என் மலர்

    அரியலூர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரியலூர் நகர்மன்ற கூட்டத்தில் முதல்-அமைச்சரின் பெயருக்கு அதிகாரிகள் கலங்கம் ஏற்படுத்துவதாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்
    • கவுன்சிலர்கள் குற்றச்சாட்டினால் நகராட்சி கூட்டம் பரபரப்பாக காணப்பட்டது

    அரியலூர்,

    அரியலூர் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் நகர்மன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர் மன்ற தலைவர் சாந்திகலைவாணன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கலியமூர்த்தி, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதிகளில் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் அரியலூர் நகராட்சியில் எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை. மழைக்காலங்களில் தெருக்களில் ஆங்காங்கே தேங்கியுள்ள மழைநீரால் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் சில பகுதிகளில் சாக்கடை நீர் தெருக்களில் வழிந்து ஓடுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.இதுபோல் எந்த ஒரு பணியினையும் நகராட்சி நிர்வாகம் செய்வதில்லை. மேலும் நகர் மன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நகராட்சி நிர்வாகம் மறுப்பதாகவும் கூறி தி.மு.க. நகர மன்ற உறுப்பினர்கள் உள்பட அனைத்து கட்சி உறுப்பினர்களும் குற்றம் சாட்டி கூச்சலிட்டனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக அதிகாரிகள் செயல்படுவதாக தி.மு.க. கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இதனால் நகராட்சி கூட்டத்தில் பரபரப்பாக காணப்பட்டது.

    கூட்டத்தின்போது பேசிய தி.மு.க. கவுன்சிலர் ராஜேஷ், தேவையான உபகரணங் களை கொடுங்கள் அரியலூர் தி.மு.க. கவுன்சிலரான நான், என் மனைவி, என் அப்பா எல்லோரும் சென்று குப்பை, சாக்கடையை அள்றோம் என தெரிவித்தார். தொடர்ந்து அவர் நகராட்சி பகுதியில் குப்பைகள் அள்ளப்படுவதில்லை என குற்றம் சாட்டினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜெயங்கொண்டத்தில், படியில் பயணம் செய்தவர்களை கண்டித்த கண்டக்டர் தாக்கப்பட்டு உள்ளார்
    • 2 பேரை கைது செய்த போலீசார் மூன்று பேரை தேடி வருகின்றனர்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள நடுவலூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பச்சமுத்து மகன் விஜயகுமார்(வயது 42). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஜெயங்கொண்டம் பணிமனையில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்திலிருந்து சுத்தமல்லி செல்லும் அரசு பஸ்சில் பயணிகளிடம் டிக்கெட் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அணைக்குடம் பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு அரசு பஸ் புறப்பட்டு தா.பழூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது சிந்தாமணி காலனி தெருவை சேர்ந்த வீரமுத்து மகன்கள் மாதேஷ்(26), மணிவண்ணன்(24), தா.பழூர் காலனி தெருவை சேர்ந்த புரோஸ்காந்தி மகன் அபின்குமார், முருகன் மகன் வல்லரசு, வைகுந்தன் மகன் கபினேசன் ஆகிய 5 பேரும் பஸ்சை வழிமறித்து ஏறியதாகவும், படியில் பயணம் செய்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது விஜயகுமார் படியில் பயணம் செய்யக்கூடாது என அவர்களை எச்சரித்து, டிக்கெட் எடுக்க கேட்டுள்ளார். இதில் தகராறு ஏற்பட்டு ஆத்திரமடைந்த 5 பேரும் சேர்ந்து விஜயகுமாரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் அவரை பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து தா.பழூர் போலீஸ் நிலையத்தில் விஜயகுமார் நேற்று புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து மாதேஷ், மணிவண்ணன் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் தலைமறைவான மற்ற 3 பேரையும் தேடி வருகிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வெண்மான்கொண்டான் கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி மாயமானார்
    • போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே வெண்மான்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் சங்கீதா. இவரது மகள் வள்ளி(வயது 17). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. பின்னர் உறவினர்கள் வீடு மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் வள்ளியின் தாய் சங்கீதா புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்குப்பதிவு செய்து மாயமான பள்ளி மாணவியை தேடி வருகிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜெயங்கொண்டத்தில் ஆவணம் இல்லாமல் அதிவேகமாக சென்ற இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
    • அபராதம் விதித்து எச்சரிக்கை செய்த போக்குவரத்து போலீசார்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்ட ம் ஜெயங்கொண்டம் பஸ் ஸ்டாண்ட் ரோடு, நான்கு ரோடு, சிதம்பரம் ரோடு, விருத்தாச்சலம் ரோடு, கும்பகோணம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த இரண்டு சக்கர வாகனங்கள், மூன்று நபர்களை ஏற்றி வந்தவர்கள், தலைக்கவசம் அணியாமல் வந்தவர்கள், உரிய ஆவணங்கள் இன்றி வந்தவர்கள், வண்டி நம்பர் எழுதாமல் வந்தவர்கள், வண்டி நம்பர் பிளேட்டில் வண்டி நம்பர் சரிவர தெரியாமல் வந்தவர்கள், குடிபோதையில் இரண்டு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர்கள் என மொத்தம் 15-க்கும் மேற்பட்ட 2 சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் வாகன விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு ரூபாய் 500 முதல் 1500 ரூபாய் வரை அபராதம் விதித்தனர். இதில் சிக்கிய 18 வண்டிகளுக்கு போலீசார் 500 முதல் 1500 வரை அபராதம் விதித்தனர். மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த இரண்டு நபர்களுக்கு தலா பத்தாயிரம் வீதம் இரண்டு வண்டிகளுக்கு 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் பெரும்பாலா னவர்கள் இளைஞர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தொழில் வளர்ச்சிக்காக பழுப்பு நிலக்கரி உள்ள நிலங்களை கையகப்படுத்திய நில உரிமையாளர்களிடம் நிலங்களை ஒப்படைப்பு
    • அனல்மின் திட்டத்திற்காக தொழில் வளர்ச்சிக்காக பழுப்பு நிலக்கரி உள்ள நிலங்களை ஒப்படைப்பு

