search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "indefinite strike"

    • தமிழக ஊரக வளர்ச்சித்துறையில் ஊராட்சி செயலர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலமாக ஊதியம் வழங்க வேண்டும்.
    • 14-ந்தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    பல்லடம் : 

    தமிழக ஊரக வளர்ச்சித்துறையில் ஊராட்சி செயலர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலமாக ஊதியம் வழங்க வேண்டும், மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு, சிறப்பு நிலை, தேர்வு நிலை மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும், காலியாக உள்ள ஊராட்சி ஒன்றிய பணியிடங்கள் உட்பட அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்றும், இன்றும் சிறு விடுப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்தனர். அதன்படி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. அலுவலகப் பணிகள் அனைத்தும் முற்றிலுமாக முடங்கியது. இதே போல, கிராம ஊராட்சிகளில் ஊராட்சி செயலாளர்கள், மற்றும் உதவியாளர்கள் பணிக்கு வரவில்லை. கோரிக்கைகள் நிறை வேற்றப்படாவிட்டால் அடுத்த மாதம் 14-ந்தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • மின் கட்டண உயர்வை கண்டித்து வருகிற 27-ந்தேதி முதல் விசைத்தறிகள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும்
    • அனைத்து தொழிற்சங்கங்கள் ஆதரவு தர கேட்டுக்கொள்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் கொங்கு பவர்லூம்ஸ் உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் தலைவர் சங்கமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மின் கட்டண உயர்வை கண்டித்து வருகிற 27-ந்தேதி முதல் விசைத்தறிகள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் எனவும், இந்த போராட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்கங்கள் ஆதரவு தர கேட்டுக்கொள்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது பற்றி தலைவர் சங்கமேஸ்வரன் கூறியதாவது:

    கொரோனவால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு துன்பத்திற்கு ஆளானோம். மேலும் ஏற்கனவே நூல் விலை உயர்வால் தொழில் நசிந்து வருகிறது. இந்நிலையில் மின் கட்டண உயர்வு பெரும் சுமையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் முற்றிலுமாக இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் செயலாளர் சுந்தரராஜ், பொருளாளர் ராஜேந்திரன், உதவி தலைவர் குமாரசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    நாளுக்கு நாள் புதிய உச்சம் தொடும் பெட்ரோல், மற்றும் டீசல் விலையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். #PetrolDieselHike
    ராமேஸ்வரம்:

    இந்தியாவில் தினமும் பெட்ரோல், மற்றும் டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதையடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

    ஆனால், நிர்ணயிக்கப்படும் விலைகள் தினமும் அதிகரித்துக் கொண்டே வருகிறதே தவிர, விலை குறைக்கப்பட்டதாக வரலாறு கொஞ்சமே. இந்த சூழலில், தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 82 ரூபாய் 24 காசுகளாகவும், ஒரு லிட்டர் டீசலின் விலை 75 ரூபாய் 19 காசுகளாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    வரலாறு காணாத இந்த விலை உயர்வை பலரும் எதிர்த்துவரும் நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் மத்திய அரசை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். டீசல் விலை உயர்வால் தங்கள் வாழ்வாதாரமே பாதிக்கப்படும் என கூறும் அவர்கள், விலை குறைக்கப்படும் வரையில், போராட்டம் நடத்த உள்ளதாக தெரிகிறது. #PetrolDieselHike
    ×