என் மலர்

  நாமக்கல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் முதலிடம் பிடித்தார்.
  • பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பொத்தனூர் அரசு பள்ளி மாணவன் சாதனை செய்துள்ளார்.

  பரமத்திவேலூர்:

  பிளஸ்-2 பொது தேர்வில் பொத்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் வைரப்பெருமாள் 600க்கு 580 மதிப்பெண்கள் பெற்று நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் முதலிடம் பிடித்தார். அதேபோல்10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவி சுபஸ்ரீ பள்ளி யில் முதலிடம் பிடித்தார்.

  மாணவன் வைரப்பெரு–மாள் மற்றும் மாணவி சுபஸ்ரீக்கு பொத்தனூர் பேரூராட்சி தலைவர் ஆர். கருணாநிதி சால்வை அணிவித்து கேக் ஊட்டி வாழ்த்து தெரிவித்தார்.

  மேலும் தலைமை ஆசிரியர் குமார், விவசாயிகள் சங்க தலைவர் என் . வி .எஸ். செந்தில்நாதன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சுப்பிரமணியம், டி.பி. ஏ. அன்பழகன், கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் அலுவலக பணியாளர்களும் வாழ்த்தினார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பரமத்திவேலூரில் போதைப்பொருட்களால் ஏற்படும் தீமை குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
  • விழிப்புணர்வு பேரணியை தொடர்ந்து போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

  பரமத்திவேலூர்:

  நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் கஞ்சா, குட்கா, புகையிலை, பான்மசாலா உள்ளிட்ட போதை பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பரமத்திவேலூர் டி.எஸ்.பி. ராஜாரணவீரன் தலைமை வகித்து விழிப்புணர்வை பேரணியை தொடங்கி வைத்தார்.

  அப்போது அவர் கட்டணமில்லா புகார் எண் 1930 மற்றும் இணைய வழி மோசடிகளை தடுப்பது குறித்து மாணவ, மாணவிகளிடையே எடுத்துக்கூறினார்.

  முன்னதாக வேலூர் இன்ஸ்பெக்டர் வீரம்மாள், போக்சோ சட்டம், சைபர் கிரைம், மற்றும் மொபைல் போன் மூலம் பேசி பணம் பறிக்கும் மர்ம நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார். அதனை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் பேரணியாக சென்று குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிப்போம் என கோஷமிட்டவாறு ஊர்வலமாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

  பரமத்தி வேலூர் அரசு உதவிபெறும் கந்தசாமி கண்டர் பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணி திருவள்ளுவர் சாலை, பேருந்து நிலையம், கடை வீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பாண்டமங்கலம் அரசு பள்ளியிலேயே கணினி அறிவியல் பாடப்பிரிவை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுத்து மாணவர்கள் பள்ளியை நேற்று முன்தினம் முற்றுகையிட்டனர்.
  • பாண்டமங்கலம் அரசு பள்ளியில் மாணவர்களின் போராட்டத்திற்கு பிறகு கணினி அறிவியல் பாடத்திற்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது.

  பரமத்திவேலூர்:

  நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் அரசு ஆண்கள் மேல்நி–லைப்பள்ளியில் பாண்டமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த சுமார் 430 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கணிதம், கலை, வேளாண்மை உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளது. ஆனால் கணினி அறிவியல் பாடப்பிரிவு மட்டும் இல்லை.

  இப்பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்ற மாணவர்களில் 15-க்கும் மேற்பட்டோர் கணினி அறிவியல் பாடப்பிரிவில் பயில தலைமை ஆசிரியரிடம் கேட்டுள்ளனர். ஆனால் பள்ளியின் தலைமை ஆசிரியர் தங்கவேல் கணினி அறிவியல் பாடப்பிரிவு இப்பள்ளியில் இல்லை. எனவே மாற்று பாடப்பிரிவில் சேர்ந்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.

