளது.
சபரிமலை கோவில் நடைதிறக்கும்போது எல்லாம் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்படுகிறது. ஏற்கனவே பிந்து, கனகதுர்க்கா ஆகிய 2 இளம்பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலையில் சாமி தரிசனம் செய்து உள்ளனர்.
தற்போது மாசி மாத பூஜைக்காக சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று பகல் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 4 இளம்பெண்கள் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்யச் சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

சபரிமலை கோவிலில் இளம்பெண்களை சாமி தரிசனம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய அனுமதியை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மறு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. கேரள அரசு சார்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பது என்ன என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
அரசின் பதில் மனுவில் ‘‘கேரளாவில் உள்ள கோவில்களை திருவிதாங்கூர் கொச்சி தேவசம்போர்டு நிர்வகித்து வருகிறது. இந்த தேவசம்போர்டு சட்டப்படி 35 வயதிற்கு மேற்பட்ட பெண்களை தேவசம்போர்டு உறுப்பினராக நியமிக்கலாம். அதன்படி 1950-ம் ஆண்டு முதல் 35 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தேவசம்போர்டில் உறுப்பினராக பணியாற்றி உள்ளனர். கோவில்களை நிர்வகிக்கும் பொறுப்பில் இளம்பெண்கள் இருக்கும்போது சபரிமலை கோவிலுக்கு ஏன் இளம்பெண்கள் சென்று சாமி தரிசனம் செய்யக்கூடாது?’’ என்று கூறப்பட்டு உள்ளது. #Sabarimala