    ஜெயங்கொண்டம்,  

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் பழுப்பு நிலக்கரி மற்றும் அனல்மின் திட்டத்திற்காக தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் கையகப்படுத்திய நிலங்களை அந்தந்த நில உரிமையாளரிடம் ஒப்படைக்க சமீபத்தில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்து இருந்தது. அந்த அரசாணையின் அடிப்படையில் உரிய உரிமையாளர்களிடம் நிலப்பட்டா வழங்க ஜெயங்கொண்டம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் மூலம் நேற்று மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமாகிய கிறிஸ்டோபர் உத்திரவின் பேரில், அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் அழகேசன், இந்த மக்கள் நீதிமன்றத்தினை தலைமையேற்று நடத்தினார்.இதில் 203 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு உரிய நில உரிமையாளர்களுக்கு நிலப்பட்டாவை மாற்றிக் கொடுக்க மக்கள் நீதி மன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது.

    இதன் மூலம் உரிய நில உரிமையாளர்களுக்கு உடனடியாக பட்டா மாற்றம் செய்து வழங்கப்படும் என்றும், மக்கள் நீதிமன்றம் மூலம் அந்தந்தப் பகுதியின் நில உரிமையாளர்களிடம் நிலம் ஒப்படைக்கும் பணி மக்கள் நீதி மன்றத்தின் மூலம் தொடர்ந்து நடைபெறும் எனவும் ஜெயங்கொண்டம் தனி வட்டாட்சியர் (JLPP நிலம் எடுப்பு).வேலுமணி மற்றும் தேவகி கூறினர். இந்த மக்கள் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள் மோகன் ராஜ், செந்தில்குமார் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சான்று பெற்ற விதை நெல்லை பயன்படுத்தினால் நல்ல தரமான நாற்றுகள் கிடைக்கும்
    • இருப்புபதிவேடு, கொள்முதல் ரசீது ஆகியவற்றையும் விற்பனையாளர்கள் வைத்திருக்க வேண்டும்.