  இல்லையென்றால் அருகே உள்ள பள்ளிக–ளுக்கு சென்று சேர்ந்து கொள்ளும்படி கூறியுள்ளார். பாண்டமங்கலத்தில் இருந்து நீண்ட தூரத்திற்கு மாணவர்கள் செல்ல முடியாததால் இப்பள்ளியிலேயே கணினி அறிவியல் பாடப்பிரிவை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுத்து மாணவர்கள் பள்ளியை நேற்று முன்தினம் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் சிறிது நேரம் பள்ளி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  இதுகுறித்து தலைமை ஆசிரியர் தங்கவேலிடம் கேட்டபோது பாடப்பிரிவுகளில் முழுமையாக சேர்க்கை நடைபெறாததால் புதிதாக ஒரு பாடப்பிரிவை ஏற்படுத்த முடியாது என தெரிவித்தார். இந்த நிலையில் நேற்று காலை பள்ளி திறந்ததும் மீண்டும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் பள்ளியின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  தகவல் அறிந்து அங்கு வந்த பாண்டமங்கலம் பேரூராட்சி தலைவர் சோமசேகர், துணைத்தலைவர் முருகவேல், பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் ஆகியோர் தலைமையாசிரியர் தங்கவேலிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையை தொடர்ந்து கணினி அறிவியல் பாடத்தை தொடங்க தலைமை ஆசிரியர் சம்மதம் தெரிவித்தார்.

  இதனையடுத்து பள்ளியில் கணினி அறிவியல் பாடத்திற்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது. கணினி அறிவியல் பாடத்திற்கு மாணவர்கள் சேர்க்கை தொடங்க உரிய நடவடிக்கை மேற்கொண்ட பேரூராட்சி தலைவர் சோமசேகர், துணைத் தலைவர் முருகவேல், இன்ஸ்பெக்டர் வீரம்மாள் ஆகியோருக்கு மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் நன்றி தெரிவித்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முட்டை விலை 15 காசுகள் அதிகரித்துள்ளது.
  • ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 5.35 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

  நாமக்கல்:

  நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், ஏற்கனவே ரூ. 5.20ஆக இருந்த ஒரு முட்டையின் விலை 15 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 5.35 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

  முட்டை மொத்த வியாபாரிகளுக்கு வழங்க வேண்டிய மைனஸ் விலை 30 பைசாவாக நெஸ்பேக் அறிவித்துள்ளது. இதனால் பண்ணையாளர்களுக்கு ஒரு முட்டைக்கு ரூ. 5.05 கிடைக்கும். முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) வருமாறு:-

  சென்னை 560, பர்வாலா 503, பெங்களூர் 535, டெல்லி 524, ஹைதராபாத் 515, மும்பை 565, மைசூர் 537, விஜயவாடா 501, ஹெஸ்பேட் 495, கொல்கத்தா 575.

  பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ.136 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 107 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மோகனூர் தாலுகா லத்துவாடியை சேர்ந்த கூலித்தொழிலாளி பலி.
  • நாமக்கல்லில் இருந்து மோகனூர் செல்லும் சாலையை கடக்க முயன்றவர்.

  பரமத்தி வேலூர்:

  நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா லத்துவாடி ஊராட்சி நல்லையகவுண்டன்புதூர் காலனியை சேர்ந்தவர் ராஜ் (வயது 55) . இவரது மனைவி பாவாயி (வயது 50) . நேற்று முன்தினம் இரவு பாவாயி மாரியம்மன் கோவில் அருகில் கழிப்பிடம் சென்றுவிட்டு நாமக்கல்லில் இருந்து மோகனூர் செல்லும் சாலையை கடக்க முயன்றார்.

  அப்போது நாமக்கல்லில் இருந்து மோகனூர் நோக்கி சேந்தமங்கலம் அருகே உள்ள துத்திகுளம் அருந்ததியர் தெருவை சேர்ந்த சுரேஷ் குமார் (வயது 26) என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக பாவாயி மீது மோதியது.

  இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள், மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வழியிலேயே பாவாயி பரிதாபமாக இறந்தார்.

  இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த சுரேஷ்குமார் காயமடைந்து நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பாவாயி கணவர் ராஜ் மோகனூர் போலீஸ் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தங்கவேல், சப்-இன்ஸ்பெக்டர் ஜவஹர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கல்லூரியில் பி.ஏ. இறுதியாண்டு படிக்கும் மாணவி மாயம்
  • இதனால் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

  குமாரபாளையம்:

  குமாரபாளையம் அம்மன் நகரை சேர்ந்த ராஜேஸ்வரி மகள் கீர்த்தனா. இவர் நாமக்கல் கல்லூரியில் பி.ஏ. இறுதியாண்டு படித்து வந்தார். கடந்த 16-ந்தேதி கல்லூரிக்கு சென்ற இவர் மாலை வீடு திரும்பவில்லை. ராஜேஸ்வரி தனது மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ரஜேஸ்வரி குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கல்லூரியில் பி.ஏ. இறுதியாண்டு படிக்கும் மாணவி மாயம்
  • இதனால் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

