27-ந்தேதி முதல் விசைத்தறிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

மின் கட்டண உயர்வை கண்டித்து வருகிற 27-ந்தேதி முதல் விசைத்தறிகள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும்அனைத்து தொழிற்சங்கங்கள் ஆதரவு தர கேட்டுக்கொள்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
27-ந்தேதி முதல் விசைத்தறிகள்   காலவரையற்ற வேலைநிறுத்தம்
Published on

குமாரபாளையம்:

குமாரபாளையம் கொங்கு பவர்லூம்ஸ் உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் தலைவர் சங்கமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மின் கட்டண உயர்வை கண்டித்து வருகிற 27-ந்தேதி முதல் விசைத்தறிகள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் எனவும், இந்த போராட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்கங்கள் ஆதரவு தர கேட்டுக்கொள்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது பற்றி தலைவர் சங்கமேஸ்வரன் கூறியதாவது:

கொரோனவால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு துன்பத்திற்கு ஆளானோம். மேலும் ஏற்கனவே நூல் விலை உயர்வால் தொழில் நசிந்து வருகிறது. இந்நிலையில் மின் கட்டண உயர்வு பெரும் சுமையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் முற்றிலுமாக இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் செயலாளர் சுந்தரராஜ், பொருளாளர் ராஜேந்திரன், உதவி தலைவர் குமாரசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com