    அரியலூர்,

    சான்று பெற்ற விதை நெல்லை பயன்படுத்தினால் நல்ல தரமான வாளிப்பான நாற்றுகள் கிடைக்கும் என்று திருச்சி விதை ஆய்வு துணை இயக்குநர் கோவிந்தராசு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தெரிவித்தது: அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் தற்போது நாற்றுவிடும் பணி நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதை நெல்லை வாங்கும் போது அரசினால் விதை விற்பனை உரிமம் வழங்கப்பட்ட விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே வாங்க வேண்டும்.

    விவசாயிகள் சான்று பெற்ற விதைநெல்லை பயன்படுத்தினால் நல்ல தரமான வாளிப்பான நாற்றுக்ள கிடைக்கும் . பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்படும். பூச்சி நோய் தாக்குதல் குறையும். ஒரே நேரத்தில் அறுவடைக்கு வரும். நல்ல மகசூல் கிடைக்கும். விவசாயிகள் உண்மை நிலை விதைகளை வாங்கும் போது அது நம் பகுதிக்கு, நம் பருவத்திற்கு ஏற்றதா என்று பார்த்து வாங்கவேண்டும். அவசியம் விற்பனையாளரிடம் இருந்து ரசீது கேட்டுப் பெறவேண்டும். ரசீதில் காலாவதிநாள், லாட் நம்பர் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்றுபார்க்க வேண்டும். விற்பனை ரசீதை அறுவடை முடியும் வரைபத்திரமாக வைத்திருக்க வேண்டும்.

    விதைவிற்பனை யாளர்கள் வெளிமாநில நெல் ரகங்களை விற்பனை செய்யும் போது ஊஹழ்ம் ஐஐ பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அறிவிக்கை செய்யபடாத தனியார் உண்மை நிலை விதைகளை விற்பனை செய்யம் போது பதிவுசான்றிதழ் , முளைப்புதிறன் சான்று பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.

    இருப்புபதிவேடு, கொள்முதல் ரசீது ஆகியவற்றையும் விற்பனையாளர்கள் வைத்திருக்க வேண்டும். இவைகள் ஆய்வின் போது இல்லாவிட்டால் விதைச் சட்டபடி விதை விற்பனையாளர்கள் மீதுநடவடி க்கைஎடுக்கப்படும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜெயங்கொண்டம் விடுதலைச் சிறுத்தை கட்சியின் சார்பில் முகவர்கள் பணிக்குழு ஆலோசனை கூட்டம்
    • 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்பு

    ஜெயங்கொண்டம்,

    சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி 2024 தேர்தல் முகவர்கள் பணி குழு கூட்டம் அரியலூர் கிழக்கு மாவட்டம் சார்பில் ஜெயங்கொண்டம் தனியார் திருமண மண்டபத்தில் அரியலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கதிர்வளவன் தலைமையில் நடைபெற்றது

    இக்கூட்டத்திற்கு முதன்மைச் செயலாளர் பாவரசு சிதம்பரம் நாடாளுமன்ற பொறுப்பாளர் விடுதலைச் செழியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு வருகின்ற தேர்தலில் பணியாற்றும் முறையினையும் எழுச்சித் தமிழரை ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வது குறித்தும் பொறுப்பாளர்களுக்கு அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.