  குமாரபாளையம்:

  குமாரபாளையம் அம்மன் நகரை சேர்ந்த ராஜேஸ்வரி மகள் கீர்த்தனா. இவர் நாமக்கல் கல்லூரியில் பி.ஏ. இறுதியாண்டு படித்து வந்தார். கடந்த 16-ந்தேதி கல்லூரிக்கு சென்ற இவர் மாலை வீடு திரும்பவில்லை. ராஜேஸ்வரி தனது மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ரஜேஸ்வரி குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே பெண் வக்கீல் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்ததால் பெண் வக்கீல் தற்கொலை செய்து கொண்டார்.

  பரமத்திவேலூர்:

  நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே உள்ள வளையபட்டியைச் சேர்ந்தவர் கண்ணன்(வயது 40) .இவரது மனைவி நித்யா (35) இவர்களுக்கு கடந்த 2014 டிசம்பரில் திருமணமாகி டேனிஸ் (7) தயானி (4) என 2 குழந்தைகள் உள்ளனர்.

  இருவரும் மோகனூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.கணவன் மனைவி இருவரும் வக்கீல்களாக உள்ளார்கள்.இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.

  இதில் மனம் உடைந்த நித்யா நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாயார் சேர்ந்த ராஜேஸ்வரி (66) மோகனூர் போலீசில் புகார் கொடுத்தார்.

  புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஜவஹர் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வீடு கட்ட பணம் இல்லாததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
  • மன உளைச்சலில் இருந்த வாலிபர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

  பரமத்திவேலூர்:

  நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா குமரிபாளையம் அருகே சங்கரம்பாளையம் காலனியை சேர்ந்தவர் சிங்காரவேலு (வயது 53). இவருக்கு சவுந்தரராஜன், இளையராஜா, விமல்ராஜ் ஆகிய 3 மகன்கள் உள்ளார்கள்.

  கணவன், மனைவி மற்றும் 3 மகன்கள் என 5 பேரும் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர். இவர்கள் வசிக்கும் வீடு சிறிய வீடாக இருப்பதால், 5 பேரும் ஒன்றாக வசிக்க போதிய வசதிகள் இல்லாத நிலையில், புதிதாக வீடு கட்டும் முயற்சியில் குடும்பத்தினர் ஈடுபட்டு வந்தனர்.

  இந்த நிலையில் போதிய பண வசதி இல்லாத சூழ்நிலையில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் 2-வது மகன் இளையராஜா (22) மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. அனைவரும் கூலி வேலை செய்து வரும் வகையில் போதிய வசதி இல்லாத நிலையில் விரக்தி அடைந்த இளையராஜா பூச்சி மருந்தை எடுத்துக்குடித்து விட்டார்.

  அக்கம் பக்கம் இருந்த–வர்கள் இளையராஜாவை மீட்டு மோகனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

  இதுகுறித்து அவரது தந்தை சிங்காரவேலு, மோகனூர், போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பாண்டமங்கலம் அரசு பள்ளியை மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
  • பள்ளியிலேயே கணினி பாடப்பிரிவை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுத்து மாணவர்கள் முற்றுகையிட்டனர்.

  பரமத்திவேலூர்:

  பரமத்தி வேலூரை அடுத்துள்ள பாண்டமங்கலத்தில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 430-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கணிதம், கலை, வேளாண்மை உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளது.

  ஆனால் கணினி அறிவியல் இல்லை. பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்ற மாணவர்களில் 15-க்கும் மேற்பட்டோர் கணினி பாடப்பிரிவு கேட்டுள்ளனர். ஆனால் பள்ளியின் தலைமை ஆசிரியர் தங்கவேல் கணினி பாடப்பிரிவு இப்பள்ளியில் இல்லை, எனவே மாற்று பாடப்பிரிவில் சேர்ந்துகொள்ளுமாறு கூறியுள்ளார்.

  மேலும் அருகே உள்ள பள்ளிகளுக்கு சென்று சேர்ந்து கொள்ளும்படி கூறியுள்ளார். பாண்டமங்கலத்தில் இருந்து நீண்ட தூரத்திற்கு மாணவர்கள் செல்லமுடியாததால் இப் பள்ளியிலேயே கணினி பாடப்பிரிவை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுத்து மாணவர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.

  மற்ற பாடப்பிரிவுகளில் முழுமையாக சேர்க்கை நடைபெறாததால் புதிதாக ஒரு பாடப்பிரிவை ஏற்படுத்த முடியாது என தலைமை ஆசிரியர் தங்கவேல் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள்பள்ளி கேட்டின் முன்பு நின்று மறியலில் ஈடுபட்டனர். பின்னர் பெற்றோர்களுடன் வந்து மறியலில் ஈடுபட போவதாக தெரிவித்தனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பரமத்தி வேலூர் தாலுகா அலுவலகத்திற்கு உட்பட்ட வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தவரை கொலை மிரட்டல் விடுத்த லாரி உரிமையாளருக்கு வலைவீச்சு.
  • புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தங்கவேலை தேடி வருகின்றனர்.

  பரமத்திவேலூர்:

  பரமத்தி வேலூர் தாலுகா அலுவலகத்திற்கு உட்பட்ட பரமத்தியில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் லட்சுமி. இவர் கடந்த மே மாதம் 6-ந் தேதி கபிலர் மலை அருகே வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்தார்.அப்போது அந்த வழியாக அனுமதியின்றி கிராவல்மண் ஏற்றிவந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்து ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

  இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் கபிலர்மலை அருகே உள்ள கருக்கம்பாளையத்தை சேர்ந்த தங்கவேல் (வயது48) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தங்கவேல் கபிலர்மலையில் உள்ள வருவாய் ஆய்வாளர் லட்சுமியின் வீட்டிற்கு சென்று எனது லாரியை எப்படி பறிமுதல் செய்யலாம் என கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

  இது குறித்து ‌வருவாய் ஆய்வாளர் லட்சுமி ஜேடர்பாளையம் போலீசில் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தங்கவேலை தேடி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நாமக்கல் மாவட்டத்தில் முதல்முறையாக அரசு நகரப் பஸ்சில் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • நாமக்கல் மாவட்டத்தில் முதல்முறையாக அரசு நகரப் பஸ்சில் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

  நாமக்கல்:

  நாமக்கல் மாவட்டத்தில் முதல்முறையாக அரசு நகரப் பஸ்சில் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

  நாமக்கல் பணிமனை 1,2 ராசிபுரம், திருச்செங்கோடு ஆகிய இடங்களில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகள் உள்ளன. இந்த பணிமனைகள் மூலம் 171 நகர மற்றும் புறநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

  600-க்கும் மேற்பட்ட டிரைவர், கண்டக்டர், தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளனர். அண்மையில் வாரிசு அடிப்படையில் 10 பேருக்கு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவர், கண்டக்டர் மற்றும் இதர பணியிடங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது.

  இதில் பணிக்காலத்தின் போது உயிரிழந்த பயணச்சீட்டு பரிசோதகரான முனியப்பன் அவரது மகள் இளையராணி (வயது 34) என்பவருக்கு நாமக்கல் மாவட்டத்தில் முதன்முறையாக அரசு டவுன் பஸ்சில் (ராசிபுரம், சேலம், பஸ் எண் 52) நடத்துனர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார்.

  இதுகுறித்து இளையராணி கூறியது:

  எந்த துறையானாலும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் வெற்றி பெறலாம்.

  தந்தை இறப்பால் வாரிசு வேலை கிடைத்தது. 10 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது நான் மட்டும் பெண். இப்பணிக்காக ஒரு மாதம் வரை பயிற்சி பெற்றேன். தற்போது வேலை எளிதாகி விட்டது ஆர்வமுடன் பணியாற்றி வருகிறேன் என்றார் இளையராணி.

  இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக நாமக்கல் மண்டல மேலாளர் பாண்டியன் கூறியதாவது:

  இதற்கு முன்பாக நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பஸ்சில் பெண் கண்டக்டர்கள் பணியாற்றினார்களா? என்பது சரிவர தெரியவில்லை சேலம், தர்மபுரி மாவட்டங்களில் பணியாற்றுகின்றனர்.

  தற்போது ராசிபுரம் பணிமனையில் வாரிசு அடிப்படையில் ஒருவருக்கு பெண் கண்டக்டர் பணி வழங்கப்பட்டுள்ளது என்றார்.