    இந்நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி செயலாளர் இலக்கிய தாசன் முன்னிலை வகித்தார்,

    அரியலூர் பெரம்பலூர் மண்டல பொறுப்பாளர்கள் அன்பானந்தம், துணை செயலாளர் மாறன், கண் கொளஞ்சி, நகர் மன்ற தலைவர் சுமதி சிவகுமார் மற்றும் சுந்தர் சின்ன ராஜா சி மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜெயங்கொண்டம் ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது
    • மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா கலந்து கொண்டார்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர், கிளார்க் உள்ளிட்ட அனைவருக்கும், டெங்கு காய்ச்சல் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில், நடைபெற்ற இந்த கருத்தரங்கில் அவர் பேசும்போது,ஊராட்சிகளில் தண்ணீர் தேங்க விடாமல் பாதுகாப்பது மருந்து தெளிப்பது அந்தந்த பகுதியில் உள்ள பொது மக்களுக்கு டெங்கு காய்ச்சல் வருவதற்கான அறிகுறிகள் எடுத்துக் கூறி டெங்கு காய்ச்சல் வராமல் எப்படி ஊராட்சிகளை வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுகள் எடுத்துக் கூறினார். இந்த கூட்டத்திற்கு மருத்துவர் துறையைச் சார்ந்த மருத்துவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரியலூரில் ஒருங்கிணைப்பாளர்கள் பணிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது
    • மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் மூலம் மீட்கப்பட்ட கொத்தடிமைக்களுக்கான மறுவாழ்வு திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஓராண்டுக்கு பணிபுரிந்திட 1 மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் 2 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கு இளங்கலை பட்டம் பெற்றவராக இருத்தல் வேண்டும். களப்பணியில் 3 முதல் 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும். மக்கள் தொடர்பியல் மற்றும் பேச்சு ஆற்றல் உள்ளவராக இருத்தல் வேண்டும். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.

    ஓட்டுநர் உரிமம் பெற்று இரு சக்கர வாகனம் வைத்திருத்தல் வேண்டும். மாத மதிப்பூதியமாக ரூ.15,000 மற்றும் பயணப்படி ரூ.5,000 வழங்கப்படும்.

    வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு மீட்கப்பட்ட கொத்தடிமையினராகவோ, பழங்குடியினரை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். குறைந்த பட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.மாத மதிப்பூதியமாக ரூ.3,000 மற்றும் பயணப்படி ரூ.1,000 வழங்கப்படும். விண்ணப்பங்கள் வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்தோ அல்லது கையெழுத்து பிரதியாகவோ இணை இயக்குநர் , திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியரகம், அரியலூர்- 621704, என்ற முகவரிக்கு 22ந்தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரியலூர் பேருந்து நிலையம் முன்பு காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியகத்தினர் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • குறுவையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்

    அரியலூர், 

    டெல்டாவில் கருகும் நெற்பயிரை காப்பாற்ற தமிழத்துக்கான காவிரி நீரை பெற்றுத் தரக் கோரி, அரியலூர் பேருந்து நிலையம் முன்பு காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியகத்தினர் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.குறுவை சாகுபடியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும், அரியலூர் மாவட்டம் தூத்தூர்தஞ்சாவூர் மாவட்டம் வாழ்க்கை இடையே கொள்ளிடத்தின் குறுக்கே கதவணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    போராட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலர் இர.மணிவேல், விவசாய பாதுகாப்புச் சங்க மாவட்ட அமைப்பாளர் க.பாலசிங்கம் ஆகியோர் தலைமை வகித்தனர். விவசாய தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் ஏ.பழனிச்சாமி போராட்டத்தை தொடக்கி வைத்து பேசினார். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவர் ஆர்.செந்தில்வேல்,மாவட்டக் குழு உறுப்பினர் டி.தியாகராஜன், விவசாய சங்க பிரதிநிதி த.ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய தொழிலாளர் சங்க மாநில துணைத் தலைவர் திருச்சி கணேசன் போராட்டத்தை முடித்து வைத்து உரையாற்றினார். போராட்டத்தில் காவிரி டெல்டா பாசன விவசாய சங்க கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் தங்க.தர்மராஜன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் ஏ.கந்தசாமி, தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் அ.விசுவநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo